صفة القيامة
அத்தியாயம் 3

மறுமை நாளின் தன்மைகள்

ஹதீஸ் 153 அத்தியாயம் 3 பாடம் 1

(م) عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ . 153

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மனிதர்களில் தீயவர்கள் மீதே யுக முடிவு நாள் ஏற்படும் . ( அதற்கு முன்பே நல்லவர்கள் அனைவரும் மறைந்து விடுவர் .)

Reference: ( முஸ்லிம் : 2949 / 5650)
ஹதீஸ் 154 அத்தியாயம் 3 பாடம் 1

(م) عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ اللَّهُ اللَّهُ . 154

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : பூமியில் " அல்லாஹ் , அல்லாஹ் ` என்று சொல்லப்படாதபோது தான் மறுமை நாள் நிகழும் .

Reference: ( முஸ்லிம் : 148 / 234)
ஹதீஸ் 155 அத்தியாயம் 3 பாடம் 1

عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكُونَ أَسْعَدَ النَّاسِ بِالدُّنْيَا لُكَعُ ابْنُ لُكَعٍ . 155

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுதைஃபா பின் அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அற்பனுக்குப் பிறந்த அற்பன் இவ்வுலகின் செல்வங்களால் மனிதர்களிலேயே பெரிய ஆளாக ஆகாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது .

Reference: ( திர்மிதீ : 2135 / 2209). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 156 அத்தியாயம் 3 பாடம் 2

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ قَالَ أَرْبَعُونَ يَوْمًا قَالَ أَبَيْتُ قَالَ أَرْبَعُونَ شَهْرًا قَالَ أَبَيْتُ قَالَ أَرْبَعُونَ سَنَةً قَالَ أَبَيْتُ قَالَ ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنْ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْبَقْلُ لَيْسَ مِنْ الْإِنْسَانِ شَيْءٌ إِلَّا يَبْلَى إِلَّا عَظْمًا وَاحِدًا وَهُوَ عَجْبُ الذَّنَبِ وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ . 156

அபூசாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : “( உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும் , பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும் ) இரு எக்காளத்திற்கும் ( ஸூர் ) இடையே ( இடைப்பட்டக் காலம் ) நாற்பது `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் . அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நண்பர்கள் , “( அபூஹுரைரா அவர்களே !) நாட்களில் நாற்பதா ?`` என்று கேட்டனர் . அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , “( நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து ) நான் விலகிக் கொள்கிறேன் `` என்று சொன்னார்கள் . ( நண்பர்களான ) அவர்கள் , “ நாற்பது மாதங்களா ?`` என்று கேட்டனர் . அதற்கும் “ நான் விலகிக்கொள்கிறேன் `` என அபூஹுரைரா கூறினார்கள் . “ வருடங்கள் நாற்பதா ?`` என்று கேட்டனர் . அப்போதும் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , “ நான் விலகிக்கொள்கிறேன் `` என்று சொன்னார்கள் . பின்னர் , “ வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான் . அப்போது ( மண்ணறைகளுக்குள் உக்கிப்போயிருக்கும் மனிதச் சடலங்கள் ) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள் . மனிதனிலுள்ள ( உறுப்புகள் ) அனைத்துமே ( மண்ணுக்குள் ) உக்கிப்போகாமல் இருப்பதில்லை . ஆனால் , ஒரேயோர் எலும்பைத் தவிர ! அதுதான் ( முதுகந்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும் ) உள்வால் எலும்பின் ( அணுவளவு ) நுனியாகும் . அதை வைத்தே படைப்பினங்கள் ( மீண்டும் ) மறுமை நாளில் உருவாக்கப்படும் `` என்று மேலும் சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 4935, முஸ்லிம் : 2955)
ஹதீஸ் 157 அத்தியாயம் 3 பாடம் 2

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصُّورُ قَرْنٌ يُنْفَخُ فِيهِ . 157

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எக்காளம் என்பது ஊதப்படும் ஊதுகொம்பு ஆகும் .

Reference: ( அபூதாவூத் : 4742, திர்மிதீ : 2430/ 2354, தாரமீ : 2840). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 158 அத்தியாயம் 3 பாடம் 2

عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ الْقَرْنِ قَدْ الْتَقَمَ الْقَرْنَ وَاسْتَمَعَ الْإِذْنَ مَتَى يُؤْمَرُ بِالنَّفْخِ فَيَنْفُخُ فَكَأَنَّ ذَلِكَ ثَقُلَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمْ قُولُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ عَلَى اللَّهِ تَوَكَّلْنَا . 158

அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என்னால் எப்படி இன்புற்றிருக்க முடியும் ? எக்காளம் ஊதுகின்ற ( வான ) வர் எக்காளத்தின் முனைப்பகுதியைத் தமது வாயில் வைத்துக்கொண்டு ஊதுமாறு எப்போது உத்தரவிடப்படும் என்று காது தாழ்த்திக் காத்திருக்கிறாரே ” என்று கூறினார்கள் .

Reference: ( திர்மிதீ : 2430 / 2355). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 159 அத்தியாயம் 3 பாடம் 2

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : " إِنَّ طَرْفَ صَاحِبِ الصُّورِ مُذْ وُكِّلَ بِهِ مُسْتَعِدٌّ يَنْظُرُ نَحْوَ الْعَرْشِ مَخَافَةَ أَنْ يُؤْمَرَ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْهِ طَرْفُهُ ، كَأَنَّ عَيْنَيْهِ كَوْكَبَانِ دُرِّيَّانِ . 159

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எக்காளம் ஊதுபவருடைய கண்பார்வை அவர் அதற்காக நியமிக்கப்பட்டதிலிருந்து தயாராக இருக்கிறது . அவர் தம் கண்பார்வையைச் சிமிட்டுவதற்குள் ஏவப்பட்டுவிடுவாரோ என்று அஞ்சியவராக அவர் அர்ஷையே பார்த்தவாறு இருக்கிறார் . அவருடைய இரண்டு கண்களும் மின்னக்கூடிய இரண்டு நட்சத்திரங்களைப் போன்று உள்ளன .

Reference: ( ஹாகிம் : 8676). முஸ்லிம் இமாமின் நிபந்தனைகளுக்கேற்ப இது அமைந்துள்ளது என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .
ஹதீஸ் 160 அத்தியாயம் 3 பாடம் 3

(خ ) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الشَّمْسُ وَالْقَمَرُ مُكَوَّرَانِ يَوْمَ الْقِيَامَةِ . 160

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் சூரியனும் சந்திரனும் சுருட்டப்பட்டு ( ஒளியிழந்து ) விடும் .

Reference: ( புகாரீ : 3200)
ஹதீஸ் 161 அத்தியாயம் 3 பாடம் 4

(ق ) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقْبِضُ اللَّهُ الْأَرْضَ يَوْمَ الْقِيَامَةِ وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ الْأَرْضِ . 161

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக்கொள்வான் ; வானத்தைத் தனது வலக்கரத்தில் சுருட்டிக் கொள்வான் ; பிறகு “ நானே அரசன் ; பூமியின் அரசர்கள் எங்கே ?`` என்று கேட்பான் .

Reference: ( புகாரீ : 7382, முஸ்லிம் : 2787)
ஹதீஸ் 162 அத்தியாயம் 3 பாடம் 4

(م) عَنْ عَائِشَةَ قَالَتْ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَوْلِهِ عَزَّ وَجَلَّ يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ فَأَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَئِذٍ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ عَلَى الصِّرَاطِ . 162

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , “ அந்நாளில் பூமி , வேறு பூமியாகவும் வானங்களும் ( வேறு வானங்களாகவும் ) மாற்றப்படும் `` (14:48) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி , “ அல்லாஹ்வின் தூதரே ! அன்றைய நாளில் மக்கள் அனைவரும் எங்கே இருப்பார்கள் ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அஸ்ஸிராத் ( எனும் நரகப் பாலத்தின் ) மீது `` என்று பதிலளித்தார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2791 / 5381)
ஹதீஸ் 163 அத்தியாயம் 3 பாடம் 5

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُحْشَرُ النَّاسُ عَلَى ثَلَاثِ طَرَائِقَ رَاغِبِينَ رَاهِبِينَ وَاثْنَانِ عَلَى بَعِيرٍ وَثَلَاثَةٌ عَلَى بَعِيرٍ وَأَرْبَعَةٌ عَلَى بَعِيرٍ وَعَشَرَةٌ عَلَى بَعِيرٍ وَيَحْشُرُ بَقِيَّتَهُمْ النَّارُ تَقِيلُ مَعَهُمْ حَيْثُ قَالُوا وَتَبِيتُ مَعَهُمْ حَيْثُ بَاتُوا وَتُصْبِحُ مَعَهُمْ حَيْثُ أَصْبَحُوا وَتُمْسِي مَعَهُمْ حَيْثُ أَمْسَوْا . 163

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : ( மறுமை நாள் ஏற்படுவதற்குச் சற்றுமுன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள் . ( அதில் முதல் பிரிவினர் ) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள் . ( இரண்டாவது பிரிவினர் ) ( வாகனப் பற்றாக்குறையால் தாமதித்துப் பின்னர் ) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக , ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக , ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக , ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் பேராகச் செல்வார்கள் . அவர்களுள் எஞ்சியவர் ( களே மூன்றாவது பிரிவினராவர் . அவர் ) களை ( பூமியில் ஏற்படும் ஒரு பெரும் ) தீ ( விபத்து ) ஒன்று திரட்டும் . அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் போதும் , இரவில் ஓய்வெடுக்கும் போதும் , காலை நேரத்தை அடையும் போதும் , மாலை நேரத்தை அடையும் போதும் ( இப்படி எல்லா நேரங்களிலும் ) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும் .

Reference: ( புகாரீ : 6522, முஸ்லிம் : 2861)
ஹதீஸ் 164 அத்தியாயம் 3 பாடம் 5

(ق) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الرِّجَالُ وَالنِّسَاءُ يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالَ الْأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يُهِمَّهُمْ ذَاكِ . 164

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : " நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக , நிர்வாணமானவர்களாக , விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள் `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . உடனே நான் “ அல்லாஹ்வின் தூதரே ! ( நிர்வாணமான ) ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் பார்ப்பார்களே ?`` என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு ( அங்குள்ள ) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும் `` என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 6527, முஸ்லிம் : 2859)
ஹதீஸ் 165 அத்தியாயம் 3 பாடம் 5

(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا ثُمَّ قَرَأَ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ فَأَوَّلُ مَنْ يُكْسَى إِبْرَاهِيمُ . 165

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ நீங்கள் ( மறுமை நாளில் ) காலில் செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள் `` என்று கூறிவிட்டு , பிறகு , “ எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில் , நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்போம் . இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும் . அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம் `` என்னும் (21:104) இறைவசனத்தை ஓதினார்கள் . முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுப வர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆவார்கள் .

Reference: ( புகாரீ : 3447, முஸ்லிம் : 2860)
ஹதீஸ் 166 அத்தியாயம் 3 பாடம் 5

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ مِقْدَارَ نِصْفِ يَوْمٍ مِنْ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ يُهَوِّنُ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ كَتَدَلِّي الشَّمْسِ لِلْغُرُوبِ إِلَى أَنْ تَغْرُبَ . 166

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஐம்பதாயிரம் ஆண்டுகள் கொண்ட நாளில் அரை நாள் வரை அகிலங்களின் இறைவன் முன்னிலையில் மக்கள் நிற்பார்கள் . ( ஆனால் ) அது இறைநம்பிக்கையாளர்களுக்கு சூரியன் மறைவதற்காகத் தணிந்து அது மறையும் வரையுள்ள நேரத்தைப் போன்றதாக இருக்கும் .

Reference: ( இப்னு ஹிப்பான் : 7333). புகாரீ இமாமின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 167 அத்தியாயம் 3 பாடம் 6

(ق) عَنْ سَهْلَ بْنَ سَعْدٍ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى أَرْضٍ بَيْضَاءَ عَفْرَاءَ كَقُرْصَةِ نَقِيٍّ قَالَ سَهْلٌ أَوْ غَيْرُهُ لَيْسَ فِيهَا مَعْلَمٌ لِأَحَدٍ . 167

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து தாம் செவியுற்றதாக சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( உமியோ தவிடோ கலக்காத ) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான ( சம ) தளத்தின்மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள் . இதன் அறிவிப்பாளரான சஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , அல்லது மற்றொருவர் “ அந்த பூமியில் ( மலை , மடுவு , காடு , வீடு என ) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது `` என்று ( கூடுதலாக ) அறிவித்தார்கள் .

Reference: ( புகாரீ : 6521, முஸ்லிம் : 2790)
ஹதீஸ் 168 அத்தியாயம் 3 பாடம் 7

(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ حَتَّى يَغِيبَ أَحَدُهُمْ فِي رَشْحِهِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ . 168

அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “( அது ) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள் `` எனும் (83:6ஆவது) இறைவசனத்தை ஓதிவிட்டு , “ அன்று தம் இரு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தமது வியர்வையில் அவர்களுள் ஒருவர் மூழ்கிப் போய்விடுவார் `` என்று கூறினார்கள்

Reference: ( புகாரீ : 4938, முஸ்லிம் : 2862)
ஹதீஸ் 169 அத்தியாயம் 3 பாடம் 7

(م)عَنْ سُلَيْمُ بْنُ عَامِرٍ حَدَّثَنِي الْمِقْدَادُ بْنُ الْأَسْوَدِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: تُدْنَى الشَّمْسُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ الْخَلْقِ حَتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيلٍ 169

மிக்தாத் பின் அல்அஸ்வத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும் . எந்த அளவுக்கென்றால் , அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலை தூரமே இருக்கும் . அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள் . சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள் வரையிலும் , சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும் , சிலரது வியர்வை இடுப்பு வரையிலும் , சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும் `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் கேட்டேன் . இதைக் கூறியபோது , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது கையால் வாயை நோக்கிச் சைகை செய்தார்கள் . இதன் அறிவிப்பாளரான சுலைம் பின் ஆமிர் ரஹிமஹுல்லாஹ் , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! " மைல் ` என்று பூமியின் தொலைதூர அளவைக் குறிப்பிட்டார்களா ? அல்லது கண்ணில் தீட்டப் பயன்படும் அஞ்சனக் கோலின் அளவைக் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2864 / 5497)
ஹதீஸ் 170 அத்தியாயம் 3 பாடம் 8

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَشَ مِنْهَا نَهْشَةً ثُمَّ قَالَ أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ وَهَلْ تَدْرُونَ مِمَّ ذَلِكَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ يُسْمِعُهُمْ الدَّاعِي وَيَنْفُذُهُمْ الْبَصَرُ وَتَدْنُو الشَّمْسُ فَيَبْلُغُ النَّاسَ مِنْ الْغَمِّ وَالْكَرْبِ مَا لَا يُطِيقُونَ وَلَا يَحْتَمِلُونَ فَيَقُولُ النَّاسُ أَلَا تَرَوْنَ مَا قَدْ بَلَغَكُمْ أَلَا تَنْظُرُونَ مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ عَلَيْكُمْ بِآدَمَ . 170

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ( ஒரு விருந்தில் ) இறைச்சி கொண்டுவரப்பட்டது . அப்போது ( சமைக்கப்பட்ட ) புஜம் ( முன்கால் சப்பை ) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது . அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( அதை ) வாயாலேயே ( பற்களால் ) பற்றிக்கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள் . பிறகு “ நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன் . ( அந்நாளில் ) அல்லாஹ் ( மனிதர்களுள் ) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா ? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும் . ( பார்ப்போரின் ) பார்வை அவர்களை ( நன்கு ) சூழ்ந்து கொண்டிருக்கும் . சூரியன் ( அவர்களுக்கு ) அருகில் வரும் . அப்போது மனிதர்களிடம் , அவர்களால் தாங்கிக் கொள்ளவோ , பொறுத்துக் கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும் . அப்போது மனிதர்கள் ( சிலர் வேறு சிலரை நோக்கி ) ‘ உங்களுக்கு எத்தகைய ( ஆபத்தான ) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா ? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை ( த் தேடிப் ) பார்க்கமாட்டீர்களா ?` என்று கேட்பார்கள் . அப்போது மனிதர்களுள் சிலர் வேறு சிலரிடம் , "( உங்களுடைய ஆதி பிதா ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அணுகுங்கள் ( அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார் ) என்பர் . ஆகவே மனிதர்கள் , ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று " நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள் ; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான் . உங்களுக்குள் தன் ( னால் உருவாக்கப்பட்ட ) உயிரை ஊதினான் . வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான் . அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள் . நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையையும் , எங்களுக்கு நேர்ந்திருக்கும் ( துன்ப ) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கேட்பார்கள் . அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் (" நான் செய்த தவற்றின் காரணத்தால் ) என் இறைவன் என் மீது இன்று ( கடும் ) கோபம் கொண்டிருக்கிறான் . இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒரு போதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை . ( நான் நெருங்கக் கூடாத ஒரு ) மரத்திலிருந்து ( உண்ண வேண்டாமென்று ) என்னை அவன் தடுத்தான் . நான் அவனுக்கு மாறு செய்தேன் . என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது ` என்று கூறிவிட்டு " நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள் . நீங்கள் ( இறைத்தூதர் ) நூஹிடம் செல்லுங்கள் `` என்று சொல்வார்கள் . உடனே மக்களும் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று " நூஹே ! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு ( அனுப்பப்பெற்ற ) முதல் ( புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த ) இறைத்தூதர் ஆவீர்கள் . உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான் . எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா ?` என்று கேட்பார்கள் . அதற்கு நூஹ் அலைஹிஸ்ஸலாம் , " என் இறைவன் இன்று என் மீது ( கடும் ) கோபம் கொண்டுள்ளான் . இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை . ( எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போல் விசேஷமான ) பிரார்த்தனை ஒன்று எனக்கு ( வழங்கப்பட்டு ) இருந்தது . அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டேன் . நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது !` என்று கூறிவிட்டு , " நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள் ; ( இறைவனின் உற்ற நண்பர் ) இப்ராஹீமிடம் செல்லுங்கள் ` என்பார்கள் . அவ்வாறே மக்களும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று , " இப்ராஹீமே ! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களுள் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள் . எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கேட்பார்கள் . அதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் , " என் இறைவன் இன்று என்மீது ( கடுங் ) கோபம் கொண்டுள்ளான் . இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை . நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன் . - அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் .- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது ! ( ஆகவே ,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள் . ( இறைத் தூதர் ) மூஸாவிடம் செல்லுங்கள் ` என்று கூறுவார்கள் . அவ்வாறே மக்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று " மூஸாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள் . தன்னுடைய தூதுத்துவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான் . ( ஆகவே ,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கூறுவார்கள் . அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் " இன்று என் இறைவன் ( என்மீது கடும் ) கோபம் கொண்டுள்ளான் . இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பின்பும் இதைப்போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை . கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன் . நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டி யுள்ளது . ( ஆகவே ,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள் . ( இறைத்தூதர் ) ஈஸாவிடம் செல்லுங்கள் ` என்று கூறுவார்கள் . அவ்வாறே மக்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று , " ஈஸாவே ! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள் . மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் ( ஊதிய ) உயிரும் ஆவீர்கள் . நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள் . ( ஆகவே ,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கேட்பார்கள் . அதற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் , " என் இறைவன் இன்று ( என்மீது கடும் ) கோபம் கொண்டுள்ளான் . இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை .- ( தாம் புரிந்துவிட்டதாக ) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் - நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது ! ( ஆகவே ,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள் ; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள் ` என்று கூறுவார்கள் . அப்போது மக்கள் என்னிடம் வந்து " முஹம்மதே ! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் . இறைத்தூதர்களுள் இறுதியானவர் . உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான் . எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கூறுவர் . அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று , என் இறைவனுக்கு ( பணிந்து ) சஜ்தாவில் விழுவேன் . பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் ( உள்ளத்தில் ) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான் . பிறகு " முஹம்மதே ! உங்கள் தலையை உயர்த்துங்கள் ! கேளுங்கள் ; அது உங்களுக்குத் தரப்படும் . பரிந்துரையுங்கள் ; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் `` என்று சொல்லப்படும் . அப்போது நான் என் தலையை உயர்த்தி " இறைவா ! என் சமுதாயம் . இறைவா ! என் சமுதாயம் ` என்பேன் . அதற்கு " முஹம்மதே ! சொர்க்கத்தின் . வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்வி கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள் ; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம் ` என்று கூறப்படும் . என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக ! சொர்க்க வாசலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் " மக்காவிற்கும் ( யமனிலுள்ள ) " ஹிம்யர் ` எனும் ஊருக்கும் இடையிலுள்ள ` அல்லது " மக்காவிற்கும் ( ஷாமிலுள்ள ) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள ` தூரமாகும் `` என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 4712, முஸ்லிம் : 194) ( சொர்க்க வாசலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் ) " மக்காவிற்கும் ( பஹ்ரைனிலுள்ள ) ஹஜர் எனும் ஊருக்கும் ` இடையிலுள்ள தூரமாகும் என்று முஸ்லிம் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது .
ஹதீஸ் 171 அத்தியாயம் 3 பாடம் 8

عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَفَاعَتِي لِأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي . 171

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என்னுடைய பரிந்துரை என் சமுதாயத்தில் பெரும் பாவம் செய்தவர்களுக்குத்தான் .

Reference: ( அபூதாவூத் : 4739, திர்மிதீ : 2435). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 172 அத்தியாயம் 3 பாடம் 8

عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَال :َ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي آتٍ مِنْ عِنْدِ رَبِّي فَخَيَّرَنِي بَيْنَ أَنْ يُدْخِلَ نِصْفَ أُمَّتِي الْجَنَّةَ وَبَيْنَ الشَّفَاعَةِ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ وَهِيَ لِمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا . 172

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ என் இறைவன் இன்றிரவு எனக்கு எதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொன்னான் என்று உங்களுக்குத் தெரியுமா ?” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வினவினார்கள் . அதற்கு நாங்கள் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர் ” என்றுரைத்தோம் . அப்போது அவர்கள் , “ திண்ணமாக அவன் என் சமுதாயத்தில் பாதிப்பேரைச் சொர்க்கத்தில் நுழைய வைத்தலுக்கும் பரிந்துரைக்கும் இடையே ( எதையேனும் ஒன்றைத் ) தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு வாய்ப்புக் கொடுத்தான் . அப்போது நான் பரிந்துரை செய்யும் உரிமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன் ” என்று கூறினார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே , அதற்குத் தகுதியானவர்களாக நாங்கள் ஆகுவதற்காகத் தாங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் ” என்று நாங்கள் கூறினோம் . “ அது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரியது ” என்றுரைத்தார்கள் .

Reference: ( திர்மிதீ : 2441, இப்னுமாஜா : 4308). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 173 அத்தியாயம் 3 பாடம் 9

( ق) عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ يَا آدَمُ فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ قَالَ يَقُولُ أَخْرِجْ بَعْثَ النَّارِ قَالَ وَمَا بَعْثُ النَّارِ قَالَ مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ فَذَاكَ حِينَ يَشِيبُ الصَّغِيرُ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سَكْرَى وَمَا هُمْ بِسَكْرَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِمْ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّنَا ذَلِكَ الرَّجُلُ قَالَ أَبْشِرُوا فَإِنَّ مِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ أَلْفًا وَمِنْكُمْ رَجُلٌ ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قَالَ فَحَمِدْنَا اللَّهَ وَكَبَّرْنَا ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ إِنَّ مَثَلَكُمْ فِي الْأُمَمِ كَمَثَلِ الشَّعَرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ الرَّقْمَةِ فِي ذِرَاعِ الْحِمَارِ . 173

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளில் ) அல்லாஹ் ( ஆதி மனிதரை நோக்கி ) " ஆதமே !` என்று அழைப்பான் . அதற்கு அவர்கள் “( இறைவா !) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( கட்டளையிடு .) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான் `` என்று கூறுவார்கள் . அப்போது அல்லாஹ் "( உங்கள் சந்ததிகளில் ) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை ( மற்றவர்களிலிருந்து ) தனியாகப் பிரித்திடுங்கள் `` என்று கூறுவான் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் “ எத்தனை நரகவாசிகளை ?`` என்று கேட்பார்கள் . அதற்கு அவன் “ ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை ( த் தனியாகப் பிரித்திடுங்கள் )`` என்று பதிலளிப்பான் . ( அப்போதுள்ள பயங்கரமான சூழ்நிலையின் காரணத்தால் ) பாலகன்கூட நரைத்து ( மூப்படைந்து ) விடுகின்ற , கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை ( ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக ) ப் பிரசவித்து விடுகின்ற நேரம் இதுதான் . மக்களை ( அச்சத்தால் ) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள் . ஆனால் , அவர்கள் ( உண்மையிலேயே மதுவால் ) போதையுற்றிருக்கமாட்டார்கள் . மாறாக , அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும் . இவ்வாறு நபியவர்கள் கூறியது மக்களுக்குச் சிரமமாக இருந்தது . எனவே , அவர்கள் " அல்லாஹ்வின் தூதரே ! ( ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும் ) அந்த ஒரு நபர் எங்களுள் யார் ?`` என்று கேட்டார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( பயப்படாதீர்கள் ;) நற்செய்தி பெறுங்கள் . யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரில் ஆயிரம் பேர் என்றால் , உங்களுள் ஒருவர் ( நரகத்திற்குச் செல்ல தனியாகப் பிரிக்கப்பட்டோரில் ) இருப்பார் `` என்று கூறிவிட்டுப் பிறகு , “ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக ! நீங்கள் சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் பேராவல் கொள்கின்றேன் `` எனக் கூறினார்கள் . உடனே நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் ( அல்லாஹு அக்பர் ) முழக்கமிட்டோம் . பிறகு , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக ! நீங்கள் சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக இருக்க வேண்டுமென நான் பேராவல் கொள்கின்றேன் . மற்ற சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று , அல்லது கழுதையின் காலிலுள்ள வெள்ளைச் சொட்டையைப் போன்று இருக்கிறீர்கள் `` என்று சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 6530, முஸ்லிம் : 222)
ஹதீஸ் 174 அத்தியாயம் 3 பாடம் 10

(م) عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ دَفَعَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى كُلِّ مُسْلِمٍ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا فَيَقُولُ هَذَا فِكَاكُكَ مِنْ النَّارِ . 174

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரை அல்லது கிறிஸ்தவரை ஒப்படைத்து , " இவன்தான் உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான் `` என்று சொல்வான் .

Reference: ( முஸ்லிம் : 2767)
ஹதீஸ் 175 அத்தியாயம் 3 பாடம் 10

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ هَذِهِ الْأُمَّةَ مَرْحُومَةٌ عَذَابُهَا بِأَيْدِيهَا فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ دُفِعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنْ الْمُسْلِمِينَ رَجُلٌ مِنْ الْمُشْرِكِينَ فَيُقَالُ هَذَا فِدَاؤُكَ مِنْ النَّارِ . 175

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக இந்தச் சமுதாயம் அருள்புரியப்பட்ட சமுதாயம் . ( இவ்வுலகில் ) அதனுடைய வேதனை அதன் கைகளில் உள்ளது . மறுமை நாளில் , ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இணைவைப்பாளர்களிலிருந்து ஓர் ஆள் கொடுக்கப்படும் . இவன்தான் நரகத்திலிருந்து உனக்கான பிணை என்று கூறப்படும் .

Reference: ( இப்னுமாஜா : 4282). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 176 அத்தியாயம் 3 பாடம் 11

(ق) عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ الْمَازِنِيِّ قَالَ بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا آخِذٌ بِيَدِهِ إِذْ عَرَضَ رَجُلٌ فَقَالَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي النَّجْوَى فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ يُدْنِي الْمُؤْمِنَ فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ وَيَسْتُرُهُ فَيَقُولُ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا فَيَقُولُ نَعَمْ أَيْ رَبِّ حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ قَالَ سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُونَ فَيَقُولُ الْأَشْهَادُ هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ . 176

ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல் மாஸினீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் , அவர்களுடைய கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் குறுக்கிட்டு , "( மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும் ) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள் ?`` என்று கேட்டார் . அதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹு தஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து , அவன்மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான் . பிறகு அவனை நோக்கி , " நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா ? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா ?` என்று கேட்பான் . அதற்கு அவன் , " ஆம் , என் இறைவா !` என்று கூறுவான் . ( இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி ) அவன் ( தான் செய்த ) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான் . அந்த முஃமின் , " நாம் இத்தோடு ஒழிந்தோம் ` என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன் , " இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன் . இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன் ` என்று கூறுவான் . அப்போது அவனது நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும் . நிராகரிப்பாளர்களையும் , நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள் , " இவர்கள்தாம் , தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள் . எச்சரிக்கை ! இத்தகைய அக்கிரமக்காரர்கள்மீது இறைவனின் சாபம் உண்டாகும் ` என்பார்கள் ` (11: 18) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற நான் கேட்டிருக்கிறேன் `` என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 2441, முஸ்லிம் : 2768)
ஹதீஸ் 177 அத்தியாயம் 3 பாடம் 11

(خ) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنْ النَّارِ حُبِسُوا بِقَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ فَيَتَقَاصُّونَ مَظَالِمَ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا حَتَّى إِذَا نُقُّوا وَهُذِّبُوا أُذِنَ لَهُمْ بِدُخُولِ الْجَنَّةِ فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَأَحَدُهُمْ بِمَسْكَنِهِ فِي الْجَنَّةِ أَدَلُّ بِمَنْزِلِهِ كَانَ فِي الدُّنْيَا . 177

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : முஃமின்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது , சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் . அப்போது உலகில் ( வாழ்ந்தபோது ) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள் . இறுதியில் , அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகிவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் . முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன்மீது சத்தியமாக ! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை , உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள் .

Reference: ( புகாரீ : 2440)
ஹதீஸ் 178 அத்தியாயம் 3 பாடம் 11

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ ؟ قَالُوا : الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ . 178

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( மக்களிடம் ), “ திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் , “ யாரிடம் வெள்ளிக் காசோ ( திர்ஹம் ) பொருட்களோ இல்லையோ அவர்தாம் எங்களைப் பொருத்தவரை திவாலானவர் `` என்று பதிலளித்தார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார் . அவர் மறுமை நாளில் தொழுகை , நோன்பு , ஸகாத் ஆகியவற்றுடன் வருவார் . ( அதே நேரத்தில் ) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார் . ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார் . ஒருவரது பொருளை ( முறைகேடாக ) ப் புசித்திருப்பார் . ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார் . ஒருவரை அடித்திருப்பார் . ஆகவே , அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும் ; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும் . அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால் , ( அவரால் பாதிக்கப்பட்ட ) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு , இவர் மீது போடப்படும் . பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் ( அவரே திவாலாகிப் போனவர் )`` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2581 / 5037)
ஹதீஸ் 179 அத்தியாயம் 3 பாடம் 11

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنْ الشَّاةِ الْقَرْنَاءِ . 179

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள் . எந்த அளவுக்கென்றால் , கொம்பில்லாத ஆட்டுக்காக ( அதை முட்டிய ) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும் .

Reference: ( முஸ்லிம் : 2582 / 5038)
ஹதீஸ் 180 அத்தியாயம் 3 பாடம் 11

(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَحِكَ فَقَالَ هَلْ تَدْرُونَ مِمَّ أَضْحَكُ قَالَ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ مِنْ مُخَاطَبَةِ الْعَبْدِ رَبَّهُ يَقُولُ يَا رَبِّ أَلَمْ تُجِرْنِي مِنْ الظُّلْمِ قَالَ يَقُولُ بَلَى قَالَ فَيَقُولُ فَإِنِّي لَا أُجِيزُ عَلَى نَفْسِي إِلَّا شَاهِدًا مِنِّي قَالَ فَيَقُولُ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ شَهِيدًا وَبِالْكِرَامِ الْكَاتِبِينَ شُهُودًا قَالَ فَيُخْتَمُ عَلَى فِيهِ فَيُقَالُ لِأَرْكَانِهِ انْطِقِي قَالَ فَتَنْطِقُ بِأَعْمَالِهِ قَالَ ثُمَّ يُخَلَّى بَيْنَهُ وَبَيْنَ الْكَلَامِ قَالَ فَيَقُولُ بُعْدًا لَكُنَّ وَسُحْقًا فَعَنْكُنَّ كُنْتُ أُنَاضِلُ . 180

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருகில் இருந்தோம் . அப்போது அவர்கள் சிரித்துவிட்டு , “ நான் சிரித்ததற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்று சொன்னோம் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஓர் அடியான் தன் இறைவனுடன் ( மறுமை நாளில் ) உரையாடுவது குறித் ( து நினைத் ) தே ( சிரித்தேன் )`` என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள் : அடியான் ( தன் இறைவனிடம் ), “ என் இறைவா ! நீ எனக்கு அநீதியிழைப்பதிலிருந்து பாதுகாப்பு வழங்குவாய் என உறுதியளிப்பாய் அல்லவா ?`` என்று கேட்பான் . அதற்கு இறைவன் , ` ஆம் ` என்பான் . அடியான் , “ அவ்வாறாயின் , எனக்கெதிராக ( சாட்சியம் கூற ) என்னிலிருந்து தவிர வேறெந்தச் சாட்சியத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன் `` என்று கூறுவான் . அதற்கு இறைவன் , “ இன்றைய தினம் உனக்கெதிராகச் சாட்சியமளிக்க நீயும் கண்ணியமிக்க எழுத்தர் ( களான வானவர் ) களுமே போதும் `` என்பான் . பிறகு அவனது வாய்க்கு முத்திரையிடப்படும் . அவனுடைய உறுப்புகளிடம் , “ பேசுங்கள் `` என்று சொல்லப்படும் . உடனே அவை அந்த அடியான் செய்த செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் . பிறகு அந்த அடியானும் உறுப்புகளும் தனியாகப் பேசுவதற்கு அனுமதியளிக்கப்படும் . அப்போது அந்த அடியான் , “ உங்களுக்கு நாசமுண்டாகட்டும் ! தொலைந்து போங்கள் . உங்களுக்காகத்தானே நான் ( இவ்வளவு நேரம் இறைவனிடம் ) வழக்காடினேன் `` என்று ( தன் உறுப்புகளிடம் ) சொல்வான் .

Reference: ( முஸ்லிம் : 2969 / 5679)
ஹதீஸ் 181 அத்தியாயம் 3 பாடம் 11

عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ . 181

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூபர்ஸா அல்அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் ஓர் அடியானிடம் ( பின்வரும் விஷயங்கள் குறித்து ) விசாரணை செய்யப்படுவதற்கு முன் அவனுடைய பாதங்கள் ( நின்ற இடத்திலிருந்து ) நகர முடியாது . 1. அவன் வாழ்நாள்-அதை எவ்வாறு கழித்தான் ? 2. அவன் கற்ற கல்வி-அதைக் கொண்டு எவ்விதம் செயல்பட்டான் ? 3. அவன் பொருளாதாரம்-அதை எங்கிருந்து திரட்டினான் ? 4. அ( ப்பொருளாதாரத் ) தை எவ்வாறு செலவிட்டான் ? 5. அவன் உடல் - அதை எதில் ஈடுபடுத்தினான் ?

Reference: ( திர்மிதீ : 2341 / 2417). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 182 அத்தியாயம் 3 பாடம் 11

عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حُوسِبَ عُذِّبَ . 182

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் ( துருவித் துருவி ) கணக்கு கேட்கப்பட்டானோ அவன் வேதனை செய்யப்படுவான் .

Reference: ( திர்மிதீ : 3338). இது முந்தைய (181) ஹதீஸின் அடிப்படையில் ` ஸஹீஹ் ` ஆகும் .
ஹதீஸ் 183 அத்தியாயம் 3 பாடம் 11

عَنْ عَائِشَةَ تَقُولُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْحِسَابِ الْيَسِيرِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا الْحِسَابُ الْيَسِيرُ فَقَالَ الرَّجُلُ تُعْرَضُ عَلَيْهِ ذُنُوبُهُ ثُمَّ يُتَجَاوَزُ لَهُ عَنْهَا إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ وَلَا يُصِيبُ عَبْدًا شَوْكَةٌ فَمَا فَوْقَهَا إِلَّا قَاصَّ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهَا مِنْ خَطَايَاهُ . 183

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , எளிமையான முறையில் கேள்வி கணக்கு கேட்கப்படுவது குறித்துக் கேட்டேன் . “ அல்லாஹ்வின் தூதரே ! எளிமையான முறையில் கேள்வி கணக்கு கேட்கப்படுதல் என்றால் என்ன ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ ஒரு மனிதனிடம் அவனது பாவங்களெல்லாம் எடுத்துக் காட்டப்படும் . பிறகு அவனுக்கு அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் . நிச்சயமாக எவன் துருவித் துருவிக் கேட்கப்பட்டானோ அவன் அழிந்தான் . ஒரு மனிதருக்கு முள்ளோ அதற்கு மேலோ ( ஏதேனும் பொருள் ) தொல்லை கொடுத்தால் அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய பாவங்களுக்கு அதைப் பரிகாரமாக ஆக்காமல் இருப்பதில்லை ” என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 25515, ஹாகிம் : 190). இதன் அறிவிப்பாளர் தொடர் வலுவானது . இது முஸ்லிம் இமாமின் நிபந்தனைக்கேற்ப அமைந்துள்ளது என தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் .
ஹதீஸ் 184 அத்தியாயம் 3 பாடம் 12

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ أُنَاسٌ يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ هَلْ تُضَارُّونَ فِي الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ هَلْ تُضَارُّونَ فِي الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لَيْسَ دُونَهُ سَحَابٌ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّكُمْ تَرَوْنَهُ يَوْمَ الْقِيَامَةِ كَذَلِكَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ فَيَقُولُ مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْهُ فَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الشَّمْسَ وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الْقَمَرَ وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الطَّوَاغِيتَ وَتَبْقَى هَذِهِ الْأُمَّةُ فِيهَا مُنَافِقُوهَا فَيَأْتِيهِمْ اللَّهُ فِي غَيْرِ الصُّورَةِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ نَعُوذُ بِاللَّهِ مِنْكَ هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا فَإِذَا أَتَانَا رَبُّنَا عَرَفْنَاهُ فَيَأْتِيهِمْ اللَّهُ فِي الصُّورَةِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا فَيَتْبَعُونَهُ وَيُضْرَبُ جِسْرُ جَهَنَّمَ . 184

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மக்களுள் சிலர் “ அல்லாஹ்வின் தூதரே ! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா ?`` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள் . அப்போது நபி அவர்கள் “ மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் “ இல்லை ; அல்லாஹ்வின் தூதரே !`` என்று பதிலளித்தார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் “( சிரமம் ) இல்லை ; அல்லாஹ்வின் தூதரே !`` என்று பதிலளித்தார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : இவ்வாறுதான் மறுமை நாளில் உங்கள் இறைவனை நீங்கள் காண்பீர்கள் . அல்லாஹ் மனிதர்களை ( மறுமை மன்றத்தில் ) ஒன்று கூட்டி “( உலகத்தில் ) யார் எதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அதைப் பின் தொடர்ந்து செல்லட்டும் `` என்பான் . ஆகவே , சூரியனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ( சூரியனைப் ) பின்தொடர்ந்து செல்வார்கள் . சந்திரனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ( அதைப் ) பின்தொடர்ந்து செல்வார்கள் . ஷைத்தான்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ( அவற்றைப் ) பின்பற்றிச் செல்வார்கள் . இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள் . அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள் . அப்போது இறைவன் , அவர்கள் அறிந்து கொள்ள முடியாத தோற்றத்தில் அவர்களிடம் வந்து “ நான்தான் உங்கள் இறைவன் `` என்பான் . உடனே அவர்கள் “ உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம் . எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம் . எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம் `` என்பர் . அப்போது இறைவன் அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்திலான தோற்றத்தில் அவர்களிடம் வந்து “ நானே உங்கள் இறைவன் `` என்பான் . அதற்கு அவர்கள் “ நீயே எங்கள் இறைவன் `` என்று கூறிவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள் . அங்கு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : நானே ( அந்தப் பாலத்தைக் ) கடப்பவர்களுள் முதல் ஆளாக இருப்பேன் . அப்போதைய நிலையில் இறைத்தூதர்கள் . அனைவரின் பிரார்த்தனையும் “ அல்லாஹ்வே ! காப்பாற்று காப்பாற்று ” என்பதாகவே இருக்கும் . அந்தப் பாலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும் . அவை கருவேல மரத்தின் முற்களைப் போன்றிருக்கும் . “ கருவேல மர முள்ளை நீங்கள் பார்த்த தில்லையா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் “ ஆம் ( பார்த்திருக்கிறோம் ) அல்லாஹ்வின் தூதரே !`` என்று பதிலளித்தார்கள் . ( தொடர்ந்து ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்று இருக்கும் . ஆயினும் , அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள் . அப்போது அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்பக் கவ்விப் பிடிக்கும் . அவர்களுள் ( இறைமறுப்பு உள்ளிட்ட ) தன் ( தீய ) செயல்களால் அழிந்துபோனவரும் இருப்பார் . ( இறைநம்பிக்கை இருந்தாலும் பாவம் செய்த காரணத்தால் ) மூர்ச்சையாகிப் பிறகு பிழைத்துக் கொள்பவரும் இருப்பார் . இறுதியாக இறைவன் , தன் அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின் , வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று உறுதி கூறியவர்களில் தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான் . அப்போது அவர்களை வெளியேற்றுமாறு வானவர்களுக்கு ஆணையிடுவான் . வானவர்கள் அவர்களை சஜ்தாவின் ( சிரவணக்கத்தின் ) அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள் . ( ஏனெனில் ,) அல்லாஹ் நரகத்திற்கு , மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான் . ஆகவே , வானவர்கள் அவர்களை ( நரகத்திலிருந்து ) வெளியேற்றுவார்கள் . அப்போது அவர்கள் ( நரக நெருப்பில் ) கரிக்கப்பட்டிருப்பார்கள் . எனவே , அவர்கள் மீது " மாஉல் ஹயாத் ` எனப்படும் ( ஜீவ ) நீர் ஊற்றப்படும் . உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைபயிர் முளைப்பதைப் போன்று ( புதுப் பொலிவுடன் ) நிறம் மாறி விடுவார்கள் . அவர்களுள் தமது முகத்தால் நரகத்தை முன்னோக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டும் எஞ்சுவார் . அவர் “ என் இறைவா ! நரகத்தின் ( வெப்பக் ) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது . அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது . ஆகவே , நரகத்தை விட்டு என் முகத்தை ( வேறு பக்கம் ) திருப்பி விடுவாயாக !`` என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார் . அப்போது அல்லாஹ் “( உன் கோரிக்கையை ஏற்று ) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா ?`` என்று கேட்பான் . அதற்கு அவர் “ இல்லை ; உன் கண்ணியத்தின் மீதாணையாக ! வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன் `` என்பார் . ஆகவே , இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு ( வேறு பக்கம் ) திருப்பிவிடுவான் . அதற்குப் பிறகு “ என் இறைவா ! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக !`` என்பார் அவர் . அதற்கு இறைவன் “ வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா ? மனிதா ! உனக்குக் கேடுதான் . உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன !`` என்பான் . ஆனால் , அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார் . அப்போது இறைவன் “ நீ கேட்டதை உனக்கு நான் கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடும் `` என்பான் . அதற்கு அவர் “ இல்லை ; உன் கண்ணியத்தின் மீதாணையாக ! இதுவல்லாத வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் `` என்று சொல்லிவிட்டு , வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் இறைவனிடம் வழங்குவார் . இதையடுத்து இறைவன் அவரைச் சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான் . சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரை மௌனமாக இருப்பார் . பிறகு “ இறைவா ! என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக !`` என்று கூறுவார் . பின்னர் இறைவன் “ வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ சொல்லவில்லையா ? மனிதா ! உனக்குக் கேடுதான் . உனது ஏமாற்று வேலைதான் என்ன !`` என்று கேட்பான் . அதற்கு “ என் இறைவா ! என்னை உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆக்கிவிடாதே !`` என்று இறைவன் சிரிக்கும் வரை பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பார் . அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவருக்கு இறைவன் அனுமதி வழங்கிடுவான் . சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின் , “ நீ ( விரும்பிய ) இன்னதை ஆசைப்படலாம் `` என்று சொல்லப்படும் . அவ்வாறே அவரும் ஆசைப்படுவார் . பிறகு ( மீண்டும் ) “ நீ ( விரும்பிய ) இன்னதை ஆசைப்படலாம் `` என்று சொல்லப்படும் . அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப் பெறும்வரை ஆசைப்பட்டு ( தன் விருப்பங்களைத் தெரிவித்து ) க்கொண்டே இருப்பார் . அப்போது இறைவன் “ இது உனக்குக் கிடைக்கும் ; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும் `` என்பான் . அறிவிப்பாளர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : இந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார் . அதாஉ பின் யஸீத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( மேற்கண்ட ஹதீஸை ) அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு ( அறிவித்தபோது , அவர்கள் ) உடன் அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அமர்ந்திருந்தார்கள் . அன்னார் இந்த ஹதீஸ் தொடர்பாக எந்த மாற்றத்தையும் தெரிவிக்கவில்லை . ஆனால் , “ இது உனக்குக் கிடைக்கும் ; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும் `` என்று கூறியபோதுதான் , அபூசயீத் ரளியல்லாஹு அன்ஹு , “ இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறக் கேட்டேன் `` என்றார்கள் . அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , “ இதைப் போன்று இன்னொரு மடங்கு `` என்றே நான் மனனமிட்டுள்ளேன் என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 6573, 6574, முஸ்லிம் : 182) முஸ்லிம் நூலின் அறிவிப்பில் இடம்பெற்ற வார்த்தைகள் புகாரீயின் மற்றோர் அறிவிப்பில் ( இவ்வாறு ) வந்துள்ளது : நரகத்தின் மேற்பரப்பில் பாலம் அமைக்கப்படும் . ( இறைத்தூதர்கள் தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள் . நானே அ( ந்தப் பாலத் ) தை முதலாவதாகக் கடப்பவன் ஆவேன் . அன்றைய நாளில் இறைத் தூதர்களைத் தவிர வேறு யாரும் பேசமாட்டார்கள் . அன்றைய நாளில் “ இறைவா ! காப்பாற்று ! காப்பாற்று !” என்பதே இறைத்தூதர்களின் பிரார்த்தனையாகும் .
ஹதீஸ் 185 அத்தியாயம் 3 பாடம் 12

عَن أَنَسِ قَالَ : سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَشْفَعَ لِي يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ أَنَا فَاعِلٌ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ أَطْلُبُكَ قَالَ اطْلُبْنِي أَوَّلَ مَا تَطْلُبُنِي عَلَى الصِّرَاطِ قَالَ قُلْتُ فَإِنْ لَمْ أَلْقَكَ عَلَى الصِّرَاطِ قَالَ فَاطْلُبْنِي عِنْدَ الْمِيزَانِ قُلْتُ فَإِنْ لَمْ أَلْقَكَ عِنْدَ الْمِيزَانِ قَالَ فَاطْلُبْنِي عِنْدَ الْحَوْضِ فَإِنِّي لَا أُخْطِئُ هَذِهِ الثَّلَاثَ الْمَوَاطِنَ 185

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , “ மறுமை நாளில் எனக்காக நீங்கள் பரிந்துரை செய்வீர்களா ?” என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல் அவர்கள் , “ அவ்வாறே செய்கிறேன் ” என்று கூறினார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! அப்போது உங்களை நான் எங்கே தேடுவேன் ?” என்று வினவினேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ என்னை நீ தேடுவதிலேயே முதலாவதாக அஸ்ஸிராத் பாலத்தின்மீது தேடு ” என்றார்கள் . “ அந்தப் பாலத்தின்மீது தங்களை நான் சந்திக்க முடியாவிட்டால் ?” என்று கேட்டேன் . “ அப்போது ( மனிதர்களின் நன்மை தீமைகள் நிறுக்கப்படும் ) தராசு அருகில் தேடு ” என்றார்கள் . “ தராசின் அருகிலும் நான் தங்களைச் சந்திக்க முடியாவிட்டால் ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அப்போது என்னை நீ ( அல்கவ்ஸர் எனும் ) தடாகத்தின் அருகில் தேடு ; ஏனெனில் இம்மூன்று இடங்களில் ( ஒன்றிலிருந்து ) நான் தவறிப்போக மாட்டேன் ” என்று கூறினார்கள் .

Reference: ( திர்மிதீ : 2357 / 2433). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 186 அத்தியாயம் 3 பாடம் 12

عن أَبي سَعِيدٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يُوضَعُ الصِّرَاطُ بَيْنَ ظَهْرَانَيْ جَهَنَّمَ عَلَى حَسَكٍ كَحَسَكِ السَّعْدَانِ ثُمَّ يَسْتَجِيزُ النَّاسُ فَنَاجٍ مُسَلَّمٌ وَمَخْدُوجٌ بِهِ ثُمَّ نَاجٍ وَمُحْتَبَسٌ بِهِ وَمَنْكُوسٌ فِيهَا . 186

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஸிராத் ( கடக்கும் பாதை ) சஅதான் மர முள்களைப் போன்ற முள்கள்மீது , நரகத்தின் இருபுறங்களுக்கிடையே அமைக்கப்படும் . பின்னர் மக்கள் அதைக் கடந்து செல்வார்கள் . ( அப்போது அவர்களுள் சிலர் ) நல்ல முறையில் கடந்து சென்றுவிடுவார்கள் . பின்னர் ( அவர்களுள் சிலர் ) கடந்து சென்று இடையில் நிற்பார்கள் . ( அவர்களுள் சிலர் அதனுள் ) தலைகீழாக விழுவார்கள் .

Reference: ( இப்னுமாஜா : 4270 / 4280). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 187 அத்தியாயம் 3 பாடம் 12

عَنْ أَبِي ذَرٍّ قَالَ : وَإِنَّ خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهِدَ إِلَيَّ أَنَّ دُونَ جِسْرِ جَهَنَّمَ طَرِيقًا ذَا دَحْضٍ وَمَزَلَّةٍ ، وَإِنَّا نَأْتِي عَلَيْهِ وَفِي أَحْمَالِنَا اقْتِدَارٌ. 187

அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என்னுடைய உற்ற தோழர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் உறுதி கூறினார்கள் . நிச்சயமாக நரகத்தின் பாலத்தையன்றி ( வேறு ஒரு ) பாதை உள்ளது . அது வழுக்குப் பாதையாகும் . நிச்சயமாக நாம் - நம்முடைய சுமைகளில் நடுநிலையாக உள்ள நிலையில் - அதன்மீது வருவோம் . ( மற்றோர் அறிவிப்பில் , “ நம்முடைய சுமைகள் மென்மையாக உள்ள நிலையில் ” என்று உள்ளது ) நாம் கண்ணியவான்களாக உள்ள நிலையில் , அதன்மீது வருவதிலிருந்து தப்பிக்க நான் அதிகமாக முயற்சி செய்வேன் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 21416) முஸ்லிம் இமாமின் நிபந்தனைக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 188 அத்தியாயம் 3 பாடம் 12

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ : يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ قَالَ : " يُؤْتَوْنَ نُورَهُمْ عَلَى قَدْرِ أَعْمَالِهِمْ مِنْهُمْ مَنْ نُورُهُ مِثْلُ الْجَبَلِ وَأَدْنَاهُمْ نُورًا مَنْ نُورُهُ عَلَى إِبْهَامِهِ يُطْفِي مَرَّةً وَيَقِدُ أُخْرَى . 188

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அவர்களுடைய ஒளி அவர்களின் முன்னிலையில் ஓடும் . (57: 12) எனும் இறைவசனத்தை ஓதிவிட்டுச் சொன்னார்கள் : அவர்கள் தத்தம் நல்லறங்களுக்கு ஏற்ப ஒளி கொடுக்கப்படுவார்கள் . அவர்களுள் ஒருவருக்கு மலையளவு ஒளி இருக்கும் . அவர்களுள் மிகக் குறைவான ஒளியைப் பெறுபவருடைய ஒளி கட்டைவிரல் அளவு இருக்கும் . அது ஒரு தடவை அணையும் ; மறு தடவை ஒளிரும் .

Reference: ( ஹாகிம் : 3785). புகாரீ இமாமின் நிபந்தனைக்கேற்ப இந்த ஹதீஸ் உள்ளது என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .
ஹதீஸ் 189 அத்தியாயம் 3 பாடம் 13

(ق)عَنْ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ مَاؤُهُ أَبْيَضُ مِنْ اللَّبَنِ وَرِيحُهُ أَطْيَبُ مِنْ الْمِسْكِ وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ مَنْ شَرِبَ مِنْهَا فَلَا يَظْمَأُ أَبَدًا . 189

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : (" அல்கவ்ஸர் ` எனும் ) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் ( பரப்பளவு ) கொண்டதாகும் . அதன் நீர் பாலைவிட வெண்மையானது . அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது . அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை . யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள் .

Reference: ( புகாரீ : 6579, முஸ்லிம் : 2292)
ஹதீஸ் 190 அத்தியாயம் 3 பாடம் 13

(ق) عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي عَلَى الْحَوْضِ حَتَّى أَنْظُرَ مَنْ يَرِدُ عَلَيَّ مِنْكُمْ وَسَيُؤْخَذُ نَاسٌ دُونِي فَأَقُولُ يَا رَبِّ مِنِّي وَمِنْ أُمَّتِي فَيُقَالُ هَلْ شَعَرْتَ مَا عَمِلُوا بَعْدَكَ وَاللَّهِ مَا بَرِحُوا يَرْجِعُونَ عَلَى أَعْقَابِهِمْ . 190

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : நான் (" அல்கவ்ஸர் `) தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களுள் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன் . அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள் . உடனே நான் " இறைவா ! ( இவர்கள் ) என்னைச் சேர்ந்தவர்கள் ; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் `` என்பேன் . அதற்கு “ உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா ? அல்லாஹ்வின் மீதாணையாக ! இவர்கள் தங்கள் குதிகால்கள் மீது ( தம் பழைய மதத்திற்கே ) திரும்பச் சென்று கெண்டேயிருந்தார்கள் `` என்று கூறப்படும் .

Reference: ( புகாரீ : 6593, முஸ்லிம் : 2293)
ஹதீஸ் 191 அத்தியாயம் 3 பாடம் 13

(م)عَنْ عَائِشَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ بَيْنَ ظَهْرَانَيْ أَصْحَابِهِ إِنِّي عَلَى الْحَوْضِ أَنْتَظِرُ مَنْ يَرِدُ عَلَيَّ مِنْكُمْ فَوَاللَّهِ لَيُقْتَطَعَنَّ دُونِي رِجَالٌ فَلَأَقُولَنَّ أَيْ رَبِّ مِنِّي وَمِنْ أُمَّتِي فَيَقُولُ إِنَّكَ لَا تَدْرِي مَا عَمِلُوا بَعْدَكَ مَا زَالُوا يَرْجِعُونَ عَلَى أَعْقَابِهِمْ . 191

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்கள் முன்னிலையில் இருந்தபடி கூறினார்கள் : நான் எனது (" அல்கவ்ஸர் ` எனும் ) தடாகத்தினருகில் உங்களில் என்னிடம் வருபவர் யார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன் . அல்லாஹ்வின் மீதாணையாக ! உங்களில் சிலர் என்னிடம் நெருங்க விடாமல் தடுக்கப்படுவர் . அப்போது நான் “ இறைவா ! ( இவர்கள் ) என்னைச் சேர்ந்தவர்கள் ; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் `` என்று கூறுவேன் . அதற்கு இறைவன் , “ இவர்கள் உமக்குப் பின்னால் செய்ததை நீர் அறியமாட்டீர் . இவர்கள் தம் குதிகால்கள்மீது ( தம் பழைய மதத்திற்கே ) திரும்பிச் சென்றுகொண்டேயிருந்தனர் `` என்று கூறுவான் .

Reference: ( முஸ்லிம் : 2294 / 4600)
ஹதீஸ் 192 அத்தியாயம் 3 பாடம் 13

(م) عَنْ أَبِي ذَرٍّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا آنِيَةُ الْحَوْضِ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَآنِيَتُهُ أَكْثَرُ مِنْ عَدَدِ نُجُومِ السَّمَاءِ وَكَوَاكِبِهَا أَلَا فِي اللَّيْلَةِ الْمُظْلِمَةِ الْمُصْحِيَةِ آنِيَةُ الْجَنَّةِ مَنْ شَرِبَ مِنْهَا لَمْ يَظْمَأْ آخِرَ مَا عَلَيْهِ يَشْخَبُ فِيهِ مِيزَابَانِ مِنْ الْجَنَّةِ مَنْ شَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ عَرْضُهُ مِثْلُ طُولِهِ مَا بَيْنَ عَمَّانَ إِلَى أَيْلَةَ مَاؤُهُ أَشَدُّ بَيَاضًا مِنْ اللَّبَنِ وَأَحْلَى مِنْ الْعَسَلِ . 192

அபூதர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் ( நபியவர்களிடம் ), “ அல்லாஹ்வின் தூதரே ! ( அல்கவ்ஸர் எனும் ) அத்தடாகத்தின் கோப்பைகள் என்ன ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக ! அதன் கோப்பைகள் ( எண்ணிக்கையானது ), மேகமோ நிலவோ இல்லாத இரவில் காட்சியளிக்கும் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானதாகும் . அவையே சொர்க்கத்தின் கோப்பைகளாகும் . யார் அ( த்தடாகத் ) தில் அருந்துகிறாரோ அவருக்கு இறுதிவரை தாகமே ஏற்படாது . அதில் சொர்க்கத்திலிருந்து இரு வடிகுழாய்கள் வழியாக நீர் வந்துசேருகிறது . அதில் அருந்துபவருக்குத் தாகமே ஏற்படாது . அத்தடாகத்தின் அகலம் அதன் நீளத்தைப் போன்று ( சம அளவில் ) இருக்கும் . அதன் தொலைதூரம் ( அன்றைய ஷாம் நாட்டிலிருந்த ) " அம்மானு`க்கும் " அய்லா`வுக்கும் இடையேயுள்ள தொலை தூரத்தைக் கொண்டதாகும் . அதன் நீர் பாலைவிட வெண்மையானது ; தேனைவிட மதுரமானது `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2300 / 4608)
ஹதீஸ் 193 அத்தியாயம் 3 பாடம் 14

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَضُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَ عَرَضَاتٍ فَأَمَّا عَرْضَتَانِ فَجِدَالٌ وَمَعَاذِيرُ وَأَمَّا الثَّالِثَةُ فَعِنْدَ ذَلِكَ تَطِيرُ الصُّحُفُ فِي الْأَيْدِي فَآخِذٌ بِيَمِينِهِ وَآخِذٌ بِشِمَالِهِ . 193

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் மக்கள் ( அல்லாஹ்வின் முன்னால் ) மூன்று ( தடவைகள் ) கட்டங்களில் முன்னிலைப் படுத்தப்படுவார்கள் . இரண்டு கட்டங்களில் முன்னிலைப்படுத்தப்படும்போது வாதங்களும் சாக்குப்போக்குகளுமாக இருக்கும் . மூன்றாவது தடவை முன்னிலைப்படுத்தப்படும்போது ( ஒவ்வொருவரின் ) வினைச்சுவடிகள் அவர்களின் கைகளை நோக்கிப் பறந்துவரும் . அதை ( ச் சிலர் ) வலக்கையால் எடுப்பர் . ( வேறு சிலர் ) இடக்கையால் எடுப்பர் .

Reference: ( திர்மிதீ : 2425, இப்னுமாஜா : 4267/4277). இது ` ளஈஃப் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 194 அத்தியாயம் 3 பாடம் 15

عن عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ سَيُخَلِّصُ رَجُلًا مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًّا كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ الْبَصَرِ ثُمَّ يَقُولُ أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا أَظَلَمَكَ كَتَبَتِي الْحَافِظُونَ فَيَقُولُ لَا يَا رَبِّ فَيَقُولُ أَفَلَكَ عُذْرٌ فَيَقُولُ لَا يَا رَبِّ فَيَقُولُ بَلَى إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً فَإِنَّهُ لَا ظُلْمَ عَلَيْكَ الْيَوْمَ فَتَخْرُجُ بِطَاقَةٌ فِيهَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَيَقُولُ احْضُرْ وَزْنَكَ فَيَقُولُ يَا رَبِّ مَا هَذِهِ الْبِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلَّاتِ فَقَالَ إِنَّكَ لَا تُظْلَمُ قَالَ فَتُوضَعُ السِّجِلَّاتُ فِي كَفَّةٍ وَالْبِطَاقَةُ فِي كَفَّةٍ فَطَاشَتْ السِّجِلَّاتُ وَثَقُلَتْ الْبِطَاقَةُ فَلَا يَثْقُلُ مَعَ اسْمِ اللَّهِ شَيْءٌ . 194

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் என் சமுதாயத்திலிருந்து ஒரு மனிதரை அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் ( பெயர் கூறி ) கூவி அழைக்கப்படும் . அவருக்குத் தொண்ணூற்று ஒன்பது ஆவணங்கள் விரிக்கப்படும் . ஒவ்வோர் ஆவணமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ( இருக்கும் ). பின்னர் மகத்துவமும் வல்லமையும் கொண்ட அல்லாஹ் , “ இதிலிருந்து எதையேனும் நீ மறுக்கின்றாயா ?” என்று வினவுவான் . “ இல்லை , என் இறைவா ” என்று கூறுவான் . “ என்னுடைய கண்காணிப்பு எழுத்தர்கள் உனக்கு அநியாயம் செய்து விட்டார்களா ?” என்று கேட்டுவிட்டு , பின்னர் , “ இவை தவிர உனக்கு நன்மை ஏதும் உள்ளதா ?” என்று கேட்பான் . அந்த மனிதன் பயந்துபோய் , “ இல்லை ” என்று கூறுவான் . அதற்கு அல்லாஹ் , “ ஆம் , உனக்காக நம்மிடம் நன்மைகள் உள்ளன . திண்ணமாக இன்றைய நாளில் உமக்கு எந்த அநியாயமும் இல்லை ” என்று கூறுவான் . ( பின்னர் ) அவனுக்காக ஓர் ஏடு வெளிக்கொணரப்படும் . அதில் , அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு ( பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் திண்ணமாக முஹம்மத் அவனுடைய அடியாராகவும் அவனுடைய தூதராகவும் இருக்கின்றார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன் ) என்று ( எழுதப்பட்டு ) இருக்கும் . அப்போது அவன் , “ என் இறைவா , இந்த ஆவணங்களோடு இது என்ன ஏடு ( வேறு )?” என்று வினவுவான் . அப்போது அல்லாஹ் , “ திண்ணமாக நீ அநியாயம் செய்யப்படமாட்டாய் ” என்று கூறுவான் . பிறகு அந்த ஆவணங்கள் ஒரு தட்டிலும் அந்த ஏடு ஒரு தட்டிலும் வைக்கப்படும் . அப்போது அந்த ஆவணங்கள் ( வலுவிழந்து ) மேலே சென்றுவிடும் . அந்த ஏடு ( கனத்தால் ) தாழும் .

Reference: ( திர்மிதீ : 2639, இப்னுமாஜா : 4290./ 4300). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 195 அத்தியாயம் 3 பாடம் 16

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَحْنُ آخِرُ الْأُمَمِ وَأَوَّلُ مَنْ يُحَاسَبُ يُقَالُ أَيْنَ الْأُمَّةُ الْأُمِّيَّةُ وَنَبِيُّهَا فَنَحْنُ الْآخِرُونَ الْأَوَّلُونَ . 195

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நாம் கடைசிச் சமுதாயத்தினர் ஆவோம் . விசாரணை செய்யப்படுவோருள் முதன்மை ஆவோம் . “ உம்மி சமுதாயமும் அதன் நபியும் எங்கே ?“ என்று வினவப்படும் . எனவே நாம்தாம் கடைசியானவர்கள் ( அதே நேரத்தில் விசாரணையில் ) முதன்மையானவர்கள் .

Reference: ( இப்னுமாஜா : 4280 / 4290). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 196 அத்தியாயம் 3 பாடம் 17

عَنِ الْأَسْوَدِ بْنِ سَرِيعٍ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَرْبَعَةٌ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ أَصَمُّ لَا يَسْمَعُ شَيْئًا وَرَجُلٌ أَحْمَقُ وَرَجُلٌ هَرَمٌ وَرَجُلٌ مَاتَ فِي فَتْرَةٍ فَأَمَّا الْأَصَمُّ فَيَقُولُ رَبِّ لَقَدْ جَاءَ الْإِسْلَامُ وَمَا أَسْمَعُ شَيْئًا وَأَمَّا الْأَحْمَقُ فَيَقُولُ رَبِّ لَقَدْ جَاءَ الْإِسْلَامُ وَالصِّبْيَانُ يَحْذِفُونِي بِالْبَعْرِ وَأَمَّا الْهَرَمُ فَيَقُولُ رَبِّي لَقَدْ جَاءَ الْإِسْلَامُ وَمَا أَعْقِلُ شَيْئًا وَأَمَّا الَّذِي مَاتَ فِي الْفَتْرَةِ فَيَقُولُ رَبِّ مَا أَتَانِي لَكَ رَسُولٌ فَيَأْخُذُ مَوَاثِيقَهُمْ لَيُطِيعُنَّهُ فَيُرْسِلُ إِلَيْهِمْ أَنْ ادْخُلُوا النَّارَ قَالَ فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ دَخَلُوهَا لَكَانَتْ عَلَيْهِمْ بَرْدًا وَسَلَامًا . 196

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அஸ்வத் பின் சரீஉ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான்கு பேர் மறுமை நாளில் விசாரிக்கப்படுவர் . 1. செவிடன்-எதையும் செவியுறாதவன் . 2. ( நல்லது எது , கெட்டது எது என அறிய முடியாத ) முட்டாள் , 3. ( எதற்கும் இயலாத ) தள்ளாடும் பருவத்தில் உள்ள முதியவர் , 4. ( எந்த இறைத்தூதரும் வராத ) இடைவெளிக் காலத்தில் வாழ்ந்தவர் . செவிடர் சொல்வார் : என் இறைவா ! நான் எதையும் செவியுற முடியாத நிலையில் இருந்தபோது இஸ்லாமிய மார்க்கம் வந்தது . முட்டாள் சொல்வார் : என் இறைவா ! என்னைச் சிறுவர்கள் ( கேலி செய்து ) விட்டையால் அடித்துக் கொண்டிருந்த நிலையில் இஸ்லாம் வந்தது . தள்ளாடும் பருவத்தில் உள்ள முதியவர் கூறுவார் : “ என் இறைவா ! நான் எதையும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் இஸ்லாம் வந்தது .” ( எந்த இறைத்தூதரும் வராத ) இடைவெளிக் காலத்தில் வாழ்ந்தவர் சொல்வார் : “ என் இறைவா ! உன்னிடமிருந்து எந்தத் தூதரும் வரவில்லை .” ( அதன்பின் ) அவர்களுடைய வாக்குறுதிகளை எடுத்துக்கொள்வான் . அவர்கள் அவனுக்குப் பணிகின்றார்களா என்று சோதிப்பதற்காக , அவர்களிடம் “ நரகத்தில் நுழையுங்கள் ” என்று தூது அனுப்புவான் . முஹம்மதின் ஆன்மா எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக ! அதில் அவர்கள் நுழைந்தால் அது அவர்களுக்கு இதம் தரும் குளிர்ச்சியாக இருக்கும் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 16301). இது ` ஹஸன் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் . இதன் அறிவிப்பாளர்தொடர் ‘ ளஈஃப் ’ தரத்தில் உள்ளது .