பாடம்: 11. கேள்வி கணக்கும் அநியாயங்களுக்குப் பழிதீர்த்தலும்
(ق) عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ الْمَازِنِيِّ قَالَ بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا آخِذٌ بِيَدِهِ إِذْ عَرَضَ رَجُلٌ فَقَالَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي النَّجْوَى فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ يُدْنِي الْمُؤْمِنَ فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ وَيَسْتُرُهُ فَيَقُولُ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا فَيَقُولُ نَعَمْ أَيْ رَبِّ حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ قَالَ سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُونَ فَيَقُولُ الْأَشْهَادُ هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ . 176
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல் மாஸினீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் , அவர்களுடைய கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் குறுக்கிட்டு , "( மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும் ) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள் ?`` என்று கேட்டார் . அதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹு தஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து , அவன்மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான் . பிறகு அவனை நோக்கி , " நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா ? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா ?` என்று கேட்பான் . அதற்கு அவன் , " ஆம் , என் இறைவா !` என்று கூறுவான் . ( இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி ) அவன் ( தான் செய்த ) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான் . அந்த முஃமின் , " நாம் இத்தோடு ஒழிந்தோம் ` என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன் , " இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன் . இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன் ` என்று கூறுவான் . அப்போது அவனது நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும் . நிராகரிப்பாளர்களையும் , நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள் , " இவர்கள்தாம் , தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள் . எச்சரிக்கை ! இத்தகைய அக்கிரமக்காரர்கள்மீது இறைவனின் சாபம் உண்டாகும் ` என்பார்கள் ` (11: 18) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற நான் கேட்டிருக்கிறேன் `` என்று கூறினார்கள் .
(خ) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنْ النَّارِ حُبِسُوا بِقَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ فَيَتَقَاصُّونَ مَظَالِمَ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا حَتَّى إِذَا نُقُّوا وَهُذِّبُوا أُذِنَ لَهُمْ بِدُخُولِ الْجَنَّةِ فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَأَحَدُهُمْ بِمَسْكَنِهِ فِي الْجَنَّةِ أَدَلُّ بِمَنْزِلِهِ كَانَ فِي الدُّنْيَا . 177
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : முஃமின்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது , சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் . அப்போது உலகில் ( வாழ்ந்தபோது ) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள் . இறுதியில் , அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகிவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் . முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன்மீது சத்தியமாக ! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை , உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ ؟ قَالُوا : الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ . 178
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( மக்களிடம் ), “ திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் , “ யாரிடம் வெள்ளிக் காசோ ( திர்ஹம் ) பொருட்களோ இல்லையோ அவர்தாம் எங்களைப் பொருத்தவரை திவாலானவர் `` என்று பதிலளித்தார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார் . அவர் மறுமை நாளில் தொழுகை , நோன்பு , ஸகாத் ஆகியவற்றுடன் வருவார் . ( அதே நேரத்தில் ) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார் . ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார் . ஒருவரது பொருளை ( முறைகேடாக ) ப் புசித்திருப்பார் . ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார் . ஒருவரை அடித்திருப்பார் . ஆகவே , அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும் ; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும் . அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால் , ( அவரால் பாதிக்கப்பட்ட ) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு , இவர் மீது போடப்படும் . பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் ( அவரே திவாலாகிப் போனவர் )`` என்று கூறினார்கள் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنْ الشَّاةِ الْقَرْنَاءِ . 179
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள் . எந்த அளவுக்கென்றால் , கொம்பில்லாத ஆட்டுக்காக ( அதை முட்டிய ) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும் .
(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَحِكَ فَقَالَ هَلْ تَدْرُونَ مِمَّ أَضْحَكُ قَالَ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ مِنْ مُخَاطَبَةِ الْعَبْدِ رَبَّهُ يَقُولُ يَا رَبِّ أَلَمْ تُجِرْنِي مِنْ الظُّلْمِ قَالَ يَقُولُ بَلَى قَالَ فَيَقُولُ فَإِنِّي لَا أُجِيزُ عَلَى نَفْسِي إِلَّا شَاهِدًا مِنِّي قَالَ فَيَقُولُ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ شَهِيدًا وَبِالْكِرَامِ الْكَاتِبِينَ شُهُودًا قَالَ فَيُخْتَمُ عَلَى فِيهِ فَيُقَالُ لِأَرْكَانِهِ انْطِقِي قَالَ فَتَنْطِقُ بِأَعْمَالِهِ قَالَ ثُمَّ يُخَلَّى بَيْنَهُ وَبَيْنَ الْكَلَامِ قَالَ فَيَقُولُ بُعْدًا لَكُنَّ وَسُحْقًا فَعَنْكُنَّ كُنْتُ أُنَاضِلُ . 180
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருகில் இருந்தோம் . அப்போது அவர்கள் சிரித்துவிட்டு , “ நான் சிரித்ததற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்று சொன்னோம் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஓர் அடியான் தன் இறைவனுடன் ( மறுமை நாளில் ) உரையாடுவது குறித் ( து நினைத் ) தே ( சிரித்தேன் )`` என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள் : அடியான் ( தன் இறைவனிடம் ), “ என் இறைவா ! நீ எனக்கு அநீதியிழைப்பதிலிருந்து பாதுகாப்பு வழங்குவாய் என உறுதியளிப்பாய் அல்லவா ?`` என்று கேட்பான் . அதற்கு இறைவன் , ` ஆம் ` என்பான் . அடியான் , “ அவ்வாறாயின் , எனக்கெதிராக ( சாட்சியம் கூற ) என்னிலிருந்து தவிர வேறெந்தச் சாட்சியத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன் `` என்று கூறுவான் . அதற்கு இறைவன் , “ இன்றைய தினம் உனக்கெதிராகச் சாட்சியமளிக்க நீயும் கண்ணியமிக்க எழுத்தர் ( களான வானவர் ) களுமே போதும் `` என்பான் . பிறகு அவனது வாய்க்கு முத்திரையிடப்படும் . அவனுடைய உறுப்புகளிடம் , “ பேசுங்கள் `` என்று சொல்லப்படும் . உடனே அவை அந்த அடியான் செய்த செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் . பிறகு அந்த அடியானும் உறுப்புகளும் தனியாகப் பேசுவதற்கு அனுமதியளிக்கப்படும் . அப்போது அந்த அடியான் , “ உங்களுக்கு நாசமுண்டாகட்டும் ! தொலைந்து போங்கள் . உங்களுக்காகத்தானே நான் ( இவ்வளவு நேரம் இறைவனிடம் ) வழக்காடினேன் `` என்று ( தன் உறுப்புகளிடம் ) சொல்வான் .
عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ . 181
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூபர்ஸா அல்அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் ஓர் அடியானிடம் ( பின்வரும் விஷயங்கள் குறித்து ) விசாரணை செய்யப்படுவதற்கு முன் அவனுடைய பாதங்கள் ( நின்ற இடத்திலிருந்து ) நகர முடியாது . 1. அவன் வாழ்நாள்-அதை எவ்வாறு கழித்தான் ? 2. அவன் கற்ற கல்வி-அதைக் கொண்டு எவ்விதம் செயல்பட்டான் ? 3. அவன் பொருளாதாரம்-அதை எங்கிருந்து திரட்டினான் ? 4. அ( ப்பொருளாதாரத் ) தை எவ்வாறு செலவிட்டான் ? 5. அவன் உடல் - அதை எதில் ஈடுபடுத்தினான் ?
عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حُوسِبَ عُذِّبَ . 182
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் ( துருவித் துருவி ) கணக்கு கேட்கப்பட்டானோ அவன் வேதனை செய்யப்படுவான் .
عَنْ عَائِشَةَ تَقُولُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْحِسَابِ الْيَسِيرِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا الْحِسَابُ الْيَسِيرُ فَقَالَ الرَّجُلُ تُعْرَضُ عَلَيْهِ ذُنُوبُهُ ثُمَّ يُتَجَاوَزُ لَهُ عَنْهَا إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ وَلَا يُصِيبُ عَبْدًا شَوْكَةٌ فَمَا فَوْقَهَا إِلَّا قَاصَّ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهَا مِنْ خَطَايَاهُ . 183
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , எளிமையான முறையில் கேள்வி கணக்கு கேட்கப்படுவது குறித்துக் கேட்டேன் . “ அல்லாஹ்வின் தூதரே ! எளிமையான முறையில் கேள்வி கணக்கு கேட்கப்படுதல் என்றால் என்ன ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ ஒரு மனிதனிடம் அவனது பாவங்களெல்லாம் எடுத்துக் காட்டப்படும் . பிறகு அவனுக்கு அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் . நிச்சயமாக எவன் துருவித் துருவிக் கேட்கப்பட்டானோ அவன் அழிந்தான் . ஒரு மனிதருக்கு முள்ளோ அதற்கு மேலோ ( ஏதேனும் பொருள் ) தொல்லை கொடுத்தால் அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய பாவங்களுக்கு அதைப் பரிகாரமாக ஆக்காமல் இருப்பதில்லை ” என்று கூறினார்கள் .