பாடம்: 5. (மக்களை) ஒன்றுதிரட்டுதல்
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُحْشَرُ النَّاسُ عَلَى ثَلَاثِ طَرَائِقَ رَاغِبِينَ رَاهِبِينَ وَاثْنَانِ عَلَى بَعِيرٍ وَثَلَاثَةٌ عَلَى بَعِيرٍ وَأَرْبَعَةٌ عَلَى بَعِيرٍ وَعَشَرَةٌ عَلَى بَعِيرٍ وَيَحْشُرُ بَقِيَّتَهُمْ النَّارُ تَقِيلُ مَعَهُمْ حَيْثُ قَالُوا وَتَبِيتُ مَعَهُمْ حَيْثُ بَاتُوا وَتُصْبِحُ مَعَهُمْ حَيْثُ أَصْبَحُوا وَتُمْسِي مَعَهُمْ حَيْثُ أَمْسَوْا . 163
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : ( மறுமை நாள் ஏற்படுவதற்குச் சற்றுமுன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள் . ( அதில் முதல் பிரிவினர் ) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள் . ( இரண்டாவது பிரிவினர் ) ( வாகனப் பற்றாக்குறையால் தாமதித்துப் பின்னர் ) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக , ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக , ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக , ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் பேராகச் செல்வார்கள் . அவர்களுள் எஞ்சியவர் ( களே மூன்றாவது பிரிவினராவர் . அவர் ) களை ( பூமியில் ஏற்படும் ஒரு பெரும் ) தீ ( விபத்து ) ஒன்று திரட்டும் . அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் போதும் , இரவில் ஓய்வெடுக்கும் போதும் , காலை நேரத்தை அடையும் போதும் , மாலை நேரத்தை அடையும் போதும் ( இப்படி எல்லா நேரங்களிலும் ) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும் .
(ق) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الرِّجَالُ وَالنِّسَاءُ يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالَ الْأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يُهِمَّهُمْ ذَاكِ . 164
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : " நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக , நிர்வாணமானவர்களாக , விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள் `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . உடனே நான் “ அல்லாஹ்வின் தூதரே ! ( நிர்வாணமான ) ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் பார்ப்பார்களே ?`` என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு ( அங்குள்ள ) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும் `` என்று கூறினார்கள் .
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا ثُمَّ قَرَأَ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ فَأَوَّلُ مَنْ يُكْسَى إِبْرَاهِيمُ . 165
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ நீங்கள் ( மறுமை நாளில் ) காலில் செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள் `` என்று கூறிவிட்டு , பிறகு , “ எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில் , நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்போம் . இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும் . அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம் `` என்னும் (21:104) இறைவசனத்தை ஓதினார்கள் . முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுப வர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆவார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ مِقْدَارَ نِصْفِ يَوْمٍ مِنْ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ يُهَوِّنُ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ كَتَدَلِّي الشَّمْسِ لِلْغُرُوبِ إِلَى أَنْ تَغْرُبَ . 166
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஐம்பதாயிரம் ஆண்டுகள் கொண்ட நாளில் அரை நாள் வரை அகிலங்களின் இறைவன் முன்னிலையில் மக்கள் நிற்பார்கள் . ( ஆனால் ) அது இறைநம்பிக்கையாளர்களுக்கு சூரியன் மறைவதற்காகத் தணிந்து அது மறையும் வரையுள்ள நேரத்தைப் போன்றதாக இருக்கும் .