1-باب : فضل تلاوة القرآن
பாடம் 1

பாடம்: 1. திருக்குர்ஆனை ஓதுவதன் சிறப்பு

ஹதீஸ் 456 அத்தியாயம் 10 பாடம் 1

(ق) عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْأُتْرُجَّةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ لَا رِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْوٌ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ لَيْسَ لَهَا رِيحٌ وَطَعْمُهَا مُرٌّ. 456

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆனை ஓதும் இறைநம்பிக்கையாளரின் நிலையானது , நாரத்தைப் பழம் போன்றதாகும் . அதன் மணமும் நன்று ; சுவையும் நன்று . குர்ஆனை ஓதாத இறைநம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும் . அதற்கு மணம் கிடையாது ; ( ஆனால் ,) அதன் சுவை இனிமையானது . குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலையானது , துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது . அதன் மணம் நன்று . அதன் சுவையோ கசப்பானது . குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது , குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது . அதற்கு மணமும் கிடையாது ; அதன் சுவையும் கசப்பானதாகும் .

Reference: ( புகாரீ : 5427, முஸ்லிம் : 797)
ஹதீஸ் 457 அத்தியாயம் 10 பாடம் 1

(ق) عَنْ عبد الله بن عمر , عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهُوَ يَقُومُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ . 457

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது . 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள , அவர் அதை அல்லும் பகலும் ஓதி ( அதன்படி செயல்பட்டு ) வருகிறார் . 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க , அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார் .

Reference: ( புகாரீ : 7529, முஸ்லிம் : 815)
ஹதீஸ் 458 அத்தியாயம் 10 பாடம் 1

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُحِبُّ أَحَدُكُمْ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ أَنْ يَجِدَ فِيهِ ثَلَاثَ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ ؟ قُلْنَا : نَعَمْ قَالَ : فَثَلَاثُ آيَاتٍ يَقْرَأُ بِهِنَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثِ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ . 458

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உங்களுள் ஒருவர் தம் வீட்டாரிடம் செல்கையில் வீட்டில் மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்கள் காணப்படுவதை விரும்புவாரா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் " ஆம் ` என்று பதிலளித்தோம் . அப்போது அவர்கள் , “ உங்களுள் ஒருவர் தமது தொழுகையில் மூன்று வசனங்களை ஓதுவது மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும் `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்லிம் : 1468)
ஹதீஸ் 459 அத்தியாயம் 10 பாடம் 1

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا . 459

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளில் ) குர்ஆன் உடையவரிடம் ( மனனம் செய்தவரிடம் ) “ உலகில் அதை நீர் நிறுத்தி நிறுத்தித் தெளிவாக ஓதிக்கொண்டிருந்ததைப்போல் ஓதிக்கொண்டே முன்னேறிச் செல்வீராக . நீர் ஓதுகின்ற கடைசி வசனத்தின் இடத்தில் உம்முடைய தங்குமிடம் உள்ளது ” என்று சொல்லப்படும் .

Reference: ( அபூதாவூத் : 1464, திர்மிதீ : 2914) இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 460 அத்தியாயம் 10 பாடம் 1

عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ . 460

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் வேதத்தில் ( குர்ஆனில் ) ஓர் எழுத்தை ஓதியவருக்கு ஒரு நன்மை உண்டு . ஒரு நன்மைக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நன்மை ( என்ற அடிப்படையில் அவருக்கு ) உண்டு . ` அலிஃப் லாம் மீம் ` என்பது ஓர் எழுத்தாகும் என்று நான் கூறமாட்டேன் . மாறாக , அலிஃப் என்பது ஓர் எழுத்தாகும் ; லாம் என்பது ஓர் எழுத்தாகும் ; மீம் என்பது ஓர் எழுத்தாகும் .

Reference: ( திர்மிதீ : 2835 / 2910) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 461 அத்தியாயம் 10 பாடம் 1

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنْ النَّاسِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ قَالَ هُمْ أَهْلُ الْقُرْآنِ أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ . 461

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ திண்ணமாக அல்லாஹ்வுக்கு மக்களிலிருந்து குடும்பத்தினர் உள்ளனர் ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது , “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்கள் யாவர் ?” என்று ( தோழர்கள் ) வினவினர் . “ அவர்கள்தாம் குர்ஆனை உடையவர்கள் ; அல்லாஹ்வின் குடும்பத்தினர் ; அவனோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் ” என்று விடையளித்தார்கள் .

Reference: ( இப்னுமாஜா : 211 . / 215. தாரிமீ : 3369) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 462 அத்தியாயம் 10 பாடம் 1

عَنْ أَبِي أُمَامَةَ أَنَّهُ كَانَ يَقُولُ اقْرَءُوا الْقُرْآنَ وَلَا يَغُرَّنَّكُمْ هَذِهِ الْمَصَاحِفُ الْمُعَلَّقَةُ فَإِنَّ اللَّهَ لَنْ يُعَذِّبَ قَلْبًا وَعَى الْقُرْآنَ . 462

அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆனை ஓதுங்கள் . ( இங்கு ஆணியில் ) மாட்டப்பட்டுள்ள இந்தக் குர்ஆன் பிரதிகள் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம் . ஏனென்றால் திண்ணமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனைப் பாதுகாத்த உள்ளத்தை ஒருபோதும் வேதனைப்படுத்த மாட்டான் .

Reference: ( தாரிமீ : 3362, 3363) இந்த அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 463 அத்தியாயம் 10 பாடம் 1

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا يَمْنَعُ أَحَدَكُمْ إِذَا رَجَعَ مِنْ سُوقِهِ أَوْ مِنْ حَاجَتِهِ فَاتَّكَأَ عَلَى فِرَاشِهِ أَنْ يَقْرَأَ ثَلَاثَ آيَاتٍ مِنْ الْقُرْآنِ . 463

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவர் கடைவீதியிலிருந்து அல்லது தம் தேவையிலிருந்து திரும்பி , ( உறங்குவதற்காகத் ) தம் விரிப்பில் சாய்ந்தால் , குர்ஆனிலிருந்து மூன்று வசனங்களை ( யேனும் ) ஓதுவதிலிருந்து தடுத்துவிட வேண்டாம் .

Reference: ( தாரிமீ : 3379) இந்த அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .