3-باب :خيركم من تعلم القرآن وعلمه
பாடம் 3

பாடம்: 3. திருக்குர்ஆனைக் கற்று அதைக் கற்பித்தவரே உங்களுள் சிறந்தவர்

ஹதீஸ் 468 அத்தியாயம் 10 பாடம் 3

(خ ) عَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ . 468

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆனைத் தாமும் கற்று , பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களுள் சிறந்தவர் .

Reference: ( புகாரீ : 5027)
ஹதீஸ் 469 அத்தியாயம் 10 பாடம் 3

(خ) عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا جَمَعْتُ الْمُحْكَمَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ لَهُ وَمَا الْمُحْكَمُ قَالَ الْمُفَصَّلُ . 469

சஈத் பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( வாழ்ந்த ) காலத்திலேயே " அல் முஹ்கம் ` அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன் `` என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் . நான் அவர்களிடம் , “ அல்முஹ்கம் என்றால் என்ன ?`` என்று கேட்டேன் . அவர்கள் “ அல்முஃபஸ்ஸல்`தான் (" அல்முஹ்கம் `)`` என்று ( பதில் ) சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 5036)