11-باب : ما قدر على ابن آدم من الزنى
பாடம் 11

பாடம்: 11. மனிதன்மீது விதிக்கப்பட்டுள்ள விபச்சாரத்தின் பங்கு

ஹதீஸ் 278 அத்தியாயம் 7 பாடம் 11

(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنْ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ . 278

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான் . அதை மனிதன் அடைந்தே தீருவான் . ( மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல ; கண்ணும் நாவும்கூட விபச்சாரம் செய்கின்றன .) கண் செய்யும் விபச்சாரம் ( தவறான ) பார்வையாகும் . நாவு செய்யும் விபச்சாரம் ( பாலுணர்வைத் தூண்டும் ) பேச்சாகும் . மனம் ஏங்குகிறது ; இச்சை கொள்கிறது . மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது . அல்லது பொய்யாக்குகிறது .

Reference: ( புகாரீ : 6243) இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ள இந்த ஹதீஸைவிடச் சிறு பாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை .