15- باب : الميزان وحديث البطاقة
பாடம் 15

பாடம்: 15. தராசும் புதிய ஏடும்

ஹதீஸ் 194 அத்தியாயம் 3 பாடம் 15

عن عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ سَيُخَلِّصُ رَجُلًا مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًّا كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ الْبَصَرِ ثُمَّ يَقُولُ أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا أَظَلَمَكَ كَتَبَتِي الْحَافِظُونَ فَيَقُولُ لَا يَا رَبِّ فَيَقُولُ أَفَلَكَ عُذْرٌ فَيَقُولُ لَا يَا رَبِّ فَيَقُولُ بَلَى إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً فَإِنَّهُ لَا ظُلْمَ عَلَيْكَ الْيَوْمَ فَتَخْرُجُ بِطَاقَةٌ فِيهَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَيَقُولُ احْضُرْ وَزْنَكَ فَيَقُولُ يَا رَبِّ مَا هَذِهِ الْبِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلَّاتِ فَقَالَ إِنَّكَ لَا تُظْلَمُ قَالَ فَتُوضَعُ السِّجِلَّاتُ فِي كَفَّةٍ وَالْبِطَاقَةُ فِي كَفَّةٍ فَطَاشَتْ السِّجِلَّاتُ وَثَقُلَتْ الْبِطَاقَةُ فَلَا يَثْقُلُ مَعَ اسْمِ اللَّهِ شَيْءٌ . 194

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் என் சமுதாயத்திலிருந்து ஒரு மனிதரை அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் ( பெயர் கூறி ) கூவி அழைக்கப்படும் . அவருக்குத் தொண்ணூற்று ஒன்பது ஆவணங்கள் விரிக்கப்படும் . ஒவ்வோர் ஆவணமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ( இருக்கும் ). பின்னர் மகத்துவமும் வல்லமையும் கொண்ட அல்லாஹ் , “ இதிலிருந்து எதையேனும் நீ மறுக்கின்றாயா ?” என்று வினவுவான் . “ இல்லை , என் இறைவா ” என்று கூறுவான் . “ என்னுடைய கண்காணிப்பு எழுத்தர்கள் உனக்கு அநியாயம் செய்து விட்டார்களா ?” என்று கேட்டுவிட்டு , பின்னர் , “ இவை தவிர உனக்கு நன்மை ஏதும் உள்ளதா ?” என்று கேட்பான் . அந்த மனிதன் பயந்துபோய் , “ இல்லை ” என்று கூறுவான் . அதற்கு அல்லாஹ் , “ ஆம் , உனக்காக நம்மிடம் நன்மைகள் உள்ளன . திண்ணமாக இன்றைய நாளில் உமக்கு எந்த அநியாயமும் இல்லை ” என்று கூறுவான் . ( பின்னர் ) அவனுக்காக ஓர் ஏடு வெளிக்கொணரப்படும் . அதில் , அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு ( பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் திண்ணமாக முஹம்மத் அவனுடைய அடியாராகவும் அவனுடைய தூதராகவும் இருக்கின்றார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன் ) என்று ( எழுதப்பட்டு ) இருக்கும் . அப்போது அவன் , “ என் இறைவா , இந்த ஆவணங்களோடு இது என்ன ஏடு ( வேறு )?” என்று வினவுவான் . அப்போது அல்லாஹ் , “ திண்ணமாக நீ அநியாயம் செய்யப்படமாட்டாய் ” என்று கூறுவான் . பிறகு அந்த ஆவணங்கள் ஒரு தட்டிலும் அந்த ஏடு ஒரு தட்டிலும் வைக்கப்படும் . அப்போது அந்த ஆவணங்கள் ( வலுவிழந்து ) மேலே சென்றுவிடும் . அந்த ஏடு ( கனத்தால் ) தாழும் .

Reference: ( திர்மிதீ : 2639, இப்னுமாஜா : 4290./ 4300). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .