3-باب : أَول ما نزل وآخر ما نزل
பாடம் 3

பாடம்: 3. முதன்முதலாக அருளப்பெற்றதும் கடைசியாக அருளப்பெற்றதும்

ஹதீஸ் 429 அத்தியாயம் 9 பாடம் 3

(ق) عَنْ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ آخِرُ سُورَةٍ نَزَلَتْ كَامِلَةً بَرَاءَةٌ وَآخِرُ سُورَةٍ نَزَلَتْ خَاتِمَةُ سُورَةِ النِّسَاءِ يَسْتَفْتُونَكَ قُلْ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلَالَةِ . 429

பராஉ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : முழுமையான வடிவில் அருளப்பெற்ற கடைசி அத்தியாயம் , " பராஅத் ` (" அத்தவ்பா ` என்னும் 9-ஆம்) அத்தியாயம் ஆகும் . கடைசியாக அருளப்பெற்ற அத்தியாயப் பகுதி " அந்நிஸா`வின் இறுதிப் பகுதியாகும் . அந்த வசனம் வருமாறு : ( நபியே !) மக்கள் உங்களிடம் " கலாலா ` பற்றித் தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள் . நீங்கள் கூறுங்கள் : அல்லாஹ் உங்களுக்கு " கலாலா ` பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான் .... (4: 176)

Reference: ( புகாரீ : 4364, முஸ்லிம் : 1618) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களிலும் மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ளதாவது : “( நபியே !) மக்கள் உங்களிடம் " கலாலா ` பற்றித் தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள் ...” என்பதே கடைசியாக இறங்கிய வசனமாகும் . ( புகாரீ : 4654).
ஹதீஸ் 430 அத்தியாயம் 9 பாடம் 3

(م) عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، قَالَ قَالَ لِيَ ابْنُ عَبَّاسٍ تَعْلَمُ وَقَالَ هَارُونُ تَدْرِي آخِرَ سُورَةٍ نَزَلَتْ مِنَ الْقُرْآنِ نَزَلَتْ جَمِيعًا قُلْتُ نَعَمْ ‏‏ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ‏ قَالَ صَدَقْتَ ‏. 430

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என்னிடம் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு , “ குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற முழு அத்தியாயம் எதுவென உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . நான் , “ ஆம் ; " அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால் ...` என்று தொடங்கும் (110ஆம்) அத்தியாயமே அது `` என்று பதிலளித்தேன் . அதற்கு அவர்கள் ,” உண்மைதான் `` என்றார்கள் .

Reference: ( முஸ்லிம் : 3024 / 5758)
ஹதீஸ் 431 அத்தியாயம் 9 பாடம் 3

عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقَالَتْ هَلْ تَقْرَأُ سُورَةَ الْمَائِدَةِ قَالَ قُلْتُ نَعَمْ قَالَتْ فَإِنَّهَا آخِرُ سُورَةٍ نَزَلَتْ فَمَا وَجَدْتُمْ فِيهَا مِنْ حَلَالٍ فَاسْتَحِلُّوهُ وَمَا وَجَدْتُمْ فِيهَا مِنْ حَرَامٍ فَحَرِّمُوهُ وَسَأَلْتُهَا عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ الْقُرْآنُ . 431

ஜுபைர் பின் நுஃபைர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றேன் . அப்போது அவர்கள் , “ நீ அல்மாயிதா அத்தியாயத்தை ஓதுகிறாயா ?” என்று கேட்டார்கள் . “ ஆம் ” என்றேன் . “ அதுதான் கடைசியாக இறங்கிய அத்தியாயமாகும் . அதில் நீங்கள் ஆகுமானதெனக் கண்டதை ஆகுமாக்குங்கள் . தடைசெய்யப்பட்டதெனக் கண்டதைத் தடைசெய்துவிடுங்கள் ” என்று கூறினார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணத்தைக் குறித்து நான் அவர்களிடம் கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ குர்ஆன் ( ஆக இருந்தது )” என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 25547) இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் தரத்தில் உள்ளது . இதன் அறிவிப்பாளர்கள் ஸஹீஹ் தரத்தில் உள்ளோர் ஆவர் .
ஹதீஸ் 432 அத்தியாயம் 9 பாடம் 3

عَنْ عَائِشَةَ قَالَتْ : إِنَّ أَوَّلَ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ. 432

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் ( பொருள் : - உம்மைப்-படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக . - அல்அலக் ) என்று தொடங்கும் அத்தியாயமே முதன் முதலில் இறங்கியது .

Reference: ( பைஹகீ : 6 / 9)
ஹதீஸ் 433 அத்தியாயம் 9 பாடம் 3

عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : " تَعَلَّمْنَا الْقُرْآنَ فِي هَذَا الْمَسْجِدِ يَعْنِي مَسْجِدَ الْبَصْرَةِ وَكُنَّا نَجْلِسُ حِلَقًا حِلَقًا وَكَأَنَّمَا أَنْظُرُ إِلَيْهِ بَيْنَ ثَوْبَيْنِ أَبْيَضَيْنِ وَعَنْهُ أَخَذْتُ هَذِهِ السُّورَةَ:اقْرَأْ بِاسْمِ رَبِّكِ الَّذِي خَلَقَ 433

அபூரஜா அல்உத்தாரிதீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாங்கள் பஸ்ராவின் மஸ்ஜிதில் வைத்து குர்ஆனைக் கற்றோம் . நாங்கள் வட்ட வட்டமாக அமர்ந்துகொண்டிருந்தோம் . ( அவர்கள் உடுத்தியிருந்த ) இரண்டு வெண்ணிற ஆடைகளில் அவர்களை ( இப்போதும் ) காண்பதைப் போன்று உள்ளது . அவர்களிடமிருந்துதான் இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் ( பொருள் : - உம்மைப்-படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக ) என்று தொடங்கும் அத்தியாயத்தைக் கற்றேன் . ( அப்போது ) “ முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பெற்ற அத்தியாயங்களுள் இதுவே முதலாவது ஆகும் ” என்று கூறினார்கள் .

Reference: ( ஹாகிம் : 2872) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இதன் அறிவிப்பாளர் தொடர் அமைந்துள்ளது என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .
ஹதீஸ் 434 அத்தியாயம் 9 பாடம் 3

عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : آخِرُ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ : لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ . 434

உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆனில் கடைசியாக இறங்கியது இதுதான் : ( இறைநம்பிக்கை கொண்டோரே ! நம்முடைய ) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார் ; அவர் உங்களிலுள்ளவர்தாம் . ( உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு ) நீங்கள் சிரமத்திற்குள்ளாகிவிட்டால் , அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும் . ( அந்த அளவிற்கு உங்கள்மீது அன்புடையவர் .) மேலும் உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும் , நம்பிக்கையாளர் ( களாகிய உங் ) கள்மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார் . (9: 128)

Reference: ( ஹாகிம் : 3296) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இதன் அறிவிப்பாளர் தொடர் அமைந்துள்ளது என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .