25- باب : ما جاء بشأن يأجوج ومأجوج
பாடம் 25

பாடம்: 25. "யஃஷூஜ் மஃஷூஜ் குறித்து வந்துள்ளவை

ஹதீஸ் 145 அத்தியாயம் 2 பாடம் 25

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُفْتَحُ يَأْجُوجُ وَمَأْجُوجُ فَيَخْرُجُونَ كَمَا قَالَ اللَّهُ تَعَالَى وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ فَيَعُمُّونَ الْأَرْضَ وَيَنْحَازُ مِنْهُمْ الْمُسْلِمُونَ حَتَّى تَصِيرَ بَقِيَّةُ الْمُسْلِمِينَ فِي مَدَائِنِهِمْ وَحُصُونِهِمْ وَيَضُمُّونَ إِلَيْهِمْ مَوَاشِيَهُمْ حَتَّى أَنَّهُمْ لَيَمُرُّونَ بِالنَّهَرِ فَيَشْرَبُونَهُ حَتَّى مَا يَذَرُونَ فِيهِ شَيْئًا فَيَمُرُّ آخِرُهُمْ عَلَى أَثَرِهِمْ فَيَقُولُ قَائِلُهُمْ لَقَدْ كَانَ بِهَذَا الْمَكَانِ مَرَّةً مَاءٌ وَيَظْهَرُونَ عَلَى الْأَرْضِ فَيَقُولُ قَائِلُهُمْ هَؤُلَاءِ أَهْلُ الْأَرْضِ قَدْ فَرَغْنَا مِنْهُمْ وَلَنُنَازِلَنَّ أَهْلَ السَّمَاءِ حَتَّى إِنَّ أَحَدَهُمْ لَيَهُزُّ حَرْبَتَهُ إِلَى السَّمَاءِ فَتَرْجِعُ مُخَضَّبَةً بِالدَّمِ فَيَقُولُونَ قَدْ قَتَلْنَا أَهْلَ السَّمَاءِ فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ دَوَابَّ كَنَغَفِ الْجَرَادِ فَتَأْخُذُ بِأَعْنَاقِهِمْ فَيَمُوتُونَ مَوْتَ الْجَرَادِ يَرْكَبُ بَعْضُهُمْ بَعْضًا فَيُصْبِحُ الْمُسْلِمُونَ لَا يَسْمَعُونَ لَهُمْ حِسًّا فَيَقُولُونَ مَنْ رَجُلٌ يَشْرِي نَفْسَهُ وَيَنْظُرُ مَا فَعَلُوا فَيَنْزِلُ مِنْهُمْ رَجُلٌ قَدْ وَطَّنَ نَفْسَهُ عَلَى أَنْ يَقْتُلُوهُ فَيَجِدُهُمْ مَوْتَى فَيُنَادِيهِمْ أَلَا أَبْشِرُوا فَقَدْ هَلَكَ عَدُوُّكُمْ فَيَخْرُجُ النَّاسُ وَيَخْلُونَ سَبِيلَ مَوَاشِيهِمْ فَمَا يَكُونُ لَهُمْ رَعْيٌ إِلَّا لُحُومُهُمْ فَتَشْكَرُ عَلَيْهَا كَأَحْسَنِ مَا شَكِرَتْ مِنْ نَبَاتٍ أَصَابَتْهُ قَطُّ . 145

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யஃஜூஜ் மஃஜூஜ் ( உள்ள கதவு ) திறக்கப்படும் . அவர்கள் அதிலிருந்து வெளியேறி வருவார்கள் . உயர்ந்தோன் அல்லாஹ் அது பற்றிக் கூறுகின்றான் : அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலிருந்தும் பரவி வருவார்கள் . (21: 96) பூமியைச் சூழ்ந்துகொள்வார்கள் . அவர்களிலிருந்து முஸ்லிம்கள் வெருண்டோடிவிடுவார்கள் . எஞ்சியுள்ள முஸ்லிம்கள் தம்முடைய கால்நடைகளைத் தம்மோடு எடுத்துக்கொண்டு தங்களுடைய நகரங்களிலும் கோட்டைகளிலும் இருப்பார்கள் . ( யஃஜூஜ் மஃஜூஜ் செல்லும் வழியில் ) அவர்கள் நதியைக் கடந்து செல்வார்கள் . அதில் தண்ணீர் பருகுவார்கள் . அதில் எதையும் மிச்சம் வைக்கமாட்டார்கள் . அவர்களுள் கடைசியில் உள்ளவர் ( அவர்களுள் உள்ள ) கால் தடத்தைப் பின்பற்றிச் செல்வார் . அவர்களுள் ஒருவர் இந்த இடத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது . அது நிலத்தில் பரவியிருந்தது என்று கூறுவார் . அவர்களுள் ஒருவர் , இவர்கள் நிலவாசிகள் . இவர்களை நாங்கள் முடித்துவிட்டோம் . இப்போது நாம் வானத்திலுள்ளோரிடம் சண்டையிடுவோம் என்று கூறுவார் . ஆகவே அவர்களுள் ஒருவர் தம்முடைய அம்பை வானத்தை நோக்கி எறிவார் . அது இரத்தம் தோய்க்கப்பட்டதாகத் திரும்பிவரும் . அப்போது அவர்கள் , நாம் இப்போது வானத்திலுள்ளோரைக் கொன்றுவிட்டோம் என்று கூறுவார்கள் . ( ஆனால் ) அவர்களோ அவ்வாறே ( உயிருடன் ) இருப்பார்கள் . அச்சமயத்தில் அல்லாஹ் வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போல் பூச்சிகளை அனுப்பிவைப்பான் . அவை அவர்களின் கழுத்துகளைப் பிடித்துக்கொள்ளும் . எனவே அவர்கள் வெட்டுக்கிளிகளைப் போல இறந்துபோவார்கள் . அவர்களுள் ஒருவர் மற்றொருவர் மீது சாய்ந்து கிடப்பார் . காலையில் முஸ்லிம்கள் அவர்களைப் பற்றி எந்தச் சத்தத்தையும் செவியுறமாட்டார்கள் . ஆகவே முஸ்லிம்கள் , எவர் தம் ஆன்மாவை அல்லாஹ்வுக்காக விற்று ( அடைமானம் வைத்து ) அவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்த்துவருவார் ? எனக் கேட்பார்கள் . ( அது கேட்டு ) அவர்களுள் ஒருவர் இறங்குவார் . அவர் தம்மை அவர்கள் கொல்வார்கள் என்று தம்மைத் தயார்படுத்திக் கொண்டு செல்வார் . அவர்களோ இறந்து கிடப்பதைக் கண்டு முஸ்லிம்களை அழைத்து , நற்செய்தி பெறுங்கள் . உங்களுடைய எதிரிகள் அழிந்துவிட்டனர் என்று கூறுவார் . எனவே மக்கள் அனைவரும் வெளியேறி வந்து , தம்முடைய கால்நடைகளை ஓட்டிக்கொண்டு வருவார்கள் . அந்தக் கால்நடைகள் மேய்வதற்கு அவர்களுடைய இறைச்சிகளைத் தவிர வேறெதுவும் அங்கு இருக்காது . எனவே அவை அது வரை காணாத உணவான அந்த இறைச்சிகளைத் தின்று மிக அழகிய முறையில் கொழுத்துவிடும் .

Reference: ( இப்னுமாஜா : 4069 / 4079). இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 146 அத்தியாயம் 2 பாடம் 25

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ يَحْفِرُونَ كُلَّ يَوْمٍ حَتَّى إِذَا كَادُوا يَرَوْنَ شُعَاعَ الشَّمْسِ قَالَ الَّذِي عَلَيْهِمْ ارْجِعُوا فَسَنَحْفِرُهُ غَدًا فَيُعِيدُهُ اللَّهُ أَشَدَّ مَا كَانَ حَتَّى إِذَا بَلَغَتْ مُدَّتُهُمْ وَأَرَادَ اللَّهُ أَنْ يَبْعَثَهُمْ عَلَى النَّاسِ حَفَرُوا حَتَّى إِذَا كَادُوا يَرَوْنَ شُعَاعَ الشَّمْسِ قَالَ الَّذِي عَلَيْهِمْ ارْجِعُوا فَسَتَحْفِرُونَهُ غَدًا إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى وَاسْتَثْنَوْا فَيَعُودُونَ إِلَيْهِ وَهُوَ كَهَيْئَتِهِ حِينَ تَرَكُوهُ فَيَحْفِرُونَهُ وَيَخْرُجُونَ عَلَى النَّاسِ فَيُنْشِفُونَ الْمَاءَ وَيَتَحَصَّنُ النَّاسُ مِنْهُمْ فِي حُصُونِهِمْ فَيَرْمُونَ بِسِهَامِهِمْ إِلَى السَّمَاءِ فَتَرْجِعُ عَلَيْهَا الدَّمُ الَّذِي اجْفَظَّ فَيَقُولُونَ قَهَرْنَا أَهْلَ الْأَرْضِ وَعَلَوْنَا أَهْلَ السَّمَاءِ فَيَبْعَثُ اللَّهُ نَغَفًا فِي أَقْفَائِهِمْ فَيَقْتُلُهُمْ بِهَا . 146

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யஃஜூஜ் மஃஜூஜ் ஒவ்வொரு நாளும் சூரிய ஒளி தென்படுகின்ற வரை ( துளையிடுவதற்காகத் ) தோண்டுவார்கள் . ( அதன்பின் ) அவர்களுள் ஒருவர் , திரும்பிச் செல்லுங்கள் . நாம் நாளை தோண்டுவோம் என்று கூறுவார் . ( மறுநாள் ) அதைவிடக் கடினமாக அல்லாஹ் அதை மாற்றிவிடுவான் . அவர்களுடைய காலம் நெருங்கும் வரை அவன் இவ்வாறே செய்துகொண்டிருப்பான் . அவர்களை மக்களிடம் அனுப்ப அல்லாஹ் நாடுகின்றபோது , அவர்கள் சூரிய ஒளி தென்படுகின்ற வரை தோண்டுவார்கள் . ( அதன்பின் ) அவர்களுள் ஒருவர் , திரும்பிச் செல்லுங்கள் . இன்ஷா அல்லாஹ் நீங்கள் நாளை தோண்டுவீர்கள் என்று கூறுவார் . எனவே அவர்கள் ( அனைவரும் ) இன்ஷா அல்லாஹ் கூறுவார்கள் . ஆகவே அவர்கள் ( மறுநாள் ) திரும்ப வருவார்கள் . அப்போது அது அவர்கள் விட்டுச்சென்ற நிலையிலேயே இருக்கும் . எனவே அவர்கள் ( எளிதாகத் ) தோண்டிவிட்டு , மக்களை நோக்கி வெளியேறிவருவார்கள் . தண்ணீரை உறிஞ்சிக் குடிப்பார்கள் . மக்களெல்லாம் அவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறும்பொருட்டு கோட்டைகளில் தங்கியிருப்பார்கள் . அவர்கள் தம் அம்புகளை வானத்தை நோக்கி எறிவார்கள் . அது தன்னில் இரத்தம் தோய்க்கப்பட்ட நிலையில் திரும்பவரும் . அப்போது அவர்கள் , நாம் பூமியில் உள்ளோரை அடக்கி , வானிலுள்ளோரை மேலோங்கிவிட்டோம் என்று கூறுவார்கள் . அச்சமயத்தில் அல்லாஹ் அவர்கள் மத்தியில் அவர்களின் பிடரிகளைக் கவ்வுகின்ற ஒரு பூச்சியினத்தை அனுப்பிவைப்பான் . அவற்றின் மூலம் அல்லாஹ் அவர்களைக் கொல்வான் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : எவன் கைவசம் என் ஆன்மா உள்ளதோ அவன்மீது ஆணையாக ! திண்ணமாக நிலத்திலுள்ள உயிரினங்கள் அவர்களின் இறைச்சிகளைத் தின்று நன்றாகக் கொழுத்துப் பெருக்கும் .

Reference: ( இப்னுமாஜா : 4070/ 4080). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .