10- باب: عبادة غير الله تعالى
பாடம் 10

பாடம்: 10. அல்லாஹ் அல்லாததை வணங்குதல்

ஹதீஸ் 119 அத்தியாயம் 2 பாடம் 10

(ق)عَنْ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ وَذُو الْخَلَصَةِ طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الْجَاهِلِيَّةِ. 119

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் " துல்கலஸா ` கடவுள் சிலையைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது . " துல்கலஸா ` என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டுவந்த ஒரு சிலையாகும் .

Reference: ( புகாரீ : 7116, முஸ்லிம் : 2906)
ஹதீஸ் 120 அத்தியாயம் 2 பாடம் 10

(م) عَنْ عَائِشَةَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَذْهَبُ اللَّيْلُ وَالنَّهَارُ حَتَّى تُعْبَدَ اللَّاتُ وَالْعُزَّى فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنْ كُنْتُ لَأَظُنُّ حِينَ أَنْزَلَ اللَّهُ: هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ أَنَّ ذَلِكَ تَامًّا قَالَ إِنَّهُ سَيَكُونُ مِنْ ذَلِكَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ يَبْعَثُ اللَّهُ رِيحًا طَيِّبَةً فَتَوَفَّى كُلَّ مَنْ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَيَبْقَى مَنْ لَا خَيْرَ فِيهِ فَيَرْجِعُونَ إِلَى دِينِ آبَائِهِمْ. 120

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( அறியாமைக் கால கடவுள் சிலைகளான ) " லாத்`தும் " உஸ்ஸா`வும் வழிபாடு செய்யப்படாத வரை இரவும் பகலும் ( இல்லாமற் ) போகாது `` என்று கூறியதைச் செவியுற்றேன் . நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இணை கற்பிப்போர் வெறுத்தபோதிலும் , எல்லா மார்க்கங்களைவிட மேலோங்கச் செய்வதற்காக நல்வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அவனே தன் தூதரை அனுப்பினான் `` (9:33; 61:9) என அல்லாஹ் அருளியபோது , இந்த மார்க்கம் முழுமையடையும் என்றே நான் எண்ணிக்கொண்டிருந்தேன் . ( ஆனால் , தாங்கள் வேறு விதமாகச் சொல்கிறீர்களே !)`` என்று கூறினேன் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( உண்மைதான் ) விரைவில் அல்லாஹ் நாடிய அளவு இது நடக்கும் . பிறகு அல்லாஹ் நல்ல காற்று ஒன்றை அனுப்புவான் . அது யாரது உள்ளத்தில் கடுகுமணியளவு இறைநம்பிக்கை ( ஈமான் ) உள்ளதோ அந்த ஒவ்வொருவரையும் கைப்பற்றிக்கொள்ளும் . பிறகு எந்த நன்மையும் இல்லாதவர்களே ( பூமியில் ) எஞ்சியிருப்பர் . அவர்கள் தம் மூதாதையரின் மார்க்கத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவர் `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2907 / 5571)