பாடம்: 17. தஜ்ஷாலுக்கு முன்பு ஏற்படும் வெற்றிகள்
( م) عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ عَنْ نَافِعِ بْنِ عُتْبَةَ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ قَالَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْمٌ مِنْ قِبَلِ الْمَغْرِبِ عَلَيْهِمْ ثِيَابُ الصُّوفِ فَوَافَقُوهُ عِنْدَ أَكَمَةٍ فَإِنَّهُمْ لَقِيَامٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ قَالَ فَقَالَتْ لِي نَفْسِي ائْتِهِمْ فَقُمْ بَيْنَهُمْ وَبَيْنَهُ لَا يَغْتَالُونَهُ قَالَ ثُمَّ قُلْتُ لَعَلَّهُ نَجِيٌّ مَعَهُمْ فَأَتَيْتُهُمْ فَقُمْتُ بَيْنَهُمْ وَبَيْنَهُ قَالَ فَحَفِظْتُ مِنْهُ أَرْبَعَ كَلِمَاتٍ أَعُدُّهُنَّ فِي يَدِي قَالَ تَغْزُونَ جَزِيرَةَ الْعَرَبِ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ فَارِسَ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ تَغْزُونَ الرُّومَ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ تَغْزُونَ الدَّجَّالَ فَيَفْتَحُهُ اللَّهُ. 132
நாஃபிஉ பின் உத்பா பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம் . அப்போது கம்பளியாடை அணிந்த ஒரு கூட்டத்தார் மேற்கிலிருந்து வந்து ஒரு குன்றின் அருகில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தார்கள் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமர்ந்து கொண்டிருந்தார்கள் . அக்கூட்டத்தார் ( அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு அருகில் ) நின்று கொண்டிருந்தார்கள் . அப்போது என் மனம் , “ நீ சென்று அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்குமிடையே நின்றுகொள் . அல்லாஹ்வின் தூதரை அவர்கள் திடீரெனத் தாக்கிவிட வேண்டாம் `` என்று சொன்னது . பிறகு நான் , “ அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏதேனும் இரகசியம் பேசிக் கொண்டிருக்கலாம் `` என்று நினைத்தேன் . பிறகு அவர்களிடம் வந்து அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் நடுவில் நின்றுகொண்டேன் . அப்போது என் கைவிரல்களில் எண்ணியபடி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான்கு விஷயங்களை மனனமிட்டேன் . 1. நீங்கள் அரபுத் தீபகற்பம் முழுவதையும் போரிட்டு வெற்றி காணும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் . 2. பிறகு பாரசீகர்களை வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் . 3. பிறகு உரோம ( பைஸாந்திய ) ர்களுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் . 4. பிறகு நீங்கள் ( மகா குழப்பவாதியான ) தஜ்ஜாலுடன் போரிட்டு அவனையும் வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் . நாஃபிஉ பின் உத்பா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஜாபிரே ! உரோம ( பைஸாந்திய ) ர்களுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் வரை தஜ்ஜால் வெளியேறி வருவதை நாம் காண மாட்டோம் .