பாடம்: 26. அல்மஹ்தி குறித்து வந்துள்ளவை
عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَوْ لَمْ يَبْقَ مِنْ الدُّنْيَا إِلَّا يَوْمٌ ِ لَطَوَّلَ اللَّهُ ذَلِكَ الْيَوْمَ حَتَّى يَبْعَثَ فِيهِ رَجُلًا مِنِّي أَوْ مِنْ أَهْلِ بَيْتِي يُوَاطِئُ اسْمُهُ اسْمِي وَاسْمُ أَبِيهِ اسْمُ أَبِي يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا كَمَا مُلِئَتْ ظُلْمًا وَجَوْرًا . 147
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு நாளைத் தவிர உலக நாள் மீதி இல்லையென்றாலும் , என்னிலிருந்து அல்லது என் குடும்பத்திலிருந்து ஒருவரை அனுப்புகின்ற வரை அல்லாஹ் அதை நீடிக்கச் செய்வான் . அவருடைய பெயர் என் பெயரை ஒத்திருக்கும் . அவருடைய தந்தையின் பெயர் என் தந்தையின் பெயரை ஒத்திருக்கும் . பூமி முழுக்க அநியாயம் நிரம்பியிருந்ததைப்போல் அது நீதியாலும் நேர்மையாலும் நிரம்பும் .
عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: الْمَهْدِيُّ مِنْ عِتْرَتِي مِنْ وَلَدِ فَاطِمَةَ . 148
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்ததாவது : மஹ்தீ என் குடும்பத்திலிருந்து ஃபாத்திமாவின் வாரிசுகளுள் உள்ளவர் ஆவார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : " يَخْرُجُ رَجُلٌ يُقَالُ لَهُ : السُّفْيَانِيُّ فِي عُمْقِ دِمَشْقَ ، وَعَامَّةُ مَنْ يَتَّبِعُهُ مِنْ كَلْبٍ ، فَيَقْتُلُ حَتَّى يَبْقُرَ بُطُونَ النِّسَاءِ ، وَيَقْتُلَ الصِّبْيَانَ ، فَتَجْمَعُ لَهُمْ قَيْسٌ فَيَقْتُلُهَا حَتَّى لَا يَمْنَعَ ذَنَبُ تَلْعَةٍ ، وَيَخْرُجُ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي فِي الْحَرَّةِ فَيَبْلُغُ السُّفْيَانِيَّ ، فَيَبْعَثُ إِلَيْهِ جُنْدًا مِنْ جُنْدِهِ فَيَهْزِمُهُمْ ، فَيَسِيرُ إِلَيْهِ السُّفْيَانِيُّ بِمَنْ مَعَهُ حَتَّى إِذَا صَارَ بِبَيْدَاءَ مِنَ الْأَرْضِ خُسِفَ بِهِمْ ، فَلَا يَنْجُو مِنْهُمْ إِلَّا الْمُخْبِرُ عَنْهُمْ . 149
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்ததாவது : திமஷ்க்கின் முக்கியமான பகுதியில் சுஃப்யானீ எனும் மனிதன் புறப்பட்டுவருவான் . கல்ப் எனும் அரபுக் குலத்தினர் அவனைப் பின்பற்றி வருவார்கள் . பெண்களின் வயிறுகளைக் கிழித்துக் கொல்வான் ; சிறுவர்களைக் கொல்வான் . கைஸ் எனும் குலத்தினர் ( அவனுக்கெதிராக ) ஒன்று சேர்வார்கள் அவர்களையும் அவன் கொன்று சின்னாபின்னமாக ஆக்கிவிடுவான் . ஹர்ராவில் என் குடும்பத்திலிருந்து ஒரு மனிதர் புறப்பட்டுவருவார் . அவர் அந்த சுஃப்யானீயை அடைவார் . அவர் தம்முடைய படையினருள் ஒரு படையை அனுப்புவார் . அவர்களை அவன் தோற்கடித்துவிடுவான் . சுஃப்யானீ தன்னுடன் உள்ளவர்களோடு அவரை நோக்கி நடப்பான் . அவன் ஒரு பாலைவனப் பகுதிக்கு வருவான் . அதற்குள் அவர்கள் ( அனைவரும் ) பூமியில் செருகப்பட்டுவிடுவார்கள் . அவர்களைப் பற்றிய செய்தி அறிவிக்கின்ற ( ஒரு ) வனைத் தவிர அவர்களுள் யாரும் தப்பிக்க மாட்டார் .
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ ، قَالَ : " يَخْرُجُ فِي آخِرِ أُمَّتِي الْمَهْدِيُّ يَسْقِيهِ اللَّهُ الْغَيْثَ ، وَتُخْرِجُ الْأَرْضُ نَبَاتَهَا ، وَيُعْطِي الْمَالَ صِحَاحًا ، وَتَكْثُرُ الْمَاشِيَةُ وَتَعْظُمُ الْأُمَّةُ ، يَعِيشُ سَبْعًا أَوْ ثَمَانِيًا " يَعْنِي حِجَجًا . 150
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஸஈதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்ததாவது : என் சமுதாயத்தின் கடைசிக் காலத்தில் மஹ்தீ புறப்பட்டு வருவார் . அல்லாஹ் அவருக்கு மழையைப் பொழியச் செய்வான் . பூமி தனது தாவரங்களை முளைக்கச் செய்யும் . அவர் பொருள்களைச் சரியான முறையில் வழங்குவார் . கால்நடைகள் பெருகும் . அச்சமுதாயம் பெருவளர்ச்சியடையும் . அவர் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் வாழ்வார் .