15-باب :الرضا بالقضاء
பாடம்
15
பாடம்: 15. விதியைத் திருப்திகொள்ளுதல்
ஹதீஸ் 284
அத்தியாயம் 7
பாடம் 15
عَنْ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَعَادَةِ ابْنِ آدَمَ رِضَاهُ بِمَا قَضَى اللَّهُ لَهُ وَمِنْ شَقَاوَةِ ابْنِ آدَمَ تَرْكُهُ اسْتِخَارَةَ اللَّهِ وَمِنْ شَقَاوَةِ ابْنِ آدَمَ سَخَطُهُ بِمَا قَضَى اللَّهُ لَهُ . 284
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஆதமின் மகன் ( மனிதன் ) தனக்காக அல்லாஹ் விதியில் எழுதியதை மனநிறைவோடு ஏற்றுக்கொள்வதானது அவனது நற்பேற்றில் அடங்கும் . நல்லதைத் தனக்காகத் தேர்வு செய்யுமாறு அல்லாஹ்விடம் கோராமலிருப்பது ஆதமின் மகனுடைய துர்ப்பேற்றில் அடங்கும் . மேலும் தனக்காக அல்லாஹ் விதியில் எழுதியதை வெறுப்பதும் ஆதமின் மகனுடைய துர்ப்பேற்றில் அடங்கும் .
Reference: ( திர்மிதீ : 2077 / 2151). இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ளஈஃப் ’ தரத்தில் உள்ளது .