7-باب :( الله أعلم بما كانوا عا ملين )
பாடம் 7

பாடம்: 7. அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதை அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்

ஹதீஸ் 264 அத்தியாயம் 7 பாடம் 7

(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَوْلَادِ الْمُشْرِكِينَ فَقَالَ اللَّهُ إِذْ خَلَقَهُمْ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ . 264

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இணைவைப்போரின் குழந்தைகள் ( இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது ? என்பது ) பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது . அதற்கவர்கள் “ அவர்களைப் படைத்த அல்லாஹ் , அவர்கள் ( உயிருடனிருந்திருந்தால் ) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிந்தவன் `` எனக் கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 1383, முஸ்லிம் : 2660)