பாடம்: 13. நீர்த்தடாகம் குறித்து வந்துள்ளதாவது
(ق)عَنْ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ مَاؤُهُ أَبْيَضُ مِنْ اللَّبَنِ وَرِيحُهُ أَطْيَبُ مِنْ الْمِسْكِ وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ مَنْ شَرِبَ مِنْهَا فَلَا يَظْمَأُ أَبَدًا . 189
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : (" அல்கவ்ஸர் ` எனும் ) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் ( பரப்பளவு ) கொண்டதாகும் . அதன் நீர் பாலைவிட வெண்மையானது . அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது . அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை . யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள் .
(ق) عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي عَلَى الْحَوْضِ حَتَّى أَنْظُرَ مَنْ يَرِدُ عَلَيَّ مِنْكُمْ وَسَيُؤْخَذُ نَاسٌ دُونِي فَأَقُولُ يَا رَبِّ مِنِّي وَمِنْ أُمَّتِي فَيُقَالُ هَلْ شَعَرْتَ مَا عَمِلُوا بَعْدَكَ وَاللَّهِ مَا بَرِحُوا يَرْجِعُونَ عَلَى أَعْقَابِهِمْ . 190
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : நான் (" அல்கவ்ஸர் `) தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களுள் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன் . அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள் . உடனே நான் " இறைவா ! ( இவர்கள் ) என்னைச் சேர்ந்தவர்கள் ; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் `` என்பேன் . அதற்கு “ உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா ? அல்லாஹ்வின் மீதாணையாக ! இவர்கள் தங்கள் குதிகால்கள் மீது ( தம் பழைய மதத்திற்கே ) திரும்பச் சென்று கெண்டேயிருந்தார்கள் `` என்று கூறப்படும் .
(م)عَنْ عَائِشَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ بَيْنَ ظَهْرَانَيْ أَصْحَابِهِ إِنِّي عَلَى الْحَوْضِ أَنْتَظِرُ مَنْ يَرِدُ عَلَيَّ مِنْكُمْ فَوَاللَّهِ لَيُقْتَطَعَنَّ دُونِي رِجَالٌ فَلَأَقُولَنَّ أَيْ رَبِّ مِنِّي وَمِنْ أُمَّتِي فَيَقُولُ إِنَّكَ لَا تَدْرِي مَا عَمِلُوا بَعْدَكَ مَا زَالُوا يَرْجِعُونَ عَلَى أَعْقَابِهِمْ . 191
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்கள் முன்னிலையில் இருந்தபடி கூறினார்கள் : நான் எனது (" அல்கவ்ஸர் ` எனும் ) தடாகத்தினருகில் உங்களில் என்னிடம் வருபவர் யார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன் . அல்லாஹ்வின் மீதாணையாக ! உங்களில் சிலர் என்னிடம் நெருங்க விடாமல் தடுக்கப்படுவர் . அப்போது நான் “ இறைவா ! ( இவர்கள் ) என்னைச் சேர்ந்தவர்கள் ; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் `` என்று கூறுவேன் . அதற்கு இறைவன் , “ இவர்கள் உமக்குப் பின்னால் செய்ததை நீர் அறியமாட்டீர் . இவர்கள் தம் குதிகால்கள்மீது ( தம் பழைய மதத்திற்கே ) திரும்பிச் சென்றுகொண்டேயிருந்தனர் `` என்று கூறுவான் .
(م) عَنْ أَبِي ذَرٍّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا آنِيَةُ الْحَوْضِ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَآنِيَتُهُ أَكْثَرُ مِنْ عَدَدِ نُجُومِ السَّمَاءِ وَكَوَاكِبِهَا أَلَا فِي اللَّيْلَةِ الْمُظْلِمَةِ الْمُصْحِيَةِ آنِيَةُ الْجَنَّةِ مَنْ شَرِبَ مِنْهَا لَمْ يَظْمَأْ آخِرَ مَا عَلَيْهِ يَشْخَبُ فِيهِ مِيزَابَانِ مِنْ الْجَنَّةِ مَنْ شَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ عَرْضُهُ مِثْلُ طُولِهِ مَا بَيْنَ عَمَّانَ إِلَى أَيْلَةَ مَاؤُهُ أَشَدُّ بَيَاضًا مِنْ اللَّبَنِ وَأَحْلَى مِنْ الْعَسَلِ . 192
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் ( நபியவர்களிடம் ), “ அல்லாஹ்வின் தூதரே ! ( அல்கவ்ஸர் எனும் ) அத்தடாகத்தின் கோப்பைகள் என்ன ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக ! அதன் கோப்பைகள் ( எண்ணிக்கையானது ), மேகமோ நிலவோ இல்லாத இரவில் காட்சியளிக்கும் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானதாகும் . அவையே சொர்க்கத்தின் கோப்பைகளாகும் . யார் அ( த்தடாகத் ) தில் அருந்துகிறாரோ அவருக்கு இறுதிவரை தாகமே ஏற்படாது . அதில் சொர்க்கத்திலிருந்து இரு வடிகுழாய்கள் வழியாக நீர் வந்துசேருகிறது . அதில் அருந்துபவருக்குத் தாகமே ஏற்படாது . அத்தடாகத்தின் அகலம் அதன் நீளத்தைப் போன்று ( சம அளவில் ) இருக்கும் . அதன் தொலைதூரம் ( அன்றைய ஷாம் நாட்டிலிருந்த ) " அம்மானு`க்கும் " அய்லா`வுக்கும் இடையேயுள்ள தொலை தூரத்தைக் கொண்டதாகும் . அதன் நீர் பாலைவிட வெண்மையானது ; தேனைவிட மதுரமானது `` என்று கூறினார்கள் .