4-باب : المد والترجيع في القراءة
பாடம் 4

பாடம்: 4. (திருக்குர்ஆனை) நீட்டி ஓதுதல், `தர்ஷிஉ` எனும் ஓசை நயத்துடன் (இழுத்து) ஓதுதல்

ஹதீஸ் 470 அத்தியாயம் 10 பாடம் 4

(ق) شُعْبَةُ عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ عَلَى نَاقَةٍ لَهُ يَقْرَأُ سُورَةَ الْفَتْحِ أَوْ مِنْ سُورَةِ الْفَتْحِ قَالَ فَرَجَّعَ فِيهَا . 470

ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஆவியா பின் குர்ரா ரஹிமஹுல்லாஹ் , " அப்துல்லாஹ் பின் முகஃப்பல் அல்முஸனீ ரளியல்லாஹு அன்ஹு மக்கா வெற்றி நாளில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது ஒட்டகம் ஒன்றின்மீது இருந்தபடி " அல் ஃபத்ஹ் எனும் (48ஆம்) அத்தியாயத்தை ` அல்லது " அல்ஃபத்ஹ் அத்தியாயத்தில் ஒரு பகுதியை ` ஓதிக்கொண்டிருக்கக் கண்டேன் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் " தர்ஜீஉ ` எனும் ஓசை நயத்துடன் ( இழுத்து ) ஓதிக்கொண்டிருந்தார்கள் என்று எனக்கு அறிவித்தார்கள் `` எனக் கூறிவிட்டு , இப்னு முகஃப்பல் ரளியல்லாஹு அன்ஹு ஓதியதைப் போன்று அப்படியே ஓதிக் காட்டினார்கள் . பிறகு , “ உங்களைச் சுற்றி மக்கள் கூடி விடுவார்கள் எனும் அச்சம் எனக்கில்லாவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதிய விதத்தை இப்னு முகஃப்பல் ரளியல்லாஹு அன்ஹு ஓசை நயத்துடன் ( இழுத்து ) ஓதிக் காட்டியதைப் போன்றே நானும் ஓதிக் காட்டியிருப்பேன் `` என்று சொன்னார்கள் . நான் , முஆவியா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் , “ அவர்கள் ஓசை நயத்துடன் ஓதிய முறை எப்படி ?`` என்று கேட்க ("ஆ` எனும் இடத்தில் ) ‘ஆ...ஆ...ஆ...` என்று மும்முறை ( இழுத்து ) அவர்கள் ஓதினார்கள் `` எனச் சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 7540, முஸ்லிம் : 794) புகாரீயின் மற்றோர் அறிவிப்பில் உள்ளதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( மக்கா வெற்றி நாளன்று ) பயணித்துக் கொண்டிருந்த தமது ஒட்டகத்தின் மீது இருந்தவாறு " அல்ஃபத்ஹ் எனும் (48ஆம்) அத்தியாயத்தை ` அல்லது " அந்த அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதியை ` மெல்லிய குரலில் " தர்ஜீஉ ` எனும் ஓசை நயத்துடன் ஓதிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன் . ( புகாரீ : 5047).
ஹதீஸ் 471 அத்தியாயம் 10 பாடம் 4

(خ) عَنْ قَتَادَةَ قَالَ سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ كَانَتْ مَدًّا ثُمَّ قَرَأَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَمُدُّ بِبِسْمِ اللَّهِ وَيَمُدُّ بِالرَّحْمَنِ وَيَمُدُّ بِالرَّحِيمِ . 471

கத்தாதா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : “ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஓதல் முறை எப்படியிருந்தது ?`` என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினவப்பட்டது . அதற்கவர்கள் , “ நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு , " பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ` என்பதில் " பிஸ்மில்லா ... ஹ் ` என நீட்டுவார்கள் ; " அர்ரஹ்மா ... ன் ` என்றும் நீட்டுவார்கள் ; " அர்ரஹீ ... ம் ` என்றும் நீட்டுவார்கள் `` என்று பதிலளித்தார்கள் .

Reference: ( புகாரீ : 5046)