பாடம்: 8. பரிந்துரையும் மகாமுல் மஹ்மூதும்
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَشَ مِنْهَا نَهْشَةً ثُمَّ قَالَ أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ وَهَلْ تَدْرُونَ مِمَّ ذَلِكَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ يُسْمِعُهُمْ الدَّاعِي وَيَنْفُذُهُمْ الْبَصَرُ وَتَدْنُو الشَّمْسُ فَيَبْلُغُ النَّاسَ مِنْ الْغَمِّ وَالْكَرْبِ مَا لَا يُطِيقُونَ وَلَا يَحْتَمِلُونَ فَيَقُولُ النَّاسُ أَلَا تَرَوْنَ مَا قَدْ بَلَغَكُمْ أَلَا تَنْظُرُونَ مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ عَلَيْكُمْ بِآدَمَ . 170
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ( ஒரு விருந்தில் ) இறைச்சி கொண்டுவரப்பட்டது . அப்போது ( சமைக்கப்பட்ட ) புஜம் ( முன்கால் சப்பை ) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது . அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( அதை ) வாயாலேயே ( பற்களால் ) பற்றிக்கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள் . பிறகு “ நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன் . ( அந்நாளில் ) அல்லாஹ் ( மனிதர்களுள் ) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா ? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும் . ( பார்ப்போரின் ) பார்வை அவர்களை ( நன்கு ) சூழ்ந்து கொண்டிருக்கும் . சூரியன் ( அவர்களுக்கு ) அருகில் வரும் . அப்போது மனிதர்களிடம் , அவர்களால் தாங்கிக் கொள்ளவோ , பொறுத்துக் கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும் . அப்போது மனிதர்கள் ( சிலர் வேறு சிலரை நோக்கி ) ‘ உங்களுக்கு எத்தகைய ( ஆபத்தான ) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா ? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை ( த் தேடிப் ) பார்க்கமாட்டீர்களா ?` என்று கேட்பார்கள் . அப்போது மனிதர்களுள் சிலர் வேறு சிலரிடம் , "( உங்களுடைய ஆதி பிதா ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அணுகுங்கள் ( அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார் ) என்பர் . ஆகவே மனிதர்கள் , ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று " நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள் ; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான் . உங்களுக்குள் தன் ( னால் உருவாக்கப்பட்ட ) உயிரை ஊதினான் . வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான் . அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள் . நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையையும் , எங்களுக்கு நேர்ந்திருக்கும் ( துன்ப ) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கேட்பார்கள் . அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் (" நான் செய்த தவற்றின் காரணத்தால் ) என் இறைவன் என் மீது இன்று ( கடும் ) கோபம் கொண்டிருக்கிறான் . இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒரு போதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை . ( நான் நெருங்கக் கூடாத ஒரு ) மரத்திலிருந்து ( உண்ண வேண்டாமென்று ) என்னை அவன் தடுத்தான் . நான் அவனுக்கு மாறு செய்தேன் . என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது ` என்று கூறிவிட்டு " நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள் . நீங்கள் ( இறைத்தூதர் ) நூஹிடம் செல்லுங்கள் `` என்று சொல்வார்கள் . உடனே மக்களும் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று " நூஹே ! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு ( அனுப்பப்பெற்ற ) முதல் ( புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த ) இறைத்தூதர் ஆவீர்கள் . உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான் . எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா ?` என்று கேட்பார்கள் . அதற்கு நூஹ் அலைஹிஸ்ஸலாம் , " என் இறைவன் இன்று என் மீது ( கடும் ) கோபம் கொண்டுள்ளான் . இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை . ( எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போல் விசேஷமான ) பிரார்த்தனை ஒன்று எனக்கு ( வழங்கப்பட்டு ) இருந்தது . அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டேன் . நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது !` என்று கூறிவிட்டு , " நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள் ; ( இறைவனின் உற்ற நண்பர் ) இப்ராஹீமிடம் செல்லுங்கள் ` என்பார்கள் . அவ்வாறே மக்களும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று , " இப்ராஹீமே ! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களுள் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள் . எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கேட்பார்கள் . அதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் , " என் இறைவன் இன்று என்மீது ( கடுங் ) கோபம் கொண்டுள்ளான் . இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை . நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன் . - அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் .- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது ! ( ஆகவே ,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள் . ( இறைத் தூதர் ) மூஸாவிடம் செல்லுங்கள் ` என்று கூறுவார்கள் . அவ்வாறே மக்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று " மூஸாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள் . தன்னுடைய தூதுத்துவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான் . ( ஆகவே ,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கூறுவார்கள் . அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் " இன்று என் இறைவன் ( என்மீது கடும் ) கோபம் கொண்டுள்ளான் . இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பின்பும் இதைப்போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை . கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன் . நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டி யுள்ளது . ( ஆகவே ,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள் . ( இறைத்தூதர் ) ஈஸாவிடம் செல்லுங்கள் ` என்று கூறுவார்கள் . அவ்வாறே மக்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று , " ஈஸாவே ! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள் . மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் ( ஊதிய ) உயிரும் ஆவீர்கள் . நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள் . ( ஆகவே ,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கேட்பார்கள் . அதற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் , " என் இறைவன் இன்று ( என்மீது கடும் ) கோபம் கொண்டுள்ளான் . இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை .- ( தாம் புரிந்துவிட்டதாக ) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் - நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது ! ( ஆகவே ,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள் ; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள் ` என்று கூறுவார்கள் . அப்போது மக்கள் என்னிடம் வந்து " முஹம்மதே ! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் . இறைத்தூதர்களுள் இறுதியானவர் . உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான் . எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கூறுவர் . அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று , என் இறைவனுக்கு ( பணிந்து ) சஜ்தாவில் விழுவேன் . பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் ( உள்ளத்தில் ) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான் . பிறகு " முஹம்மதே ! உங்கள் தலையை உயர்த்துங்கள் ! கேளுங்கள் ; அது உங்களுக்குத் தரப்படும் . பரிந்துரையுங்கள் ; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் `` என்று சொல்லப்படும் . அப்போது நான் என் தலையை உயர்த்தி " இறைவா ! என் சமுதாயம் . இறைவா ! என் சமுதாயம் ` என்பேன் . அதற்கு " முஹம்மதே ! சொர்க்கத்தின் . வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்வி கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள் ; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம் ` என்று கூறப்படும் . என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக ! சொர்க்க வாசலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் " மக்காவிற்கும் ( யமனிலுள்ள ) " ஹிம்யர் ` எனும் ஊருக்கும் இடையிலுள்ள ` அல்லது " மக்காவிற்கும் ( ஷாமிலுள்ள ) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள ` தூரமாகும் `` என்று கூறினார்கள் .
عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَفَاعَتِي لِأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي . 171
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என்னுடைய பரிந்துரை என் சமுதாயத்தில் பெரும் பாவம் செய்தவர்களுக்குத்தான் .
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَال :َ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي آتٍ مِنْ عِنْدِ رَبِّي فَخَيَّرَنِي بَيْنَ أَنْ يُدْخِلَ نِصْفَ أُمَّتِي الْجَنَّةَ وَبَيْنَ الشَّفَاعَةِ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ وَهِيَ لِمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا . 172
அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ என் இறைவன் இன்றிரவு எனக்கு எதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொன்னான் என்று உங்களுக்குத் தெரியுமா ?” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வினவினார்கள் . அதற்கு நாங்கள் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர் ” என்றுரைத்தோம் . அப்போது அவர்கள் , “ திண்ணமாக அவன் என் சமுதாயத்தில் பாதிப்பேரைச் சொர்க்கத்தில் நுழைய வைத்தலுக்கும் பரிந்துரைக்கும் இடையே ( எதையேனும் ஒன்றைத் ) தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு வாய்ப்புக் கொடுத்தான் . அப்போது நான் பரிந்துரை செய்யும் உரிமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன் ” என்று கூறினார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே , அதற்குத் தகுதியானவர்களாக நாங்கள் ஆகுவதற்காகத் தாங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் ” என்று நாங்கள் கூறினோம் . “ அது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரியது ” என்றுரைத்தார்கள் .