பாடம்: 1. தியோர்கள் மீதே யுகமுடிவு நாள் ஏற்படும்
(م) عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ . 153
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மனிதர்களில் தீயவர்கள் மீதே யுக முடிவு நாள் ஏற்படும் . ( அதற்கு முன்பே நல்லவர்கள் அனைவரும் மறைந்து விடுவர் .)
(م) عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ اللَّهُ اللَّهُ . 154
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : பூமியில் " அல்லாஹ் , அல்லாஹ் ` என்று சொல்லப்படாதபோது தான் மறுமை நாள் நிகழும் .
عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكُونَ أَسْعَدَ النَّاسِ بِالدُّنْيَا لُكَعُ ابْنُ لُكَعٍ . 155
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுதைஃபா பின் அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அற்பனுக்குப் பிறந்த அற்பன் இவ்வுலகின் செல்வங்களால் மனிதர்களிலேயே பெரிய ஆளாக ஆகாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது .