15- باب : الخسف بالجيش الذي يؤم البيت
பாடம் 15

பாடம்: 15. கஅபாவின் மீது படையெடுத்து வருகின்ற படை நிலத்திற்குள் புதைதல்

ஹதீஸ் 128 அத்தியாயம் 2 பாடம் 15

(ق) عَنْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ . 128

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : “ ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள் ; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள் !” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்களுள் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள் ? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள் ; கடைவீதிகளும் இருக்குமே !” என நான் கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவர்களுள் முதலாமவர் முதல் , கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள் ; எனினும் ( அதற்குப் ) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள் !” என்றார்கள் .

Reference: ( புகாரீ : 2118, முஸ்லிம் : 2884)
ஹதீஸ் 129 அத்தியாயம் 2 பாடம் 15

(م) عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَعُوذُ عَائِذٌ بِالْبَيْتِ فَيُبْعَثُ إِلَيْهِ بَعْثٌ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ خُسِفَ بِهِمْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ بِمَنْ كَانَ كَارِهًا قَالَ يُخْسَفُ بِهِ مَعَهُمْ وَلَكِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى نِيَّتِهِ . 129

உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : " அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , ஒருவர் இறையில்லம் கஅபா ( எல்லை ) க்குள் அபயம் தேடி வருவார் . அவரை நோக்கிப் படையன்று அனுப்பப்படும் . அப்படையினர் ஒரு சமவெளியில் இருக்கும்போது , பூமிக்குள் புதைந்துபோய்விடுவார்கள் `` என்று சொன்னார்கள் . உடனே நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! நிர்ப்பந்தமாகப் புறப்பட்டு வந்தவரின் நிலை என்ன ?`` என்று கேட்டேன் . “ அவர்களுடன் சேர்த்து அவரும் புதைந்துபோவார் . எனினும் , மறுமை நாளில் அவரது எண்ணத்திற்கேற்ப அவர் எழுப்பப்படுவார் `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்லிம் : 5523 / 2882)