2- باب : قتال فئتين دعو اهما واحدة وظهور الدجالين
பாடம் 2

பாடம்: 2. இருவரின் வாதமும் ஒன்றாக உள்ள இரண்டு குழுவினர் சண்டையிட்டுக் கொள்ளுதல், தஜ்ஷால்கள் வெளிப்படுதல்

ஹதீஸ் 106 அத்தியாயம் 2 பாடம் 2

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ فَيَكُونَ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ دَعْوَاهُمَا وَاحِدَةٌ وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبًا مِنْ ثَلَاثِينَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ. 106

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இரு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாத வரை உலக முடிவு நாள் வராது . அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும் . ஆனால் , அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும் . பெரும் பொய்யர்களான “ தஜ்ஜால்கள் ’ ஏறத்தாழ முப்பது பேர் ( உலகில் ) தோன்றாத வரை இறுதி நாள் வராது . அவர்களுள் ஒவ்வொருவனும் தன்னை ‘ இறைத்தூதர் ’ என்று வாதிடுவான் .

Reference: ( புகாரீ : 3609, முஸ்லிம் : 157)
ஹதீஸ் 107 அத்தியாயம் 2 பாடம் 2

(م) عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ بَيْنَ يَدَيْ السَّاعَةِ كَذَّابِينَ. 107

ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ யுக முடிவு நாளுக்குமுன் பெரும் பொய்யர்கள் சிலர் வருவார்கள் `` என்று கூறியதை நான் செவியுற்றேன் .

Reference: ( முஸ்லிம் : 2923 / 5602).
ஹதீஸ் 108 அத்தியாயம் 2 பாடம் 2

عَنْ ثَوْبَانَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ، وَحَتَّى يَعْبُدُوا الْأَوْثَانَ، وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلَاثُونَ كَذَّابُونَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي. 108

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தைச் சேர்ந்த சில கோத்திரத்தார் இணைவைப்பாளர்களுடன் போய்ச்சேர்ந்து , சிலைகளை வழிபடாத வரை யுகமுடிவு நாள் வராது . என் சமுதாயத்தாரில் முப்பது பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள் . அவர்களுள் ஒவ்வொருவரும் தம்மை ‘ இறைத்தூதர் ’ என்று வாதிடுவர் . ஆனால் . நான்தான் இறைத்தூதர்களுள் இறுதியானவன் ஆவேன் . எனக்குப்பின் எந்த இறைத்தூதரும் வரமாட்டார் .

Reference: ( திர்மிதீ : 2145 / 2219). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .