7-باب : نهر الكوثر
பாடம் 7

பாடம்: 7. அல்கவ்ஸர் நதி

ஹதீஸ் 225 அத்தியாயம் 6 பாடம் 7

(خ) عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا عُرِجَ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى السَّمَاءِ قَالَ أَتَيْتُ عَلَى نَهَرٍ حَافَتَاهُ قِبَابُ اللُّؤْلُؤِ مُجَوَّفًا فَقُلْتُ مَا هَذَا يَا جِبْرِيلُ قَالَ هَذَا الْكَوْثَرُ . 225

தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன் . அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன . அப்போது நான் , “ ஜிப்ரீலே , இது என்ன ?`` என்று கேட்டேன் . “ இது அல்கவ்ஸர் `` என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் பதிலளித்தார்கள் .

Reference: ( புகாரீ : 4964) மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளதாவது : “ இதுதான் உங்கள் இறைவன் உங்களுக்கு ( சிறப்பாக ) வழங்கிய அல்கவ்ஸர் `` என்றார் . " அதன் மண் ` அல்லது " அதன் வாசனை ` நறுமணமிக்க கஸ்தூரியாகும் .