12-باب : لا يسافر بالقرآن إلى أَرض العدو
பாடம் 12

பாடம்: 12. எதிரி நாட்டிற்குக் குர்ஆனோடு பயணிக்காதீர்கள்

ஹதீஸ் 488 அத்தியாயம் 10 பாடம் 12

(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُسَافَرَ بِالْقُرْآنِ إِلَى أَرْضِ الْعَدُوِّ . 488

இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருக்குர்ஆனுடன் ( திருக்குர்ஆன் பிரதியுடன் ) எதிரி நாட்டிற்குப் பயணம் செய்வதைத் தடை செய்தார்கள் .

Reference: ( புகாரீ : 2990, முஸ்லிம் : 1869) முஸ்லிம் நூலின் மற்றோர் அறிவிப்பில் உள்ளதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : குர்ஆன் பிரதியுடன் ( எதிரி நாட்டுக்குப் ) பயணம் செய்யாதீர்கள் . ஏனெனில் , அது எதிரிகளின் கையில் அகப் ( பட்டு இழிவுபடுத்தப் ) படுவதை என்னால் அஞ்சாமல் இருக்க முடியவில்லை . ( முஸ்லிம் : 1869 / 3807).