12-باب : حجاج آدم وموسى عليه السلام
பாடம் 12

பாடம்: 12. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தர்க்கம் செய்தல்

ஹதீஸ் 279 அத்தியாயம் 7 பாடம் 12

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ احْتَجَّ آدَم ُ وَمُوسَى فَقَالَ لَهُ مُوسَى يَا آدَم ُ أَنْتَ أَبُونَا خَيَّبْتَنَا وَأَخْرَجْتَنَا مِنْ الْجَنَّةِ قَالَ لَهُ آدَم ُ يَا مُوسَى اصْطَفَاكَ اللَّهُ بِكَلَامِهِ وَخَطَّ لَكَ بِيَدِهِ أَتَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَهُ اللَّهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً فَحَجَّ آدَم ُ مُوسَى فَحَجَّ آدَم ُ مُوسَى ثَلَاثًا . 279

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இறைத்தூதர்களான ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தர்க்கம் செய்தார்கள் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் “ ஆதம் அவர்களே ! எங்கள் தந்தையான நீங்கள் ( உங்கள் பாவத்தின் காரணத்தால் ) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள் ; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள் `` என்று சொன்னார்கள் . அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் , “ மூஸாவே ! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான் ; அவன் தன் கரத்தால் ( வல்லமையால் ) உமக்காக ( தவ்ராத் எனும் வேதத்தை ) வரைந்தான் . ( இத்தகைய ) நீங்கள் , அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . ( இந்த பதில் மூலம் ) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் தோற்கடித்து விட்டார்கள் ; தோற்கடித்து விட்டார்கள் என மூன்று முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 6614, முஸ்லிம் : 2652) முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ளதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தம் இறைவன் அருகில் தர்க்கம் செய் தார்கள் . அப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் தோற்கடித்து விட்டார்கள் . மூஸா அலைஹிஸ்ஸலாம் , " அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்து , உங்களுக்குள் தனது உயிரை ஊதி , தன் வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்து , உங்களைச் சொர்க்கத்தில் குடியிருக்கச் செய்த ஆதம் நீங்கள்தாமே ! பிறகு நீங்கள் உங்களது பாவத்தின் மூலம் ( உங்கள் வழித் தோன்றல்களான ) மனிதர்களை பூமிக்கு இறங்கச் செய்துவிட்டீர்கள் `` என்று கூறினார்கள் . அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் , “ அல்லாஹ் தன் தூதுத்துவச் செய்திகளைத் தெரிவிக்கவும் தன்னிடம் உரையாடவும் உம்மைத் தேர்ந்தெடுத்து , அனைத்துப் பொருட்களைப் பற்றிய விளக்கமும் உள்ள பலகைகளை உமக்கு வழங்கி , தன் அருகில் வரச்செய்து இரகசியமாக உரையாடிய மூஸா நீர்தாமே ! நான் படைக்கப்படுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் தவ்ராத்தை எழுதியதாக நீர் கண்டீர் ?`` என்று கேட்டார்கள் . அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் , “ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் `` என்று பதிலளித்தார்கள் . “ அதில் , ஆதம் தம் இறைவனுக்கு மாறுசெய்தார் . எனவே , அவர் வழி தவறினார் என்று எழுதப்பட்டிருந்ததா ?`` எனக் கேட்டார் . அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் , " ஆம் ` என்றார்கள் . “ அவ்வாறாயின் , என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நான் எதைச் செய்வேன் என்று இறைவன் என்மீது விதியாக்கிவிட்டானோ அதைச் செய்ததற்காக என்னை நீர் பழிக்கிறீரா ?`` என்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் கேட்டார்கள் . ( இந்த எதிர்வினாவின் மூலம் ) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் தோற்கடித்து விட்டார்கள் . ( முஸ்லிம் : 2652 / 5159)