6-باب : (كل مولود على الفطرة )
பாடம் 6

பாடம்: 6. எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன

ஹதீஸ் 263 அத்தியாயம் 7 பாடம் 6

(ق ) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يُحَدِّثُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا الْآيَةَ . 263

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல , எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான ( மார்க்கத் ) தில்தான் பிறக்கின்றன . விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? ( முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல் ) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை ( இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி ) யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர் .” பிறகு அபூஹ§ரைரா ரளியல்லாஹு அன்ஹு , “ எ( ந்த மார்க்கத் ) தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய ( நிலையான ) இயற்கை மார்க்கமாகும் ; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை ; அதுவே நிலையான மார்க்கமாகும் `` என்ற (30:30ஆம்) வசனத்தை ஓதிக் காட்டினார்கள் .

Reference: ( புகாரீ : 1359, முஸ்லிம் : 2658)