الإيمان باليوم الآخر
அத்தியாயம் 2

மறுமை நாளை நம்புதல்

ஹதீஸ் 94 அத்தியாயம் 2 பாடம் 1

(ق) عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُحَدِّثُكُمْ بِهِ أَحَدٌ غَيْرِي، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَكْثُرَ الْجَهْلُ وَيَكْثُرَ الزِّنَا، وَيَكْثُرَ شُرْبُ الْخَمْرِ، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ ‏"‏‏.‏ 94

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : என் அல்லாத வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப் போகிறேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : கல்வி அகற்றப்பட்டுவிடுவதும் , அறியாமை மலிந்துவிடுவதும் , விபச்சாரம் அதிகரித்து விடுவதும் , மது அருந்துதல் அதிகரித்து விடுவதும் , ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து , ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களுள் அடங்கும் .

Reference: ( புகாரீ : 5231, முஸ்லிம் : 2671)
ஹதீஸ் 95 அத்தியாயம் 2 பாடம் 1

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْهَرْجُ ـ وَهْوَ الْقَتْلُ الْقَتْلُ ـ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضُ ‏"‏‏.‏ 95

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : கல்வி கைப்பற்றப்படாத வரை , நில நடுக்கங்கள் நிறைந்துவிடாத வரை , காலம் சுருங்கிடாத வரை , குழப்பங்கள் வெளிப்படாத வரை , ஹர்ஜ் ( கொந்தளிப்பு ) மிகுதியாகாத வரை , - ஹர்ஜ் என்பது கொலையாகும் , கொலையாகும் . உங்கள் மத்தியில் செல்வம் நிரம்பி வழியாத வரை இறுதி நாள் ஏற்படாது .

Reference: ( புகாரீ : 1036, முஸ்லிம் : 157)
ஹதீஸ் 96 அத்தியாயம் 2 பாடம் 1

(خ) عن عَوْفَ بْنَ مَالِكٍ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ، وَهْوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَقَالَ ‏ "‏ اعْدُدْ سِتًّا بَيْنَ يَدَىِ السَّاعَةِ، مَوْتِي، ثُمَّ فَتْحُ بَيْتِ الْمَقْدِسِ، ثُمَّ مُوتَانٌ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الْغَنَمِ، ثُمَّ اسْتِفَاضَةُ الْمَالِ حَتَّى يُعْطَى الرَّجُلُ مِائَةَ دِينَارٍ فَيَظَلُّ سَاخِطًا، ثُمَّ فِتْنَةٌ لاَ يَبْقَى بَيْتٌ مِنَ الْعَرَبِ إِلاَّ دَخَلَتْهُ، ثُمَّ هُدْنَةٌ تَكُونُ بَيْنَكُمْ وَبَيْنَ بَنِي الأَصْفَرِ فَيَغْدِرُونَ، فَيَأْتُونَكُمْ تَحْتَ ثَمَانِينَ غَايَةً، تَحْتَ كُلِّ غَايَةٍ اثْنَا عَشَرَ أَلْفًا ‏"‏‏.‏ 96

அவ்ஃப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : தபூக் போரின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் சென்றேன் . அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள் . அப்போது அவர்கள் , “ இறுதி நாள் வருவதற்கு முன்பு ( அதற்குரிய ) ஆறு அடையாளங்கள் நிகழும் . அவற்றை எண்ணிக்கொள் : 1. எனது மரணம் . 2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல் . 3. ஆடுகளுக்கு வருகின்ற ( ஒரு வகை ) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் . ( அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள் ) 4. பிறகு செல்வம் பெருகி வழியும் . எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் ( அதனை அற்பமாகக் கருதி ) அவர் அதிருப்தியுடனிருப்பார் . 5. பிறகு தீமையன்று தோன்றும் . அரபியர்களின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது . 6. பிறகு ( உரோமர்களுக்கும் ) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் ( அதை மதிக்காமல் ) அவர்கள் ( உங்களை ) மோசடி செய்து விடுவார்கள் . பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே ( அணி வகுத்து ) அவர்கள் வருவார்கள் . ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள் .

Reference: ( புகாரீ : 3176)
ஹதீஸ் 97 அத்தியாயம் 2 பாடம் 1

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ بَادِرُوا بِالأَعْمَالِ سِتًّا الدَّجَّالَ وَالدُّخَانَ وَدَابَّةَ الأَرْضِ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَأَمْرَ الْعَامَّةِ وَخُوَيِّصَةَ أَحَدِكُمْ ‏"‏ ‏. 97

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஆறு அடையாளங்கள் நடைபெறுவதவற்குமுன் விரைந்து நற்செயல் புரியுங்கள் . சூரியன் மேற்கிலிருந்து உதித்தல் , அல்லது புகை , அல்லது தஜ்ஜால் , அல்லது ( அதிசயப் ) பிராணி , அல்லது ஒட்டுமொத்தமாக ஏற்படும் ( யுக ) முடிவு , அல்லது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏற்படும் மரணம் ,

Reference: ( முஸ்லிம் : 2947)
ஹதீஸ் 98 அத்தியாயம் 2 பாடம் 1

(م) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثًا لَمْ أَنْسَهُ بَعْدُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ أَوَّلَ الآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجُ الدَّابَّةِ عَلَى النَّاسِ ضُحًى وَأَيُّهُمَا مَا كَانَتْ قَبْلَ صَاحِبَتِهَا فَالأُخْرَى عَلَى إِثْرِهَا قَرِيبًا ‏"‏ ‏.‏ 98

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை மனனமிட்டேன் . இதுவரை அதை நான் மறக்கவில்லை . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன் : ( மறுமை நாளின் அடையாளங்களுள் ) முதலாவதாக வெளிப்படும் அடையாளம் , சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதும் , ( பூமியிலிருந்து ) ஒரு ( அதிசயப் ) பிராணி முற்பகல் நேரத்தில் வெளிப்படுவதும் ஆகும் . இவ்விரண்டில் எது முதலில் வெளிப்பட்டாலும் மற்றொன்றும் அதைத் தொடர்ந்து வெகுவிரைவில் வெளிப்பட்டுவிடும் .

Reference: ( முஸ்லிம் : 2941 )
ஹதீஸ் 99 அத்தியாயம் 2 பாடம் 1

(م) عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ، قَالَ اطَّلَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ فَقَالَ ‏"‏ مَا تَذَاكَرُونَ ‏"‏ ‏.‏ قَالُوا نَذْكُرُ السَّاعَةَ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ ‏"‏ ‏.‏ فَذَكَرَ الدُّخَانَ وَالدَّجَّالَ وَالدَّابَّةَ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ صلى الله عليه وسلم وَيَأْجُوجَ وَمَأْجُوجَ وَثَلاَثَةَ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنَ الْيَمَنِ تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ ‏.‏ 99

அபூஸரீஹா ஹுதைஃபா பின் அஸீத் அல்ஃகிஃபாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் ( நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அறைக்குக் கீழே ) பேசிக்கொண்டிருந்தோம் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களை எட்டிப்பார்த்து , “ எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் ?`` என்று கேட்டார்கள் . மக்கள் , “ யுக முடிவு நாளைப் பற்றி ( ப் பேசிக்கொண்டிருக்கிறோம் )`` என்று கூறினார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நீங்கள் ( பெரிய ) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுக முடிவு நாள் ஏற்படவே செய்யாது `` என்று கூறிவிட்டு , அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள் : 1. புகை , 2. தஜ்ஷால் , 3. ( பேசும் ) பிராணி , 4. மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது , 5. மர்யமின் புதல்வர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குதல் , 6. யஃஜூஜ் , மஃஜூஜ் , 7-9. மூன்று நில நடுக்கங்கள் . ஒன்று கிழக்கிலும் , மற்றொன்று மேற்கிலும் , இன்னொன்று அரபுத் தீபகற்பத்திலும் , 10. இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக்கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்றுகூட்டும் .

Reference: ( முஸ்லிம் : 2901 )
ஹதீஸ் 100 அத்தியாயம் 2 பாடம் 1

عَنْ عِلْبَاءَ السُّلَمِيِّ قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ : " لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى حُثَالَةِ النَّاسِ 100

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இல்பா அஸ்ஸுலமீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : கெட்ட மக்கள் மீதுதான் ( அவர்கள் மட்டும் இருக்கும் போதுதான் ) மறுமை நாள் வரும் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 16071). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 101 அத்தியாயம் 2 பாடம் 1

عَنْ عَبْدُ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: سَمِعْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ أَوَّلَ الْآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَخُرُوجُ الدَّابَّةِ ضُحًى، فَأَيَّتُهُمَا مَا كَانَتْ قَبْلَ صَاحِبَتِهَا، فَالْأُخْرَى عَلَى أَثَرِهَا ". 101

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை மனனமிட்டேன் . இதுவரை அதை நான் மறக்கவில்லை . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன் : ( மறுமை நாளின் அடையாளங்களில் ) முதலாவதாக வெளிப்படும் அடையாளம் , சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதும் , ( பூமியிலிருந்து ) ஒரு ( அதிசயப் ) பிராணி முற்பகல் நேரத்தில் வெளிப்படுவதும் ஆகும் . இவ்விரண்டில் எது முதலில் வெளிப்பட்டாலும் மற்றொன்றும் அதைத் தொடர்ந்து வெகுவிரைவில் வெளிப்பட்டுவிடும் . பிறகு அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : - அவர் வேதங்களைப் படித்திருந்தார் - சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதை அவற்றுள் முதலாவது அடையாளமாக எண்ணுகிறேன் . ஏனென்றால் அது ஒவ்வொரு நாளும் அர்ஷுக்குக் கீழ் மறையும் போதெல்லாம் ( அல்லாஹ்வுக்குத் ) தலை வணங்குகிறது . மீண்டும் செல்ல அனுமதி கோருகிறது . எனவே அது மீண்டும் செல்ல அனுமதி கொடுக்கப்படுகிறது . இறுதியில் சூரியன் மேற்கிலிருந்து உதயமாக வேண்டுமென அல்லாஹ்வுக்குத் தோன்றும்போது அது ஏற்கெனவே செய்து கொண்டிருந்ததைப் போல ( அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு ) மேற்கிலிருந்து உதயமாகும் . அது அர்ஷுக்குக் கீழ் வரும் ; ( அவனுக்குத் ) தலை வணங்கி , திரும்பிச் செல்ல அனுமதி கோரும் ; அது திரும்பிச் செல்ல எந்த அனுமதியும் வழங்கப்படாது . பிறகு ( சிறிது நேரம் கழித்து ) திரும்பிச் செல்ல அனுமதி கோரும் ; அது திரும்பிச் செல்ல எந்த அனுமதியும் வழங்கப்படாது . பிறகு ( சிறிது நேரம் கழித்து ) திரும்பிச் செல்ல அனுமதி கோரும் ; அது திரும்பிச் செல்ல எந்த அனுமதியும் வழங்கப்படாது . அல்லாஹ் நாடிய அளவு இரவு நேரம் கழிந்துவிடும் . அதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும் கிழக்கை அடைய முடியாது என்று அது அறிந்துகொள்ளும் . பிறகு அது , “ என் இறைவா ! கிழக்கு எவ்வளவோ தூரம் இருக்கிறதே ! எனக்காக மக்களுக்கு யார் ( பொறுப்பேற்பார் )” என்று சொல்லும் . மேல்வானம் மாலையைப் போல மாறிவிடும் . திரும்பிச் செல்ல அனுமதி கோரும் . அப்போது அதனிடம் , “ நீ உன் இடத்திலிருந்தே உதித்துக்கொள் ” என்று சொல்லப்படும் . எனவே அது ( அதே இடத்திலிருந்து ) மேற்கிலிருந்தே மக்களுக்கு உதிக்கும் . பிறகு அப்துல்லாஹ் அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள் : உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி ( யாகிய இறுதி நாள் ) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் யாதொரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை யாதொரு பலனையும் அளிக்காது . (7: 158)

Reference: ( முஸ்னது அஹ்மத் : 6881). புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 102 அத்தியாயம் 2 பாடம் 1

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُمْطَرَ النَّاسُ مَطَرًا لَا تُكِنُّ مِنْهُ بُيُوتُ الْمَدَرِ ، وَلَا تُكِنُّ مِنْهُ إِلَّا بُيُوتُ الشَّعَرِ . 102

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மக்களுக்கு மிகப்பெரும் அளவில் ஒரு மழை பொழிகின்ற வரை மறுமை நாள் நிகழாது . களி மண்ணால் ஆன எந்த வீடும் அதிலிருந்து மறைக்கப்படாது . உரோமங்களால் ஆன வீடுகளைத் தவிர வேறு எந்த வீடும் அதிலிருந்து மறையாது .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 7564). முஸ்லிம் இமாமின் நிபந்தனைகளுக்கேற்ப இதன் அறிவிப்பாளர்தொடர் ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 103 அத்தியாயம் 2 பாடம் 1

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْآيَاتُ خَرَزَاتٌ مَنْظُومَاتٌ فِي سِلْكٍ، فَإِنْ يُقْطَعِ السِّلْكُ يَتْبَعْ بَعْضُهَا بَعْضًا . 103

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளின் ) அடையாளங்கள் ஒரு நூலில் கோர்க்கப்பட்ட பாசிகளைப் போன்றவையாகும் . அந்த நூல் அறுக்கப்பட்டால் அதில் ஒன்று மற்றொன்றைப் பின்பற்றும் . ( ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக வரும் ).

Reference: ( முஸ்னது அஹ்மத் : 7040, ஹாகிம் : 8461). இதன் அறிவிப்பாளர்தொடர் ` ளஈஃப் ’ தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 104 அத்தியாயம் 2 பாடம் 1

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَسَافَدُوا فِي الطَّرِيقِ تَسَافُدَ الْحَمِيرِ ، قُلْتُ : إِنَّ ذَاكَ لَكَائِنٌ ؟ قَالَ : نَعَمْ لَيَكُونَنَّ. 104

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ கழுதைகள் உடலுறவு கொள்வதைப்போல் வழியில் ( மக்கள் ) உடலுறவு கொள்கின்ற வரை மறுமை நாள் நிகழாது ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது நான் , “ நிச்சயமாக அது நிகழுமா ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ ஆம் ! நிச்சயமாக அது நிகழும் ” என்று கூறினார்கள் .

Reference: ( இப்னு ஹிப்பான் : 6767). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 105 அத்தியாயம் 2 பாடம் 1

عَنْ خَارِجَةَ بْنِ الصَّلْتِ الْبُرْجُمِيِّ ، قَالَ : دَخَلْتُ مَعَ عَبْدِ اللَّهِ يَوْمًا الْمَسْجِدَ ، فَإِذَا الْقَوْمُ رُكُوعٌ ، فَرَكَعَ ، فَمَرَّ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ ، فَقَالَ عَبْدُ اللهِ : صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ثُمَّ وَصَلَ إِلى الصَّفِ،فَلَمَّا فَرِغَ سَأَلْتُهُ عَنْ قَوْلِهِ : صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ؟ فَقَالَ : " إِنَّهُ كَانَ يَقُولُ : لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُتَّخَذَ الْمَسَاجِدُ طُرُقًا ، وَحَتَّى يُسَلِّمَ الرَّجُلُ عَلَى الرَّجُلِ بِالْمَعْرِفَةِ ، وَحَتَّى تَتْجَرَ الْمَرْأَةُ وَزَوْجُهَا ، وَحَتَّى تَغْلُو الْخَيْلُ وَالنِّسَاءُ ، ثُمَّ تَرْخُصَ فَلَا تَغْلُو إِلَى يَوْمِ الْقِيَامَةِ. عبد الله هو ابن مسعود. 105

காரிஜா பின் அஸ்ஸல்த் அல்புர்ஜுமீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் அப்துல்லாஹ் ( பின் மஸ்ஊத் ) அவர்களுடன் மஸ்ஜிதில் நுழைந்தேன் . அப்போது மக்கள் தொழுது கொண்டிருந்தார்கள் . எனவே அவரும் தொழுகச் சென்றார் . அச்சமயத்தில் ஒரு மனிதர் கடந்து சென்றபோது அப்துல்லாஹ்வுக்கு முகமன் கூறினார் . அப்போது அப்துல்லாஹ் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தனர் ” என்று கூறினார் . பிறகு ( தொழுகை ) அணியை அடைந் ( து தொழுது முடித் ) தார் . அவர் தொழுது முடித்தபோது , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தனர் ” என்று அவர் கூறியது குறித்து நான் கேட்டேன் . அப்போது அவர் , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாகத் தெரிவித்ததாவது : மஸ்ஜிதுகள் பாதைகளாக ஆக்கப்படும் வரை , ஒரு மனிதர் தாம் அறிந்த மனிதருக்கு ( மட்டும் ) முகமன் சொல்லும் வரை , கணவனோடு சேர்ந்து மனைவியும் வியாபாரம் செய்யும் வரை , குதிரைகளும் பெண்களும் விலையுயர்ந்து , பின்னர் அவற்றின் மதிப்பு குறைந்து போகும் வரை மறுமை நாள் ஏற்படாது . ( பின்னர் ) மறுமை நாள் வரை அவர்களின் மதிப்பு உயராது .

Reference: ( ஹாகிம் : 8598). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் என தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் .
ஹதீஸ் 106 அத்தியாயம் 2 பாடம் 2

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ فَيَكُونَ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ دَعْوَاهُمَا وَاحِدَةٌ وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبًا مِنْ ثَلَاثِينَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ. 106

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இரு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாத வரை உலக முடிவு நாள் வராது . அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும் . ஆனால் , அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும் . பெரும் பொய்யர்களான “ தஜ்ஜால்கள் ’ ஏறத்தாழ முப்பது பேர் ( உலகில் ) தோன்றாத வரை இறுதி நாள் வராது . அவர்களுள் ஒவ்வொருவனும் தன்னை ‘ இறைத்தூதர் ’ என்று வாதிடுவான் .

Reference: ( புகாரீ : 3609, முஸ்லிம் : 157)
ஹதீஸ் 107 அத்தியாயம் 2 பாடம் 2

(م) عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ بَيْنَ يَدَيْ السَّاعَةِ كَذَّابِينَ. 107

ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ யுக முடிவு நாளுக்குமுன் பெரும் பொய்யர்கள் சிலர் வருவார்கள் `` என்று கூறியதை நான் செவியுற்றேன் .

Reference: ( முஸ்லிம் : 2923 / 5602).
ஹதீஸ் 108 அத்தியாயம் 2 பாடம் 2

عَنْ ثَوْبَانَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ، وَحَتَّى يَعْبُدُوا الْأَوْثَانَ، وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلَاثُونَ كَذَّابُونَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي. 108

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தைச் சேர்ந்த சில கோத்திரத்தார் இணைவைப்பாளர்களுடன் போய்ச்சேர்ந்து , சிலைகளை வழிபடாத வரை யுகமுடிவு நாள் வராது . என் சமுதாயத்தாரில் முப்பது பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள் . அவர்களுள் ஒவ்வொருவரும் தம்மை ‘ இறைத்தூதர் ’ என்று வாதிடுவர் . ஆனால் . நான்தான் இறைத்தூதர்களுள் இறுதியானவன் ஆவேன் . எனக்குப்பின் எந்த இறைத்தூதரும் வரமாட்டார் .

Reference: ( திர்மிதீ : 2145 / 2219). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 109 அத்தியாயம் 2 பாடம் 3

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِي أَيِّ شَيْءٍ قَتَلَ وَلَا يَدْرِي الْمَقْتُولُ عَلَى أَيِّ شَيْءٍ قُتِلَ؟ . 109

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ( ந்த இறை ) வன்மீது சத்தியமாக ! மக்களுக்கு ஒரு காலம் நிச்சயமாக வரும் . ( அப்போது ) கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொன்றோம் என்பது தெரியாது . கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்பது தெரியாது .

Reference: ( முஸ்லிம் : 2908 / 5574).
ஹதீஸ் 110 அத்தியாயம் 2 பாடம் 3

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ الْهَرْجُ قَالُوا وَمَا الْهَرْجُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْقَتْلُ الْقَتْلُ . 110

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஹர்ஜ் பெருகாத வரை யுக முடிவு நாள் வராது `` என்று கூறினார்கள் . மக்கள் , “ ஹர்ஜ் என்றால் என்ன , அல்லாஹ்வின் தூதரே ?`` என்று கேட்டார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ கொலை ; கொலை `` என்று பதிலளித்தார்கள் .

Reference: ( முஸ்லிம் : 157 / 5537).
ஹதீஸ் 111 அத்தியாயம் 2 பாடம் 4

(م) عَنْ أَبِي سَعِيدٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَا : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يَقْسِمُ الْمَالَ وَلَا يَعُدُّهُ . 111

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஸஈத் , ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுமா அறிவிப்பதாவது : இறுதிக் காலத்தில் ஒரு கலீஃபா வருவார் . அவர் செல்வத்தை ( மக்களிடையே ) பங்கிட்டுக் கொடுப்பார் ; எண்ணிக் கணக்குப் பார்க்க மாட்டார் .

Reference: ( முஸ்லிம் : 2913, 2914 / 5588)
ஹதீஸ் 112 அத்தியாயம் 2 பாடம் 5

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنَعَتْ الْعِرَاقُ دِرْهَمَهَا وَقَفِيزَهَا وَمَنَعَتْ الشَّأْمُ مُدْيَهَا وَدِينَارَهَا وَمَنَعَتْ مِصْرُ إِرْدَبَّهَا وَدِينَارَهَا وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ شَهِدَ عَلَى ذَلِكَ لَحْمُ أَبِي هُرَيْرَةَ وَدَمُهُ. 112

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : இராக் , தனது ( நாணயமான ) திர்ஹமையும் ( அளவையான ) கஃபீஸையும் ( தர ) மறுக்கும் . ஷாம் , ( சிரியா ) தனது ( அளவையான ) " முத்யு`வையும் தீனாரையும் ( தர ) மறுக்கும் . மிஸ்ர் ( எகிப்து ), தனது ( அளவையான ) " இர்தப்பை`யும் தீனாரையும் ( தர ) மறுக்கும் . ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள் . ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள் . ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள் . இதை அறிவித்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , “ இதற்கு அபூஹுரைராவின் சதையும் இரத்தமும் சாட்சியமளிக்கின்றன `` என்றார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2896 / 5552)
ஹதீஸ் 113 அத்தியாயம் 2 பாடம் 6

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ . 113

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : கஹ்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாத வரை உலக முடிவு நாள் வராது .

Reference: ( புகாரீ : 3517, முஸ்லிம் : 2910)
ஹதீஸ் 114 அத்தியாயம் 2 பாடம் 7

( ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ: يَا لَيْتَنِي مَكَانَهُ! . 114

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை ( கப்ரை ) க் கடந்து செல்லும்போது , ” அந்தோ ! நான் இவரது இடத்தில் ( மண்ணறைக்குள் ) இருக்கக் கூடாதா ?`` என்று ( ஏக்கத்துடன் ) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது .

Reference: ( புகாரீ : 7115, முஸ்லிம் : 157)
ஹதீஸ் 115 அத்தியாயம் 2 பாடம் 7

( ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ: يَا لَيْتَنِي مَكَانَهُ! . 115

இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மக்களிடம் ஒரு காலம் வரும் . அக்காலத்தில் ஒரு மனிதர் மண்ணறையிடம் வந்து , அதில் படுத்துக்கொண்டு , இன்னாருடைய இடத்தில் நான் இருந்திருக்கக் கூடாதா ? என்று அங்கலாய்ப்பார் . அ( வ்வாறு சொல்வ ) து அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டுமென்ற பிரியம் காரணமாக இல்லை ; மாறாக அக்காலத்தில் அவர் காணும் கடுமையான சோதனைக்காகவே ( அவ்வாறு சொல்வார் ).

Reference: ( ஹாகிம் : 8402) இது புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப உள்ளது என தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார் .
ஹதீஸ் 116 அத்தியாயம் 2 பாடம் 8

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا الْيَهُودَ حَتَّى يَقُولَ الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ. 116

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நீங்கள் யூதர்களுடன் போர்புரியாத வரை இறுதி நாள் வராது . எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் ( ஒளிந்து கொண்டு ) இருப்பான் . அந்தக் கல் , “ முஸ்லிமே ! இதோ , என் பின்னே ஒரு யூதன் ( ஒளிந்துகொண்டு ) இருக்கின்றான் . அவனை நீ கொன்றுவிடு `` என்று கூறும் .

Reference: ( புகாரீ : 2926, முஸ்லிம் : 2922)
ஹதீஸ் 117 அத்தியாயம் 2 பாடம் 8

(ق) أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا التُّرْكَ صِغَارَ الْأَعْيُنِ حُمْرَ الْوُجُوهِ ذُلْفَ الْأُنُوفِ كَأَنَّ وُجُوهَهُمْ الْمَجَانُّ الْمُطْرَقَةُ وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمْ الشَّعَرُ. 117

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான ( சப்பை ) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதிநாள் ஏற்படாது . அவர்களுடைய முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும் . முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதி நாள் ஏற்படாது .

Reference: ( புகாரீ : 2928, முஸ்லிம் : 2912)
ஹதீஸ் 118 அத்தியாயம் 2 பாடம் 9

(م) عَن الْمُسْتَوْرِدُ الْقُرَشِيُّ عِنْدَ عَمْرِو بْنِ الْعَاصِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ تَقُومُ السَّاعَةُ وَالرُّومُ أَكْثَرُ النَّاسِ فَقَالَ لَهُ عَمْرٌو أَبْصِرْ مَا تَقُولُ قَالَ أَقُولُ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَئِنْ قُلْتَ ذَلِكَ إِنَّ فِيهِمْ لَخِصَالًا أَرْبَعًا إِنَّهُمْ لَأَحْلَمُ النَّاسِ عِنْدَ فِتْنَةٍ وَأَسْرَعُهُمْ إِفَاقَةً بَعْدَ مُصِيبَةٍ وَأَوْشَكُهُمْ كَرَّةً بَعْدَ فَرَّةٍ وَخَيْرُهُمْ لِمِسْكِينٍ وَيَتِيمٍ وَضَعِيفٍ وَخَامِسَةٌ حَسَنَةٌ جَمِيلَةٌ وَأَمْنَعُهُمْ مِنْ ظُلْمِ الْمُلُوكِ. 118

உலைய்யு பின் ரபாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஸ்தவ்ரித் பின் ஜத்தாத் அல்குறஷீ ரளியல்லாஹு அன்ஹு , அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுக முடிவு ஏற்படும் ` என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் `` என்றார்கள் . அப்போது அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு , “ நீர் சொல்வதை யோசித்துக்கொள்ளும் `` என்று கூறினார்கள் . அதற்கு முஸ்தவ்ரித் ரளியல்லாஹு அன்ஹு , " அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றதையே நான் சொல்கிறேன் `` என்றார்கள் . அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு , “ நீர் இவ்வாறு கூறுவீராயின் அவர்களிடையே ( உரோமர்களிடையே ) நான்கு குணங்கள் இருக்கும் ( என்பதையும் அறிந்துகொள்க ” என்றார்கள் . ( அவையாவன :) 1. அவர்கள் சோதனையின்போது மக்களிலேயே மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஆவர் . 2. சோதனைக்குப் பின்னர் மிக விரைவாக விழித்துக்கொள்பவர்கள் . 3. ( களத்திலிருந்து ) வெருண்டோடிய பின்னர் மிக விரைவாகத் திரும்பி வருபவர்கள் . 4. ஏழைகள் , அநாதைகள் , நலிந்தோர் ஆகியோருக்கு நல்லுதவிகள் புரிபவர்கள் . ஐந்தாவதாக அவர்களிடம் அழகிய குணம் ஒன்று உண்டு . ஆட்சியாளர்களின் அநீதியிலிருந்து ( மக்களைக் ) காப்பவர்கள் .

Reference: ( முஸ்லிம் : 2898 / 5554)
ஹதீஸ் 119 அத்தியாயம் 2 பாடம் 10

(ق)عَنْ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ وَذُو الْخَلَصَةِ طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الْجَاهِلِيَّةِ. 119

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் " துல்கலஸா ` கடவுள் சிலையைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது . " துல்கலஸா ` என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டுவந்த ஒரு சிலையாகும் .

Reference: ( புகாரீ : 7116, முஸ்லிம் : 2906)
ஹதீஸ் 120 அத்தியாயம் 2 பாடம் 10

(م) عَنْ عَائِشَةَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَذْهَبُ اللَّيْلُ وَالنَّهَارُ حَتَّى تُعْبَدَ اللَّاتُ وَالْعُزَّى فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنْ كُنْتُ لَأَظُنُّ حِينَ أَنْزَلَ اللَّهُ: هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ أَنَّ ذَلِكَ تَامًّا قَالَ إِنَّهُ سَيَكُونُ مِنْ ذَلِكَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ يَبْعَثُ اللَّهُ رِيحًا طَيِّبَةً فَتَوَفَّى كُلَّ مَنْ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَيَبْقَى مَنْ لَا خَيْرَ فِيهِ فَيَرْجِعُونَ إِلَى دِينِ آبَائِهِمْ. 120

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( அறியாமைக் கால கடவுள் சிலைகளான ) " லாத்`தும் " உஸ்ஸா`வும் வழிபாடு செய்யப்படாத வரை இரவும் பகலும் ( இல்லாமற் ) போகாது `` என்று கூறியதைச் செவியுற்றேன் . நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இணை கற்பிப்போர் வெறுத்தபோதிலும் , எல்லா மார்க்கங்களைவிட மேலோங்கச் செய்வதற்காக நல்வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அவனே தன் தூதரை அனுப்பினான் `` (9:33; 61:9) என அல்லாஹ் அருளியபோது , இந்த மார்க்கம் முழுமையடையும் என்றே நான் எண்ணிக்கொண்டிருந்தேன் . ( ஆனால் , தாங்கள் வேறு விதமாகச் சொல்கிறீர்களே !)`` என்று கூறினேன் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( உண்மைதான் ) விரைவில் அல்லாஹ் நாடிய அளவு இது நடக்கும் . பிறகு அல்லாஹ் நல்ல காற்று ஒன்றை அனுப்புவான் . அது யாரது உள்ளத்தில் கடுகுமணியளவு இறைநம்பிக்கை ( ஈமான் ) உள்ளதோ அந்த ஒவ்வொருவரையும் கைப்பற்றிக்கொள்ளும் . பிறகு எந்த நன்மையும் இல்லாதவர்களே ( பூமியில் ) எஞ்சியிருப்பர் . அவர்கள் தம் மூதாதையரின் மார்க்கத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவர் `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2907 / 5571)
ஹதீஸ் 121 அத்தியாயம் 2 பாடம் 11

( م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهَ يَبْعَثُ رِيحًا مِنْ الْيَمَنِ أَلْيَنَ مِنْ الْحَرِيرِ فَلَا تَدَعُ أَحَدًا فِي قَلْبِهِ قَالَ أَبُو عَلْقَمَةَ : مِثْقَالُ حَبَّةٍ وَقَالَ عَبْدُ الْعَزِيزِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ إِلَّا قَبَضَتْهُ. 121

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாள் நெருங்கும்போது ) யமன் நாட்டி ( ன் திசையி ) லிருந்து பட்டைவிட மென்மையான ஒரு காற்றை அல்லாஹ் அனுப்புவான் . எவரது உள்ளத்தில் " கடுகளவு ` அல்லது " அணுவளவு ` இறைநம்பிக்கை உள்ளதோ அவ ( ரது உயி ) ரை அது கைப்பற்றிக்கொள்ளும் .

Reference: ( முஸ்லிம் : 117 / 185) இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது . அவற்றில் , அபூஅல்கமா அல்ஃபர்வீ ரஹிமஹுல்லாஹ் அவர்களது அறிவிப்பில் " கடுகளவு ` என்றும் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களது அறிவிப்பில் " அணுவளவு ` என்றும் இடம்பெற்றுள்ளது .
ஹதீஸ் 122 அத்தியாயம் 2 பாடம் 12

( ق ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ كَنْزٍ مِنْ ذَهَبٍ فَمَنْ حَضَرَهُ فَلَا يَأْخُذْ مِنْهُ شَيْئًا. 122

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மேற்காசியாவில் பாயும் ) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது . அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துவிட வேண்டாம் .

Reference: ( புகாரீ : 7119, முஸ்லிம் : 2894)
ஹதீஸ் 123 அத்தியாயம் 2 பாடம் 12

(م) عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ : إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يُوشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ فَإِذَا سَمِعَ بِهِ النَّاسُ سَارُوا إِلَيْهِ فَيَقُولُ مَنْ عِنْدَهُ لَئِنْ تَرَكْنَا النَّاسَ يَأْخُذُونَ مِنْهُ لَيُذْهَبَنَّ بِهِ كُلِّهِ قَالَ فَيَقْتَتِلُونَ عَلَيْهِ فَيُقْتَلُ مِنْ كُلِّ مِائَةٍ تِسْعَةٌ وَتِسْعُونَ . 123

உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன் : யூப்ரடீஸ் நதியானது வற்றி , தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தப் போகிறது . அதைப் பற்றி மக்கள் கேள்விப்படும்போது , அதை நோக்கிச் செல்வார்கள் . அப்போது அந்த மலை அருகில் இருப்பவர் , “ அதிலிருந்து சிறிதளவை எடுத்துக்கொள்ளட்டும் என மக்களை நாம் விட்டுவிட்டால் , முழுவதுமாகக் கொண்டு போய் விடுவார்கள் `` என்று கூறுவார் . எனவே , அதற்காகச் சண்டையிட்டுக் கொள்வார்கள் . அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2895 / 5551)
ஹதீஸ் 124 அத்தியாயம் 2 பாடம் 13

(ق) لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ وَحَتَّى يَعْرِضَهُ فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لَا أَرَبَ لِيْ . 124

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை மறுமை நாள் ஏற்படாது . எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவர் தமது தர்மத்தை யார்தாம் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வார் . மேலும் யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறுவார் .

Reference: ( புகாரீ : 1412, முஸ்லிம் : 157) முஸ்லிம் எனும் நூலில் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளதாவது : மேலும் , அரபு மண் மேய்ச்சல் நிலங்களாகவும் ( கரை புரண்டோடும் ) வாய்க்கால்களாகவும் மாறாத வரை ( யுகமுடிவு நாள் நிகழாது ).
ஹதீஸ் 125 அத்தியாயம் 2 பாடம் 13

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا وَحَتَّى يَسِيرَ الرَّاكِبُ بَيْنَ الْعِرَاقِ وَمَكَّةَ لَا يَخَافُ إِلَّا ضَلَالَ الطَّرِيقِ وَحَتَّى يَكْثُرَ الْهَرْجُ قَالُوا وَمَا الْهَرْجُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: الْقَتْلُ 125

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அரபு மண் மேய்ச்சல் நிலங்களாகவும் ( கரை புரண்டோடும் ) வாய்க்கால்களாகவும் மாறாத வரை ( யுகமுடிவு நாள் நிகழாது ). இராக்கிற்கும் மக்காவிற்கும் இடையே பயணிக்கக்கூடிய ஒரு பயணி வழிப்பறிக் கொள்ளையைத் தவிர எதையும் கண்டு அஞ்சமாட்டார் . ஹர்ஜ் அதிகமாகி விடுகிற வரை ( உலக முடிவு நாள் நிகழாது ). “ அல்லாஹ்வின் தூதரே ! ஹர்ஜ் என்றால் என்ன ?” என்று கேட்டனர் . அதற்கு அவர்கள் , “ கொலை ” என்று பதிலளித்தார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 8833) முஸ்லிம் இமாமின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 126 அத்தியாயம் 2 பாடம் 14

(ق) عَنْ أَبُو هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَخْرُجَ نَارٌ مِنْ أَرْضِ الْحِجَازِ تُضِيءُ أَعْنَاقَ الْإِبِلِ بِبُصْرَى . 126

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஹிஷாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி , ( ஷாம் நாட்டின் ) புஸ்ரா ( ஹவ்ரான் ) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் வராது .

Reference: ( புகாரீ : 7118, முஸ்லிம் : 2902)
ஹதீஸ் 127 அத்தியாயம் 2 பாடம் 14

عن عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَتَخْرُجُ نَارٌ مِنْ حَضْرَمَوْتَ أَوْ مِنْ نَحْوِ بَحْرِ حَضْرَمَوْتَ قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ تَحْشُرُ النَّاسَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنَا قَالَ عَلَيْكُمْ بِالشَّامِ . 127

அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ,” யுகமுடிவு நாளுக்கு முன்னால் ` ஹள்ரமவ்த்திலிருந்து , அல்லது ` ஹள்ரமவ்த் கடலின் திசையிலிருந்து ஒரு ( பெரும் ) நெருப்பு கிளம்பி மக்களை ஒன்றுதிரட்டும் ” என்று கூறினார்கள் . மக்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! ( அப்போது என்ன செய்ய வேண்டுமென ) எங்களுக்குத் தாங்கள் உத்தரவிடுகின்றீர்கள் ? என்று கேட்டார்கள் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஷாம் ( சிரியா ) நாட்டைப் பற்றிக்கொள்ளுங்கள் ” என்று கூறினார்கள் .

Reference: (திர்மிதீ:.2143 / 2217) இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 128 அத்தியாயம் 2 பாடம் 15

(ق) عَنْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ . 128

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : “ ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள் ; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள் !” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்களுள் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள் ? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள் ; கடைவீதிகளும் இருக்குமே !” என நான் கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவர்களுள் முதலாமவர் முதல் , கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள் ; எனினும் ( அதற்குப் ) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள் !” என்றார்கள் .

Reference: ( புகாரீ : 2118, முஸ்லிம் : 2884)
ஹதீஸ் 129 அத்தியாயம் 2 பாடம் 15

(م) عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَعُوذُ عَائِذٌ بِالْبَيْتِ فَيُبْعَثُ إِلَيْهِ بَعْثٌ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ خُسِفَ بِهِمْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ بِمَنْ كَانَ كَارِهًا قَالَ يُخْسَفُ بِهِ مَعَهُمْ وَلَكِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى نِيَّتِهِ . 129

உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : " அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , ஒருவர் இறையில்லம் கஅபா ( எல்லை ) க்குள் அபயம் தேடி வருவார் . அவரை நோக்கிப் படையன்று அனுப்பப்படும் . அப்படையினர் ஒரு சமவெளியில் இருக்கும்போது , பூமிக்குள் புதைந்துபோய்விடுவார்கள் `` என்று சொன்னார்கள் . உடனே நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! நிர்ப்பந்தமாகப் புறப்பட்டு வந்தவரின் நிலை என்ன ?`` என்று கேட்டேன் . “ அவர்களுடன் சேர்த்து அவரும் புதைந்துபோவார் . எனினும் , மறுமை நாளில் அவரது எண்ணத்திற்கேற்ப அவர் எழுப்பப்படுவார் `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்லிம் : 5523 / 2882)
ஹதீஸ் 130 அத்தியாயம் 2 பாடம் 16

(م) عَنْ عَبْدِ اللَّهِ مَسْعُوْدٍ قَالَ : كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرَرْنَا بِصِبْيَانٍ فِيهِمْ ابْنُ صَيَّادٍ فَفَرَّ الصِّبْيَانُ وَجَلَسَ ابْنُ صَيَّادٍ فَكَأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَرِهَ ذَلِكَ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرِبَتْ يَدَاكَ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ فَقَالَ لَا بَلْ تَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ . 130

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றோம் . அவர்களிடையே இப்னு ஸய்யாதும் இருந்தான் . ( எங்களைக் கண்டதும் ) சிறுவர்கள் ஓடிவிட்டனர் . இப்னு ஸய்யாத் ( மட்டும் ) அப்படியே உட்கார்ந்து கொண்டான் . அதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெறுத்ததைப் போன்றிருந்தது . ஆகவே , அவனிடம் , “ உன் கரங்கள் மண்ணைத் தழுவட்டும் ! நான் அல்லாஹ்வின் தூதர் என நீ உறுதிமொழி அளிக்கிறாயா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு அவன் , “ இல்லை ; நான் அல்லாஹ்வின் தூதர் என நீர் சாட்சியமளிக்கிறீரா ?`` என்று கேட்டான் . அப்போது உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! என்னை விடுங்கள் . நான் அவனைக் கொன்றுவிடுகிறேன் `` என்று கூறினார்கள் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நீர் கருதக்கூடிய ஒருவனாக ( தஜ்ஜாலாக ) இவன் இருந்தால் , உம்மால் ஒருபோதும் அவனைக் கொல்ல முடியாது . ( அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டவர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களே )`` என்று சொன்னார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2924 / 5604)
ஹதீஸ் 131 அத்தியாயம் 2 பாடம் 16

(م) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ خَرَجْنَا حُجَّاجًا أَوْ عُمَّارًا وَمَعَنَا ابْنُ صَائِدٍ قَالَ فَنَزَلْنَا مَنْزِلًا فَتَفَرَّقَ النَّاسُ وَبَقِيتُ أَنَا وَهُوَ فَاسْتَوْحَشْتُ مِنْهُ وَحْشَةً شَدِيدَةً مِمَّا يُقَالُ عَلَيْهِ قَالَ وَجَاءَ بِمَتَاعِهِ فَوَضَعَهُ مَعَ مَتَاعِي فَقُلْتُ إِنَّ الْحَرَّ شَدِيدٌ فَلَوْ وَضَعْتَهُ تَحْتَ تِلْكَ الشَّجَرَةِ قَالَ فَفَعَلَ قَالَ فَرُفِعَتْ لَنَا غَنَمٌ فَانْطَلَقَ فَجَاءَ بِعُسٍّ فَقَالَ اشْرَبْ أَبَا سَعِيدٍ فَقُلْتُ إِنَّ الْحَرَّ شَدِيدٌ وَاللَّبَنُ حَارٌّ مَا بِي إِلَّا أَنِّي أَكْرَهُ أَنْ أَشْرَبَ عَنْ يَدِهِ أَوْ قَالَ آخُذَ عَنْ يَدِهِ فَقَالَ أَبَا سَعِيدٍ لَقَدْ هَمَمْتُ أَنْ آخُذَ حَبْلًا فَأُعَلِّقَهُ بِشَجَرَةٍ ثُمَّ أَخْتَنِقَ مِمَّا يَقُولُ لِي النَّاسُ يَا أَبَا سَعِيدٍ مَنْ خَفِيَ عَلَيْهِ حَدِيثُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا خَفِيَ عَلَيْكُمْ مَعْشَرَ الْأَنْصَارِ أَلَسْتَ مِنْ أَعْلَمِ النَّاسِ بِحَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ كَافِرٌ وَأَنَا مُسْلِمٌ أَوَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ عَقِيمٌ لَا يُولَدُ لَهُ وَقَدْ تَرَكْتُ وَلَدِي بِالْمَدِينَةِ أَوَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ وَقَدْ أَقْبَلْتُ مِنْ الْمَدِينَةِ وَأَنَا أُرِيدُ مَكَّةَ . 131

அபூஸஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் ஹஜ்ஜுக்கு , அல்லது உம்ராவுக்குச் சென்றோம் . எங்களுடன் இப்னு ஸாயிதும் இருந்தான் . ( வழியில் ) நாங்கள் ஓரிடத்தில் தங்கினோம் . ( ஓய்வெடுப்பதற்காக ) மக்கள் கலைந்து சென்றபின் நானும் இப்னு ஸாயிதும் மட்டுமே எஞ்சியிருந்தோம் . அவனைப் பற்றிச் சொல்லப்படுகிற விஷயங்களால் அவனருகில் இருப்பதை நான் மிகவும் வெறுத்தேன் . அவன் தனது பயணச் சாமான்களைக் கொண்டுவந்து எனது பயணச் சாமான்களுடன் வைத்தான் . அப்போது நான் , “ வெயில் கடுமையாக உள்ளது . அந்த மரத்திற்குக் கீழே நீ உன் பொருட்களை வைத்தால் நன்றாயிருக்குமே `` என்றேன் . அவ்வாறே அவன் செய்தான் . அப்போது ஆட்டு மந்தை ஒன்று வந்தது . உடனே அவன் சென்று , ஒரு பெரிய கோப்பை ( நிறைய பால் ) உடன் என்னிடம் வந்து , " அபூஸயீதே ! பருகுவீராக `` என்றான் . நான் , “ வெயிலும் கடுமையாக உள்ளது . பாலும் சூடாக உள்ளது ” என்று - அவன் கையிலிருந்து வாங்கி அருந்தப் பிடிக்காமல் , அல்லது அவன் கையிலிருந்து வாங்கப் பிடிக்காமல் - சொன்னேன் . அவன் , “ அபூஸயீதே ! நான் ஒரு கயிற்றை எடுத்துவந்து அதை ஒரு மரத்தில் மாட்டித் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன் . என்னைப் பற்றி மக்கள் பேசிக்கொள்கிற செய்திகளே காரணம் . அபூஸயீதே ! யாருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீஸ் தெரியாவிட்டாலும் , அன்ஸாரிகளே ! உங்களுக்குத் தெரியாமல் போகாது . ( அபூஸயீதே !) நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களை நன்கறிந்தவர்களுள் ஒருவரல்லவா ? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , ‘ அவன் ( தஜ்ஜால் ) இறைமறுப்பாளன் ` என்று சொல்லவில்லையா ? நானோ ஒரு முஸ்லிமாக இருக்கிறேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அவன் ( தஜ்ஜால் ) குழந்தை பாக்கியமற்ற மலடன் ` என்று கூறவில்லையா ? நானோ என் குழந்தையை மதீனாவில் விட்டுவந்துள்ளேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அவன் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழைய முடியாது ` என்று கூறவில்லையா ? நானோ , மதீனாவிலிருந்து மக்காவை நாடி வந்துகொண்டிருக்கிறேன் `` என்று சொன்னான் . இதையெல்லாம் கேட்டு அவனை மன்னிக்கும் அளவுக்கு நான் போய்விட்டேன் . பிறகு அவன் , “ அறிந்துகொள்க : அல்லாஹ்வின் மீதாணையாக ! தஜ்ஜாலை நான் அறிவேன் . அவனது பிறப்பையும் , இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நான் அறிவேன் `` என்றான் . அப்போது நான் “ காலமெல்லாம் உனக்கு நாசமுண்டாகட்டும் `` என்று கூறி ( ச் சபித்து ) விட்டேன் .

Reference: ( முஸ்லிம் : 2927 / 5610)
ஹதீஸ் 132 அத்தியாயம் 2 பாடம் 17

( م) عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ عَنْ نَافِعِ بْنِ عُتْبَةَ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ قَالَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْمٌ مِنْ قِبَلِ الْمَغْرِبِ عَلَيْهِمْ ثِيَابُ الصُّوفِ فَوَافَقُوهُ عِنْدَ أَكَمَةٍ فَإِنَّهُمْ لَقِيَامٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ قَالَ فَقَالَتْ لِي نَفْسِي ائْتِهِمْ فَقُمْ بَيْنَهُمْ وَبَيْنَهُ لَا يَغْتَالُونَهُ قَالَ ثُمَّ قُلْتُ لَعَلَّهُ نَجِيٌّ مَعَهُمْ فَأَتَيْتُهُمْ فَقُمْتُ بَيْنَهُمْ وَبَيْنَهُ قَالَ فَحَفِظْتُ مِنْهُ أَرْبَعَ كَلِمَاتٍ أَعُدُّهُنَّ فِي يَدِي قَالَ تَغْزُونَ جَزِيرَةَ الْعَرَبِ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ فَارِسَ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ تَغْزُونَ الرُّومَ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ تَغْزُونَ الدَّجَّالَ فَيَفْتَحُهُ اللَّهُ. 132

நாஃபிஉ பின் உத்பா பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம் . அப்போது கம்பளியாடை அணிந்த ஒரு கூட்டத்தார் மேற்கிலிருந்து வந்து ஒரு குன்றின் அருகில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தார்கள் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமர்ந்து கொண்டிருந்தார்கள் . அக்கூட்டத்தார் ( அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு அருகில் ) நின்று கொண்டிருந்தார்கள் . அப்போது என் மனம் , “ நீ சென்று அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்குமிடையே நின்றுகொள் . அல்லாஹ்வின் தூதரை அவர்கள் திடீரெனத் தாக்கிவிட வேண்டாம் `` என்று சொன்னது . பிறகு நான் , “ அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏதேனும் இரகசியம் பேசிக் கொண்டிருக்கலாம் `` என்று நினைத்தேன் . பிறகு அவர்களிடம் வந்து அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் நடுவில் நின்றுகொண்டேன் . அப்போது என் கைவிரல்களில் எண்ணியபடி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான்கு விஷயங்களை மனனமிட்டேன் . 1. நீங்கள் அரபுத் தீபகற்பம் முழுவதையும் போரிட்டு வெற்றி காணும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் . 2. பிறகு பாரசீகர்களை வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் . 3. பிறகு உரோம ( பைஸாந்திய ) ர்களுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் . 4. பிறகு நீங்கள் ( மகா குழப்பவாதியான ) தஜ்ஜாலுடன் போரிட்டு அவனையும் வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் . நாஃபிஉ பின் உத்பா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஜாபிரே ! உரோம ( பைஸாந்திய ) ர்களுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் வரை தஜ்ஜால் வெளியேறி வருவதை நாம் காண மாட்டோம் .

Reference: ( முஸ்லிம் : 2900)
ஹதீஸ் 133 அத்தியாயம் 2 பாடம் 18

(ق) ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ إِنِّي لَأُنْذِرُكُمُوهُ وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا أَنْذَرَهُ قَوْمَهُ لَقَدْ أَنْذَرَ نُوحٌ قَوْمَهُ وَلَكِنِّي أَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ . 133

அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்த பிறகு தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள் . அப்போது , “ நான் உங்களை அவனைக் குறித்து எச்சரிக்கின்றேன் . எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத்தாரை எச்சரிக்காமலிருந்ததில்லை . நூஹ் அவர்கள் தம் சமூகத்தாருக்கு ( அவனைக் குறித்து ) எச்சரித்திருக்கிறார்கள் . ஆனால் , நான் அவனைப் பற்றி ( இதுவரை ) எந்த இறைத்தூதரும் தம் சமூகத்தாருக்குக் கூறாத ஓர் அடையாளத்தை உங்களுக்குச் சொல்கிறேன் . அவன் ஒற்றைக் கண்ணன் . ஆனால் , அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் `` என்று சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 3337, முஸ்லிம் : 169)
ஹதீஸ் 134 அத்தியாயம் 2 பாடம் 18

(ق) عَنْ عُقْبَةُ بْنُ عَمْرٍو أَبي مسعود الأَنصاري أَنه قال : لِحُذَيْفَةَ أَلَا تُحَدِّثُنَا مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي سَمِعْتُهُ يَقُولُ إِنَّ مَعَ الدَّجَّالِ إِذَا خَرَجَ مَاءً وَنَارًا فَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهَا النَّارُ فَمَاءٌ بَارِدٌ وَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهُ مَاءٌ بَارِدٌ فَنَارٌ تُحْرِقُ فَمَنْ أَدْرَكَ مِنْكُمْ فَلْيَقَعْ فِي الَّذِي يَرَى أَنَّهَا نَارٌ فَإِنَّهُ عَذْبٌ بَارِدٌ . 134

ரிப்யீ பின் ஹிராஷ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா ?`` என்று கேட்டார் . ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு , “ தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும் . மக்கள் எதை " இது நெருப்பு ` என்று கருதுகின்றார்களோ அது ( உண்மையில் ) குளிர்ந்த நீராக இருக்கும் . மக்கள் எதை " இது குளிர்ந்த நீர் ` என்று கருதுகின்றார்களோ , அது ( உண்மையில் ) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும் . அவனை உங்களுள் எவர் சந்திக்கின்றாரோ அவர் , தாம் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும் . ஏனெனில் , அது குளிர்ந்த சுவையான நீராகும் ’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற நான் கேட்டிருக்கின்றேன் `` எனச் சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 3450, முஸ்லிம் : 2934, 2935)
ஹதீஸ் 135 அத்தியாயம் 2 பாடம் 18

( م) عَنْ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدَّجَّالَ ذَاتَ غَدَاةٍ فَخَفَّضَ فِيهِ وَرَفَّعَ حَتَّى ظَنَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ فَلَمَّا رُحْنَا إِلَيْهِ عَرَفَ ذَلِكَ فِينَا فَقَالَ مَا شَأْنُكُمْ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ ذَكَرْتَ الدَّجَّالَ غَدَاةً فَخَفَّضْتَ فِيهِ وَرَفَّعْتَ حَتَّى ظَنَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ فَقَالَ غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُنِي عَلَيْكُمْ إِنْ يَخْرُجْ وَأَنَا فِيكُمْ فَأَنَا حَجِيجُهُ دُونَكُمْ وَإِنْ يَخْرُجْ وَلَسْتُ فِيكُمْ فَامْرُؤٌ حَجِيجُ نَفْسِهِ وَاللَّهُ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ إِنَّهُ شَابٌّ قَطَطٌ عَيْنُهُ طَافِئَةٌ كَأَنِّي أُشَبِّهُهُ بِعَبْدِ الْعُزَّى بْنِ قَطَنٍ فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ إِنَّهُ خَارِجٌ خَلَّةً بَيْنَ الشَّأْمِ وَالْعِرَاقِ فَعَاثَ يَمِينًا وَعَاثَ شِمَالًا يَا عِبَادَ اللَّهِ فَاثْبُتُوا. 135

நவ்வாஸ் பின் சம்ஆன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள் . அவன் தொடர்பாக ( ப் பேசியபோது ) அவர்கள் ( சில சமயம் குரலைத் ) தாழ்த்தவும் , ( சில சமயம் ) உயர்த்தவும் செய்தார்கள் . இறுதியில் அவன் , ( அருகிலுள்ள ) பேரீச்ச மரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினார்கள் . பின்னர் நாங்கள் ( மறுபடியும் ) மாலைப் பொழுதில் நபியவர்களிடம் வந்தோம் . அப்போது தஜ்ஜாலைக் குறித்த அச்சம் எங்கள் முகங்களில் இருப்பதை அவர்கள் அறிந்துகொண்டு , “ உங்களுக்கு என்ன நேர்ந்தது ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! தாங்கள் ( இன்று ) காலையில் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள் . ( அப்போது ) அவனைப் பற்றி ( க் குரலை ) த் தாழ்த்தியும் உயர்த்தியும் பேசினீர்கள் . இறுதியில் அவன் , ( அருகிலுள்ள ) பேரீச்ச மரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினீர்கள் ( அதுதான் எங்கள் அச்சத்திற்குக் காரணம் )`` என்று கூறினோம் . அப்போது நபியவர்கள் , “ நான் உங்கள் விஷயத்தில் பெரிதும் அஞ்சுவது தஜ்ஜாலைக் குறித்து அல்ல ; நான் உங்களிடையே ( உயிருடன் ) இருக்கும்போது அவன் தோன்றினால் அவனிடமிருந்து உங்களைக் காக்க நானே வாதாடுவேன் . நான் உங்களிடையே இல்லாத போது அவன் வெளிப்பட்டால் , அப்போது ஒவ்வொரு ( முஸ்லிமான ) மனிதரும் தமக்காக வாதாடிக்கொள்ள வேண்டும் ; அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எனது சார்பில் பொறுப்பாளனாக இருப்பான் . தஜ்ஜால் சுருள்முடி கொண்ட ஓர் இளைஞன் ஆவான் ; அவனது கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும் . உருவத்தில் அவன் அப்துல் உஸ்ஸா பின் கத்தன் என்பவனை ஒத்திருப்பான் . உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக " அல்கஹ்ஃப் ` அத்தியாயத்தின் (18) ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும் . அவன் சிரியாவுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து , வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்துவிடுவான் ; அல்லாஹ்வின் அடியார்களே ! அப்போது நீங்கள் உறுதியோடு இருங்கள் `` என்றார்கள் . நாங்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! அவன் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான் ?`` என்று கேட்டோம் . அதற்கு , " நாற்பது நாட்கள் ` என்று பதிலளித்த நபியவர்கள் , “ அன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும் , மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும் , அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும் , மற்ற நாட்கள் உங்களின் ( சாதாரண ) நாட்களைப் போன்றும் இருக்கும் `` என்று குறிப்பிட்டார்கள் . நாங்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த ஒரு நாளில் , வழக்கமாகத் தொழும் ( ஐவேளைத் ) தொழுகைகளைத் தொழுதால் போதுமா ?`` என்று கேட்டோம் . அதற்கு நபியவர்கள் ,” இல்லை ( போதாது ); அந்த ( நீண்ட ) நாளை , அதற்கேற்ப மதிப்பிட்டு ( த் தொழுது ) கொள்ளுங்கள் `` என்று பதிலளித்தார்கள் . நாங்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! பூமியில் அவன் ( சுற்றித் திரியும் ) வேகம் எப்படி இருக்கும் ?`` என்று கேட்டோம் . அதற்கு நபியவர்கள் , “ பின்னாலிருந்து காற்று விரட்டிச் செல்லும் மேகம் போன்று ( அவன் வேகமாக பூமியைச் சுற்றிவருவான் )`` என்றார்கள் . மேலும் , நபியவர்கள் கூறினார்கள் : அவன் ஒரு சமுதாயத்தாரிடம் வந்து ( தன்னை இறைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு ) அவர்களுக்கு அழைப்பு விடுப்பான் . அவர்களும் அவன்மீது நம்பிக்கை கொண்டு அவனது அழைப்புக்குப் பதிலளிப்பார்கள் . உடனே வானத்திற்கு ( மழை பொழியுமாறு ) அவன் கட்டளையிட , மழை பொழியும் . பூமிக்கு ( த் தாவரங்களை முளைக்கச் செய்யுமாறு ) கட்டளையிட , அது முளையவைக்கும் . ( அவற்றை மேய்ந்து ) அவர்களின் கால்நடைகள் ஏற்கெனவே இருந்ததைவிட நீண்ட திமில்களைக் கொண்டவையாகவும் மடி கனத்தவையாகவும் வயிறு நிரம்பியவையாகவும் மாலையில் ( வீடு ) திரும்பும் . பின்னர் , அவன் மற்றொரு சமுதாயத்தாரிடம் வந்து , ( தன்னை இறைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு ) அவர்களுக்கும் அழைப்பு விடுப்பான் . ஆனால் , அவனது அழைப்பை அவர்கள் நிராகரித்து விடுவார்கள் . அவர்களிடமிருந்து அவன் திரும்பிச் சென்றுவிடுவான் . அதனால் , அவர்கள் பஞ்சத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டவர்களாகக் காலைப் பொழுதை அடைவார்கள் . அவர்களின் கைகளில் அவர்களின் செல்வம் ஏதும் ( எஞ்சி ) இராது . அவன் பாழடைந்த இடமொன்றைக் கடந்து செல்வான் . அதைப் பார்த்து , “ உன்னிடம் இருக்கின்ற புதையல்களை வெளிப்படுத்து `` என்று கூறுவான் . அப்போது ( வெளிப்படும் ) அந்தப் புதையல்கள் , இராணித் தேனீக்களை ( பின்பற்றிச் செல்லும் தேனீக்களை ) ப் போன்று அவனைப் பின்தொடர்ந்து செல்லும் . பின்னர் , அவன் வாட்டசாட்டமான இளைஞர் ஒருவரை அழைத்து , அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி , அம்பெய்யும் தூரத்திற்கு இடைவெளி விட்டு ( அவ்விரண்டையும் ) போடுவான் . பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான் . உடனே அந்த இளைஞர் முகம் ஒளிர சிரித்துக்கொண்டே எழுந்து வருவார் . இதற்கிடையே , மர்யமின் மைந்தர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் ( பூமிக்கு ) அனுப்பி வைப்பான் . அவர் ( சிரியாவின் தலைநகர் ) " திமஷ்க் ` ( டமாஸ்கஸ் ) நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளைக் கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள்மீது தம் கைகளை வைத்தவாறு இறங்குவார் . அப்போது அவர் குங்குமப்பூ நிறத்தில் இரண்டு ஆடைகளை அணிந்திருப்பார் . அவர் தமது தலையைத் தாழ்த்தினால் நீர்த்துளி சொட்டும் ; தலையை உயர்த்தினாலோ வெண் முத்தைப் போன்று நீர்த்துளி வழியும் . அவரது மூச்சுக் காற்றைச் சுவாசிக்கும் ( அதாவது அவரை நெருங்கும் ) எந்தவோர் இறைமறுப்பாளனும் சாகாமல் இருக்கமாட்டான் . அவர் விடும் மூச்சானது அவரது பார்வை எட்டும் தூரம்வரை செல்லும் . பின்னர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் தஜ்ஜாலைத் தேடிச் செல்வார்கள் . இறுதியில் , ( பாலஸ்தீனத்திலுள்ள ) " லுத் ` எனும் நகரத்தின் தலை வாயிலருகே அவனைக் கண்டு , அவனைக் கொன்றொழிப்பார்கள் . பின்னர் தஜ்ஜாலிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமுதாயத்தார் மர்யமின் மைந்தர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வருவார்கள் . அவர்களின் முகங்களை ( ப் பரிவோடு ) அவர் தடவிக் கொடுத்துச் சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் படித்தரங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார் . இதற்கிடையே , ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் , “ நான் என் அடியார்கள் சிலரை வெளிவரச் செய்துள்ளேன் . அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது . எனவே , ( முஸ்லிமான ) என் அடியார்களை ( சினாயிலுள்ள ) " தூர் ` மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள் `` என்று ( வஹீ ) அறிவிப்பான் . பின்னர் , அல்லாஹ் " யஃஜூஜ் ` " மஃஜூஜ் ` கூட்டத்தாரை அனுப்புவான் . அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக ( க் கீழே இறங்கி ) வருவார்கள் . அவர்களில் முதல் அணியினர் ( ஜோர்தானில் உள்ள ) " தபரிய்யா ` ஏரியைக் கடந்து செல்லும்போது , அதிலுள்ள மொத்த நீரையும் குடித்துவிடுவார்கள் . அவர்களின் இறுதி அணியினர் அதைக் கடந்து செல்லும்போது . “ முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும் `` என்று பேசிக்கொள்வார்கள் . பின்னர் இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (" தூர் ` மலையில் ) முற்றுகையிடப்படுவார்கள் . அப்போது ( ஏற்படும் பட்டினியால் ) அவர்களில் ஒருவருக்குக் காளை மாட்டின் தலை கிடைப்பது , இன்று உங்களில் ஒருவருக்கு நூறு பொற்காசுகள் கிடைப்பதைவிடச் சிறந்ததாக இருக்கும் . பின்னர் இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருப்போரும் ( அல்லாஹ்விடம் உதவி கேட்டுப் ) பணிந்து வேண்டுவார்கள் . அப்போது யஃஜூஜ் , மஃஜூஜ் கூட்டத்தாரின் பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான் . அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பலியாவார்கள் . பின்னர் இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருப்போரும் ( மலையிலிருந்து ) தரைக்கு இறங்கி வருவார்கள் . அப்போது பூமியின் எந்தவொரு சாண் அளவு இடமும் , யஃஜூஜ் , மஃஜூஜ் கூட்டத்தாரின் ( சடலங்களிலிருந்து வெளிவரும் ) கொழுப்பாலும் துர்நாற்றத்தாலும் நிரம்பியிருப்பதையே காண்பார்கள் . உடனே இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருப்போரும் அல்லாஹ்விடம் ( அவற்றை அகற்றக் கோரிப் ) பணிந்து வேண்டுவார்கள் . அப்போது அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துகளைப் போன்று ( பெரியதாக உள்ள ) பறவைகளை அனுப்புவான் . அவை அந்தப் பிணங்களைத் தூக்கிச் சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசியெறியும் . பின்னர் அல்லாஹ் மழை பொழியச் செய்வான் . அந்த மழை எந்த மண் வீட்டிலும் , எந்த முடி வீட்டிலும் படாமல் இருக்காது . இறுதியில் , பூமியைக் கழுவி , கண்ணாடி போன்று ( சுத்தமாக ) ஆக்கி விடும் . பின்னர் பூமிக்கு , " நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக ; உன்னிடமுள்ள வளங்களை மறுபடியும் தருவாயாக `` என்று உத்தரவு பிறப்பிக்கப்படும் . அன்றைய நாளில் ( எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில் ), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயரு மாதுளம் பழத்தை உண்பர் . அதன் தொலி அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும் . அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும் . எந்த அளவுக்கென்றால் , பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும் . பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போதுமானதாயிருக்கும் . பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும் . இந்நிலையில் , அல்லாஹ் தூய காற்று ஒன்றை அனுப்புவான் . அது அவர்களின் அக்குள்களுக்குக் கீழே நுழைந்து அவர்களைப் பிடித்துக்கொள்ளும் . இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும் . அதையடுத்து மக்களில் தீயவர்கள் ( மட்டுமே பூமியில் ) எஞ்சியிருப்பார்கள் . அவர்கள் கழுதைகளைப் போன்று ( வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக ) உடலுறவு கொள்வார்கள் . அவர்கள்மீதுதான் உலக முடிவு நாள் ஏற்படும் .

Reference: ( முஸ்லிம் : 2937 / 5629)
ஹதீஸ் 136 அத்தியாயம் 2 பாடம் 19

(م) عَنْ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ أُخْتَ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ وَكَانَتْ مِنْ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ فَقَالَ سَمِعْتِيهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُسْنِدِيهِ إِلَى أَحَدٍ غَيْرِهِ فَقَالَتْ لَئِنْ شِئْتَ لَأَفْعَلَنَّ فَقَالَ لَهَا أَجَلْ حَدِّثِينِي فَقَالَتْ نَكَحْتُ ابْنَ الْمُغِيرَةِ وَهُوَ مِنْ خِيَارِ شَبَابِ قُرَيْشٍ يَوْمَئِذٍ فَأُصِيبَ فِي أَوَّلِ الْجِهَادِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا تَأَيَّمْتُ خَطَبَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَخَطَبَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَوْلَاهُ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَكُنْتُ قَدْ حُدِّثْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّنِي فَلْيُحِبَّ أُسَامَةَ فَلَمَّا كَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ أَمْرِي بِيَدِكَ فَأَنْكِحْنِي مَنْ شِئْتَ فَقَالَ انْتَقِلِي إِلَى أُمِّ شَرِيكٍ وَأُمُّ شَرِيكٍ امْرَأَةٌ غَنِيَّةٌ مِنْ الْأَنْصَارِ عَظِيمَةُ النَّفَقَةِ فِي سَبِيلِ اللَّهِ يَنْزِلُ عَلَيْهَا الضِّيفَانُ فَقُلْتُ سَأَفْعَلُ فَقَالَ لَا تَفْعَلِي إِنَّ أُمَّ شَرِيكٍ امْرَأَةٌ كَثِيرَةُ الضِّيفَانِ فَإِنِّي أَكْرَهُ أَنْ يَسْقُطَ عَنْكِ خِمَارُكِ أَوْ يَنْكَشِفَ الثَّوْبُ عَنْ سَاقَيْكِ فَيَرَى الْقَوْمُ مِنْكِ بَعْضَ مَا تَكْرَهِينَ وَلَكِنْ انْتَقِلِي إِلَى ابْنِ عَمِّكِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو ابْنِ أُمِّ مَكْتُومٍ وَهُوَ رَجُلٌ مِنْ بَنِي فِهْرٍ فِهْرِ قُرَيْشٍ وَهُوَ مِنْ الْبَطْنِ الَّذِي هِيَ مِنْهُ فَانْتَقَلْتُ إِلَيْهِ فَلَمَّا انْقَضَتْ عِدَّتِي سَمِعْتُ نِدَاءَ الْمُنَادِي مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَادِي الصَّلَاةَ جَامِعَةً فَخَرَجْتُ إِلَى الْمَسْجِدِ فَصَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنْتُ فِي صَفِّ النِّسَاءِ الَّتِي تَلِي ظُهُورَ الْقَوْمِ. 136

ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ளஹ்ஹாக் பின் கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரியும் , முந்திய முஹாஜிர்களுள் ஒருவருமான ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் , " நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு அறிவியுங்கள் . அது ( நேரடியாக ) நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டதாக இருக்க வேண்டும் . பிறர் மூலம் கேட்டதாக இருக்க வேண்டாம் `` என்று கேட்டேன் . அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா , “ நீங்கள் விரும்பினால் நிச்சயமாக அவ்வாறே செய்கிறேன் `` என்றார்கள் . நான் “ ஆம் ( அவ்வாறு தான் நான் விரும்புகிறேன் ); எனக்கு ஹதீஸ் அறிவியுங்கள் `` என்றேன் . ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள் : நான் அன்றைய குறைஷி இளைஞர்களில் சிறந்தவர்களுள் ஒருவரான முஃகீராவின் புதல்வருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன் . அவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்த முதல் போரில் காயப்படுத்தப்பட்ட ( வர் ஆவா ) ர் . ( அவர் என்னை மணவிலக்குச் செய்து ) நான் விதவையாயிருந்த போது , என்னை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒரு குழுவினர் பெண் கேட்டார்கள் . அவர்களுள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவராவார் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தம்மால் விடுதலை செய்யப்பட்ட அடிமையின் புதல்வரான உஸாமா பின் ஸைத் அவர்களுக்காக என்னைப் பெண் கேட்டார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என்னை நேசிப்பவர் , உஸாமாவையும் நேசிக்கட்டும் `` என்று கூறிய செய்தியை நான் அறிந்திருந்தேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் பேசியபோது , “ என் காரியம் உங்கள் கையில் உள்ளது . நீங்கள் நாடியவருக்கு என்னை மணமுடித்து வையுங்கள் `` என்று கூறினேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நீ உம்மு ஷரீக்கின் இல்லத்துக்குச் சென்று தங்கி இரு `` என்று சொன்னார்கள் - உம்மு ஷரீக் ரளியல்லாஹு அன்ஹா அன்ஸாரிகளில் வசதி படைத்த பெண்மணியாகவும் அல்லாஹ்வின் பாதையில் பெருமளவில் செலவு செய்யக்கூடியவராகவும் இருந்தார் . அவரது இல்லத்தில் விருந்தாளிகள் தங்குவார்கள் .- “ அவ்வாறே செய்கிறேன் `` என்று நான் கூறினேன் . பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( வேண்டாம் ;) அப்படிச் செய்யாதே ! உம்மு ஷரீக் ஏராளமான விருந்தாளிகளை உபசரிக்கும் ஒரு பெண்மணி ஆவார் . உன் முகத்திரையோ உன் கணைக்காலிலிருந்து ஆடையோ விலகியிருக்க , நீ விரும்பாத சிலவற்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்படுவதை நான் விரும்பவில்லை . எனவே , நீ உன் தந்தையின் சகோதரரான ( அம்ர் - உம்மு மக்தூம் தம்பதியரின் புதல்வரான ) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உம்மி மக்தூம் அவர்களின் இல்லத்துக்குச் சென்று தங்கியிரு `` என்று கூறினார்கள் . ( அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உம்மி மக்தூம் குறைஷிக் குலத்திலுள்ள பனூ ஃபிஹ்ர் கிளையைச் சேர்ந்தவர் ஆவார் . அந்தக் குடும்பத்தில் ஒருவராக ஃபாத்திமா பின்த் கைஸ் இருந்தார் .) அவ்வாறே நான் அவரது இல்லத்திற்குச் சென்று தங்கினேன் . என் காத்திருப்புக் காலம் (" இத்தா `) முடிந்தபோது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொது அறிவிப்பாளர்களுள் ஒருவர் , “ கூட்டுத் தொழுகைக்கு வாருங்கள் `` என்று அறிவிப்புச் செய்வதை நான் செவியுற்றேன் . ஆகவே , நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுகையை நிறைவேற்றினேன் . அப்போது நான் ஆண்களின் தொழுகை வரிசைக்குப் பின்னால் உள்ள பெண்களின் தொழுகை வரிசையில் இருந்தேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையை முடித்துச் சொற்பொழிவு மேடை ( மிம்பர் ) மீது சிரித்தபடியே அமர்ந்தார்கள் . “ ஒவ்வொருவரும் தாம் தொழுத இடத்தில் அப்படியே இருங்கள் `` என்று கூறினார்கள் . பிறகு , “ நான் உங்களை ஏன் ஒன்று கூட்டினேன் என்று உங்களுக்குத் தெரியுமா ?`` எனக் கேட்டார்கள் . மக்கள் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்று பதிலளித்தார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : அல்லாஹ்வின் மீதாணையாக ! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை . மாறாக , ( மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே ) உங்களை ஒன்று கூட்டினேன் . கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் ( என்னிடம் ) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் . அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார் . அது ( பெருங்குழப்பவாதியான ) மஸீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது . அவர் என்னிடம் கூறினார் : நான் " லக்ம் `, " ஜுதாம் ` ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன் . அப்போது கடல் அலை ஒரு மாத காலம் எங்களைக் கடலில் அலைக்கழித்துவிட்டது . பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் ( மேற்குத் ) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம் . பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம் . அங்கு ( உடல் முழுவதும் அடர்ந்த ) முடிகள் நிறைந்த ஒரு பிராணி எங்களைச் சந்தித்தது . அதன் முன்பகுதி எது , பின்பகுதி எது என்றே எங்களால் அறிய முடியவில்லை . ( உடல் முழுவதும் ) முடிகள் நிறைந்திருந்ததே அதற்குக் காரணம் . அப்போது நாங்கள் , “ உனக்குக் கேடுதான் . நீ யார் ?`` என்று கேட்டோம் . அதற்கு அந்தப் பிராணி “ நான் தான் ஜஸ்ஸாஸா `` என்று சொன்னது . “ ஜஸ்ஸாஸா என்றால் என்ன ?`` என்று நாங்கள் கேட்டோம் . அதற்கு அந்தப் பிராணி , “ கூட்டத்தாரே ! இந்த மண்டபத்திற்கு உள்ளே இருக்கும் மனிதரை நோக்கிச் செல்லுங்கள் . அவர் உங்களைப் பற்றிய செய்தி அறிய ஆவலாக உள்ளார் `` என்று சொன்னது . அந்தப் பிராணி ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டு அது ஷைத்தானாக இருக்குமோ என்று நாங்கள் பயந்துவிட்டோம் . உடனே நாங்கள் அந்த மனிதனை நோக்கி விரைந்து நடந்தோம் . நாங்கள் அந்த மண்டபத்தைச் சென்றடைந்தோம் . அங்கு மாபெரும் உருவமுடைய மனிதன் ஒருவன் இருந்தான் . அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை . அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான் . அவனுடைய கைகள் அவனது தோளோடு சேர்த்து வைத்து இறுகக் கட்டப்பட்டிருந்தன . அவனுடைய முழங்கால்கள் கணுக்கால்களோடு சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன . அவனிடம் நாங்கள் , “ உனக்குக் கேடுதான் . நீ யார் ?`` என்று கேட்டோம் . " என்னைப் பற்றிய தகவலை நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் . ( முதலில் ) நீங்கள் யார் என்று கூறுங்கள் ?`` என்று கேட்டான் . “ நாங்கள் அரபு மக்கள் . நாங்கள் கப்பலொன்றில் கடல் பயணம் மேற்கொண்டோம் . கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஒரு மாதக் காலமாகக் கடல் அலை எங்களை அலைக்கழித்துவிட்டது . பிறகு நீ இருக்கும் இந்தத் தீவில் நாங்கள் கரை ஒதுங்கினோம் . பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து இந்தத் தீவுக்குள் நுழைந்தோம் . அப்போது உடல் முழுவதும் அடர்ந்த முடிகள் கொண்ட பிராணி ஒன்று எங்களைச் சந்தித்தது . உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருந்த காரணத்தால் அதன் முன்பகுதி எது , பின்பகுதி எது என்று அறிய முடியவில்லை . நாங்கள் “ உனக்குக் கேடுதான் . நீ யார் ?`` என்று கேட்டோம் . அது " நான்தான் ஜஸ்ஸாஸா `` என்று சொன்னது . “ ஜஸ்ஸாஸா என்றால் என்ன ?`` என்று கேட்டோம் . அதற்கு அது , “ இந்த மண்டபத்திலுள்ள இந்த மனிதரை நோக்கிச் செல்லுங்கள் . அவர் உங்களைப் பற்றிய செய்தியை அறிய பெரும் ஆவலுடன் இருக்கிறார் `` என்று கூறியது . ஆகவேதான் , நாங்கள் உன்னை நோக்கி விரைந்து வந்தோம் . அது ஷைத்தானாக இருக்கலாம் என்பதால் எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை `` என்று சொன்னோம் . அப்போது அவன் , “ பைசான் பேரீச்சந் தோட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் `` என்றான் . “ அந்தத் தோட்டத்தில் நீ எதைப் பற்றிக் கேட்கிறாய் ?`` என்று கேட்டோம் . அதற்கு அவன் , “ அந்தப் பேரீச்சந் தோட்டத்தின் மரங்கள் கனிகள் தருகின்றனவா என்பதைப் பற்றியே நான் கேட்கிறேன் `` என்றான் . நாங்கள் " ஆம் ` என்று பதிலளித்தோம் . அவன் , “ அறிந்து கொள்ளுங்கள் . அது கனியே தராத காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது `` என்று கூறினான் . பிறகு “ தபரிய்யா நீர்நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள் `` என்று கேட்டான் . “ அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய் ?`` என்று நாங்கள் கேட்டோம் . அதற்கு அவன் , “ அதில் தண்ணீர் இருக்கிறதா ?`` என்று கேட்டான் . நாங்கள் , “ அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது `` என்று பதிலளித்தோம் . அவன் , “ அறிந்துகொள்ளுங்கள் : அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது `` என்று சொன்னான் . பிறகு , "( ஷாம் நாட்டிலுள்ள ) ஸுஃகர் நீரூற்றைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் `` என்று கேட்டான் . நாங்கள் , “ அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய் ?`` என்றோம் . அதற்கு அவன் , “ அந்த ஊற்றில் தண்ணீர் உள்ளதா ? அந்த ஊற்றுத் தண்ணீரால் மக்கள் பயிர் செய்கிறார்களா ?`` என்று கேட்டான் . நாங்கள் “ ஆம் , அதில் தண்ணீர் அதிகமாக உள்ளது . அங்குள்ளவர்கள் அந்தத் தண்ணீரால் விவசாயம் செய்கிறார்கள் `` என்று சொன்னோம் . பிறகு அவன் , “ எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள் . அவர் ( இப்போது ) என்ன செய்கிறார் ?`` என்று கேட்டான் . நாங்கள் , “ அவர் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் ( மதீனாவில் ) தங்கியிருக்கிறார் `` என்று பதிலளித்தோம் . அவன் , “ அவருக்கும் அரபியருக்குமிடையே போர் நடந்ததா ?`` என்று கேட்டான் . நாங்கள் , " ஆம் ` என்றோம் . அவன் , “ அவர்களை அவர் என்ன செய்தார் ?`` என்று கேட்டான் . நாங்கள் , “ அவர் , தம் அருகிலுள்ள அரபியரை வெற்றி கொண்டுவிட்டார் . அரபியர் அவருக்குக் கட்டுப்பட்டு விட்டனர் `` என்று சொன்னோம் . அதற்கு அவன் , " அப்படித்தான் நடந்ததா ?`` என்று கேட்டான் . நாங்கள் " ஆம் ` என்றோம் . அவன் , “ அறிந்துகொள்ளுங்கள் . அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும் . ( இனி ) நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன் : நான்தான் மஸீஹ் ( அத்தஜ்ஜால் ) ஆவேன் . நான் ( இங்கிருந்து ) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது . நான் புறப்பட்டு வந்து , நாற்பது நாட்களில் பூமியில் எந்த ஓர் ஊரையும் விட்டுவைக்காமல் பூமியெங்கும் பயணம் செய்வேன் ; மக்காவையும் தைபா ( மதீனா ) வையும் தவிர ! அவ்விரண்டிற்குள்ளேயும் நுழைய எனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது . அவ்விரு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நுழைய நான் நாடும் போதெல்லாம் என்னை நோக்கி வானவர் ஒருவர் வருவார் . அவரது கையில் உருவிய வாள் இருக்கும் . ( அதை வைத்து ) அதற்குள் நுழைய விடாமல் அவர் என்னைத் தடுத்துவிடுவார் . அதன் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர் ஒருவர் இருந்து , அதைக் காவல் காத்துக்கொண்டிருப்பார் `` என்று கூறினான் . இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , தம்மிடமிருந்த கைத்தடியால் சொற்பொழிவு மேடைமீது குத்தியவாறு இது - அதாவது மதீனா நகரம்-தான் தைபா ; இதுதான் தைபா ; இதுதான் தைபா `` என்று கூறிவிட்டு , “ இதைப் பற்றி நான் உங்களுக்கு ( முன்பே ) அறிவித்துள்ளேன் அல்லவா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் , “ ஆம் ( அறிவித்தீர்கள் )`` என்று பதிலளித்தனர் . “ தமீமுத்தாரீ சொன்ன இந்தச் செய்தி , தஜ்ஜாலைப் பற்றியும் மதீனா மற்றும் மக்கா பற்றியும் நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியிருந்ததற்கு ஒப்பவே அமைந்திருக்கிறது `` என்று கூறினார்கள் . பிறகு அறிந்து கொள்ளுங்கள் : அ( ந்தத் தீவான ) து , ஷாம் நாட்டுக் கடலில் , அல்லது யமன் நாட்டுக் கடலில் உள்ளது . இல்லை ; அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது . அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது . அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது `` என்று ( அறுதியிட்டுச் ) சொன்னார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதைக் கூறியபோது கிழக்குத் திசையை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்தார்கள் . ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள் : இதை நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்தே மனனமிட்டேன் .

Reference: ( முஸ்லிம் : 2942 / 5638)
ஹதீஸ் 137 அத்தியாயம் 2 பாடம் 20

(ق) عَنْ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ . 137

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக ! மர்யமின் புதல்வர் ( ஈஸா ) உங்களிடம் நேர்மையான ( தீர்ப்பு சொல்லும் ) நீதிபதியாக இறங்கவிருக்கிறார் ! அவர் சிலுவையை உடைப்பார் ! பன்றியைக் கொல்வார் ! காப்புவரியை (- ஜிஸ்யா ) நீக்குவார் ! ( அந்நாளில் ) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும் .

Reference: ( புகாரீ : 2222, முஸ்லிம் : 155) புகாரீ , முஸ்லிம் ஆகிய இருவரும் பதிவு செய்துள்ள மற்றோர் அறிவிப்பு : அந்த நேரத்தில் , ஒரேயரு சஜ்தா ( நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது ) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாக ( மக்களின் பார்வையில் ) ஆகிவிடும் . இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , “ வேதம் வழங்கப்பட்டவர்களுள் எவரும் , தாம் இறப்பதற்கு முன்பாக அவர் ( முஹம்மதின் ) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார் . மேலும் , மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார் ` (4:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் `` என்று கூறினார்கள் . ( புகாரீ : 3448) புகாரீ , முஸ்லிம் ஆகிய இருவரும் பதிவு செய்துள்ள மற்றோர் அறிவிப்பு : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு ( த் தொழுவிக்கும் ) இமாமாக இருக்க மர்யமின் மைந்தர் உங்களிடையே இறங்குவாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும் ? ( புகாரீ : 3449).
ஹதீஸ் 138 அத்தியாயம் 2 பாடம் 20

عَنْ مُجَمِّعَ ابْنَ جَارِيَةَ الْأَنْصَارِيَّ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَقْتُلُ ابْنُ مَرْيَمَ الدَّجَّالَ بِبَابِ لُدٍّ 138

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக முஜம்மிஉ பின் ஜாரியா அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மர்யமின் மைந்தர் ( ஈஸா அலைஹிஸ்ஸலாம் ) தஜ்ஜாலை லுத் எனும் ஊரின் வாசலில் வைத்துக் கொலை செய்வார் .

Reference: ( திர்மிதீ : 2244) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 139 அத்தியாயம் 2 பாடம் 20

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ يَعْنِي عِيسَى وَإِنَّهُ نَازِلٌ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ رَجُلٌ مَرْبُوعٌ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ بَيْنَ مُمَصَّرَتَيْنِ كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلٌ فَيُقَاتِلُ النَّاسَ عَلَى الْإِسْلَامِ فَيَدُقُّ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلَّا الْإِسْلَامَ وَيُهْلِكُ الْمَسِيحَ الدَّجَّالَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ أَرْبَعِينَ سَنَةً ثُمَّ يُتَوَفَّى فَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ . 139

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எனக்கும் அவருக்கும் ( ஈஸா ) இடையே எந்த நபியும் இல்லை . திண்ணமாக அவர் இறங்கி வரக்கூடியவர் ஆவார் . நீங்கள் அவரைக் கண்டால் ( பின்வரும் அடையாளங்களை வைத்து ) அவரை அறிந்து கொள்ளுங்கள் . நடுநிலையான உயரமும் சிவப்பான உடலமைப்பும் கொண்டவர் . மஞ்சள் வண்ணம் கொண்ட இரண்டு ஆடைகள் அணிந்தவராக இருப்பார் . அவருடைய தலையில் ஈரம் இல்லாவிட்டாலும் துளித் துளியாய் நீர் சொட்டுவதைப் போன்று இருக்கும் . இஸ்லாமிய மார்க்கத்திற்காக மக்களிடம் போரிடுவார் . அவர் சிலுவையை உடைப்பார் ; பன்றியைக் கொல்வார் ; காப்புவரியை (- ஷிஸ்யா ) நீக்குவார் . அவருடைய காலத்தில் அல்லாஹ் இஸ்லாத்தைத் தவிர ஏனைய எல்லா மதங்களையும் அழித்துவிடுவான் . மேலும் மஸீஹுத் தஜ்ஜாலைக் கொலை செய்வார் . ( பிறகு ) பூமியில் அவர் நாற்பது ஆண்டுகள் தங்கியிருப்பார் . பிறகு இறந்துவிடுவார் . ஆகவே அவருக்கு முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகை நடத்துவர் .

Reference: ( அபூதாவூத் : 4324). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 140 அத்தியாயம் 2 பாடம் 21

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ فَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ فَذَلِكَ حِينَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ نَشَرَ الرَّجُلَانِ ثَوْبَهُمَا بَيْنَهُمَا فَلَا يَتَبَايَعَانِهِ وَلَا يَطْوِيَانِهِ وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ انْصَرَفَ الرَّجُلُ بِلَبَنِ لِقْحَتِهِ فَلَا يَطْعَمُهُ وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَهُوَ يَلِيطُ حَوْضَهُ فَلَا يَسْقِي فِيهِ وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ رَفَعَ أُكْلَتَهُ إِلَى فِيهِ فَلَا يَطْعَمُهَا . 140

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது . அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள் . ஆனால் , முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத , அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது . இரண்டு பேர் ( விற்பனைக்காகத் ) துணிகளை விரித்து ( ப் பார்த்து ) க் கொண்டிருப்பார்கள் . அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள் ; சுருட்டிக்கூட வைத்திருக்கவுமாட்டார்கள் . அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் . மேலும் , ஒரு மனிதர் மடிகனத்த தமது ஒட்டகத்தி ( ல் பால் கறந்து அப்போது தா ) ன் பாலுடன் ( வீடு ) திரும்பியிருப்பார் ; இன்னும் அதைப் பருகிக்கூட இருக்கமாட்டார் . அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் . ஒருவர் தமது நீர்த் தொட்டியை ( அப்போதுதான் ) கல்வைத்துப் பூசியிருப்பார் ; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார் . அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் . உங்களுள் ஒருவர் தமது உணவை ( அப்போதுதான் ) வாயருகில் கொண்டு சென்றிருப்பார் ; அதை உண்டிருக்க மாட்டார் . அதற்குள் மறுமை சம்பவித்து விடும் .

Reference: ( புகாரீ : 6506, முஸ்லிம் : 157, 2954)
ஹதீஸ் 141 அத்தியாயம் 2 பாடம் 22

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ فَتَكُونَ السَّنَةُ كَالشَّهْرِ وَيَكُونَ الشَّهْرُ كَالْجُمُعَةِ وَتَكُونَ الْجُمُعَةُ كَالْيَوْمِ وَيَكُونَ الْيَوْمُ كَالسَّاعَةِ وَتَكُونَ السَّاعَةُ كَاحْتِرَاقِ السَّعَفَةِ الْخُوصَةِ . 141

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : காலம் சுருங்காத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது ஓர் ஆண்டு ஒரு மாதத்தைப் போன்றும் , ஒரு மாதம் ஒரு வாரத்தைப் போன்றும் . ஒரு வாரம் ஒரு நாள் போன்றும் , ஒரு நாள் ஒரு மணி நேரத்தைப் போன்றும் , ஒரு மணி நேரம் தீ பற்றவைக்கும் ( ஒரு நொடி ) நேரத்தைப் போன்றும் மாறிவிடும் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 10943). முஸ்லிம் இமாமின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 142 அத்தியாயம் 2 பாடம் 23

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ وَحَتَّى تُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ وَشِرَاكُ نَعْلِهِ وَتُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ مِنْ بَعْدِهِ . 142

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ( ந்த ஏக இறை ) வன் மீதாணையாக ! மனிதர்களிடம் விலங்குகள் பேசுகின்ற நாள் வராமல் யுகமுடிவு நாள் ஏற்படாது . மேலும் ஒரு மனிதரிடம் அவரது சாட்டை முனையும் அவரது செருப்பின் வாரும் பேசாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது . அப்போது அவரது தொடை அவர் இல்லாதபோது அவருடைய வீட்டார் செய்ததை அவரிடம் எடுத்துரைக்கும் .

Reference: ( திர்மிதீ : 2107 / 2181). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 143 அத்தியாயம் 2 பாடம் 24

عَنْ أَبِي الطُّفَيْلِ ، قَالَ : كُنَّا جُلُوسًا عِنْدَ حُذَيْفَةَ فَذُكِرَتِ الدَّابَّةُ ، فَقَالَ حُذَيْفَةُ - رَضِيَ اللَّهُ عَنْهُ - : " إِنَّهَا تَخْرُجُ ثَلَاثَ خَرْجَاتٍ فِي بَعْضِ الْبَوَادِي ، ثُمَّ تَكْمُنُ ، ثُمَّ تَخْرُجُ فِي بَعْضِ الْقُرَى حَتَّى يُذْعَرُوا وَحَتَّى تُهَرِيقَ فِيهَا الْأُمَرَاءُ الدِّمَاءَ ، ثُمَّ تَكْمُنُ ، قَالَ : فَبَيْنَمَا النَّاسُ عِنْدَ أَعْظَمِ الْمَسَاجِدِ وَأَفْضَلِهَا وَأَشْرَفِهَا - حَتَّى قُلْنَا الْمَسْجِدَ الْحَرَامَ وَمَا سَمَّاهُ - إِذِ ارْتَفَعَتِ الْأَرْضُ وَيَهْرُبُ النَّاسُ ، وَيَبْقَى عَامَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَقُولُونَ : إِنَّهُ لَنْ يُنْجِيَنَا مِنْ أَمْرِ اللَّهِ شَيْءٌ ، فَتَخْرُجُ فَتَجْلُو وُجُوهَهُمْ حَتَّى تَجْعَلَهَا كَالْكَوَاكِبِ الدُّرِّيَّةِ ، وَتَتْبَعُ النَّاسَ ، جِيرَانٌ فِي الرِّبَاعِ شُرَكَاءُ فِي الْأَمْوَالِ وَأَصْحَابٌ فِي الْإِسْلَامِ . 143

அபுத்துஃபைல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நாங்கள் ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அமர்ந்து கொண்டிருந்தோம் . அப்போது நான் தாப்பத்து ( ல் அர்ள் எனும் அதிசயப் பிராணி ) குறித்து நினைவு கூர்ந்தேன் . அப்போது ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : சில நகர்ப்புறங்களில் இருந்து அது மூன்று தடவைகள் வெளியேறிவரும் . பிறகு மறைந்துவிடும் . பிறகு சில கிராமங்களில் இருந்து அது வெளியேறிவந்து அங்குள்ள செல்வர்களைக் கொன்றுபோடும் . பிறகு மறைந்துவிடும் . மேலும் கூறினார்கள் : மிக மகத்தான , மிகச் சிறந்த , சிறப்புவாய்ந்த மஸ்ஜிதில் மக்கள் இருக்கும்போது - என்று கூறி , அதன் பெயரைக் கூறவில்லை . அது மஸ்ஜிதுல் ஹராம் என்று நாங்கள் கூறிக்கொண்டோம் - நிலப்பகுதி உயர்ந்துவிடும் . மக்கள் வெருண்டோடுவார்கள் . ( ஆனால் ஈமானில் உறுதியான ) முஸ்லிம்கள் ( அதே இடத்திலேயே ) அப்படியே இருந்துகொண்டு , “ அல்லாஹ்வுடைய விதியிலிருந்து எந்த ஒன்றும் நம்மைக் காப்பாற்ற முடியாது ” என்று கூறுவார்கள் . அது வெளியேறிவந்து , அவர்களுடைய முகங்களை துர்ரிய்யா எனும் நட்சத்திரங்கள் ஒளிர்வதைப் போன்று ஒளிமயமாக்கிவிடும் . வீடுகளில் வசிக்கின்ற அண்டைவீட்டுக்காரர்கள் - அவர்கள் செல்வங்களில் கூட்டாளிகளாகவும் இஸ்லாமிய மார்க்கத்தில் தோழர்களாகவும் இருந்தவர்கள் - ( வெருண்டோடுகின்ற ) அந்த மக்களைப் பின்பற்றிச் செல்வார்கள் .

Reference: ( ஹாகிம் : 8491). புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் என தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் .
ஹதீஸ் 144 அத்தியாயம் 2 பாடம் 24

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَخْرُجُ الدَّابَّةُ وَمَعَهَا خَاتَمُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ وَعَصَا مُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِمَا السَّلَام فَتَجْلُو وَجْهَ الْمُؤْمِنِ بِالْعَصَا وَتَخْطِمُ أَنْفَ الْكَافِرِ بِالْخَاتِمِ حَتَّى أَنَّ أَهْلَ الْحِوَاءِ لَيَجْتَمِعُونَ فَيَقُولُ هَذَا يَا مُؤْمِنُ وَيَقُولُ هَذَا يَا كَافِرُ . 144

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அதிசயப் பிராணி தோன்றும் . அதனுடன் சுலைமான் பின் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மோதிரமும் மூஸா பின் இம்ரான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கைத்தடியும் வெளிப்படும் . அக்கைத்தடியால் அது இறைநம்பிக்கையாளரின் முகத்தை ஒளிரச் செய்யும் . அம்மோதிரத்தால் அது இறைமறுப்பாளரின் மூக்கைத் துண்டிக்கும் . அதற்குள் அங்கு வசிப்பவர்கள் ஒன்றிணைந்து விடுவார்கள் . அப்போது ஒருவர் , இறைநம்பிக்கையாளரே என்று அழைப்பார் . மற்றொருவர் , இறைமறுப்பாளனே என்று அழைப்பார் .

Reference: ( திர்மிதீ : 3187, இப்னுமாஷா : 4056 / 4066). இது ` ளஈஃப் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 145 அத்தியாயம் 2 பாடம் 25

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُفْتَحُ يَأْجُوجُ وَمَأْجُوجُ فَيَخْرُجُونَ كَمَا قَالَ اللَّهُ تَعَالَى وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ فَيَعُمُّونَ الْأَرْضَ وَيَنْحَازُ مِنْهُمْ الْمُسْلِمُونَ حَتَّى تَصِيرَ بَقِيَّةُ الْمُسْلِمِينَ فِي مَدَائِنِهِمْ وَحُصُونِهِمْ وَيَضُمُّونَ إِلَيْهِمْ مَوَاشِيَهُمْ حَتَّى أَنَّهُمْ لَيَمُرُّونَ بِالنَّهَرِ فَيَشْرَبُونَهُ حَتَّى مَا يَذَرُونَ فِيهِ شَيْئًا فَيَمُرُّ آخِرُهُمْ عَلَى أَثَرِهِمْ فَيَقُولُ قَائِلُهُمْ لَقَدْ كَانَ بِهَذَا الْمَكَانِ مَرَّةً مَاءٌ وَيَظْهَرُونَ عَلَى الْأَرْضِ فَيَقُولُ قَائِلُهُمْ هَؤُلَاءِ أَهْلُ الْأَرْضِ قَدْ فَرَغْنَا مِنْهُمْ وَلَنُنَازِلَنَّ أَهْلَ السَّمَاءِ حَتَّى إِنَّ أَحَدَهُمْ لَيَهُزُّ حَرْبَتَهُ إِلَى السَّمَاءِ فَتَرْجِعُ مُخَضَّبَةً بِالدَّمِ فَيَقُولُونَ قَدْ قَتَلْنَا أَهْلَ السَّمَاءِ فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ دَوَابَّ كَنَغَفِ الْجَرَادِ فَتَأْخُذُ بِأَعْنَاقِهِمْ فَيَمُوتُونَ مَوْتَ الْجَرَادِ يَرْكَبُ بَعْضُهُمْ بَعْضًا فَيُصْبِحُ الْمُسْلِمُونَ لَا يَسْمَعُونَ لَهُمْ حِسًّا فَيَقُولُونَ مَنْ رَجُلٌ يَشْرِي نَفْسَهُ وَيَنْظُرُ مَا فَعَلُوا فَيَنْزِلُ مِنْهُمْ رَجُلٌ قَدْ وَطَّنَ نَفْسَهُ عَلَى أَنْ يَقْتُلُوهُ فَيَجِدُهُمْ مَوْتَى فَيُنَادِيهِمْ أَلَا أَبْشِرُوا فَقَدْ هَلَكَ عَدُوُّكُمْ فَيَخْرُجُ النَّاسُ وَيَخْلُونَ سَبِيلَ مَوَاشِيهِمْ فَمَا يَكُونُ لَهُمْ رَعْيٌ إِلَّا لُحُومُهُمْ فَتَشْكَرُ عَلَيْهَا كَأَحْسَنِ مَا شَكِرَتْ مِنْ نَبَاتٍ أَصَابَتْهُ قَطُّ . 145

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யஃஜூஜ் மஃஜூஜ் ( உள்ள கதவு ) திறக்கப்படும் . அவர்கள் அதிலிருந்து வெளியேறி வருவார்கள் . உயர்ந்தோன் அல்லாஹ் அது பற்றிக் கூறுகின்றான் : அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலிருந்தும் பரவி வருவார்கள் . (21: 96) பூமியைச் சூழ்ந்துகொள்வார்கள் . அவர்களிலிருந்து முஸ்லிம்கள் வெருண்டோடிவிடுவார்கள் . எஞ்சியுள்ள முஸ்லிம்கள் தம்முடைய கால்நடைகளைத் தம்மோடு எடுத்துக்கொண்டு தங்களுடைய நகரங்களிலும் கோட்டைகளிலும் இருப்பார்கள் . ( யஃஜூஜ் மஃஜூஜ் செல்லும் வழியில் ) அவர்கள் நதியைக் கடந்து செல்வார்கள் . அதில் தண்ணீர் பருகுவார்கள் . அதில் எதையும் மிச்சம் வைக்கமாட்டார்கள் . அவர்களுள் கடைசியில் உள்ளவர் ( அவர்களுள் உள்ள ) கால் தடத்தைப் பின்பற்றிச் செல்வார் . அவர்களுள் ஒருவர் இந்த இடத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது . அது நிலத்தில் பரவியிருந்தது என்று கூறுவார் . அவர்களுள் ஒருவர் , இவர்கள் நிலவாசிகள் . இவர்களை நாங்கள் முடித்துவிட்டோம் . இப்போது நாம் வானத்திலுள்ளோரிடம் சண்டையிடுவோம் என்று கூறுவார் . ஆகவே அவர்களுள் ஒருவர் தம்முடைய அம்பை வானத்தை நோக்கி எறிவார் . அது இரத்தம் தோய்க்கப்பட்டதாகத் திரும்பிவரும் . அப்போது அவர்கள் , நாம் இப்போது வானத்திலுள்ளோரைக் கொன்றுவிட்டோம் என்று கூறுவார்கள் . ( ஆனால் ) அவர்களோ அவ்வாறே ( உயிருடன் ) இருப்பார்கள் . அச்சமயத்தில் அல்லாஹ் வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போல் பூச்சிகளை அனுப்பிவைப்பான் . அவை அவர்களின் கழுத்துகளைப் பிடித்துக்கொள்ளும் . எனவே அவர்கள் வெட்டுக்கிளிகளைப் போல இறந்துபோவார்கள் . அவர்களுள் ஒருவர் மற்றொருவர் மீது சாய்ந்து கிடப்பார் . காலையில் முஸ்லிம்கள் அவர்களைப் பற்றி எந்தச் சத்தத்தையும் செவியுறமாட்டார்கள் . ஆகவே முஸ்லிம்கள் , எவர் தம் ஆன்மாவை அல்லாஹ்வுக்காக விற்று ( அடைமானம் வைத்து ) அவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்த்துவருவார் ? எனக் கேட்பார்கள் . ( அது கேட்டு ) அவர்களுள் ஒருவர் இறங்குவார் . அவர் தம்மை அவர்கள் கொல்வார்கள் என்று தம்மைத் தயார்படுத்திக் கொண்டு செல்வார் . அவர்களோ இறந்து கிடப்பதைக் கண்டு முஸ்லிம்களை அழைத்து , நற்செய்தி பெறுங்கள் . உங்களுடைய எதிரிகள் அழிந்துவிட்டனர் என்று கூறுவார் . எனவே மக்கள் அனைவரும் வெளியேறி வந்து , தம்முடைய கால்நடைகளை ஓட்டிக்கொண்டு வருவார்கள் . அந்தக் கால்நடைகள் மேய்வதற்கு அவர்களுடைய இறைச்சிகளைத் தவிர வேறெதுவும் அங்கு இருக்காது . எனவே அவை அது வரை காணாத உணவான அந்த இறைச்சிகளைத் தின்று மிக அழகிய முறையில் கொழுத்துவிடும் .

Reference: ( இப்னுமாஜா : 4069 / 4079). இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 146 அத்தியாயம் 2 பாடம் 25

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ يَحْفِرُونَ كُلَّ يَوْمٍ حَتَّى إِذَا كَادُوا يَرَوْنَ شُعَاعَ الشَّمْسِ قَالَ الَّذِي عَلَيْهِمْ ارْجِعُوا فَسَنَحْفِرُهُ غَدًا فَيُعِيدُهُ اللَّهُ أَشَدَّ مَا كَانَ حَتَّى إِذَا بَلَغَتْ مُدَّتُهُمْ وَأَرَادَ اللَّهُ أَنْ يَبْعَثَهُمْ عَلَى النَّاسِ حَفَرُوا حَتَّى إِذَا كَادُوا يَرَوْنَ شُعَاعَ الشَّمْسِ قَالَ الَّذِي عَلَيْهِمْ ارْجِعُوا فَسَتَحْفِرُونَهُ غَدًا إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى وَاسْتَثْنَوْا فَيَعُودُونَ إِلَيْهِ وَهُوَ كَهَيْئَتِهِ حِينَ تَرَكُوهُ فَيَحْفِرُونَهُ وَيَخْرُجُونَ عَلَى النَّاسِ فَيُنْشِفُونَ الْمَاءَ وَيَتَحَصَّنُ النَّاسُ مِنْهُمْ فِي حُصُونِهِمْ فَيَرْمُونَ بِسِهَامِهِمْ إِلَى السَّمَاءِ فَتَرْجِعُ عَلَيْهَا الدَّمُ الَّذِي اجْفَظَّ فَيَقُولُونَ قَهَرْنَا أَهْلَ الْأَرْضِ وَعَلَوْنَا أَهْلَ السَّمَاءِ فَيَبْعَثُ اللَّهُ نَغَفًا فِي أَقْفَائِهِمْ فَيَقْتُلُهُمْ بِهَا . 146

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யஃஜூஜ் மஃஜூஜ் ஒவ்வொரு நாளும் சூரிய ஒளி தென்படுகின்ற வரை ( துளையிடுவதற்காகத் ) தோண்டுவார்கள் . ( அதன்பின் ) அவர்களுள் ஒருவர் , திரும்பிச் செல்லுங்கள் . நாம் நாளை தோண்டுவோம் என்று கூறுவார் . ( மறுநாள் ) அதைவிடக் கடினமாக அல்லாஹ் அதை மாற்றிவிடுவான் . அவர்களுடைய காலம் நெருங்கும் வரை அவன் இவ்வாறே செய்துகொண்டிருப்பான் . அவர்களை மக்களிடம் அனுப்ப அல்லாஹ் நாடுகின்றபோது , அவர்கள் சூரிய ஒளி தென்படுகின்ற வரை தோண்டுவார்கள் . ( அதன்பின் ) அவர்களுள் ஒருவர் , திரும்பிச் செல்லுங்கள் . இன்ஷா அல்லாஹ் நீங்கள் நாளை தோண்டுவீர்கள் என்று கூறுவார் . எனவே அவர்கள் ( அனைவரும் ) இன்ஷா அல்லாஹ் கூறுவார்கள் . ஆகவே அவர்கள் ( மறுநாள் ) திரும்ப வருவார்கள் . அப்போது அது அவர்கள் விட்டுச்சென்ற நிலையிலேயே இருக்கும் . எனவே அவர்கள் ( எளிதாகத் ) தோண்டிவிட்டு , மக்களை நோக்கி வெளியேறிவருவார்கள் . தண்ணீரை உறிஞ்சிக் குடிப்பார்கள் . மக்களெல்லாம் அவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறும்பொருட்டு கோட்டைகளில் தங்கியிருப்பார்கள் . அவர்கள் தம் அம்புகளை வானத்தை நோக்கி எறிவார்கள் . அது தன்னில் இரத்தம் தோய்க்கப்பட்ட நிலையில் திரும்பவரும் . அப்போது அவர்கள் , நாம் பூமியில் உள்ளோரை அடக்கி , வானிலுள்ளோரை மேலோங்கிவிட்டோம் என்று கூறுவார்கள் . அச்சமயத்தில் அல்லாஹ் அவர்கள் மத்தியில் அவர்களின் பிடரிகளைக் கவ்வுகின்ற ஒரு பூச்சியினத்தை அனுப்பிவைப்பான் . அவற்றின் மூலம் அல்லாஹ் அவர்களைக் கொல்வான் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : எவன் கைவசம் என் ஆன்மா உள்ளதோ அவன்மீது ஆணையாக ! திண்ணமாக நிலத்திலுள்ள உயிரினங்கள் அவர்களின் இறைச்சிகளைத் தின்று நன்றாகக் கொழுத்துப் பெருக்கும் .

Reference: ( இப்னுமாஜா : 4070/ 4080). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 147 அத்தியாயம் 2 பாடம் 26

عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَوْ لَمْ يَبْقَ مِنْ الدُّنْيَا إِلَّا يَوْمٌ ِ لَطَوَّلَ اللَّهُ ذَلِكَ الْيَوْمَ حَتَّى يَبْعَثَ فِيهِ رَجُلًا مِنِّي أَوْ مِنْ أَهْلِ بَيْتِي يُوَاطِئُ اسْمُهُ اسْمِي وَاسْمُ أَبِيهِ اسْمُ أَبِي يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا كَمَا مُلِئَتْ ظُلْمًا وَجَوْرًا . 147

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு நாளைத் தவிர உலக நாள் மீதி இல்லையென்றாலும் , என்னிலிருந்து அல்லது என் குடும்பத்திலிருந்து ஒருவரை அனுப்புகின்ற வரை அல்லாஹ் அதை நீடிக்கச் செய்வான் . அவருடைய பெயர் என் பெயரை ஒத்திருக்கும் . அவருடைய தந்தையின் பெயர் என் தந்தையின் பெயரை ஒத்திருக்கும் . பூமி முழுக்க அநியாயம் நிரம்பியிருந்ததைப்போல் அது நீதியாலும் நேர்மையாலும் நிரம்பும் .

Reference: ( திர்மிதீ : 2230, அபூதாவூத் : 4282). இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 148 அத்தியாயம் 2 பாடம் 26

عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: الْمَهْدِيُّ مِنْ عِتْرَتِي مِنْ وَلَدِ فَاطِمَةَ . 148

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்ததாவது : மஹ்தீ என் குடும்பத்திலிருந்து ஃபாத்திமாவின் வாரிசுகளுள் உள்ளவர் ஆவார் .

Reference: ( அபூதாவூத் : 4248, இப்னுமாஜா : 4076 / 4086). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 149 அத்தியாயம் 2 பாடம் 26

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : " يَخْرُجُ رَجُلٌ يُقَالُ لَهُ : السُّفْيَانِيُّ فِي عُمْقِ دِمَشْقَ ، وَعَامَّةُ مَنْ يَتَّبِعُهُ مِنْ كَلْبٍ ، فَيَقْتُلُ حَتَّى يَبْقُرَ بُطُونَ النِّسَاءِ ، وَيَقْتُلَ الصِّبْيَانَ ، فَتَجْمَعُ لَهُمْ قَيْسٌ فَيَقْتُلُهَا حَتَّى لَا يَمْنَعَ ذَنَبُ تَلْعَةٍ ، وَيَخْرُجُ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي فِي الْحَرَّةِ فَيَبْلُغُ السُّفْيَانِيَّ ، فَيَبْعَثُ إِلَيْهِ جُنْدًا مِنْ جُنْدِهِ فَيَهْزِمُهُمْ ، فَيَسِيرُ إِلَيْهِ السُّفْيَانِيُّ بِمَنْ مَعَهُ حَتَّى إِذَا صَارَ بِبَيْدَاءَ مِنَ الْأَرْضِ خُسِفَ بِهِمْ ، فَلَا يَنْجُو مِنْهُمْ إِلَّا الْمُخْبِرُ عَنْهُمْ . 149

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்ததாவது : திமஷ்க்கின் முக்கியமான பகுதியில் சுஃப்யானீ எனும் மனிதன் புறப்பட்டுவருவான் . கல்ப் எனும் அரபுக் குலத்தினர் அவனைப் பின்பற்றி வருவார்கள் . பெண்களின் வயிறுகளைக் கிழித்துக் கொல்வான் ; சிறுவர்களைக் கொல்வான் . கைஸ் எனும் குலத்தினர் ( அவனுக்கெதிராக ) ஒன்று சேர்வார்கள் அவர்களையும் அவன் கொன்று சின்னாபின்னமாக ஆக்கிவிடுவான் . ஹர்ராவில் என் குடும்பத்திலிருந்து ஒரு மனிதர் புறப்பட்டுவருவார் . அவர் அந்த சுஃப்யானீயை அடைவார் . அவர் தம்முடைய படையினருள் ஒரு படையை அனுப்புவார் . அவர்களை அவன் தோற்கடித்துவிடுவான் . சுஃப்யானீ தன்னுடன் உள்ளவர்களோடு அவரை நோக்கி நடப்பான் . அவன் ஒரு பாலைவனப் பகுதிக்கு வருவான் . அதற்குள் அவர்கள் ( அனைவரும் ) பூமியில் செருகப்பட்டுவிடுவார்கள் . அவர்களைப் பற்றிய செய்தி அறிவிக்கின்ற ( ஒரு ) வனைத் தவிர அவர்களுள் யாரும் தப்பிக்க மாட்டார் .

Reference: ( ஹாகிம் : 8586). புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் .
ஹதீஸ் 150 அத்தியாயம் 2 பாடம் 26

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ ، قَالَ : " يَخْرُجُ فِي آخِرِ أُمَّتِي الْمَهْدِيُّ يَسْقِيهِ اللَّهُ الْغَيْثَ ، وَتُخْرِجُ الْأَرْضُ نَبَاتَهَا ، وَيُعْطِي الْمَالَ صِحَاحًا ، وَتَكْثُرُ الْمَاشِيَةُ وَتَعْظُمُ الْأُمَّةُ ، يَعِيشُ سَبْعًا أَوْ ثَمَانِيًا " يَعْنِي حِجَجًا . 150

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஸஈதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்ததாவது : என் சமுதாயத்தின் கடைசிக் காலத்தில் மஹ்தீ புறப்பட்டு வருவார் . அல்லாஹ் அவருக்கு மழையைப் பொழியச் செய்வான் . பூமி தனது தாவரங்களை முளைக்கச் செய்யும் . அவர் பொருள்களைச் சரியான முறையில் வழங்குவார் . கால்நடைகள் பெருகும் . அச்சமுதாயம் பெருவளர்ச்சியடையும் . அவர் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் வாழ்வார் .

Reference: ( ஹாகிம் : 8673). இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் .
ஹதீஸ் 151 அத்தியாயம் 2 பாடம் 27

عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكُونَ فِي أُمَّتِي خَسْفٌ وَمَسْخٌ وَقَذْفٌ . 151

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தில் ( இறுதிக் காலத்தில் ) உருமாற்றம் , பூமிக்குள் புதைந்து போகுதல் , ( வானத்திலிருந்து ) கல்வீச்சு ஆகியவை ஏற்படுகின்ற வரை யுக முடிவு நாள் ஏற்படாது .

Reference: ( இப்னுஹிப்பான் : 6759). இது ` ஹஸன் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 152 அத்தியாயம் 2 பாடம் 28

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : يُسْرَى عَلَى كِتَابِ اللَّهِ فَيُرْفَعُ إِلَى السَّمَاءِ ، فَلَا يُصْبِحُ فِي الْأَرْضِ آيَةٌ مِنَ الْقُرْآنِ وَلَا مِنَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَلَا الزَّبُورِ ، وَيُنْتَزَعُ مِنْ قُلُوبِ الرِّجَالِ فَيُصْبِحُونَ وَلَا يَدْرُونَ مَا هُوَ . 152

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் வேதம் இரவோடு இரவாக வானத்திற்கு உயர்த்தப்படும் . காலையில் குர்ஆனிலிருந்து ஒரு வசனம் கூடப் பூமியில் இருக்காது . தவ்ராத்தும் இருக்காது ; இன்ஜீலும் இருக்காது ; ஸபூரும் இருக்காது . ஆண்களின் உள்ளங்களிலிருந்து ( அவை ) உருவி எடுக்கப்பட்டுவிடும் . அது என்னவென்றே அவர்கள் அறியாதவர்களாக ஆகிவிடுவார்கள் .

Reference: ( ஹாகிம் : 8544). முஸ்லிம் இமாமின் நிபந்தனைகளுக்கேற்ப அமைந்த ஹதீஸ் ஆகும் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் .