3-باب : قرب الجنة والنار
பாடம்
3
பாடம்: 3. மனிதன் தனது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நெருக்கமாக இருத்தல்
ஹதீஸ் 201
அத்தியாயம் 4
பாடம் 3
(خ ) عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَنَّةُ أَقْرَبُ إِلَى أَحَدِكُمْ مِنْ شِرَاكِ نَعْلِهِ وَالنَّارُ مِثْلُ ذَلِكَ . 201
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது . நரகமும் அதைப் போன்றே ( மிக அருகில் உள்ளது ).
Reference: ( புகாரீ : 6488)
ஹதீஸ் 202
அத்தியாயம் 4
பாடம் 3
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَأَيْتُ مِثْلَ النَّارِ نَامَ هَارِبُهَا وَلَا مِثْلَ الْجَنَّةِ نَامَ طَالِبُهَا. 202
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் நரக நெருப்பைப் போன்று ( கடுமையான ) எதையும் கண்டதில்லை . அதிலிருந்து வெருண்டோட வேண்டியவன் உறங்கிக் கிடக்கிறான் . நான் சொர்க்கத்தைப் போன்று ( இன்பமான ) எதையும் கண்டதில்லை . அதைத் தேட வேண்டியவனும் உறங்கிக் கிடக்கிறான் .
Reference: ( திர்மிதீ : 2526 / 2601). இது ` ஹசன் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .