الإسلام والإيمان
அத்தியாயம் 1

இஸ்லாமும் இறைநம்பிக்கையும்

ஹதீஸ் 1 அத்தியாயம் 1 பாடம் 1

( ق) عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ 1

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : இஸ்லாம் ஐந்து அம்சங்கள்மீது நிறுவப்பட்டுள்ளது . 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் , முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது . 2. தொழுகையை நிலைநிறுத்துவது . 3. ( கடமையானோர் ) ஸகாத் வழங்குவது . 4. ( இயன்றோர் இறையில்லம் கஅபாவில் ) ஹஜ் செய்வது . 5. ரமளானில் நோன்பு நோற்பது .

Reference: ( புகாரீ : 8, முஸ்லிம் : 16)
ஹதீஸ் 2 அத்தியாயம் 1 பாடம் 1

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَصْبَحْتُ يَوْمًا قَرِيبًا مِنْهُ وَنَحْنُ نَسِيرُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ، وَيُبَاعِدُنِي مِنَ النَّارِ، قَالَ: «لَقَدْ سَأَلْتَ عَظِيمًا، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ، تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجَّ الْبَيْتَ» ثُمَّ قَالَ: " أَلَا أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الْخَيْرِ؟ الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ النَّارَ الْمَاءُ، وَصَلَاةُ الرَّجُلِ مِنْ جَوْفِ اللَّيْلِ، ثُمَّ قَرَأَ {تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ} [السجدة: 16] حَتَّى بَلَغَ {جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ} [السجدة: 17] " ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِرَأْسِ الْأَمْرِ، وَعَمُودِهِ، وَذُرْوَةِ سَنَامِهِ؟ الْجِهَادُ» ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِمِلَاكِ ذَلِكَ كُلِّهِ؟» قُلْتُ: بَلَى، فَأَخَذَ بِلِسَانِهِ، فَقَالَ: «تَكُفُّ عَلَيْكَ هَذَا» قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ وَهَلْ يُكِبُّ النَّاسَ عَلَى وُجُوهِهِمْ فِي النَّارِ، إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟» 2

முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ( தபூக் போர் ) பயணத்தில் இருந்தேன் . ஒரு நாள் காலைப்பொழுதில் நாங்கள் பயணம் மேற்கொண்டிருந்தபோது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் இருந்தேன் . அப்போது நான் ( நபியவர்களிடம் ) " அல்லாஹ்வின் தூதரே ! என்னைச் சொர்க்கத்தில் நுழையச் செய்து , நரகத்திலிருந்து அப்புறப்படுத்தும் நற்செயல் ஒன்றை என்னிடம் தெரிவியுங்கள் !" என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " நீ ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்டிருக்கிறாய் . அது அல்லாஹ் எளிதாக்கி வைத்தவருக்கு நிச்சயமாக எளிதானது ஆகும் . ( அது யாதெனில் ,) நீ அல்லாஹ்வையே வழிபட வேண்டும் ; அவனுக்கு எதையும் இணையாக ஆக்கக் கூடாது ; தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும் ; ( ரமளானில் ) நோன்பு நோற்க வேண்டும் ; ( இயன்றால் ) இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்யவேண்டும் " என்று கூறிவிட்டு , " நன்மைகளின் வாசல்களைப் பற்றி உனக்கு அறிவிக்கட்டுமா ?" என்று கூறிவிட்டு , நோன்பு ( பாவங்களிலிருந்து காக்கின்ற ) கேடயமாகும் . தண்ணீர் நெருப்பை அணைப்பது போன்று தர்மம் செய்தல் குற்றங்களை அணைத்துவிடும் . ஒரு மனிதர் நடுநிசி நேரத்தில் ( இரவுத் தொழுகை ) தொழுவதும் ( இவ்வாறு குற்றங்களை அணைத்துவிடக்கூடியதுதான் )" என்று கூறினார்கள் . பிறகு " அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தம் இறைவனைப் பிரார்த்தனை செய்ய அவர்களின் விலாப்புறங்கள் படுக்கையிலிருந்து விலகும் " ( எனும் 32:16-17) ஆகிய வசனங்களை முழுமையாக ஓதிக் காட்டினார்கள் . பிறகு " உனக்கு நான் அனைத்துச் செயல்களுக்கும் அடித்தளமாகவும் தூணாகவும் திமிலாகவும் ( உயர்ந்த பகுதியாகவும் ) திகழக்கூடியவற்றைப் பற்றிக் கூறட்டுமா ?" என்று கேட்டார்கள் . நான் " ஆம் ( கூறுங்கள் ), அல்லாஹ்வின் தூதரே !" என்று சொன்னேன் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அனைத்துச் செயல்களுக்கும் தலையாயது இஸ்லாம் ஆகும் . இஸ்லாத்தின் தூண் ( போன்றது ) தொழுகையாகும் . இஸ்லாத்தின் திமிலாகத் திகழ்வது அறப்போராகும் " என்று கூறினார்கள் . பிறகு " ஒட்டுமொத்தமாக இவை அனைத்தையும் உறுதிப்படுத்தக்கூடிய அடிப்படையை உனக்கு நான் அறிவிக்க வேண்டாமா ?" என்று கேட்டார்கள் . நான் " ஆம் ( அறிவியுங்கள் ), அல்லாஹ்வின் தூதரே !" என்று கூறினேன் . உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது நாவைப் பிடித்துக்கொண்டு , " இதை ( அவசியமற்ற பேச்சுகளிலிருந்து ) தடுத்து ( பாதுகாத்து ) க்கொள் !" என்று கூறினார்கள் . அப்போது நான் , " அல்லாஹ்வின் நபியே ! நாங்கள் பேசுகின்ற பேச்சுகளால் தண்டிக்கப்படுவோமா ?" என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " முஆதே ! உன்னை உன் தாய் இழக்கட்டும் ! மக்களை அவர்களது நாவுகள் அறுவடை செய்கின்றவற்றைத் தவிர வேறெதுவும் அவர்களது முகங்கள் மீது அல்லது மூக்குகள் மீது ( முகங்குப்புற ) விழச் செய்கின்றனவா ?" என்று மறுவினாத் தொடுத்தார்கள் .

Reference: ( திர்மிதீ : 2616, இப்னுமாஜா : 3973) - அபூஈஸா திர்மிதீ கூறுகிறேன் : இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 3 அத்தியாயம் 1 பாடம் 1

عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَهُ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْإِيمَانُ؟ قَالَ: «إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ» . فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْإِثْمُ؟ قَالَ: «إِذَا حَاكَ فِي صَدْرِكَ شَيْءٌ فَدَعْهُ» 3

அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் , “ ஈமான் என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே ?” என்று கேட்டார் . “ நீ செய்கின்ற நன்மை உன்னை மகிழ்வித்து , நீ செய்கின்ற தீமை உன்னைத் துன்புறுத்தினால் நீ முஃமின் ( இறைநம்பிக்கையாளன் ) ஆவாய் ” என்று பதிலளித்தார்கள் . “ பாவம் என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே ?” என்று கேட்டார் . “( எதையேனும் ஒன்றைச் செய்கின்றபோது ) உன் உள்ளத்தில் ஏதேனும் நெருடல் ஏற்பட்டால் ( அதுதான் பாவம் எனவே ) அதை விட்டுவிடு ” என்றார்கள் .

Reference: ( ஹாகிம் : 33) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 4 அத்தியாயம் 1 பாடம் 2

( ق) عَنْ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَخْطُبُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ هَاجَرَ إِلَى دُنْيَا يُصِيبُهَا [ص:23] أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ» 4

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன . ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது . எனவே , எவரது ஹிஜ்ரத் ( நாடு துறத்தல் ) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ , அவரது ஹிஜ்ரத் ( தின் பலனும் அவ்வாறே ) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும் . எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக ( ஆதாய ) த்தை , அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ , அவரது ஹிஜ்ரத் ( தின் பலனும் ) அதுவாகத்தான் இருக்கும் .

Reference: ( புகாரீ : 6953, முஸ்லிம் : 1907) புகாரீ நூலின் அறிவிப்பில் உள்ளதாவது : எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன . ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது ... ( புகாரீ : 1)
ஹதீஸ் 5 அத்தியாயம் 1 பாடம் 2

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ لَهُ نَاتِلُ أَهْلِ الشَّامِ: أَيُّهَا الشَّيْخُ، حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ: جَرِيءٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ، وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ، وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ: عَالِمٌ، وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ: هُوَ قَارِئٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ، وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ: هُوَ جَوَادٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ، ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ 5

சுலைமான் பின் யஸார் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( ஒரு முறை ) அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மக்கள் ( கூடி , அவை ) கலைந்தபோது , சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர் , “ பெரியவரே ! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள் `` என்று கேட்டார் . அதற்கு அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , " ஆம் ( தெரிவிக்கிறேன் ). அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( பின்வருமாறு ) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள் : மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில் , இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார் . அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும்போது , அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான் . அவற்றை அவர் அறிந்துகொள்வார் . பிறகு , “ அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய் ?`` என்று இறைவன் கேட்பான் . அவர் , “( இறைவா !) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன் `` என்று பதிலளிப்பார் . இறைவன் , “( இல்லை ) நீ பொய் சொல்கிறாய் . ( நீ எனக்காக உயிர்த்தியாகம் செய்யவில்லை .) மாறாக , " மாவீரன் ` என்று ( மக்கள் மத்தியில் ) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய் . அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது . ( உனது நோக்கம் நிறைவேறிவிட்டது )`` என்று கூறுவான் . பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு , அவர் நரகத்தில் எறியப்படுவார் . பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்குக் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான ( மார்க்க அறிஞர் ) ஒருவர் ( இறைவனிடம் ) கொண்டுவரப்படுவார் . அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான் . அவற்றை அவர் அறிந்து கொள்வார் . பிறகு “ அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய் ?`` என்று இறைவன் கேட்பான் . அவர் , “( இறைவா !) கல்வியை நானும் கற்று , பிறருக்கும் அதை நான் கற்பித்தேன் . உனக்காகவே குர்ஆனை ஓதினேன் `` என்று பதிலளிப்பார் . அதற்கு இறைவன் , “( இல்லை ) நீ பொய் சொல்கிறாய் . ( எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை ; கற்பிக்கவுமில்லை .) " அறிஞர் ` என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய் ; " குர்ஆன் அறிஞர் ` என ( மக்கள் மத்தியில் ) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய் . அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது ( உனது நோக்கம் நிறைவேறிவிட்டது )`` என்று கூறுவான் . பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு , அவர் நரகத்தில் எறியப்படுவார் . பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார் . அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான் . அவற்றை அவர் அறிந்துகொள்வார் . பிறகு , “ அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய் ?`` என்று இறைவன் கேட்பான் . அதற்கு அவர் , “ நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ , அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன் `` என்று பதிலளிப்பார் . அதற்கு இறைவன் , “( இல்லை ) நீ பொய் சொல்கிறாய் " இவர் ஒரு புரவலர் ` என ( மக்கள் மத்தியில் ) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு ( செலவு ) செய்தாய் . ( உன் எண்ணப்படி ) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது . ( உனது எண்ணம் நிறைவேறிவிட்டது )`` என்று கூறிவிடுவான் . பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு , அவர் நரகத்தில் எறியப்படுவார் .

Reference: ( முஸ்லிம் : 1905)
ஹதீஸ் 6 அத்தியாயம் 1 பாடம் 2

عَنْ أَبِي كَبْشَةَ الْأَنْمَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَثَلُ هَذِهِ الْأُمَّةِ، كَمَثَلِ أَرْبَعَةِ نَفَرٍ، رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا وَعِلْمًا، فَهُوَ يَعْمَلُ بِعِلْمِهِ فِي مَالِهِ، يُنْفِقُهُ فِي حَقِّهِ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ عِلْمًا، وَلَمْ يُؤْتِهِ مَالًا، فَهُوَ يَقُولُ: لَوْ كَانَ لِي مِثْلُ هَذَا عَمِلْتُ فِيهِ مِثْلَ الَّذِي يَعْمَلُ "، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَهُمَا فِي الْأَجْرِ سَوَاءٌ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا، وَلَمْ يُؤْتِهِ عِلْمًا، فَهُوَ يَخْبِطُ فِي مَالِهِ يُنْفِقُهُ فِي غَيْرِ حَقِّهِ، وَرَجُلٌ لَمْ يُؤْتِهِ اللَّهُ عِلْمًا، وَلَا مَالًا، فَهُوَ يَقُولُ: لَوْ كَانَ لِي مِثْلُ هَذَا، عَمِلْتُ فِيهِ مِثْلَ الَّذِي يَعْمَلُ "، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَهُمَا فِي الْوِزْرِ سَوَاءٌ» 6

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூகப்ஜா அல்அன்மாரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : நான் அறுதியிட்டு மூன்று விஜயங்களை உங்களுக்குச் சொல்கிறேன் . மேலும் ( மற்றொரு ) செய்தியையும் உங்களுக்கு நான் தெரிவிப்பேன் . அதை நீங்கள் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள் . ( அந்த மூன்று விஜயங்கள் வருமாறு ) 1. தானம் செய்வதால் ஓர் அடியாரின் செல்வம் குறைந்துவிடுவதில்லை . 2. ஓர் அடியார் அநீதிக்குள்ளாகும்போது அதைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வாரானால் அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை அதிகமாக்காமல் இருப்பதில்லை . 3. ஓர் அடியான் யாசகத்தின் வாசலைத் திறந்தால் அவனுக்கு அல்லாஹ் வறுமையின் வாசலைத் திறக்காமல் இருப்பதில்லை . ( இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அல்லது இதைப் போன்று வேறொரு வார்த்தையைக் கூறினார்கள் .) மேலும் மற்றொரு செய்தியையும் உங்களுக்கு நான் தெரிவிப்பேன் . அதை நீங்கள் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள் என்று நான் கூறினேன் அல்லவா ? அந்தச் செய்தி வருமாறு : இந்தச் சமுதாயத்தின் உதாரணம் நான்கு நபர்களின் உதாரணத்தைப் போன்று உள்ளது . 1. ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தையும் கல்வியையும் ( ஒருசேரக் ) கொடுத்தான் . அவர் தம் கல்விக்கேற்பத் தம் செல்வத்தைச் செலவு செய்கிறார் . அதை அதற்குரிய முறையில் செலவிடுகிறார் . 2. ஒருவருக்கு அல்லாஹ் கல்வியைக் கொடுத்தான் . அவருக்குச் செல்வத்தைக் கொடுக்கவில்லை . அப்போது அவர் , இவருக்கு இருப்பதைப் போன்று எனக்கு இருந்திருந்தால் , அதை இவர் செலவு செய்வதைப் போன்றே நான் செய்திருப்பேன் என்று கூறுகிறார் . ( எனவே ) இருவரும் சமமான கூலியைப் பெறுபவர்கள் ஆவர் 3. ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தான் . கல்வியைக் கொடுக்கவில்லை . அவர் தம் செல்வத்தைக் கண்டபடி செலவு செய்கிறார் . தேவையில்லாதவற்றில் அதைச் செலவிடுகிறார் . 4. ஒருவருக்கு அல்லாஹ் கல்வியையும் செல்வத்தையும் கொடுக்கவில்லை . அப்போது அவர் , இவரிடம் இருப்பதைப் போன்று எனக்கு வழங்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன் என்று கூறுகிறார் . ( எனவே ) இவ்விருவரும் பாவத்தில் சமமானவர்கள் ஆவர் .

Reference: ( திர்மிதீ : 2325, இப்னுமாஜா : 4228) இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 7 அத்தியாயம் 1 பாடம் 2

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ، مَالَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ، يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ» 7

அபூஉமாமா அல்பாஹிலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , நன்மையையும் புகழையும் எதிர்பார்த்துப் போராடிய மனிதருக்கு என்ன ( நன்மை அல்லாஹ்விடம் ) உண்டு ? என்று வினவினார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவருக்கு ( அல்லாஹ்விடம் ) ஒன்றும் இல்லை ” எனக் கூறினார்கள் . அவர் அதை மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்டார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவருக்கு ( அல்லாஹ்விடம் ) ஒன்றும் இல்லை ” எனக் கூறிவிட்டு , பிறகு “ திண்ணமாக அல்லாஹ் , அவனுடைய திருப்தியை நாடி அவனுக்காகவே செய்யப்பட்ட ( நல்ல ) செயல்பாட்டைத்தான் ஏற்றுக்கொள்வான் ” என்று கூறினார்கள் .

Reference: ( நஸாயீ : 3140) இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 8 அத்தியாயம் 1 பாடம் 2

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يُبْعَثُ النَّاسُ عَلَى نِيَّاتِهِمْ» 8

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மக்கள் அவர்கள் தம் எண்ணப்படியே ( மறுமையில் ) எழுப்பப்படுவார்கள் .

Reference: ( இப்னுமாஜா : 4229) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 9 அத்தியாயம் 1 பாடம் 2

عَنِ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:" إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: أَنَا خَيْر شَرِيكٍ، مَنْ أَشْرَكَ بِي فَهُوَ لِشَرِيكِي، يَأَيُّهَا النَّاسُ أَخْلِصُوا أَعْمَالَكُمْ للَّهِ، فَإِنَّ اللَّهَ لا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلا مَا خَلُصَ، وَلا تَقُولُوا: هَذَا للَّهِ وَالرَّحِمِ، فَإِنَّهُ لِلرَّحِمِ وَلَيْسَ للَّهِ مِنْهُ شَيْءٌ، وَلا تَقُولُوا: هَذَا للَّهِ وَلِوُجُوهِكُمْ، فَإِنَّمَا هُوَ لِوُجُوهِكُمْ، وَلَيْسَ للَّهِ فِيهِ شَيْءٌ " 9

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ளஹ்ஹாக் பின் கைஸ் அல்ஃபிஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மகத்துவமும் மாண்பும் உடைய அல்லாஹ் சொல்கிறான் : நானே சிறந்த கூட்டாளி ( தோழன் ). யார் என்னுடன் ஒரு கூட்டாளியைச் சேர்த்தானோ , அவன் என்னுடைய கூட்டாளிக்கு உரியவனாவான் . ( எனக்கு உரியவன் அன்று ). “ மக்களே ! மகத்துவமும் மாண்பும் உடைய அல்லாஹ்வுக்காக உங்களுடைய செயல்களை ஆக்கிக்கொள்ளுங்கள் . ஏனென்றால் திண்ணமாக அல்லாஹ் , அவனுக்காகவே செய்யப்பட்டதைத் தவிர ( மற்றவற்றை ) ஏற்றுக்கொள்ள மாட்டான் . ‘ இது அல்லாஹ்வுக்காகவும் உறவுக்காகவும் ’ என்று சொல்லாதீர்கள் . ஏனென்றால் அது உறவுக்காக ( ச் செய்யப்பட்டதாக ) த்தான் ஆகும் . அதிலிருந்து அல்லாஹ்வுக்காக எதுவும் இல்லை . ‘ இது அல்லாஹ்வுக்காகவும் உங்களின் முகங்களுக்காகவும் ’ என்றும் சொல்லாதீர்கள் . ஏனென்றால் அது உங்களின் முகங்களுக்காக ( ச் செய்யப்பட்டதாக ) த்தான் ஆகும் . அதிலிருந்து அல்லாஹ்வுக்காக எதுவும் இல்லை .

Reference: ( அல்அஹாதீஸுல் முக்தாரா : 8/92) இது ` ஹஸன் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 10 அத்தியாயம் 1 பாடம் 2

( م ) عَنِ ابْنِ شِمَاسَةَ الْمَهْرِيِّ، قَالَ: حَضَرْنَا عَمْرَو بْنَ الْعَاصِ، وَهُوَ فِي سِيَاقَةِ الْمَوْتِ، يَبَكِي طَوِيلًا، وَحَوَّلَ وَجْهَهُ إِلَى الْجِدَارِ، فَجَعَلَ ابْنُهُ يَقُولُ: يَا أَبَتَاهُ، أَمَا بَشَّرَكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا؟ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا؟ قَالَ: فَأَقْبَلَ بِوَجْهِهِ، فَقَالَ: إِنَّ أَفْضَلَ مَا نُعِدُّ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، إِنِّي قَدْ كُنْتُ عَلَى أَطْبَاقٍ ثَلَاثٍ، لَقَدْ رَأَيْتُنِي وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي، وَلَا أَحَبَّ إِلَيَّ أَنْ أَكُونَ قَدِ اسْتَمْكَنْتُ مِنْهُ، فَقَتَلْتُهُ، فَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنْ أَهْلِ النَّارِ، فَلَمَّا جَعَلَ اللهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: ابْسُطْ يَمِينَكَ فَلْأُبَايِعْكَ، فَبَسَطَ يَمِينَهُ، قَالَ: فَقَبَضْتُ يَدِي، قَالَ: «مَا لَكَ يَا عَمْرُو؟» قَالَ: قُلْتُ: أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ، قَالَ: «تَشْتَرِطُ بِمَاذَا؟» قُلْتُ: أَنْ يُغْفَرَ لِي، 10

அப்துர் ரஹ்மான் பின் ஜுமாஸா அல்மஹ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாங்கள் சென்றோம் . அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள் . பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள் . அப்போது அவர்களுடைய புதல்வர் , “ அருமைத் தந்தையே ! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னின்ன நற்செய்திகளைக் கூறவில்லையா ?`` என்று கேட்டார் . உடனே அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு தமது முகத்தை ( தம் புதல்வரை நோக்கி ) த் திருப்பி ( பின்வருமாறு ) கூறினார்கள் : " அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் ` என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்தது ஆகும் . நான் ( என் வாழ்நாளில் ) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன் . ( முதலாவது கட்டத்தில் ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன் . என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது . அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் . ( இரண்டாவது கட்டத்தில் ) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான் . அப்போது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று “ உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள் . நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் ( பைஅத் ) அளிக்கிறேன் `` என்று கூறினேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது வலக்கரத்தை நீட்டினார்கள் . உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அம்ரே ! உமக்கு என்ன ஆயிற்று ?`` என்று கேட்டார்கள் . நான் , “ சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன் `` என்று கூறினேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர் ?`` என்று கேட்டார்கள் . “ என் ( முந்தைய ) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் `` என்று கூறினேன் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும் ; ஹிஜ்ரத்தும் (- மார்க்கத்திற்காக நாடுதுறத்தல் ) முந்தைய பாவங்களை அழித்துவிடும் ; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா ?`` என்று கேட்டார்கள் . ( பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன் .) அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை ; எனது பார்வைக்கு அவர்களைவிட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை . அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை . அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது . ஏனெனில் , நான் அவர்கள்மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை . அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளுள் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே எதிர் பார்க்கிறேன் . பிறகு ( மூன்றாவது கட்டத்தில் ) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம் . அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது . எனவே , நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது . என்னை ( க் குழிக்குள் வைத்து ) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள் . பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள் . உங்களால் நான் ஆசுவாசமடைவேன் ; என் இறைவனின் தூதர்க ( ளான வானவர்க ) ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன் .

Reference: ( முஸ்லிம் : 121)
ஹதீஸ் 11 அத்தியாயம் 1 பாடம் 2

عَنْ أَنَسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَكْتُ حَاجَةً، وَلا دَاجَةً إِلا قَدْ أَتَيْتُ، قَالَ: " أَلَيْسَ تَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولَ اللَّهِ، ثَلاث مَرَّاتٍ؟ "، قَالَ: نَعَمْ، قَالَ: " فَإِنَّ ذَلِكَ يَأْتِي عَلَى ذَلِكَ 11

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , அல்லாஹ்வின் தூதரே ! நான் சிறிய , பெரிய எந்தப் பாவத்தையும் செய்யாமல் விடவில்லை . ( என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமா ) என்று கேட்டார் . “ அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் நீ சாட்சி சொல்லவில்லையா ?” என்று கேட்டார்கள் . இவ்வாறு மூன்று முறை கேட்டார்கள் . அதற்கு அவர் , ஆம் ( நான் சாட்சி சொல்லியுள்ளேன் ) என்று கூறினார் . ( அப்படியானால் ) அது அவ்வாறே ( பாவங்களை அழித்துவிட்டு ) வரும் .

Reference: ( அல்அஹாதீஸுல் முக்தாரா : 5/1773). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 12 அத்தியாயம் 1 பாடம் 4

( م) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ، وَلَا نَصْرَانِيٌّ، ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ، إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ» 12

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக ! இந்த ( இறுதி ) ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என் ( மார்க்கத்தி ) னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த ( மார்க்கத் ) தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்து விட்டால் , அவர் நரகவாசிகளுள் ஒருவராகவே இருப்பார் .

Reference: ( முஸ்லிம் : 153)
ஹதீஸ் 13 அத்தியாயம் 1 பாடம் 4

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَدْيَانِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الْحَنِيفِيَّةُ السَّمْحَةُ» 13

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மார்க்கங்களில் எது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது . அதற்கவர்கள் , “ அசத்தியத்தை விட்டுச் சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான ( இஸ்லாமிய ) மார்க்கமே ” எனக் கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 2107). இது ` ஸஹீஹ் லிஃகைரிஹி ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 14 அத்தியாயம் 1 பாடம் 5

( ق) عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَتَانِي آتٍ مِنْ رَبِّي، فَأَخْبَرَنِي - أَوْ قَالَ: بَشَّرَنِي - أَنَّهُ: مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ " قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: «وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ» 14

அபூதர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : என் இரட்சகனிடமிருந்து ஒரு ( வான ) வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார் . அதாவது " என்னுடைய சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் " என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . உடனே நான் , “ அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா ?`` எனக் கேட்டேன் . அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ - ஈடுபட்டிருந்தாலும்தான் `` என்று பதிலளித்தார்கள் .

Reference: ( புகாரீ : 1237, முஸ்லிம் : 94)
ஹதீஸ் 15 அத்தியாயம் 1 பாடம் 5

( ق) حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمُعاذٌ رَدِيفُهُ عَلَى الرَّحْلِ، قَالَ: «يَا مُعَاذَ بْنَ جَبَلٍ» ، قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، قَالَ: «يَا مُعَاذُ» ، قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ ثَلاَثًا، قَالَ: «مَا مِنْ أَحَدٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، صِدْقًا مِنْ قَلْبِهِ، إِلَّا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ» ، قَالَ يَا رَسُولَ اللَّهِ: أَفَلاَ أُخْبِرُ بِهِ النَّاسَ فَيَسْتَبْشِرُوا؟ قَالَ: «إِذًا يَتَّكِلُوا» وَأَخْبَرَ بِهَا مُعَاذٌ عِنْدَ مَوْتِهِ تَأَثُّمًا 15

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு பயணத்தில் வாகனமொன்றில் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அமர்ந்திருந்தபோது , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ முஆத் பின் ஜபலே !`` என்று அழைத்தார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் ( கூறுங்கள் )`` என்று முஆத் ரளியல்லாஹு அன்ஹு பதிலளித்தார்கள் . “ முஆதே !` என மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைத்தார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் ( கூறுங்கள் )`` என மீண்டும் முஆத் ரளியல்லாஹு அன்ஹு பதிலளித்தார்கள் . இவ்வாறு மூன்று முறை ( அழைப்பும் பதிலும் ) நடந்தது . பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் , முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உளப்பூர்வமாக உறுதிகூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடைசெய்துவிட்டான் `` என்று கூறினார்கள் . உடனே முஆத் ரளியல்லாஹு அன்ஹு “ அல்லாஹ்வின் தூதரே ! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா ? ( இதைக் கேட்டு ) அவர்கள் புளகாங்கிதம் அடைவார்களே !`` என்று கேட்டார்கள் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “( இல்லை ; வேண்டாம் ) இவ்வாறு நீர் அறிவித்தால் ( அதைக் கேட்டுவிட்டு ) அவர்கள் ( இது மட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல் ) அசட்டையாக இருந்து விடுவார்கள் `` என்று கூறினார்கள் . ( கல்வியை மறைத்த ) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தருவாயில் இந்த ஹதீஸை முஆத் ரளியல்லாஹு அன்ஹு ( மக்களுக்கு ) அறிவித்தார்கள் .

Reference: ( புகாரீ : 128, முஸ்லிம் : 32)
ஹதீஸ் 16 அத்தியாயம் 1 பாடம் 5

( ق) عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: بَيْنَا أَنَا رَدِيفُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ إِلَّا أَخِرَةُ الرَّحْلِ، فَقَالَ: «يَا مُعَاذُ بْنَ جَبَلٍ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ: «يَا مُعَاذُ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ: «يَا مُعَاذُ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، قَالَ: «هَلْ تَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ» قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ أَنْ يَعْبُدُوهُ، وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا» ثُمَّ سَارَ سَاعَةً، ثُمَّ قَالَ: «يَا مُعَاذُ بْنَ جَبَلٍ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، فَقَالَ: «هَلْ تَدْرِي مَا حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ إِذَا فَعَلُوهُ» قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَهُمْ» 16

முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் ( வாகனத்தில் ) இருந்துகொண்டிருந்தேன் . எனக்கும் அவர்களுக்குமிடையே ( ஒட்டகச் ) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டைதான் இருந்தது . ( அவ்வளவு நெருக்கத்தில் வந்து கொண்டிருந்தேன் .) அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ முஆதே !`` என்று அழைத்தார்கள் . நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( கூறுங்கள் )`` என்றேன் . பிறகு சிறிது தூரம் சென்றபின் , “ முஆதே `` என்று ( மீண்டும் ) அழைத்தார்கள் . நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( கூறுங்கள் )`` என்றேன் . சிறிது தூரம் சென்றபின் ( மீண்டும் ) “ முஆதே !` என்றார்கள் . ( அப்போதும் ) நான் “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( கூறுங்கள் )`` என்றேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மக்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா ?`` என்று கேட்டார்கள் . நான் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்று பதிலளித்தேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால் , அவர்கள் அவனையே வணங்கிட வேண்டும் . அவனுக்கு எதனையும் ( எவரையும் ) இணைகற்பிக்கக் கூடாது என்பதாகும் `` என்றார்கள் . இன்னும் சிறிது தூரம் சென்றபின் “ முஆத் பின் ஜபலே `` என்று அழைத்தார்கள் . நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( சொல்லுங்கள் )`` என்று பதில் கூறினேன் . அவர்கள் , “ அவ்வாறு ( அல்லாஹ்வையே வணங்கி அவனுக்கு இணை வைக்காமல் ) செயல்பட்டுவரும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா ?`` என்று கேட்டார்கள் . நான் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்றேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( இத்தகைய ) மக்களை அவன் ( மறுமையில் ) வேதனைப்படுத்தாமல் இருப்பதுதான் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமையாகும் `` என்று சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 5967, முஸ்லிம் : 30)
ஹதீஸ் 17 அத்தியாயம் 1 பாடம் 5

(م ) حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ لَقِيَ اللهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ لَقِيَهُ يُشْرِكُ بِهِ دَخَلَ النَّارَ» 17

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , "( சொர்க்கத்தையும் நரகத்தையும் ) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன ?`` என்று கேட்டார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் ( நிச்சயமாகச் ) சொர்க்கம் செல்வார் ; யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் ( நிச்சயமாக ) நரகம் செல்வார் `` என்று பதிலளித்தார்கள் .

Reference: ( முஸ்லிம் : 93)
ஹதீஸ் 18 அத்தியாயம் 1 பாடம் 5

عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِي، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ لَقِيَ اللَّهَ، وَهُوَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَلَمْ تَضُرَّهُ مَعَهُ خَطِيئَةٌ، كَمَا لَوْ لَقِيَهُ وَهُوَ مُشْرِكٌ بِهِ دَخَلَ النَّارَ، وَلَمْ تَنْفَعْهُ مَعَهُ حَسَنَةٌ» 18

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனைச் சந்திக்கின்றாரோ அவரோடு உள்ள பாவங்கள் அவருக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாது . யார் அவனுக்கு இணைவைத்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவரோடு உள்ள நன்மைகள் அவருக்கு எந்தப் பயனையும் தராது ”. என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 6586). புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 19 அத்தியாயம் 1 பாடம் 5

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلّى الله عليه وسلّم يَقُولُ: (مَنْ لَقِيَ اللهَ لاَ يُشْرِكُ بِهِ شَيْئاً، يُصَلِّي الخَمْسَ، وَيَصُومُ رَمَضَانَ، غُفِرَ لَهُ) ، قُلْتُ: أَفَلاَ أُبَشِّرُهُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: (دَعْهُمْ يَعْمَلُوا). 19

முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனைச் சந்திக்கின்றாரோ , ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றி , ரமளானில் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு ( அவருடைய பாவங்கள் ) மன்னிக்கப்படுகின்றன ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் செவியுற்றேன் . “ அல்லாஹ்வின் தூதரே ! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா ?” என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “( இல்லை ; வேண்டாம் ) அவர்களை விட்டுவிடுவீராக . ( இது தெரியாமல் இருந்தால்தான் ) அவர்கள் நல்லறங்கள் செய்வார்கள் `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 21994, 22028). இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 20 அத்தியாயம் 1 பாடம் 6

( م ) عَنْ عَائِشَةَ، قَالَتْ: قُلْتُ: " يَا رَسُولَ اللَّهِ، ابْنُ جُدْعَانَ، كَانَ فِي الْجَاهِلِيَّةِ يَصِلُ الرَّحِمَ، وَيُطْعِمُ الْمِسْكِينَ، فَهَلْ ذَاكَ نَافِعُهُ؟ قَالَ: لَا يَنْفَعُهُ، إِنَّهُ لَمْ يَقُلْ يَوْمًا: رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ " 20

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே ! இவை அவருக்கு ( மறுமை நாளில் ) பயனளிக்குமா ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அவருக்குப் பயனளிக்கா ; அவர் ஒரு நாள்கூட " இறைவா ! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக !` எனக் கேட்டதேயில்லை `` என்று பதிலளித்தார்கள் .

Reference: ( முஸ்லிம் : 214)
ஹதீஸ் 21 அத்தியாயம் 1 பாடம் 6

سَمِعْتُ مُعَاوِيَةَ يَخْطُبُ - وَكَانَ قَلِيلَ الْحَدِيثِ -، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُهُ يَخْطُبُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُلُّ ذَنْبٍ عَسَى اللَّهُ أَنْ يَغْفِرَهُ، إِلَّا الرَّجُلُ يَقْتُلُ الْمُؤْمِنَ مُتَعَمِّدًا، أَوِ الرَّجُلُ يَمُوتُ كَافِرًا» 21

அபூஇத்ரீஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஆவியா ரளியல்லாஹு அன்ஹு உரையாற்றியபோது கூறியதை நான் செவியுற்றேன் . அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து மிகக் குறைவாகவே ஹதீஸை அறிவித்துள்ளார்கள் . அவர்கள் உரையாற்றியபோது நான் செவியுற்றதாவது : ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்தவனையும் , காஃபிராகவே மரணித்துவிடுபவனையும் தவிர எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துவிடலாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .

Reference: ( நஸாயீ : 3984). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 22 அத்தியாயம் 1 பாடம் 7

(ق) عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلاَةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّ الإِسْلاَمِ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ» 22

அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை ; முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் என உறுதிமொழிந்து , ( கடமையான ) தொழுகையை நிலைநிறுத்தி , ஸகாத் ( எனும் ஏழைகளின் உரிமையை ) வழங்காத வரை ( இணைவைக்கும் ) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன் . இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால் தம் உயிரையும் உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும் . ( மரண தண்டனைக்குரிய ) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் ( அவர்கள் வரம்பு மீறினாலே ) தவிர ! மேலும் ( இரகசியமாகக் குற்றமிழைத்தால் ) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 25, முஸ்லிம் : 22)
ஹதீஸ் 23 அத்தியாயம் 1 பாடம் 8

( م) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " ثَلَاثٌ إِذَا خَرَجْنَ لَا يَنْفَعُ نَفْسًا، إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ، أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَالدَّجَّالُ، وَدَابَّةُ الأَرْضِ " 23

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மூன்று அடையாளங்கள் தோன்றிவிட்டால் முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத , அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காது . ( அவை :) 1. மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல் . 2. தஜ்ஷால் ( தோன்றுதல் ). 3. பூமியிலிருந்து வெளிப்படும் ( அதிசயக் ) கால்நடை .

Reference: ( முஸ்லிம் : 158)
ஹதீஸ் 24 அத்தியாயம் 1 பாடம் 9

(ق) أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مِائَةَ جُزْءٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ جُزْءًا، وَأَنْزَلَ فِي الأَرْضِ جُزْءًا وَاحِدًا، فَمِنْ ذَلِكَ الجُزْءِ يَتَرَاحَمُ الخَلْقُ، حَتَّى تَرْفَعَ الفَرَسُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا، خَشْيَةَ أَنْ تُصِيبَهُ» 24

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான் . அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான் . ( மீதமுள்ள ) ஒன்றையே பூமியில் இறக்கினான் . இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றுக்கொன்று பாசம் காட்டுகின்றன . எந்த அளவிற்கென்றால் , மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தனது குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது .

Reference: ( புகாரீ : 6000, முஸ்லிம் : 2752) ( புகாரீ : 6469, முஸ்லிம் : 2755)
ஹதீஸ் 25 அத்தியாயம் 1 பாடம் 9

( ق ) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ كَتَبَ فِي كِتَابِهِ فَهُوَ عِنْدَهُ فَوْقَ العَرْشِ إِنَّ رَحْمَتِي غَلَبَتْ غَضَبِي» 25

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தனது (" லவ்ஹுல் மஹ்ஃபூழ் ` என்னும் ) பதிவேட்டில் - அது அர்ஸுக்கு மேலே அவனிடம் உள்ளது - " என் கருணை என் கோபத்தை மிகைத்துவிட்டது `` என்று எழுதினான் .

Reference: ( புகாரீ : 3194, முஸ்லிம் : 2751) “ என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது `` என்று புகாரீ , முஸ்லிம் ஆகிய இருவரின் மற்றோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது . ( புகாரீ : 7422, முஸ்லிம் : 2751)
ஹதீஸ் 26 அத்தியாயம் 1 பாடம் 9

(خ ) أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلاَةٍ وَقُمْنَا مَعَهُ، فَقَالَ أَعْرَابِيٌّ وَهُوَ فِي الصَّلاَةِ: اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا، وَلاَ تَرْحَمْ مَعَنَا أَحَدًا. فَلَمَّا سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْأَعْرَابِيِّ: «لَقَدْ حَجَّرْتَ وَاسِعًا» يُرِيدُ رَحْمَةَ اللَّهِ 26

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் நின்றார்கள் . அவர்களுடன் நாங்களும் நின்றோம் . அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு கிராமவாசி , “ இறைவா ! எனக்கும் முஹம்மத் அவர்களுக்கும் ( மட்டும் ) அருள் புரிவாயாக ! எங்களுடன் வேறு யாருக்கும் அருள் புரியாதே !`` என்று பிரார்த்தனை செய்தார் . ( தொழுது முடித்து ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸலாம் கொடுத்தபோது அந்தக் கிராமவாசியிடம் , “ விசாலமானதை , அதாவது இறைவனின் அருளை நீ குறுக்கிவிட்டாயே !` என்று சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 6010)
ஹதீஸ் 27 அத்தியாயம் 1 பாடம் 9

عَنْ أَنَسٍ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ وَصَبِيٌّ فِي الطَّرِيقِ، فَلَمَّا رَأَتْ أُمُّهُ الْقَوْمَ خَشِيَتْ عَلَى وَلَدِهَا أَنْ يُوطَأَ، فَأَقْبَلَتْ تَسْعَى وَتَقُولُ: ابْنِي ابْنِي وَسَعَتْ فَأَخَذَتْهُ، فَقَالَ الْقَوْمُ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا كَانَتْ هَذِهِ لِتُلْقِيَ ابْنَهَا فِي النَّارِ. قَالَ: فَخَفَّضَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «وَلَاءُ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يُلْقِي حَبِيبَهُ فِي النَّارِ» 27

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு தடவை ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்களுள் ஒரு குழுவினரோடு நடந்து சென்றார்கள் . வழியில் ஒரு சிறுவன் இருந்தான் . மக்கள் நடந்து வருவதைக் கண்ட அச்சிறுவனின் தாய் , அவர்கள் தன் பிள்ளையை மிதித்துவிடுவார்களோ என்று அஞ்சினாள் . “ என் மகன் , என் மகன் ” என்று கூறியவாறே முன்னோக்கி ஓடிவந்தாள் . விரைந்து வந்து அச்சிறுவனைத் தூக்கிக்கொண்டாள் . அதைப் பார்த்த ( தோழர்களான ) மக்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! இவள் தன் மகனை நரகத்தில் போட்டுவிடமாட்டாள் அல்லவா ?” என்றார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குமுன் தம் தலையைத் தாழ்த்தியவாறு , “ மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வும் தன்னுடைய நேசரை நரகத்தில் போட்டுவிடமாட்டான் ” என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 12018). புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 28 அத்தியாயம் 1 பாடம் 9

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : قَالَ: «لِلَّهِ عَزَّ وَجَلَّ مِائَةُ رَحْمَةٍ، وَإِنَّهُ قَسَمَ رَحْمَةً وَاحِدَةً بَيْنَ أَهْلِ الْأَرْضِ، فَوَسِعَتْهُمْ إِلَى آجَالِهِمْ، وَذَخَرَ تِسْعَةً وَتِسْعِينَ رَحْمَةً لِأَوْلِيَائِهِ، وَاللَّهُ عَزَّ وَجَلَّ قَابِضٌ تِلْكَ الرَّحْمَةَ الَّتِي قَسَمَهَا بَيْنَ أَهْلِ الْأَرْضِ إِلَى التِّسْعِ وَالتِّسْعِينَ فَيُكَمِّلُهَا مِائَةَ رَحْمَةٍ لِأَوْلِيَائِهِ يَوْمَ الْقِيَامَةِ» 28

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்கு நூறு ( மடங்கு ) அன்பு உண்டு . நிச்சயமாக அவன் ( அவற்றுள் ) ஒன்றை நிலவாழ் மக்கள் மத்தியில் பங்கிட்டுக்கொடுத்துவிட்டான் . எனவே அது அவர்களின் மரணம் வரை விசாலமாகி ( ப் பெருகி ) விட்டது . அவன் தன் நேசர்களுக்காகத் தொண்ணூற்றொன்பது ( மடங்கு ) அன்பை வைத்துக்கொண்டான் . மேலும் : மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் நிலவாழ் மக்கள் மத்தியில் பங்கிட்டுக்கொடுத்த அந்த ( ஒரு மடங்கு ) அன்பை ( த் தன்னுடைய ) தொண்ணூற்றொன்பது ( மடங்கு ) அன்போடு சேர்த்துக் கைப்பற்றிக்கொள்வான் . ஆக மறுமையில் அவன் தன் நேசர்களுக்காக நூறு ( மடங்கு ) அன்பை முழுமையாக வைத்துக்கொள்வான் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 10670, 10672). புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 29 அத்தியாயம் 1 பாடம் 9

عَنْ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ وَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَمَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةُ كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ حَسَنَةٍ وَأَرْبَعًا وَعِشْرِينَ حَسَنَةً " قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِذًا لَا يَهْلِكُ مِنَّا أَحَدٌ. قَالَ: «بَلَى إِنَّ أَحَدَكُمْ لَيَجِيءُ بِالْحَسَنَاتِ لَوْ وُضِعَتْ عَلَى جَبَلٍ أَثْقَلَتْهُ ثُمَّ تَجِيءُ النِّعَمُ فَتَذْهَبُ بِتِلْكَ ثُمَّ يَتَطَاوَلُ الرَّبُّ بَعْدَ ذَلِكَ بِرَحْمَتِهِ» 29

அபூதல்ஹா அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ லாயிலாஹ இல்லல்லாஹ் என்று யார் சொல்கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் . அவருக்குச் சொர்க்கம் ( கிடைப்பது ) கட்டாயமாகிவிடும் . சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ( அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன் ) என நூறு தடவை யார் சொல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் ஆயிரத்து இருபத்து நான்கு நன்மைகளை எழுதுகிறான் ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது மக்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! அப்படியானால் எங்களுள் ஒருவர்கூட அழிந்துவிட மாட்டார் அல்லவா ?” என்று கேட்டார்கள் . அதற்கவர்கள் , “ ஆம் ! உங்களுள் ஒருவர் ( தம் ) நன்மைகளைக் கொண்டுவருவார் . அவை ஒரு மலைமீது வைக்கப்பட்டாலும் அது ( அவற்றின் பாரம் தாங்க முடியாமல் ) கனத்துவிடும் . பின்னர் ( அல்லாஹ் இவ்வுலகில் அவருக்கு வழங்கிய ) அருட்கொடைகள் வரும் . அது அவற்றை அகற்றிவிடும் . ( அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்மைகள் பகரமாகிவிடும் ) பின்னர் ரப்பாகிய இறைவன் தன்னுடைய அன்பால் ( அவர்கள் அனைவரையும் ) அரவணைத்துக்கொள்வான் .

Reference: ( ஹாகிம் : 7638). இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் என தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் .
ஹதீஸ் 30 அத்தியாயம் 1 பாடம் 10

(م) عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا رَوَى عَنِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: «يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي، وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا، فَلَا تَظَالَمُوا، يَا عِبَادِي كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُهُ، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ، يَا عِبَادِي كُلُّكُمْ جَائِعٌ، إِلَّا مَنْ أَطْعَمْتُهُ، فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ، يَا عِبَادِي كُلُّكُمْ عَارٍ، إِلَّا مَنْ كَسَوْتُهُ، فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ، يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، يَا عِبَادِي إِنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي وَلَنْ تَبْلُغُوا نَفْعِي، فَتَنْفَعُونِي، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ، مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ، مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ، يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ، ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا، فَمَنْ وَجَدَ خَيْرًا، فَلْيَحْمَدِ اللهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ، فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ» 30

அபூதர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள் : என் அடியார்களே ! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன் . அதை உங்கள் மத்தியிலும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன் . ஆகவே , நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள் . என் அடியார்களே ! உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே . ஆகவே , என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள் . உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன் . என் அடியார்களே ! உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே . ஆகவே , என்னிடமே வாழ்வாதாரத்தைக் கேளுங்கள் . நான் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கிறேன் . என் அடியார்களே ! உங்களில் யாருக்கு நான் ஆடையணிவித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நிர்வாணமானவர்களே . ஆகவே , என்னிடமே ஆடை கேளுங்கள் . நான் உங்களுக்கு ஆடையணிவிக்கிறேன் . என் அடியார்களே ! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறீர்கள் . நான் அனைத்துப் பாவங்களையும் மறைத்துக் கொண்டிருக்கிறேன் . ஆகவே , என்னிடமே பாவமன்னிப்புக் கோருங்கள் . நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன் . என் அடியார்களே ! உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது ; மேலும் , உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது . என் அடியார்களே ! உங்களில் முற்காலத்தார் , பிற்காலத்தார் , மனிதர்கள் , ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை . என் அடியார்களே ! உங்களில் முற்காலத்தார் , பிற்காலத்தார் , மனிதர்கள் , ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை . என் அடியார்களே ! உங்களில் முற்காலத்தார் , பிற்காலத்தார் , மனிதர்கள் , ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் ( தத்தம் தேவைகளைக் ) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன் . அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை ; கடலில் நுழை ( த்து எடு ) க்கப்பட்ட ஊசி ( தண்ணீரைக் ) குறைப்பதைப் போன்றே தவிர ( குறைக்காது )! என் அடியார்களே ! நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன் . பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன் . நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும் ; அல்லதைக் கண்டவர் தம்மையே நொந்துகொள்ளட்டும் !

Reference: ( முஸ்லிம் : 2577 / 5033)
ஹதீஸ் 31 அத்தியாயம் 1 பாடம் 11

( م) عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَمْسِ كَلِمَاتٍ، فَقَالَ: " إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَا يَنَامُ، وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ، يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ، يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ، وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ، حِجَابُهُ النُّورُ - وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ: النَّارُ - لَوْ كَشَفَهُ لَأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ 31

அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்கள் மத்தியில் நின்று ஐந்து விஜயங்களைச் சொன்னார்கள் . ( அவை :) 1) மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் உறங்க மாட்டான் ; உறங்குவது அவனுக்குத் தகாது . 2) அவன் தராசைத் தாழ்த்துகிறான் ; உயர்த்துகிறான் . 3) ( மனிதன் ) இரவில் புரிந்த செயல் , பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது . 4) ( மனிதன் ) பகலில் புரிந்த செயல் , இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது . 5) ஒளியே ( அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும் ) அவனது திரையாகும் . - மற்றோர் அறிவிப்பில் " நெருப்பே அவனது திரையாகும் ` என்று காணப்படுகிறது .- அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும் .

Reference: ( முஸ்லிம் : 179 / 293)
ஹதீஸ் 32 அத்தியாயம் 1 பாடம் 12

( ق) عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَحَدٌ أَصْبَرُ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، يَدَّعُونَ لَهُ الوَلَدَ، ثُمَّ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ» 32

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் ( உடனே தண்டித்துவிடாமல் ) மிகவும் பொறுமை காப்பவன் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை . மனிதர்கள் ( சிலர் ) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றார்கள் . அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக்கொண்டிருக்கின்றான் .

Reference: ( புகாரீ : 7378, முஸ்லிம் : 2804)
ஹதீஸ் 33 அத்தியாயம் 1 பாடம் 12

حَدَّثَنِي النَّوَّاسُ بْنُ سَمْعَانَ الْكِلَابِيُّ، قَالَ: سَمِعْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَا مِنْ قَلْبٍ إِلَّا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ إِنْ شَاءَ أَقَامَهُ، وَإِنْ شَاءَ أَزَاغَهُ "، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " يَا مُثَبِّتَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ "، قَالَ: " وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ يَرْفَعُ أَقْوَامًا، وَيَخْفِضُ آخَرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ " 33

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அந்நவ்வாஸ் பின் ஸம்ஆன் அல்கிலாபீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ( மனிதரின் ) எந்த உள்ளமும் ரஹ்மான் ( ஆகிய அல்லாஹ்வின் ) உடைய விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே இல்லாமலில்லை . அவன் நாடினால் அதை நிலையாக நிற்கச் செய்கிறான் . அவன் நாடினால் அதை அசைத்து விடுகிறான் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உள்ளங்களை நிலையாக வைப்பவனே , எங்களுடைய உள்ளங்களை உன் மார்க்கத்தில் நிலையாக வைப்பாயாக ! தராசு ரஹ்மான் ( ஆகிய அல்லாஹ்வின் ) உடைய கையில் இருக்கிறது . அவன் மறுமை நாள் வரை சிலரை உயர்த்துகிறான் ; சிலரைத் தாழ்த்துகிறான் .

Reference: ( இப்னுமாஜா 190 / 195). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 34 அத்தியாயம் 1 பாடம் 12

(ق) عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ مِنَ اللَّهِ، مِنْ أَجْلِ ذَلِكَ حَرَّمَ الفَوَاحِشَ، وَمَا أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ المَدْحُ مِنَ اللَّهِ» 34

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுள்ளவர் யாருமில்லை . அதனால்தான் மானக்கேடான செயல்கள் அனைத்திற்கும் அவன் தடை விதித்துள்ளான் . அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர் .

Reference: ( புகாரீ : 5220, முஸ்லிம் : 2760) முஸ்லிம் நூலில் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளதாவது : திருந்துவதற்கு வாய்ப்பு அளிப்பதை அதிகமாக விரும்பக்கூடியவர் அல்லாஹ்வைவிட வேறெவருமிலர் . அதனால்தான் , அவன் வேதங்களை அருளினான் ; தூதர்களை அனுப்பினான் .
ஹதீஸ் 35 அத்தியாயம் 1 பாடம் 12

( ق) أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّ اللَّهَ يَغَارُ، وَغَيْرَةُ اللَّهِ أَنْ يَأْتِيَ المُؤْمِنُ مَا حَرَّمَ اللَّهُ» 35

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான் . அல்லாஹ்வின் ரோஷம் என்பது , அவன் தடைவிதித்துள்ள ஒன்றை ( தடையை மீறி ) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான் .

Reference: ( புகாரீ : 5223, முஸ்லிம் : 2761)
ஹதீஸ் 36 அத்தியாயம் 1 பாடம் 13

(ق) عن زيد بن خالد رضي الله عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية في إثر سماء كانت من الليل فلما انصرف أقبل على الناس فقال هل تدرون ماذا قال ربكم قالوا الله ورسوله أعلم قال قال أصبح من عبادي مؤمن بي وكافر فأما من قال مطرنا بفضل الله ورحمته فذلك مؤمن بي كافر بالكوكب وأما من قال مطرنا بنوء كذا وكذا فذلك كافر بي مؤمن بالكوكب. 36

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் " ஹுதைபியா ` எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹு தொழுகை தொழுவித்தார்கள் . அன்றிரவு மழை பெய்திருந்தது . தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி , “ உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு மக்கள் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் `` என்று கூறினர் . அப்போது “ என்னை நம்பக் கூடியவர்களும் ( என்னை ) மறுக்கக்கூடியவர்களுமாக என் அடியார்கள் ( இரு பிரிவினராக ) உள்ளனர் . ‘ அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது ` எனக் கூறியவர்களோ என்னை நம்பி , நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர் . இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் ( எங்களுக்கு மழை பொழிந்தது ) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து , நட்சத்திரத்தை நம்பியவர்களாவர் ` என இறைவன் கூறினான் `` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 846, முஸ்லிம் : 71)
ஹதீஸ் 37 அத்தியாயம் 1 பாடம் 14

(ق) عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ. 37

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் ( ஈமானின் ) சுவையை உணர்ந்தவராவார் . ( அவை :) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது . 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது . 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது .

Reference: ( புகாரீ : 16, முஸ்லிம் : 43)
ஹதீஸ் 38 அத்தியாயம் 1 பாடம் 14

(م) عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ ذَاقَ طَعْمَ الإِيمَانِ مَنْ رَضِيَ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ رَسُولاً 38

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைத்தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டாரோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை அடைந்துவிட்டார் .

Reference: ( முஸ்லிம் : 34 / 56)
ஹதீஸ் 39 அத்தியாயம் 1 பாடம் 14

( ق) عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ 39

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இறைநம்பிக்கை ( ஈமான் ) அறுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும் . நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையே .

Reference: ( புகாரீ : 9, முஸ்லிம் : 35)
ஹதீஸ் 40 அத்தியாயம் 1 பாடம் 15

(ق) عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ 40

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவருக்குத் தம்முடைய தந்தை , தம்முடைய பிள்ளை , ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத்திற்குரியவராக ஆகாத வரை அவர் ( உண்மையான ) இறைநம்பிக்கை ( ஈமான் ) கொண்டவர் ஆகமாட்டார் .

Reference: ( புகாரீ : 15, முஸ்லிம் : 44)
ஹதீஸ் 41 அத்தியாயம் 1 பாடம் 15

(خ) عن عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ لَهُ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ لأَنْتَ أَحَبُّ إِلَىَّ مِنْ كُلِّ شَىْءٍ إِلاَّ مِنْ نَفْسِي‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ لاَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ ‏.‏ فَقَالَ لَهُ عُمَرُ فَإِنَّهُ الآنَ وَاللَّهِ لأَنْتَ أَحَبُّ إِلَىَّ مِنْ نَفْسِي‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ الآنَ يَا عُمَرُ. 41

அப்துல்லாஹ் பின் ஹிஜாம் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்துகொண்டிருந்தோம் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள் . அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதரே ! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் `` என்று சொன்னார்கள் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இல்லை ! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக ! உம்மைவிடவும் நானே உமக்கு மிகப் பிரியமானவனாக ஆகும் வரை ( நீர் உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது )`` என்று கூறினார்கள் . உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக ! என்னைவிடத் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் `` என்றார்கள் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ இப்போதுதான் உமரே ! ( சரியாகச் சொன்னீர்கள் )`` என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 6632)
ஹதீஸ் 42 அத்தியாயம் 1 பாடம் 15

(م ) عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مِنْ أَشَدِّ أُمَّتِي لِي حُبًّا نَاسٌ يَكُونُونَ بَعْدِي يَوَدُّ أَحَدُهُمْ لَوْ رَآنِي بِأَهْلِهِ وَمَالِهِ 42

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தாரில் என்னை ஆழமாக நேசிப்போருள் சிலர் எனக்குப்பின் தோன்றுவார்கள் . அவர்களுள் ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும்கூடத் தியாகம் செய்ய விரும்புவார் .

Reference: ( முஸ்லிம் : 2832 / 5447)
ஹதீஸ் 43 அத்தியாயம் 1 பாடம் 15

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ فَقَالَ : إِنِّي أُحِبُّكُمْ أَهْلَ الْبَيْتِ ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : " قَالَ اللَّهَ ، قَالَ : " فَأَعِدَّ لِلْفَقْرِ تِجْفَافًا فَإِنَّ الْفَقْرَ أَسْرَعُ إِلَى مَنْ يُحِبُّنَا مِنَ السَّيْلِ مِنْ أَعْلَى الْأَكَمَةِ إِلَى أَسْفَلِهَا " . 43

அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ அஹ்லுல் பைத்தாகிய தங்களை நான் நேசிக்கிறேன் ” என்று கூறினேன் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா ?” என்று கேட்டார்கள் . “ அல்லாஹ்வின்மீது சத்தியமாக ” என்று கூறினேன் . “ அப்படியெனில் ஏழ்மையை எதிர்கொள்ளத் தயாராக இரு . ஏனென்றால் வெள்ளம் மேலிருந்து கீழ்நோக்கி விரைவாகப் பாய்ந்தோடுவதைப்போல் எங்களை நேசிப்போருக்கு வறுமை மிக வேகமாக வந்துசேரும் ” என்றார்கள் .

Reference: ( ஹாகிம் : 7944) புகாரீ , முஸ்லிம் ஆகிய இருவரின் நிபந்தனைப்படி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் அமைந்துள்ளது என தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் . அடிக்குறிப்பு : இந்த ஹதீஹுக்கு விளக்கமாக திர்மிதீ (2398) நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸைக் காணலாம் . “ மக்களுள் மிகக் கடுமையான சோதனைக்கு ஆளாகக்கூடியவர்கள் நபிமார்கள் . பின்னர் அவர்களைப் போன்றவர்கள் , அவர்களைப் போன்றவர்கள் ” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
ஹதீஸ் 44 அத்தியாயம் 1 பாடம் 16

( خ ) عن النُّعْمَانَ بْنَ بَشِيرٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَثَلُ الْقَائِمِ عَلَى حُدُودِ اللَّهِ وَالْوَاقِعِ فِيهَا كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ، فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلاَهَا وَبَعْضُهُمْ أَسْفَلَهَا، فَكَانَ الَّذِينَ فِي أَسْفَلِهَا إِذَا اسْتَقَوْا مِنَ الْمَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ فَقَالُوا لَوْ أَنَّا خَرَقْنَا فِي نَصِيبِنَا خَرْقًا، وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا‏.‏ فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا، وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا وَنَجَوْا جَمِيعًا ‏"‏‏.‏ 44

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக நுஅமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் ( சட்ட ) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும் . அவர்கள் கப்பலில் ( தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச் ) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள் . ( அதன்படி ) அவர்களுள் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த்தளத்திலும் இடம் கிடைத்தது . கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது ( அதைக் கொண்டு வர ) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது . ( அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது ). அப்போது , கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் ( தமக்குள் ) “ நாம் ( தண்ணீருக்காக ) நமது பங்கில் ( கீழ்த் தளத்தில் ) ஓட்டையிட்டுக் கொள்வோம் ; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம் ” என்று பேசிக் கொண்டார்கள் . அவர்கள் விரும்பியபடி செய்துகொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் ( கப்பலில் இருப்பவர்கள் ) அனைவரும் அழிந்து போவார்கள் . ( ஓட்டையிட விடாமல் ) அவர்களுடைய கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் ; ( அவர்களுடன் மற்ற ) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் .

Reference: ( புகாரீ : 2493)
ஹதீஸ் 45 அத்தியாயம் 1 பாடம் 16

(م) عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ : أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ ‏.‏ فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ ‏.‏ 45

தாரிக் பின் ஷிஹாப் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முதன் முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு ( குத்பா ) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார் . ( அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார் .) அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று , “ சொற்பொழிவுக்கு முன்பே ( பெருநாள் தொழுகை ) தொழ வேண்டும் `` என்று கூறினார் . அதற்கு மர்வான் “ முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டுவிட்டது ( இப்போது அது நடைமுறையில் இல்லை )`` என்று கூறினார் . ( அப்போது அங்கிருந்த ) அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு , " இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றிவிட்டார் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( பின்வருமாறு ) கூற நான் கேட்டுள்ளேன் : உங்களுள் ஒருவர் ஒரு தீமையை ( மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை ) க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும் . முடியாவிட்டால் தமது நாவால் ( சொல்லித் தடுக்கட்டும் ). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் ( அதை வெறுத்து ஒதுக்கட்டும் ). இந்த ( இறுதி ) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா ( ன நிலையா ) கும் .

Reference: ( முஸ்லிம் : 49 / 78)
ஹதீஸ் 46 அத்தியாயம் 1 பாடம் 16

( م) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ فِي أُمَّةٍ قَبْلِي إِلاَّ كَانَ لَهُ مِنْ أُمَّتِهِ حَوَارِيُّونَ وَأَصْحَابٌ يَأْخُذُونَ بِسُنَّتِهِ وَيَقْتَدُونَ بِأَمْرِهِ ثُمَّ إِنَّهَا تَخْلُفُ مِنْ بَعْدِهِمْ خُلُوفٌ يَقُولُونَ مَا لاَ يَفْعَلُونَ وَيَفْعَلُونَ مَا لاَ يُؤْمَرُونَ فَمَنْ جَاهَدَهُمْ بِيَدِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِلِسَانِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِقَلْبِهِ فَهُوَ مُؤْمِنٌ وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنَ الإِيمَانِ حَبَّةُ خَرْدَلٍ ‏"‏ ‏.‏ 46

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை . அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள் ; அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள் . அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள் . அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள் . தமக்குக் கட்டளையிடப்படாதவற்றைச் செய்வார்கள் . ஆகவே , யார் இ( த்தகைய ) வர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார் . யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர் ஆவார் . யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர்தாம் . இவற்றுக்கப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவுகூடக் கிடையாது .

Reference: ( முஸ்லிம் : 50 / 80)
ஹதீஸ் 47 அத்தியாயம் 1 பாடம் 16

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَيُّهَا النَّاسُ ، مُرُوا بِالْمَعْرُوفِ ، وَانْهَوْا عَنِ الْمُنْكَرِ ، قَبْلَ أَنْ تَدْعُوا اللَّهَ فَلا يَسْتَجِيبَ لَكُمْ ، وَقَبْلَ أَنْ تَسْتَغْفِرُوهُ فَلا يَغْفِرَ لَكُمْ ، إِنَّ الأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْيَ عَنِ الْمُنْكَرِ لا يَدْفَعُ رِزْقًا ، وَلا يُقَرِّبُ أَجَلا ، وَإِنَّ الأَحْبَارَ مِنَ الْيَهُودِ ، وَالرُّهْبَانَ مِنَ النَّصَارَى لَمَّا تَرَكُوا الأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْيَ عَنِ الْمُنْكَرِ لَعَنَهُمُ اللَّهُ عَلَى لِسَانِ أَنْبِيَائِهِمْ ، ثُمَّ عُمُّوا بِالْبَلاءِ " . 47

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மக்களே ! நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தும் உங்களுக்குப் பதிலளிக்கப்படாமல் ஆவதற்கு முன்னரே , நீங்கள் பாவமன்னிப்புத் தேடியும் உங்களை அவன் மன்னிக்காதிருக்கும் முன்னரே நீங்கள் நன்மையை ஏவுங்கள் ; தீமையைத் தடுங்கள் . திண்ணமாக நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் வாழ்வாதாரத்தை நீக்கிவிடாது ; தவணையை நெருக்கமாக்காது . ( துரித மரணத்தைத் தடுக்கும் .) யூத மதத் தலைவர்களும் கிறிஸ்தவ மதத் துறவிகளும் நன்மையை ஏவுவதையும் தீமையைத் தடுப்பதையும் விட்டுவிட்டபோது அல்லாஹ் அவர்களை அவர்களின் நபிமார்கள் மூலம் சபித்தான் . பிறகு அவர்கள் அனைவர் மீதும் சோதனை பொதுவானதாக ஆக்கப்பட்டது .

Reference: ( அல்அஹாதீஹுல் முக்தாரா : 13/338-339). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 48 அத்தியாயம் 1 பாடம் 16

( ق) عن أسامة بن زيد قال : سَمِعْتُهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏. يَقُولُ ‏ "‏ يُجَاءُ بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ، فَتَنْدَلِقُ أَقْتَابُهُ فِي النَّارِ، فَيَدُورُ كَمَا يَدُورُ الْحِمَارُ بِرَحَاهُ، فَيَجْتَمِعُ أَهْلُ النَّارِ عَلَيْهِ، فَيَقُولُونَ أَىْ فُلاَنُ، مَا شَأْنُكَ أَلَيْسَ كُنْتَ تَأْمُرُنَا بِالْمَعْرُوفِ وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ قَالَ كُنْتُ آمُرُكُمْ بِالْمَعْرُوفِ وَلاَ آتِيهِ، وَأَنْهَاكُمْ عَنِ الْمُنْكَرِ وَآتِيهِ ‏"‏‏.‏ 48

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றதாக உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார் . அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும் . கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார் . அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி , “ இன்னாரே ! உமக்கேன் இந்த நிலை ? நீர் ( உலக வாழ்வின்போது ) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு , தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா ?`` என்று கேட்பார்கள் . அதற்கு அவர் , “ நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன் ; ஆனால் , அந்த நற்செயலை நான் செய்யவில்லை . தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன் ; ஆனால் , அந்தத் தீமையை நானே செய்து வந்தேன் `` என்று கூறுவார் .

Reference: ( புகாரீ : 3267, முஸ்லிம் : 2989)
ஹதீஸ் 49 அத்தியாயம் 1 பாடம் 17

(م) عن عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ شَدِيدُ سَوَادِ الشَّعَرِ لاَ يُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ وَلاَ يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ حَتَّى جَلَسَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَسْنَدَ رُكْبَتَيْهِ إِلَى رُكْبَتَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ عَلَى فَخِذَيْهِ وَقَالَ يَا مُحَمَّدُ أَخْبِرْنِي عَنِ الإِسْلاَمِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ الإِسْلاَمُ أَنْ تَشْهَدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَتُقِيمَ الصَّلاَةَ وَتُؤْتِيَ الزَّكَاةَ وَتَصُومَ رَمَضَانَ وَتَحُجَّ الْبَيْتَ إِنِ اسْتَطَعْتَ إِلَيْهِ سَبِيلاً ‏.‏ قَالَ صَدَقْتَ ‏.‏ قَالَ فَعَجِبْنَا لَهُ يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ ‏.‏ قَالَ فَأَخْبِرْنِي عَنِ الإِيمَانِ ‏.‏ قَالَ ‏"‏ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ ‏"‏ ‏.‏ قَالَ صَدَقْتَ ‏.‏ 49

அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : என் தந்தை உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம் தெரிவித்தார்கள் : நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த , அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார் . பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை ; எங்களுள் எவருக்கும் அவரை ( யார் என ) த் தெரியவில்லை . அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் ( சென்று ), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு ( நெருக்கமாக ) அமர்ந்தார் . அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத் ( துப் பவ்வியமாக அமர்ந் ) தார் . பிறகு “ முஹம்மதே ! இஸ்லாம் ( அடிபணிதல் ) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள் `` என்று கேட்டார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இஸ்லாம் என்பது , அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ( ஆகிய நான் ) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும் . மேலும் , தொழுகையைக் கடைப்பிடிப்பதும் , ஸகாத்தை வழங்கிவருவதும் , ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் , சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் " ஹஜ் ` செய்வதும் ஆகும் `` என்று பதிலளித்தார்கள் . அதற்கு அந்த மனிதர் “ உண்மைதான் `` என்றார் . அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு , அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம் . அடுத்து அவர் , “ ஈமான் ( இறைநம்பிக்கை ) பற்றி எனக்குத் தெரிவியுங்கள் `` என்று கூறினார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும் ; நன்மை , தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும் `` என்று கூறினார்கள் . அதற்கும் அம்மனிதர் “ உண்மைதான் `` என்றார் . அடுத்து அம்மனிதர் , “ இஹ்ஸான் ( அழகிய முறையில் செயலாற்றல் ) பற்றி எனக்குத் தெரிவியுங்கள் `` என்றார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( இஹ்ஸான் என்பது ,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும் . ஏனெனில் , அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் , அவன் உங்களைப் பார்க்கின்றான் `` என்று பதிலளித்தார்கள் . அம்மனிதர் , “ மறுமை ( உலக அழிவு ) நாளைப் பற்றி ( அது எப்போது வரும் என ) எனக்குத் தெரிவியுங்கள் `` என்று கேட்க , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , கேள்வி கேட்கப்படுபவர் ( அதாவது நான் ), கேட்பவரைவிட ( அதாவது உங்களைவிட ) அதிகம் அறிந்தவர் அல்லர் . ( இது பற்றி எனக்கும் தெரியாது ; உங்களுக்கும் தெரியாது )`` என்று கூறினார்கள் . அம்மனிதர் , “ மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள் !`` என்று கேட்டார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஓர் அடிமைப் பெண் தன் உரிமையாளரைப் பெற்றெடுப்பதும் , காலில் செருப்பில்லாத , அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும் `` என்று கூறினார்கள் . பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார் . நீண்ட நேரம் நான் ( அங்கேயே ) இருந்தேன் . பின்னர் என்னிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உமரே ! கேள்வி கேட்ட அந்த மனிதர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . நான் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் `` என்று சொன்னேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவர்தாம் ( வானவர் ) ஜிப்ரீல் . உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார் `` என்று சொன்னார்கள் .

Reference: ( முஸ்லிம் : 1/8)
ஹதீஸ் 50 அத்தியாயம் 1 பாடம் 17

عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ مَا الْإِسْلَامُ قَالَ أَنْ يُسْلِمَ قَلْبُكَ لِلَّهِ عَزَّ وَجَلَّ وَأَنْ يَسْلَمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِكَ وَيَدِكَ قَالَ فَأَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ قَالَ الْإِيمَانُ قَالَ وَمَا الْإِيمَانُ قَالَ تُؤْمِنُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ قَالَ فَأَيُّ الْإِيمَانِ أَفْضَلُ قَالَ الْهِجْرَةُ قَالَ فَمَا الْهِجْرَةُ قَالَ تَهْجُرُ السُّوءَ قَالَ فَأَيُّ الْهِجْرَةِ أَفْضَلُ قَالَ الْجِهَادُ قَالَ وَمَا الْجِهَادُ قَالَ أَنْ تُقَاتِلَ الْكُفَّارَ إِذَا لَقِيتَهُمْ قَالَ فَأَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ مَنْ عُقِرَ جَوَادُهُ وَأُهْرِيقَ دَمُهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ عَمَلَانِ هُمَا أَفْضَلُ الْأَعْمَالِ إِلَّا مَنْ عَمِلَ بِمِثْلِهِمَا حَجَّةٌ مَبْرُورَةٌ أَوْ عُمْرَةٌ 50

அம்ர் பின் அபஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ அல்லாஹ்வின் தூதரே ! இஸ்லாம் என்றால் என்ன ?” என்று ஒரு மனிதர் கேட்டார் . “ உமது உள்ளம் மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்குப் பணிவதும் முஸ்லிம்கள் உமது நாவிலிருந்தும் கையிலிருந்தும் ( எந்த இடையூறுமின்றிப் ) பாதுகாப்புப் பெறுவதும் ஆகும் ” என்று விடையளித்தார்கள் . “ இஸ்லாமிய மார்க்கத்தில் எது சிறந்தது ?” என்று கேட்டார் . “ இறைநம்பிக்கை கொள்வது ” என்று விடையளித்தார்கள் . “ இறைநம்பிக்கை என்றால் என்ன ?” என்று கேட்டார் . அல்லாஹ்வையும் , அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் மரணத்திற்குப் பின் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என்பதையும் நீர் நம்புவதாகும் ” என்று விடையளித்தார்கள் . “ இறைநம்பிக்கையில் சிறந்தது எது ?” என்று கேட்டார் . “ நாடு துறந்து செல்லுதல் ( ஹிஜ்ரத் )” என்று கூறினார்கள் . “ ஹிஜ்ரத் என்றால் என்ன ?” என்று கேட்டார் . “ தீமையை வெறுத்தல் ஆகும் ” என்று கூறினார்கள் . “ ஹிஜ்ரத்தில் சிறந்தது எது ?” என்று கேட்டார் . “( அல்லாஹ்வின் பாதையில் ) அறப்போர் புரிதல் ” என்று கூறினார்கள் . “ ஜிஹாத் என்றால் என்ன ?” என்று கேட்டார் . “( போர்க்களத்தில் ) இறைமறுப்பாளர்களை எதிர்கொண்டால் அவர்களோடு போராடுவதாகும் ” என்று கூறினார்கள் . “ ஜிஹாதில் சிறந்தது எது ?” என்று கேட்டார் . “ அவனுடைய குதிரையின் பின்னங்கால் வெட்டப்பட்டு , அவனுடைய இரத்தம் ஓட்டப்படுவதாகும் ” என்று விடையளித்தார்கள் . ( பின்னர் ) அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் : பிறகு இரண்டு செயல்கள் உள்ளன . அவ்விரண்டும் மிகச் சிறந்த செயல்கள்-அவ்விரண்டைப்போன்று செய்தவரைத் தவிர . 1. ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் , 2. அல்லது உம்ரா .

Reference: ( ஹாகிம் : 17027). இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 51 அத்தியாயம் 1 பாடம் 18

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ ‏"‏‏.‏ قَالَ قَتَادَةُ إِذَا طَلَّقَ فِي نَفْسِهِ فَلَيْسَ بِشَىْءٍ‏.‏ 51

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை ( வெளிப்படுத்தி ) ப் பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் .

Reference: ( புகாரீ : 5269, முஸ்லிம் : 127)
ஹதீஸ் 52 அத்தியாயம் 1 பாடம் 18

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلُوهُ إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ ‏.‏ قَالَ ‏"‏ وَقَدْ وَجَدْتُمُوهُ ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ ذَاكَ صَرِيحُ الإِيمَانِ ‏"‏ ‏.‏ 52

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களுள் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ எங்கள் உள்ளத்தில் சில ( குழப்பமான ) விஷயங்கள் எழுகின்றன . அவற்றை ( வெளிப்படுத்தி ) ப் பேசுவதைக்கூட நாங்கள் மிகப் பெரும் ( பாவ ) காரியமாகக் கருதுகிறோம் ( இது பற்றித் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள் ?)`` என்று கேட்டனர் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு நபித் தோழர்கள் , " ஆம் ` என்று பதிலளித்தார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்லிம் : 132 / 209)
ஹதீஸ் 53 அத்தியாயம் 1 பாடம் 18

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَحَدَنَا يَجِدُ فِي نَفْسِهِ يُعَرِّضُ بِالشَّىْءِ لأَنْ يَكُونَ حُمَمَةً أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَتَكَلَّمَ بِهِ فَقَالَ ‏"‏ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ كَيْدَهُ إِلَى الْوَسْوَسَةِ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ قُدَامَةَ ‏"‏ رَدَّ أَمْرَهُ ‏"‏ ‏.‏ مَكَانَ ‏"‏ رَدَّ كَيْدَهُ ‏"‏ ‏.‏ 53

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ அல்லாஹ்வின் தூதரே ! எங்களுள் ஒருவர் தம் மனத்தில் ஏதேதோ ( எண்ணங்கள் ) தோன்றக் காண்கிறார் . அவற்றைப் பேசுவதைவிட அடுப்புக் கரி மிக விருப்பமானதாகத் தோன்றுகிறது ” என்றார் . அப்போது நபியவர்கள் , “ அல்லாஹு அக்பர் , அல்லாஹு அக்பர் , அல்லாஹு அக்பர் . அவனுடைய ( ஷைத்தான் உடைய ) சூழ்ச்சியை மனக்குழப்பமாக மாற்றிவிட்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ” என்று கூறினார்கள் .

Reference: ( அபூதாவூத் : 5112) இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 54 அத்தியாயம் 1 பாடம் 19

(ق) عَنْ أَبُو هُرَيْرَةَ رضى الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ مَنْ خَلَقَ كَذَا مَنْ خَلَقَ كَذَا حَتَّى يَقُولَ مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ، وَلْيَنْتَهِ ‏"‏‏. 54

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவரிடம் ( அவர் மனத்திற்குள் ) ஷைத்தான் வந்து , “ இதைப் படைத்தவர் யார் ? இதைப் படைத்தவர் யார் ?`` என்று கேட்டுக்கொண்டே வந்து , இறுதியில் , “ உன் இறைவனைப் படைத்தவர் யார் ?`` என்று கேட்கின்றான் . இந்தக் ( கேள்வி கேட்கும் ) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும் . ( இத்தகைய சிந்தனையிலிருந்து ) விலகிக்கொள்ளட்டும் .

Reference: ( புகாரீ : 3276, முஸ்லிம் : 134) ( முஸ்லிம் : 212) மற்றோர் அறிவிப்பில் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளதாவது : ( இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டால் " நான் அல்லாஹ்வையும் ) அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டேன் ` என்று கூறட்டும்
ஹதீஸ் 55 அத்தியாயம் 1 பாடம் 20

(ق) عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ، ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً ‏"‏‏.‏ 55

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் ( பின்வருமாறு ) கூறினார்கள் : அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் ( அவை இன்னின்னவை என நிர்ணயித்து ) எழுதிவிட்டான் . பிறகு அதனை விவரித்தான் . அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என ( மனத்தில் ) எண்ணி விட்டாலே-அதைச் செயல்படுத்தாவிட்டாலும் - அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான் . அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால் , அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக , எழுநூறு மடங்காக , இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான் . ஆனால் , ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி , ( அல்லாஹ்வுக்கு அஞ்சி ) அதைச் செய்யாமல் விட்டுவிட்டால் , அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான் . எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ , அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான் .

Reference: ( புகாரீ : 6491, முஸ்லிம் : 131)
ஹதீஸ் 56 அத்தியாயம் 1 பாடம் 20

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ يَقُولُ اللَّهُ إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً فَلاَ تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلَهَا، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةٍ ‏"‏‏.‏ 56

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் ( வானவர்களிடம் ) கூறுகின்றான் : என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள் . அதை அவன் செய்துவிட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள் . அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள் . அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும்கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள் . அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள் .

Reference: ( புகாரீ : 7501, முஸ்லிம் : 129)
ஹதீஸ் 57 அத்தியாயம் 1 பாடம் 20

عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "الْأَعْمَالُ سِتَّةٌ، وَالنَّاسُ أَرْبَعَةٌ، فَمُوجِبَتَانِ، وَمِثْلٌ بِمِثْلٍ، وَحَسَنَةٌ بِعَشْرِ أَمْثَالِهَا، وَحَسَنَةٌ بِسَبْعِ مِائَةٍ، فَأَمَّا الْمُوجِبَتَانِ: فَمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ مَاتَ يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ النَّارَ، وَأَمَّا مِثْلٌ بِمِثْلٍ: فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ حَتَّى يَشْعُرَهَا قَلْبُهُ، وَيَعْلَمَهَا اللهُ مِنْهُ كُتِبَتْ لَهُ حَسَنَةً، وَمَنْ عَمِلَ سَيِّئَةً، كُتِبَتْ عَلَيْهِ سَيِّئَةً، وَمَنْ عَمِلَ حَسَنَةً فَبِعَشْرِ أَمْثَالِهَا، وَمَنْ أَنْفَقَ نَفَقَةً فِي سَبِيلِ اللهِ فَحَسَنَةٌ بِسَبْعِ مِائَةٍ، وَأَمَّا النَّاسُ، فَمُوَسَّعٌ عَلَيْهِ فِي الدُّنْيَا مَقْتُورٌ عَلَيْهِ فِي الْآخِرَةِ، وَمَقْتُورٌ عَلَيْهِ فِي الدُّنْيَا مُوَسَّعٌ عَلَيْهِ فِي الْآخِرَةِ، وَمَقْتُورٌ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمُوَسَّعٌ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ 57

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக குரைம் பின் ஃபாத்திக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நல்லறங்கள் ஆறு உள்ளன . மக்கள் நான்கு வகையினர் . ( சொர்க்கத்தையும் நரகத்தையும் ) கட்டாயமாகத் தேடித் தருகின்றவை இரண்டு உள்ளன . பகரத்திற்குப் பகரமும் உண்டு . மேலும் ஒரு நன்மைக்குப் பத்து நன்மைகளும் , ஒரு நன்மைக்கு எழுநூறு ( மடங்கு ) நன்மைகளும் உண்டு . ( சொர்க்கத்தையும் நரகத்தையும் ) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு என்பது , யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் ( நிச்சயமாகச் ) சொர்க்கம் செல்வார் . யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் ( நிச்சயமாக ) நரகம் செல்வார் `` என்பதாகும் . பகரத்திற்குப் பகரம் என்பது , யார் ஒரு நன்மை செய்யவேண்டும் என்றெண்ணி அதை அவருடைய உள்ளம் உணர்ந்து , அல்லாஹ்வும் அதனை அவரிடமிருந்து அறிந்து கொள்கின்றானோ ( அதைச் செயல்படுத்தாவிட்டாலும் ) அவருக்காக ஒரு முழு நன்மை பதிவு செய்யப்பட்டுவிடுகிறது . யார் ஒரு தீமையைச் செய்கிறாரோ ( அதற்குப் பகரமாக ) அவருக்கு ஒரு தீமை பதிவு செய்யப்பட்டுவிடுகிறது . யார் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அது போன்று பத்து ( மடங்கு ) நன்மைகள் வழங்கப்படுகின்றன . யார் ஒரு தடவை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கிறாரோ அவருக்கு ஒரு நன்மை எழுநூறு மடங்காக வழங்கப்படுகிறது . மக்கள் ( நான்கு வகையினர் என்பது ) இவ்வுலகில் அவர் விசாலமான வாய்ப்புகள் வழங்கப்பட்டவராகவும் ( செல்வராகவும் ) மறுமையில் அவர் ஏழையாகவும் இருப்பார் . இவ்வுலகில் ஏழையாகவும் மறுமையில் விசாலமான வாய்ப்புகள் வழங்கப்பட்டவராகவும் ( செல்வராகவும் ) இருப்பார் . இம்மையிலும் மறுமையிலும் ஏழையாகவே இருப்பார் . இம்மையிலும் மறுமையிலும் செல்வராகவே இருப்பார் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 18900). இது ` ஹஸன் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 58 அத்தியாயம் 1 பாடம் 20

(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مُؤْمِنًا حَسَنَةً يُعْطَى بِهَا فِي الدُّنْيَا وَيُجْزَى بِهَا فِي الآخِرَةِ وَأَمَّا الْكَافِرُ فَيُطْعَمُ بِحَسَنَاتِ مَا عَمِلَ بِهَا لِلَّهِ فِي الدُّنْيَا حَتَّى إِذَا أَفْضَى إِلَى الآخِرَةِ لَمْ تَكُنْ لَهُ حَسَنَةٌ يُجْزَى بِهَا ‏"‏ ‏.‏ 58

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் எந்த இறைநம்பிக்கையாளருக்கும் ( அவர் செய்த நற்செயலுக்கான ) நன்மையில் அநீதி இழைப்பதில்லை . அதற்குரிய நன்மை இம்மையிலும் அவருக்கு வழங்கப்படும் . அதற்குரிய நன்மை மறுமையிலும் அவருக்கு வழங்கப்படும் . ( ஏக ) இறைமறுப்பாளர் இறைவனுக்காகச் செய்த நற்செயல்களின் பலனால் இம்மையில் ( மட்டும் ) அவருக்கு உணவளிக்கப்படும் . அவர் மறுமையை அடையும்போது , அவருக்கு வழங்கப்படுவதற்கு நன்மையேதும் இராது .

Reference: ( முஸ்லிம் : 2808 / 5408)
ஹதீஸ் 59 அத்தியாயம் 1 பாடம் 20

(ق) عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الْجَاهِلِيَّةِ قَالَ ‏ "‏ مَنْ أَحْسَنَ فِي الإِسْلاَمِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الْجَاهِلِيَّةِ، وَمَنْ أَسَاءَ فِي الإِسْلاَمِ أُخِذَ بِالأَوَّلِ وَالآخِرِ ‏"‏‏.‏ 59

இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் , “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த (த) வற்றிற்காக ( மறுமையில் ) தண்டிக்கப்படுவோமா ?`` என்று கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ யார் இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார் . " யார் இஸ்லாத்தில் இணைந்த பிறகு ( மீண்டும் இறைமறுப்பு எனும் ) தீமையைப் புரிகிறாரோ அவர் ( அறியாமைக் காலத்தில் செய்த ) முந்தைய தவறுகளுக்காகவும் , ( இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப் ) பிந்தைய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார் `` என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 6921, முஸ்லிம் : 120)
ஹதீஸ் 60 அத்தியாயம் 1 பாடம் 21

(ق) عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ أَشْيَاءَ كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ مِنْ صَدَقَةٍ أَوْ عَتَاقَةٍ وَصِلَةِ رَحِمٍ فَهَلْ فِيهَا مِنْ أَجْرٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ مِنْ خَيْرٍ ‏"‏‏. 60

ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ அல்லாஹ்வின் தூதரே ! நான் அறியாமைக் காலத்தில் , இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன்பு ‘ தர்மம் செய்தல் , அடிமைகளை விடுதலை செய்தல் , உறவினரைச் சேர் ( ந்து வாழ் ) தல் ’ போன்ற நல்லறங்களைச் செய்துள்ளேன் . அவற்றிற்கு ( மறுமையில் எனக்கு ) நன்மை ஏதும் உண்டா ?`` என்று நான் கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் " நீர் முன்னர் செய்த நற்செயல் ( களுக்குரிய நற்பலன் ) களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர் `` என்று பதிலளித்தார்கள் .

Reference: ( புகாரீ : 1436, முஸ்லிம் : 123) புகாரீ , முஸ்லிம் ஆகிய நூல்களில் மற்றோர் அறிவிப்பில் உர்வா பின் ஸுபைர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாக உள்ளதாவது : ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள் ; நூறு ஒட்டகங்களையும் அறுத்து தர்மம் செய்தார்கள் . இவ்வாறே , அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது ( ஹஜ் செய்த நேரத்தில் ) நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள் . நூறு ஒட்டகங்களை அறுத்து தர்மம் செய்தார்கள் . பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ,... என்று அந்த ஹதீஸ் தொடர்கிறது . ( புகாரீ : 2538)
ஹதீஸ் 61 அத்தியாயம் 1 பாடம் 22

(ق)عن طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَهْلِ نَجْدٍ، ثَائِرُ الرَّأْسِ، يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ، وَلاَ يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ‏"‏ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ ‏"‏‏.‏ فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ ‏"‏ لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ‏"‏‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَصِيَامُ رَمَضَانَ ‏"‏‏.‏ قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُ قَالَ ‏"‏ لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ‏"‏‏.‏ قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ‏.‏ قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ ‏"‏ لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ‏"‏‏.‏ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَفْلَحَ إِنْ صَدَقَ ‏"‏‏.‏ 61

தல்ஹா பின் உபைதில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நஜ்த்வாசிகளுள் ஒருவர் தலைவிரி கோலத்துடன் ( பயணம் முடிந்த கையோடு ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார் . ( தூரத்திலிருந்து ) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது . ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை . அவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் ( தாம் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம் )`` என்றார்கள் . அவர் “ இதைத் தவிர வேறு ( தொழுகை ) ஏதாவது என்மீது ( கடமையாக்கப்பட்டு ) உள்ளதா ?`` என்று கேட்க , “ இல்லை , நீ தானாக விரும்பிச் செய்யும் ( கூடுதலான ) தொழுகையைத் தவிர `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதிலளித்தார்கள் . மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . உடனே அவர் , “ இதைத் தவிர வேறு ஏதேனும் ( நோன்பு ) என்மீது ( கடமையாக்கப்பட்டு ) உள்ளதா ?`` எனக் கேட்க , “ இல்லை , நீ தானாக விரும்பி நோற்கும் ( கூடுதலான ) நோன்பைத் தவிர `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள் . அவர் , “ இதைத் தவிர வேறு ( ஸகாத் ) ஏதும் என்மீது ( கடமையாக்கப்பட்டு ) உள்ளதா ?`` என்று கேட்டார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இல்லை , நீ தானாக விரும்பிச் செய்யும் ( கூடுதலான ) வேறு தர்மத்தைத் தவிர `` என்றார்கள் . அந்த மனிதர் , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நான் இவற்றைவிடக் கூட்டவும் மாட்டேன் ; குறைக்கவும் மாட்டேன் ” என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவர் உண்மையாகவே ( இதைக் ) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்துவிட்டார் `` என்று சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 46, முஸ்லிம் : 22) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களிலும் மற்றோர் அறிவிப்பில் உள்ளதாவது : “ அவர் உண்மையாகவே ( இதைக் ) கூறியிருந்தால் அவர் சொர்க்கத்தில் நுழைவார் .`` ( புகாரீ : 6956)
ஹதீஸ் 62 அத்தியாயம் 1 பாடம் 23

(خ) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلاَّ غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَىْءٍ مِنَ الدُّلْجَةِ ‏"‏‏.‏ 62

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : இந்த மார்க்கம் எளிதானது . இந்த மார்க்கத்தை எவரேனும் ( தம்மீது ) சிரமமானதாக ஆக்கிக்கொண்டால் , அது அவரை மிகைத்துவிடும் . எனவே , ( கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துக் காரியங்களிலும் ) நடுநிலையையே கடைப்பிடியுங்கள் . இயன்றவற்றைச் செய்யுங்கள் ; நற்செய்தியையே சொல்லுங்கள் ; ( கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட ) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள் .

Reference: ( புகாரீ : 39)
ஹதீஸ் 63 அத்தியாயம் 1 பாடம் 23

(خ) عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَمَرَهُمْ أَمَرَهُمْ مِنَ الأَعْمَالِ بِمَا يُطِيقُونَ قَالُوا إِنَّا لَسْنَا كَهَيْئَتِكَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ‏.‏ فَيَغْضَبُ حَتَّى يُعْرَفَ الْغَضَبُ فِي وَجْهِهِ ثُمَّ يَقُولُ ‏ "‏ إِنَّ أَتْقَاكُمْ وَأَعْلَمَكُمْ بِاللَّهِ أَنَا ‏"‏‏.‏ 63

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நல்லவற்றை ( ச் செய்யுமாறு ) மக்களுக்குக் கட்டளையிட்டால் , அவர்களால் இயன்ற செயல்களையே கட்டளையிடுவார்கள் . மக்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான் . ( ஆனால் ) எங்கள் நிலையோ உங்கள் நிலையைப் போன்றதன்று ( நாங்கள் குறைந்த அளவில் நல்லறங்கள் புரிந்தால் போதாது ; அதிகமாகச் செய்ய வேண்டிய நிலையிலுள்ளோம் )`` என்று கூறினார்கள் . ( இதைக் கேட்ட ) உடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கோபமடைந்தார்கள் . எந்த அளவிற்கென்றால் கோபத்தின் அறிகுறி அவர்களது முகத்தில் காணப்பட்டது . பிறகு “ உங்கள் அனைவரைவிட நான் ( அல்லாஹ்வை ) நன்கு அஞ்சி நடப்பவனும் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவனும் ஆவேன் `` என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 20)
ஹதீஸ் 64 அத்தியாயம் 1 பாடம் 23

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ كَمَا يَكْرَهُ أَنْ تُؤْتَى مَعْصِيَتُهُ 64

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நிச்சயமாக அல்லாஹ் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதை விரும்புகிறான் . மேலும் அவனுக்கு ( அடியானால் ) மாறு செய்யப்படுவதை வெறுக்கிறான் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 5866). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 65 அத்தியாயம் 1 பாடம் 23

عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ ، كَمَا يُحِبُّ أَنْ تُؤْتَى عَزَائِمُهُ . 65

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நிச்சயமாக அல்லாஹ் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதை விரும்புகிறான் . மேலும் ( அடியார்கள் ) உறுதியான தன்மைகள் கொடுக்கப்படுவதை விரும்புகிறான் .

Reference: ( அல்அஹாதீஸுல் முக்தாரா : 12/304, இப்னு ஹிப்பான் : 354)/ இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 66 அத்தியாயம் 1 பாடம் 23

عَنْ بُرَيْدَةَ الْأَسْلَمِيِّ ، قَالَ : خَرَجْتُ ذَاتَ يَوْمٍ لِحَاجَةٍ، فَإِذَا أَنَا بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي بَيْنَ يَدَيَّ، فَأَخَذَ بِيَدِي، فَانْطَلَقْنَا نَمْشِي جَمِيعًا، فَإِذَا نَحْنُ بَيْنَ أَيْدِينَا بِرَجُلٍ يُصَلِّي، يُكْثِرُ الرُّكُوعَ وَالسُّجُودَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَتُرَاهُ يُرَائِي ؟ " فَقُلْتُ : اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَتَرَكَ يَدِي مِنْ يَدِهِ، ثُمَّ جَمَعَ بَيْنَ يَدَيْهِ، فَجَعَلَ يُصَوِّبُهُمَا وَيَرْفَعُهُمَا، وَيَقُولُ : " عَلَيْكُمْ هَدْيًا قَاصِدًا ، عَلَيْكُمْ هَدْيًا قَاصِدًا، عَلَيْكُمْ هَدْيًا قَاصِدًا، فَإِنَّهُ مَنْ يُشَادَّ هَذَا الدِّينَ يَغْلِبْهُ ". 66

புரைதா அல்அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் ஒரு நாள் ஏதோ ஒரு தேவைக்காக வெளியே புறப்பட்டேன் . வழியில் எனக்கு முன்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்து சென்றார்கள் . அப்போது அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டார்கள் . நாங்கள் இருவரும் நடந்துசென்றோம் . அப்போது எங்களுக்கு முன்னால் ஒரு மனிதர் தென்பட்டார் . அவர் ருகூஉவையும் சஜ்தாவையும் மிகுதியாகச் செய்தவாறு தொழுது கொண்டிருந்தார் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் , “ அவர் பிறருக்குக் காட்டுவதாக நீ கருதுகிறாயா ?” என்று கேட்டார்கள் . “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள் ” என்றேன் . அப்போது அவர்கள் என் கையை விட்டுவிட்டு , பிறகு தம் இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து , அவ்விரண்டையும் சமமாகச் சீராக்கி , உயர்த்தி , நடுநிலையான வழியைக் கடைப்பிடியுங்கள் ; நடுநிலையான வழியைக் கடைப்பிடியுங்கள் ; நடுநிலையான வழியைக் கடைப்பிடியுங்கள் . ஏனென்றால் யார் இந்த மார்க்கத்தைக் கடுமையாக்கிக் கொள்கிறாரோ அவரை அது மிகைத்துவிடும் ” என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 22963). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 67 அத்தியாயம் 1 பாடம் 24

(ق) عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ‏.‏ 67

ஷரீர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தொழுகையை நிலை நாட்டுவதாகவும் , ஸகாத் வழங்குவதாகவும் , ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி ( பைஅத் ) அளித்தேன் .

Reference: ( புகாரீ : 57, முஸ்லிம் : 56)
ஹதீஸ் 68 அத்தியாயம் 1 பாடம் 24

(م) عَنْ تَمِيمٍ الدَّارِيِّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ الدِّينُ النَّصِيحَةُ ‏"‏ قُلْنَا لِمَنْ قَالَ ‏"‏ لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ ‏"‏ ‏.‏ 68

தமீமுத் தாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மார்க்கம் ( தீன் ) என்பதே " நலம் நாடுவது`தான் `` என்று கூறினார்கள் . நாங்கள் , “ யாருக்கு ( நலம் நாடுவது )?`` என்று கேட்டோம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வுக்கும் , அவனுடைய வேதத்துக்கும் , அவனுடைய தூதருக்கும் , முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் , அவர்களில் பொதுமக்களுக்கும் `` என்று பதிலளித்தார்கள் .

Reference: ( முஸ்லிம் : 55 / 95)
ஹதீஸ் 69 அத்தியாயம் 1 பாடம் 25

( خ ) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ ‏"‏‏.‏ 69

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எவரது நாவு மற்றும் கையி ( ன் தொல்லைகளி ) லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே ( உண்மையான ) முஸ்லிம் ஆவார் . யார் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் ( துறந்தவர் ) ஆவார் .

Reference: ( புகாரீ : 10)
ஹதீஸ் 70 அத்தியாயம் 1 பாடம் 25

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْمُسْلِمُ مَنْ سَلِمَ النَّاسُ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ ‏"‏ ‏.‏ 70

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யாருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே ( உண்மையான ) முஸ்லிம் ஆவார் . யாரைக் குறித்து மக்கள் தம் உயிர்கள் , உடைமைகள் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவரே ( உண்மையான ) இறைநம்பிக்கையாளர் ( முஃமின் ) ஆவார் .

Reference: ( திர்மிதீ : 2551 / 2627, நஸாயீ : 5010). இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 71 அத்தியாயம் 1 பாடம் 25

عَنْ أَنَسٍ قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ السُّوءَ. وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا يَدْخُلُ الْجَنَّةَ عَبْدٌ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ ". 71

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ யாரைக் குறித்து மக்கள் ( தம் உயிர்கள் , உடைமைகள் விஷயத்தில் ) அச்சமற்று இருக்கிறார்களோ அவரே ( உண்மையான ) இறைநம்பிக்கையாளர் ( முஃமின் ) ஆவார் . யாருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே ( உண்மையான ) முஸ்லிம் ஆவார் . யார் தீமையைவிட்டு விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் ( துறந்தவர் ) ஆவார் . எவனுடைய கையில் என் ஆன்மா உள்ளதோ அவன்மீது சத்தியமாக ! எந்த அடியாருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அந்த அடியார் சொர்க்கத்தில் நுழையமாட்டார் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 12561). இது முஸ்லிம் நூலாசிரியரின் நிபந்தனைப்படி ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 72 அத்தியாயம் 1 பாடம் 26

(م) عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْ لِي فِي الإِسْلاَمِ قَوْلاً لاَ أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ - قَالَ ‏ "‏ قُلْ آمَنْتُ بِاللَّهِ فَاسْتَقِمْ ‏"‏ ‏.‏ 72

சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் “ அல்லாஹ்வின் தூதரே ! இஸ்லாம் குறித்து ( சுருக்கமாக ) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள் . ‘ தங்களுக்குப் பிறகு யாரிடமும் ` அல்லது " தங்களைத் தவிர வேறு யாரிடமும் ` அது குறித்து நான் கேட்க வேண்டியதிருக்கலாகாது `` என்று வினவினேன் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன் " எனக் கூறி , அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக !`` என்று சொன்னார்கள் .

Reference: ( முஸ்லிம் : 38 / 62)
ஹதீஸ் 73 அத்தியாயம் 1 பாடம் 27

(ق) عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ ‏"‏‏.‏ 73

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை ( முழுமையான ) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார் .

Reference: ( புகாரீ : 13, முஸ்லிம் : 45)
ஹதீஸ் 74 அத்தியாயம் 1 பாடம் 27

سَمِعْتُ أَنَسًا يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِلنَّاسِ مَا يُحِبُّ لِنَفْسِهِ، وَحَتَّى يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ ". 74

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவர் தமக்கு விரும்புவதையே மக்களுக்கும் விரும்பாத வரை ( முழுமையான ) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார் . ( உங்களுள் ஒருவர் ) அல்லாஹ்வுக்காகவே தவிர ஒரு மனிதரை விரும்பாத வரை அவர் ( இறைநம்பிக்கை கொண்டவராக ) விரும்பியவராக ஆக மாட்டார் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 13875) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 75 அத்தியாயம் 1 பாடம் 27

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : لَا يَبْلُغُ عَبْدٌ حَقِيقَةَ الْإِيمَانِ حَتَّى يُحِبَّ لِلنَّاسِ مَا يُحِبُّ لِنَفْسِهِ مِنَ الْخَيْرِ . 75

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஓர் அடியார் தமக்கு விரும்புகிற நன்மையையே மக்களுக்கும் விரும்பாத வரை இறைநம்பிக்கையின் உண்மை நிலையை அடைந்துகொள்ள மாட்டார் .

Reference: ( இப்னுஹிப்பான் : 235, அல்அஹாதீஸுல் முக்தாரா : 7/2525)
ஹதீஸ் 76 அத்தியாயம் 1 பாடம் 28

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ ‏"‏‏.‏ 76

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும் . அவன் பேசும்போது பொய் பேசுவான் ; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான் ; அவனிடம் நம்பி ( ஏதேனுமொன்றை ) ஒப்படைத்தால் ( அதில் ) மோசடி செய்வான் .

Reference: ( புகாரீ : 33, முஸ்லிம் : 59) முஸ்லிம் நூலில் கூடுதலாக இடம்பெற்றுள்ளதாவது : “... அவன் நோன்பு நோற்றாலும் , தொழுதாலும் , தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொண்டாலும் சரியே ``
ஹதீஸ் 77 அத்தியாயம் 1 பாடம் 28

(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ ‏"‏‏.‏ 77

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் ( முனாஃபிக் ) ஆவான் . எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும் . ( ஏதேனுமொன்றை ) நம்பி ஒப்படைக்கப்பட்டால் ( அதில் ) மோசடி செய்வதும் , பேசும்போது பொய் சொல்வதும் , ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும் , வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை ( நான்கும் ).

Reference: ( புகாரீ : 34. முஸ்லிம் : 58)
ஹதீஸ் 78 அத்தியாயம் 1 பாடம் 28

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ خَامَةِ الزَّرْعِ، يَفِيءُ وَرَقُهُ مِنْ حَيْثُ أَتَتْهَا الرِّيحُ تُكَفِّئُهَا، فَإِذَا سَكَنَتِ اعْتَدَلَتْ، وَكَذَلِكَ الْمُؤْمِنُ يُكَفَّأُ بِالْبَلاَءِ، وَمَثَلُ الْكَافِرِ كَمَثَلِ الأَرْزَةِ صَمَّاءَ مُعْتَدِلَةً حَتَّى يَقْصِمَهَا اللَّهُ إِذَا شَاءَ ‏"‏‏.‏ 78

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது இளம் பயிர் போன்றதாகும் . காற்றடிக்கும் திசையில் அதன் இலை சாயும் . காற்று ( அடிப்பது ) நின்றுவிட்டால் நேராக நிற்கும் . இவ்வாறுதான் இறைநம்பிக்கையாளரும் சோதனைகளின்போது அலைக்கழிக்கப்படுகின்றார் . ( எனினும் , அவர் பொறுமை காப்பார் .) இறைமறுப்பாளனின் நிலையானது உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றதாகும் . தான் நாடும்போது அதை அல்லாஹ் ( ஒரேயடியாக ) உடைத்து ( சாய்த்து ) விடுகின்றான் .

Reference: ( புகாரீ : 7466, முஸ்லிம் : 2809) முஸ்லிம் எனும் நூலில் இடம்பெற்றுள்ளதாவது : ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது , ( இளம் ) பயிர் போன்றதாகும் . காற்று அதைச் சாய்த்துக்கொண்டேயிருக்கும் . ( அவ்வாறே ) இறைநம்பிக்ளைகயாளருக்குச் சோதனைகள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும் . நயவஞ்சகனின் நிலை , ( விறைப்பாக நிற்கும் ) தேவதாரு மரத்தைப் போன்றதாகும் . ( பலமாக வீசும் ) காற்று அதை வேரோடு சாய்த்துவிடுகிறது . ( முஸ்லிம் : 5410)
ஹதீஸ் 79 அத்தியாயம் 1 பாடம் 28

(م) عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَثَلُ الْمُنَافِقِ كَمَثَلِ الشَّاةِ الْعَائِرَةِ بَيْنَ الْغَنَمَيْنِ تَعِيرُ إِلَى هَذِهِ مَرَّةً وَإِلَى هَذِهِ مَرَّةً ‏"‏ ‏.‏ 79

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும் . ஒரு முறை இதனிடம் செல்கிறது ; மறுமுறை அதனிடம் செல்கிறது .

Reference: ( முஸ்லிம் : 2784)
ஹதீஸ் 80 அத்தியாயம் 1 பாடம் 29

( خ ) وَقَالَ إِبْرَاهِيمُ التَّيْمِيُّ مَا عَرَضْتُ قَوْلِي عَلَى عَمَلِي إِلاَّ خَشِيتُ أَنْ أَكُونَ مُكَذَّبًا. 80

இப்ராஹீம் அத்தய்மீ ரஹிமஹுல்லாஹ் " எனது சொல்லை எனது செயலோடு ஒப்பிட்டபோதெல்லாம் , நான் ஒரு பொய்யனாக இருப்பேனோ என்று நான் அஞ்சாமல் இருந்ததில்லை `` என்றார்கள் . இப்னு அபீமுலைக்கா ( அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் அல்குறஷி - ரஹிமஹுல்லாஹ் ) கூறியதாவது : நான் நபித் தோழர்களுள் முப்பது பேரைச் சந்தித்திருக்கின்றேன் . அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் நயவஞ்சகத்தனம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுபவர்களாகவே இருந்தனர் . அவர்களுள் எவரும் தமக்கு ஜிப்ரீல் , மீக்காயீல் - அலைஹிமஸ்ஸலாம் - ஆகியோரின் ஈமான் இருப்பதாகக் கூறியதில்லை . ஹஸன் அல்பஸரீ ரஹிமஹுல்லாஹ் , “ இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் நயவஞ்சகத்தன்மையை அஞ்சுவதில்லை . நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அது விஷயத்தில் அச்சமற்று ( அலட்சியமாக ) இருப்பதில்லை `` என்று கூறியதாக அறிவிக்கப்படுகிறது .

Reference: ( புகாரீ : ஈமான் பாடம் 37)
ஹதீஸ் 81 அத்தியாயம் 1 பாடம் 30

عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ، قَالَ : جَاءَتْ أُمَيْمَةُ بِنْتُ رُقَيْقَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُبَايِعُهُ عَلَى الْإِسْلَامِ، فَقَالَ : " أُبَايِعُكِ عَلَى أَنْ لَا تُشْرِكِي بِاللَّهِ شَيْئًا، وَلَا تَسْرِقِي، وَلَا تَزْنِي، وَلَا تَقْتُلِي وَلَدَكِ، وَلَا تَأْتِي بِبُهْتَانٍ تَفْتَرِينَهُ بَيْنَ يَدَيْكِ وَرِجْلَيْكِ، وَلَا تَنُوحِي، وَلَا تَبَرَّجِي تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى ". 81

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது குறித்து ஒப்பந்தம் செய்துகொள்ள உமைமா பின்த் ருகைகா ரளியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார் . அப்போது நபியவர்கள் , நீ அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது என்றும் திருடக் கூடாது என்றும் விபச்சாரம் செய்யக்கூடாது என்றும் உன் குழந்தையைக் கொலை செய்யக்கூடாது என்றும் உங்களுடைய கை கால்கள் அறிய ( அதாவது : பொய்யெனத் தெரிந்தே ) கற்பனையாக அவதூறு கூறக்கூடாது என்றும் ஒப்பாரி வைத்து அழக்கூடாது என்றும் அறியாமைக்கால மக்கள் சுற்றித் திரிந்ததைப்போல் ( வீதிகளில் ) சுற்றித் திரியக் கூடாது என்றும் நான் உன்னிடம் ஒப்பந்தம் செய்கிறேன் ” என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 6850) இது ` ஸஹீஹ் லிஃகைரிஹி ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 82 அத்தியாயம் 1 பாடம் 30

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يُصَافِحُ النِّسَاءَ فِي الْبَيْعَةِ. 82

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெண்களிடம் ஒப்பந்தம் ( பைஅத் ) செய்தபோது முஸாஃபஹா ( கைகொடுத்துச் ) செய்ததில்லை .

Reference: ( முஸ்னத் அஹ்மத் : 6998). இது ` ஸஹீஹ் ` ஆன ஹதீஸ் ஆகும் . இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்ததாகும் .
ஹதீஸ் 83 அத்தியாயம் 1 பாடம் 30

عَنْ َ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ، قَالَ : مَا مَسِسْتُ فَرْجِي بِيَمِينِي مُنْذُ بَايَعْتُ بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. 83

இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் ஒப்பந்தம் ( பைஅத் ) செய்ததிலிருந்து எனது வலக்கையால் என் அந்தரங்க உறுப்பைத் தொட்டதில்லை .

Reference: ( முஸ்னத் அஹ்மத் : 19943). முஸ்லிம் இமாமின் நிபந்தனைகளுக்கேற்ப இதன் அறிவிப்பாளர்தொடர் ‘ ஸஹீஹ் ` ஆகும் .
ஹதீஸ் 84 அத்தியாயம் 1 பாடம் 31

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ الصَّابِرُ فِيهِمْ عَلَى دِينِهِ كَالْقَابِضِ عَلَى الْجَمْرِ ‏"‏ ‏.‏ 84

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மக்களிடம் ஒரு காலம் வரும் . அக்காலத்தில் தீனில் பொறுமையாக ( நீடித்து ) இருப்பவர் கையில் நெருப்புக் கங்கைப் பிடித்துக்கொண்டிருப்பவரைப் போல் ஆவார் . ( அவ்வளவு சிரமமானது .)

Reference: ( திர்மிதீ : 2260) இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 85 அத்தியாயம் 1 பாடம் 32

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا فَقَالَ ‏ "‏ يَا غُلاَمُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ ‏"‏ ‏.‏ 85

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் ( வாகனத்தில் அமர்ந்து ) இருந்தேன் . அப்போது அவர்கள் , “ பையா ! நான் உனக்குச் சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன் . ( அவற்றை நீ நினைவில் வைத்துக்கொள் .) நீ அல்லாஹ் ( வின் உத்தர ) வைப் பேணிக்காத்திடு ! அவன் உன்னைப் பேணிக்காப்பான் . நீ அல்லாஹ்வை ( அவனுடைய கடமைகளை ) ப் பேணி நடந்துகொள் ! அவனை உனக்கு முன்பாக நீ காண்பாய் . நீ யாசித்தால் அல்லாஹ்விடமே யாசிப்பாயாக ! உதவி கோரினால் அல்லாஹ்விடமே உதவி கோருவாயாக . அறிந்துகொள் ! உனக்கு ஏதேனும் நன்மை செய்ய ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்று சேர்ந்தாலும் உனக்கென அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்த நன்மையையும் அவர்களால் உனக்குச் செய்ய இயலாது . ( அவ்வாறே ) உனக்கு ஏதேனும் தீங்கிழைக்க அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் உனக்கெதிராக அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்தத் தீங்கும் அவர்களால் உனக்கு இழைத்திட இயலாது . ( விதி எழுதிய பேனாக்கள் உயர்த்தப்பட்டுவிட்டன ; ( விதி எழுதப் பெற்ற ) ஏடுகள் உலர்ந்து விட்டன ” என்று கூறினார்கள் .

Reference: ( திர்மிதீ : 2516) முஸ்னது அஹ்மத் எனும் நூலில் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளதாவது : செழிப்பான நிலையில் அவனிடம் நீ அறிமுகமாகிக்கொள் . கடுமையான நிலையில் அவன் உன்னிடம் அறிமுகமாவான் . நிச்சயமாகப் பொறுமையில் , நீ வெறுப்பதைவிட அதிகமான நன்மைகள் உள்ளன என்பதை அறிந்துகொள் . நிச்சயமாக உதவி என்பது பொறுமை எனும் தன்மையோடு உள்ளது . மகிழ்ச்சியானது துன்பத்தோடு உள்ளது . திண்ணமாகச் சிரமத்தோடு இன்பம் உள்ளது . ( முஸ்னது அஹ்மத் : 2801) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 86 அத்தியாயம் 1 பாடம் 33

عَنْ سَهْلٍ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ وَاللَّهِ لأَنْ يُهْدَى بِهُدَاكَ رَجْلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ ‏"‏ ‏.‏ 86

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஸஹ்ல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் மீதாணையாக ! உங்கள் வாயிலாக ஒரேயரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது ( அரபியர்களின் உயரிய செல்வமான ) சிவப்பு ஒட்டகங்களை ( தர்மம் செய்வதை ) விட உங்களுக்குச் சிறந்ததாகும் .

Reference: ( அபூதாவூத் : 3661). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 87 அத்தியாயம் 1 பாடம் 34

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ - : " إِنَّ الْإِيمَانَ لَيَخْلَقُ فِي جَوْفِ أَحَدِكُمْ كَمَا يَخْلَقُ الثَّوْبُ الْخَلِقُ ، فَاسْأَلُوا اللَّهَ أَنْ يُجَدِّدَ الْإِيمَانَ فِي قُلُوبِكُمْ " . 87

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக இறைநம்பிக்கை உங்களுள் ஒருவரின் உள்ளத்தில் , கந்தல் துணி இற்றுப்போவதைப் போல் இற்றுப்போகிறது . எனவே உங்கள் உள்ளங்களில் இறைநம்பிக்கையைப் புதுப்பிக்குமாறு அல்லாஹ்விடம் கேளுங்கள் .

Reference: ( ஹாகிம் : 5) இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் .
ஹதீஸ் 88 அத்தியாயம் 1 பாடம் 35

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى أَوْ ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً وَتَفَرَّقَتِ النَّصَارَى عَلَى إِحْدَى أَوْ ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ فِرْقَةً ‏"‏ ‏.‏ 88

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யூதர்கள் எழுபத்தொன்று அல்லது எழுபத்திரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் . கிறிஸ்தவர்கள் எழுபத்தொன்று அல்லது எழுபத்திரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் . என் சமுதாயம் எழுபத்து மூன்று பிரிவுகளாகப் பிரியும் .

Reference: ( அபூதாவூத் : 4596, திர்மிதீ : 2640, இப்னுமாஷா : 3991). இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 89 அத்தியாயம் 1 பாடம் 35

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لَتَتَّبِعُنَّ سُنَّةَ مَنْ كَانَ قَبْلَكُمْ بَاعًا بِبَاعٍ وَذِرَاعًا بِذِرَاعٍ وَشِبْرًا بِشِبْرٍ حَتَّى لَوْ دَخَلُوا فِي جُحْرِ ضَبٍّ لَدَخَلْتُمْ فِيهِ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ ‏"‏ فَمَنْ إِذًا ‏"‏ ‏. 89

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுக்கு முன் இருந்தோரின் வழிமுறையை நீங்கள் அடி அடியாக , முழம் முழமாக , சாண் சாணாகப் பின்பற்றுவீர்கள் . இறுதியில் அவர்கள் ஓர் உடும்புப் பொந்தில் நுழைந்தால் , நீங்களும் அதில் நுழைந்து விடுவீர்கள் . அப்போது , “ அல்லாஹ்வின் தூதரே ! யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா ( நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் )?” என்று வினவப்பட்டது . அதற்கவர்கள் , “ பிறகு யாரை ?” என்று மறுவினாத் தொடுத்தார்கள் .

Reference: ( இப்னுமாஜா : 3994). இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 90 அத்தியாயம் 1 பாடம் 35

عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَسَبْعُونَ فِي النَّارِ وَافْتَرَقَتِ النَّصَارَى عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً فَإِحْدَى وَسَبْعُونَ فِي النَّارِ وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَتَفْتَرِقَنَّ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ فِرْقَةً فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ ‏"‏ ‏.‏ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ قَالَ ‏"‏ الْجَمَاعَةُ ‏"‏ ‏.‏ 90

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அவ்ஃப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யூதர்கள் எழுபத்தொரு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் . ( அவர்களுள் ) ஒரு பிரிவினர் சொர்க்கத்தில் ( நுழைவார்கள் ). எழுபது பிரிவினர் நரகத்தில் இருப்பர் . கிறிஸ்தவர்கள் எழுபத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் . ( அவர்களுள் ) எழுபத்தொரு பிரிவினர் நரகத்தில் ( நுழைவார்கள் ). ஒரு பிரிவினர் சொர்க்கத்தில் இருப்பர் . யாருடைய கையில் முஹம்மதுடைய ஆன்மா உள்ளதோ அவன் மீதாணையாக ! திண்ணமாக என் சமுதாயம் எழுபத்து மூன்று பிரிவுகளாகப் பிரியும் . ( அவர்களுள் ) ஒரு பிரிவினர் சொர்க்கத்தில் ( நுழைவார்கள் ). எழுபத்து இரண்டு பிரிவினர் நரகத்தில் இருப்பர் . “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்கள் யாவர் ?” என்று வினவப்பட்டது . அதற்கவர்கள் , “ சமுதாயக் கூட்டமைப்பு ” என்று விடையளித்தார்கள் .

Reference: ( இப்னுமாஜா : 3992). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 91 அத்தியாயம் 1 பாடம் 36

عَنْ أَبِي عَلْقَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، فِيمَا أَعْلَمُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ يَبْعَثُ لِهَذِهِ الأُمَّةِ عَلَى رَأْسِ كُلِّ مِائَةِ سَنَةٍ مَنْ يُجَدِّدُ لَهَا دِينَهَا ‏"‏ ‏. 91

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதை அபூஅல்க்கமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டின் தொடக்கத்திலும் இச்சமுதாயத்தின் மார்க்கத்தை ( தீனை ) ப் புதுப்பிக்கின்ற ஒருவரை இந்தச் சமுதாயத்திற்கு அனுப்புகிறான் .

Reference: ( அபூதாவூத் : 4291). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 92 அத்தியாயம் 1 பாடம் 36

عَنْ أَبِي بَكْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : " إِنَّ اللَّهَ سَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِأَقْوَامٍ لَا خَلَاقَ لَهُمْ 92

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக உயர்ந்தோனும் மகத்துவமிக்கோனுமாகிய அல்லாஹ் , ( இஸ்லாத்தில் ) எந்தப் பங்குமில்லாத மக்களைக் கொண்டு ( கூட ) இந்த மார்க்கத்தை வலுப்படுத்துவான் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 20454). இது ` ஸஹீஹ் லிஃகைரிஹி ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 93 அத்தியாயம் 1 பாடம் 37

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " لَتُنْقَضَنَّ عُرَى الْإِسْلَامِ عُرْوَةً عُرْوَةً، فَكُلَّمَا انْتَقَضَتْ عُرْوَةٌ تَشَبَّثَ النَّاسُ بِالَّتِي تَلِيهَا، وَأَوَّلُهُنَّ نَقْضًا الْحُكْمُ، وَآخِرُهُنَّ الصَّلَاةُ ". 93

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஉமாமா அல்பாஹிலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இஸ்லாத்தின் அடிப்படைகள் ஒவ்வொன்றாக உடைக்கப்படும் . ஓர் அடிப்படை உடைபடும்போதெல்லாம் மக்கள் மற்றதை இலேசாகக் கருதுவார்கள் . அவற்றுள் முதலாவதாக உடைபடுவது ஆட்சியதிகாரம் . அவற்றுள் கடைசியாக உடைபடுவது தொழுகை .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 22160). இதன் அறிவிப்பாளர் தொடர் தரமானது .