விதியை நம்புதல்
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ حَتَّى يَعْلَمَ أَنَّ مَا أَصَابَهُ لَمْ يَكُنْ لِيُخْطِئَهُ وَأَنَّ مَا أَخْطَأَهُ لَمْ يَكُنْ لِيُصِيبَهُ . 249
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அவர்கள் நன்மையும் தீமையும் விதியின் படியே நடக்கின்றன என்று நம்பாத வரை ஓர் அடியார் இறைநம்பிக்கை கொண்டவராக மாட்டார் . எந்த அளவுக்கென்றால் , தமக்குக் கிடைத்த ஒன்று , கிடைத்திருக்கக் கூடாதது அல்ல என்றும் , தமக்குக் கிடைக்காத ஒன்று கிடைத்திருக்க வேண்டியது அல்ல என்றும் அவர் அறிந்துகொள்ள வேண்டும் . ( அதாவது கிடைக்கக் கூடியதுதான் கிடைத்திருக்கிறது ; கிடைக்கக் கூடாததுதான் கிடைக்காமல் போயிருக்கிறது என்று அறிதல் வேண்டும் .)
عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُؤْمِنَ بِأَرْبَعٍ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ بَعَثَنِي بِالْحَقِّ وَيُؤْمِنُ بِالْمَوْتِ وَبِالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ وَيُؤْمِنُ بِالْقَدَرِ . 250
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான்கு விஷயங்கள்மீது நம்பிக்கை கொள்ளாத வரை எந்த அடியாரும் இறைநம்பிக்கையாளராக ஆகமாட்டார் . 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை ; நான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஆவேன் ; என்னை அவன் சத்திய ( மார்க்க ) த்துடன் அனுப்பிவைத்தான் என உறுதிமொழிவது . 2. மரணம் உண்டு என நம்புவது , 3. ( அனைவரும் ) இறந்தபின் ( உயிர் கொடுத்து ) எழுப்பப்படும் என்பதை நம்புவது 4. விதியை நம்புவது .
عَنْ ابْنِ الدَّيْلَمِيِّ قَالَ أَتَيْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ فَقُلْتُ لَهُ وَقَعَ فِي نَفْسِي شَيْءٌ مِنْ الْقَدَرِ فَحَدِّثْنِي بِشَيْءٍ لَعَلَّ اللَّهَ أَنْ يُذْهِبَهُ مِنْ قَلْبِي قَالَ لَوْ أَنَّ اللَّهَ عَذَّبَ أَهْلَ سَمَاوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ عَذَّبَهُمْ وَهُوَ غَيْرُ ظَالِمٍ لَهُمْ وَلَوْ رَحِمَهُمْ كَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لَهُمْ مِنْ أَعْمَالِهِمْ وَلَوْ أَنْفَقْتَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا فِي سَبِيلِ اللَّهِ مَا قَبِلَهُ اللَّهُ مِنْكَ حَتَّى تُؤْمِنَ بِالْقَدَرِ وَتَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَأَنَّ مَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ وَلَوْ مُتَّ عَلَى غَيْرِ هَذَا لَدَخَلْتَ النَّارَ . 251
அப்துல்லாஹ் பின் ஃபைரூஸ் அத்தைலமீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இந்த ( தலை ) விதி தொடர்பாக என் மனதுக்குள் ஐயப்பாடு எழுந்தது . எங்கே அது என் மார்க்க நம்பிக்கையையும் என் ( மற்ற ) விவகாரங்களையும் பாழாக்கிவிடுமோ என நான் அஞ்சினேன் . ஆகவே , நான் ( நபித்தோழர் ) உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று , " அபுல் முன்திர் ! இந்த விதி தொடர்பாக என் மனதுக்குள் ஐயம் உள்ளது . அது எங்கே என் மார்க்க நம்பிக்கையையும் என் ( இதர ) விவகாரங்களையும் பாழாக்கி விடுமோ என நான் அஞ்சினேன் . ஆகவே , இது குறித்து ஏதேனும் ( நபிமொழியைக் ) கூறுங்கள் ! அதன் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக்கூடும் `` என்று சொன்னேன் . அப்போது உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : அல்லாஹ் தனது வானத்திலும் பூமியிலும் உள்ள அனைவரையும் வேதனைப் படுத்தினால் அல்லாஹ் அவர்களை வேதனைப்படுத்தியதற்காக அவன் அநீதி இழைத்தவனாக ஆகமாட்டான் . அவன் அவர்கள் அனைவர் மீதும் கருணை காட்டினால் அவர்கள் ( இவ்வுலகில் ) புரிந்த நல்லறங்களை விடச் சிறந்ததாகவே அது இருக்கும் . உன்னிடம் " உஹுத் மலையளவு தங்கம் ` அல்லது " உஹுத் மலையளவு செல்வம் ` இருந்து அவற்றை இறைவழியில் நீ ஈந்தாலும் நீ விதி தொடர்பாக நம்பிக்கை கொள்ளாத வரை அவை உன்னிடமிருந்து ஏற்கப்படாது . அறிந்துகொள் ! உனக்குக் கிடைத்துள்ள ஒன்று , உனக்குக் கிடைக்காதென ( விதியில் எழுதப்பட்டதாக ) இருக்கவுமில்லை ; உனக்குக் கிடைக்காமல் போன ஒன்று உனக்குக் கிடைக்குமென ( விதியில் எழுதப்பட்டதாக ) இருக்கவுமில்லை . ( உனக்குக் கிடைக்குமென விதியில் இருந்ததே கிடைத்தது ; கிடைக்காதென விதியில் இருந்ததே உனக்குக் கிடைக்கவில்லை ). இதற்கு மாறான நம்பிக்கையில் நீ இறந்துபோனால் நரகத்தில்தான் நீ நுழைவாய் `` என்று கூறிவிட்டு , “ இது குறித்து நீ என் சகோதரர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊதிடம் வினவினால் எந்தப் பிரச்சனையுமில்லை `` என்று கூறினார்கள் . அவ்வாறே நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று இது குறித்து வினவினேன் . அப்போது அவரும் உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதைப் போன்றே கூறினார்கள் . மேலும் “ நீ ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று இது குறித்து வினவினால் எந்தப் பிரச்சனையும் இல்லை `` என்றார்கள் . அவ்வாறே நான் ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ( இது குறித்து ) வினவினேன் . அவர்களும் அவ்விருவரும் கூறியதைப் போன்றே கூறினார்கள் . மேலும் " நீ ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ( இது குறித்து ) கேள் !`` என்றார்கள் அவ்வாறே நான் ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று வினவினேன் . அப்போது அவர்கள் நபியவர்கள் கூறியதாக மேற்கண்டவாறே கூறினார்கள் :
عُبَادَةُ بْنُ الصَّامِتِ لِابْنِهِ يَا بُنَيَّ إِنَّكَ لَنْ تَجِدَ طَعْمَ حَقِيقَةِ الْإِيمَانِ حَتَّى تَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَمَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ فَقَالَ لَهُ اكْتُبْ قَالَ رَبِّ وَمَاذَا أَكْتُبُ قَالَ اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ يَا بُنَيَّ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ مَاتَ عَلَى غَيْرِ هَذَا فَلَيْسَ مِنِّي . 252
உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு தம் மகனுக்குக் கூறியதாவது : “ என்னருமை மகனே ! நிச்சயமாக நீ , உனக்குக் கிடைத்துள்ள ஒன்று , உனக்குக் கிடைக்காதென ( விதியில் எழுதப்பட்டதாக ) இருக்கவுமில்லை ; உனக்குக் கிடைக்காமல்போன ஒன்று உனக்குக் கிடைக்குமென ( விதியில் எழுதப்பட்டதாக ) இருக்கவுமில்லை . ( உனக்குக் கிடைக்குமென விதியில் இருந்ததே கிடைத்தது ; கிடைக்காதென விதியில் இருந்ததே உனக்குக் கிடைக்கவில்லை ) என்பதை நீ அறியும் வரை நீ உண்மையான ஈமானின் சுவையை ஒருபோதும் சுவைக்க முடியாது . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் செவியுற்றேன் : அல்லாஹ் முதன் முதலில் எழுதுகோலைப் படைத்தான் . அதனிடம் , “ நீ எழுது ” என்றான் . “ என் இறைவா ! நான் எதை எழுதுவேன் ?“ என்றது . அதற்கு அவன் , “ இறுதி நாள் வரையுள்ள எல்லாப் பொருள்களின் விதிகளையும் எழுது ” என்றான் . “ என்னருமை மகனே ! யார் இது அல்லாத நிலையில் ( விதியை நம்பாமல் ) இறந்துவிட்டாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் செவியுற்றேன் .
(م) عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُلِقَتْ الْمَلَائِكَةُ مِنْ نُورٍ وَخُلِقَ الْجَانُّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ وَخُلِقَ آدَمُ مِمَّا وُصِفَ لَكُمْ . 253
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர் . " ஜின்`கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர் . ( ஆதி மனிதர் ) ஆதம் , உங்களுக்கு ( குர்ஆனில் ) கூறப்பட்டுள்ளதைப் போன்று ( களிமண்ணால் ) படைக்கப்பட்டார் .
(م) عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا صَوَّرَ اللَّهُ آدَمَ فِي الْجَنَّةِ تَرَكَهُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَتْرُكَهُ فَجَعَلَ إِبْلِيسُ يُطِيفُ بِهِ يَنْظُرُ مَا هُوَ فَلَمَّا رَآهُ أَجْوَفَ عَرَفَ أَنَّهُ خُلِقَ خَلْقًا لَا يَتَمَالَكُ . 254
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் ( முதல் மனிதர் ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சொர்க்கத்தில் ( களிமண்ணால் ) படைத்து , தான் நாடிய காலம் வரை அப்படியே விட்டுவிட்டான் . இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான் . வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது “ தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ( கட்டுப்பாடற்ற ) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது `` என அவன் அறிந்துகொண்டான் .
(م) عن أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ مِنْ قَبْضَةٍ قَبَضَهَا مِنْ جَمِيعِ الْأَرْضِ فَجَاءَ بَنُو آدَمَ عَلَى قَدْرِ الْأَرْضِ جَاءَ مِنْهُمْ الْأَحْمَرُ وَالْأَبْيَضُ وَالْأَسْوَدُ وَبَيْنَ ذَلِكَ وَالسَّهْلُ وَالْحَزْنُ وَالْخَبِيثُ وَالطَّيِّبُ . 255
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , ( முதல் மனிதர் ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் எடுத் ( துவரச் செய் )த ஒரு கைப்பிடி மண்ணிலிருந்தே படைத்தான் . ஆகவேதான் , ஆதமின் மக்கள் ( மனிதர்கள் ) பூமியின் தன்மைக்கேற்பவே உள்ளனர் . இதனாலேயே அவர்களில் சிவப்பரும் வெள்ளையரும் கருப்பரும் இவற்றுக்கு இடைப்பட்ட நிறம் கொண்டோரும் , மெல்லிய இயல்பாளரும் முரடரும் நல்லோரும் தீயோரும் இருக்கின்றனர் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ وَنَفَخَ فِيهِ الرُّوحَ عَطَسَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ فَحَمِدَ اللَّهَ بِإِذْنِهِ فَقَالَ لَهُ رَبُّهُ يَرْحَمُكَ اللَّهُ يَا آدَمُ اذْهَبْ إِلَى أُولَئِكَ الْمَلَائِكَةِ إِلَى مَلَإٍ مِنْهُمْ جُلُوسٍ فَقُلْ السَّلَامُ عَلَيْكُمْ قَالُوا وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ ثُمَّ رَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ إِنَّ هَذِهِ تَحِيَّتُكَ وَتَحِيَّةُ بَنِيكَ بَيْنَهُمْ فَقَالَ اللَّهُ لَهُ وَيَدَاهُ مَقْبُوضَتَانِ اخْتَرْ أَيَّهُمَا شِئْتَ قَالَ اخْتَرْتُ يَمِينَ رَبِّي وَكِلْتَا يَدَيْ رَبِّي يَمِينٌ مُبَارَكَةٌ ثُمَّ بَسَطَهَا فَإِذَا فِيهَا آدَمُ وَذُرِّيَّتُهُ فَقَالَ أَيْ رَبِّ مَا هَؤُلَاءِ فَقَالَ هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَإِذَا كُلُّ إِنْسَانٍ مَكْتُوبٌ عُمْرُهُ بَيْنَ عَيْنَيْهِ فَإِذَا فِيهِمْ رَجُلٌ أَضْوَؤُهُمْ أَوْ مِنْ أَضْوَئِهِمْ قَالَ يَا رَبِّ مَنْ هَذَا قَالَ هَذَا ابْنُكَ دَاوُدُ قَدْ كَتَبْتُ لَهُ عُمْرَ أَرْبَعِينَ سَنَةً قَالَ يَا رَبِّ زِدْهُ فِي عُمْرِهِ قَالَ ذَاكَ الَّذِي كَتَبْتُ لَهُ قَالَ أَيْ رَبِّ فَإِنِّي قَدْ جَعَلْتُ لَهُ مِنْ عُمْرِي سِتِّينَ سَنَةً قَالَ أَنْتَ وَذَاكَ قَالَ ثُمَّ أُسْكِنَ الْجَنَّةَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أُهْبِطَ مِنْهَا فَكَانَ آدَمُ يَعُدُّ لِنَفْسِهِ قَالَ فَأَتَاهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ لَهُ آدَمُ قَدْ عَجَّلْتَ قَدْ كُتِبَ لِي أَلْفُ سَنَةٍ قَالَ بَلَى وَلَكِنَّكَ جَعَلْتَ لِابْنِكِ دَاوُدَ سِتِّينَ سَنَةً فَجَحَدَ فَجَحَدَتْ ذُرِّيَّتُهُ وَنَسِيَ فَنَسِيَتْ ذُرِّيَّتُهُ قَالَ فَمِنْ يَوْمِئِذٍ أُمِرَ بِالْكِتَابِ وَالشُّهُودِ . 256
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்து அவர்களுக்குள் உயிரை ஊதியபோது ஆதம் அவர்களுக்கு தும்மல் ஏற்பட்டது . அப்போது அவர்கள் , ` அல்ஹம்து லில்லாஹ் ( எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே )` என்று சொல்ல நினைத்தார்கள் . பிறகு அல்லாஹ்வின் உத்தரவின்படியே (` அல்ஹம்து லில்லாஹ் ` என்று ) அவனைப் புகழ்ந்தார்கள் . அப்போது அவர்களுடைய இறைவன் அவர்களிடம் , ` ஆதமே ! அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக . நீர் அந்த வானவர்களிடம் - அதாவது அவர்களில் அமர்ந்திருக்கும் அந்தப் பிரமுகர்களிடம் - சென்று , ` அஸ்ஸலாமு அலைக்கும் ( உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் )` என்று ( முகமன் ) கூறுவீராக ` என்றான் . ( அவ்வாறே ஆதம் அலைஹிஸ்ஸலாம் சென்று முகமன் கூறினார்கள் .) அப்போது வானவர்கள் , ` வஅலைக்கஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ் ` ( தங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும் )` என்று ( பதில் ) சொன்னார்கள் . பிறகு ஆதம் அலைஹிஸ்ஸலாம் தம் இறைவனிடம் திரும்பி வந்தார்கள் . அப்போது அல்லாஹ் , `( ஆதமே !) இதுதான் உமது முகமனும் உம்முடைய சந்ததிகள் தங்களுக்கிடையே கூறும் முகமனும் ஆகும் ` என்று சொன்னான் . பின்னர் அல்லாஹ் தன் இரு கைகளையும் மடக்கி வைத்துக்கொண்டு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் , ` இவ்விரண்டில் நீர் விரும்பியதைத் தேர்வு செய்வீராக ` என்றான் . ஆதம் அவர்கள் , ` நான் என் இறைவனின் வலக்கரத்தைத் தேர்வு செய்துகொண்டேன் ` என்றார்கள் . என் இறைவனின் இரு கரங்களுமே வளமிக்க வலக்கரம் தான் . பிறகு இறைவன் தனது வலக்கரத்தை விரித்தான் . அதில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தோற்றமும் , அவர்களின் சந்ததிகளுடைய தோற்றங்களும் இருந்தன . ஆதம் அவர்கள் , ` இறைவா ! இவர்களெல்லாம் யார் ?` என்று கேட்டார்கள் . அதற்கு இறைவன் , ` இவர்களெல்லாம் உம் சந்ததிகளாவார்கள் என்று பதிலளித்தான் . அவர்கள் ஒவ்வொருவரின் இரு கண்களுக்கிடையே அவரது ஆயுட்காலம் எழுதப்பட்டிருந்தது . ` மிகவும் பிரகாசமிக்க ஒருவர் ` அல்லது ` மிகவும் பிரகாசமிக்கோருள் ஒருவர் ` அவர்களில் காணப்பட்டார் . ` இறைவா ! இவர் யார் ?` என ஆதம் அலைஹிஸ்ஸலாம் கேட்டார்கள் . அதற்கு இறைவன் , ` இவர் உம் மகன் தாவூத் ஆவார் . இவரது ஆயுட்காலம் நாற்பது ஆண்டுகள் என எழுதியுள்ளேன் ` என்று கூறினான் . ` இறைவா ! அவரது ஆயுட்காலத்தை இன்னும் அதிகப்படுத்துவாயாக ` என்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள் . அதற்கு இறைவன் , `( இல்லை ;) அதுதான் அவருக்கு நான் எழுதிய அளவாகும் ` என்று கூறிவிட்டான் . ` இறைவா ! ( அப்படியானால் ) எனது ஆயுட்காலத்தில் அறுபது வருடங்களை அவருக்கு நான் கொடுத்துவிட்டேன் ` என ஆதம் அலைஹிஸ்ஸலாம் கூற , `( அப்படியானால் ) அது உனது விருப்பம் ` என இறைவன் பதிலளித்தான் . பின்னர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ் நாடிய காலம் வரை சொர்க்கத்தில் தங்கவைக்கப்பட்டார்கள் . பிறகு அங்கிருந்து ( பூமிக்கு ) இறக்கப்பட்டார்கள் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் தமது ஆயுட்காலத்தைக் கணக்கிட்டுக்கொண்டே வந்தார்கள் . ( அவர்களது ஆயுளில் தொள்ளாயிரத்து நாற்பது ஆண்டுகள் முடிவுற்றபோது ) ` மலக்குல் மவ்த் ` ( உயிரைக் கைப்பற்றிச்செல்ல வரும் வானவர் ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்தார் . அப்போது ஆதம் அலைஹிஸ்ஸலாம் மலக்குல் மவ்த்திடம் , ` நீங்கள் சீக்கிரமாக வந்துவிட்டீர்கள் ; எனது ஆயுட்காலம் ஆயிரம் வருடம் என எழுதப்பட்டுள்ளது ` என்றார்கள் . அதற்கு அந்த வானவர் , ` ஆம் ! ( நீர் கூறுவது சரிதான் .) எனினும் , நீர் உன் மகன் தாவூதுக்கு அறுபது வருடங்களைக் கொடுத்துவிட்டீர் ` என்று கூறினார் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் மறுத்தார்கள் . எனவே , அவர்களுடைய சந்ததிகளும் மறுத்தார்கள் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் மறந்தார்கள் . எனவே , அவர்களுடைய சந்ததிகளும் மறந்தார்கள் . அன்றிலிருந்துதான் ( கொடுக்கல் வாங்கலை ) எழுதிவைக்குமாறும் , அதற்குச் சாட்சிகளை ஏற்படுத்துமாறும் ( மக்களுக்கு ) உத்தரவிடப்பட்டது .
(م) عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ . 257
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இப்லீஸ் , தனது சிம்மாசனத்தை ( கடல் ) நீரின்மீது அமைக்கிறான் . பிறகு தன் பட்டாளங்களை ( மக்களிடையே ) அனுப்புகிறான் . அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற ( ஷைத்தான் எவனோ அ) வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான் . அவனிடம் ஷைத்தான்களுள் ஒருவன் ( திரும்பி ) வந்து “ நான் இன்னின்னவாறு செய்தேன் `` என்று கூறுவான் . அப்போது இப்லீஸ் , “( சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ) நீ எதையும் செய்யவில்லை `` என்று கூறுவான் . பிறகு அவர்களுள் மற்றொருவன் வந்து , “ நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை `` என்று கூறுவான் . அப்போது இப்லீஸ் , அவனை அருகில் வரச் செய்து , “ நீதான் சரி ( யான ஆள் )`` என்று ( பாராட்டிக் ) கூறுவான் .
(م) عَنْ جَابِرٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ قَدْ أَيِسَ أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ فِي جَزِيرَةِ الْعَرَبِ وَلَكِنْ فِي التَّحْرِيشِ بَيْنَهُمْ . 258
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான் . எனினும் , அவர்களிடையே பிளவை உருவாக்குவ ( தில் வெற்றி கண்டு விட்டா ) ன் .
عَنْ سَبْرَةَ بْنِ أَبِي فَاكِهٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ قَعَدَ لِابْنِ آدَمَ بِأَطْرُقِهِ فَقَعَدَ لَهُ بِطَرِيقِ الْإِسْلَامِ فَقَالَ تُسْلِمُ وَتَذَرُ دِينَكَ وَدِينَ آبَائِكَ وَآبَاءِ أَبِيكَ فَعَصَاهُ فَأَسْلَمَ ثُمَّ قَعَدَ لَهُ بِطَرِيقِ الْهِجْرَةِ فَقَالَ تُهَاجِرُ وَتَدَعُ أَرْضَكَ وَسَمَاءَكَ وَإِنَّمَا مَثَلُ الْمُهَاجِرِ كَمَثَلِ الْفَرَسِ فِي الطِّوَلِ فَعَصَاهُ فَهَاجَرَ ثُمَّ قَعَدَ لَهُ بِطَرِيقِ الْجِهَادِ فَقَالَ تُجَاهِدُ فَهُوَ جَهْدُ النَّفْسِ وَالْمَالِ فَتُقَاتِلُ فَتُقْتَلُ فَتُنْكَحُ الْمَرْأَةُ وَيُقْسَمُ الْمَالُ فَعَصَاهُ فَجَاهَدَ. 259
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக ஸப்ரா பின் அபீஃபாகிஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக ஷைத்தான் ஆதமுடைய மகனுக்காக ( அவன் செல்லும் ) பல பாதைகளில் ( அவனைத் தடுப்பதற்காக ) அமர்ந்தான் . இஸ்லாமிய மார்க்கத்தின் பாதையில் அமர்ந்துகொண்டு , நீ உன்னுடைய மார்க்கத்தையும் உன்னுடைய மூதாதையர் மார்க்கத்தையும் உன்னுடைய மூதாதையரின் பெற்றோருடைய மார்க்கத்தையும் விட்டுவிட்டு முஸ்லிமாகிறாயா ? என்று கேட்டான் . அதற்கவன் , அவனுக்கு மாறு செய்துவிட்டு முஸ்லிமானான் . பின்னர் அவன் ஹிஜ்ரத் செய்யும் வழியில் அமர்ந்தான் . உன்னுடைய பூமியையும் வானத்தையும் விட்டுவிட்டு நீ ஹிஜ்ரத் செய்கிறாயா ? திண்ணமாக ஹிஜ்ரத் செய்பவர் நீண்ட கயிற்றிலுள்ள குதிரையைப் போன்றவர் ஆவார் என்று கூறினான் . அவனுக்கு மாறு செய்துவிட்டு ( அல்லாஹ்விற்காக ) ஹிஜ்ரத் செய்தான் . அவன் ( அல்லாஹ்விற்காகப் ) போராடும் பாதையில் அமர்ந்தான் . பொருளையும் உயிரையும் வருத்திக்கொண்டு நீ போராடப் போகின்றாயா ? நீ போராடினால் கொல்லப்படுவாய் . ( உன் ) மனைவி ( வேறொருவனுக்கு ) மணமுடிக்கப்படுவாள் . ( உன்னுடைய ) பொருட்செல்வம் ( உறவினர்களுக்குப் ) பங்கிடப்படும் என்று கூறி ( அச்சமூட்டி ) னான் . ( அப்போதும் ) அவனுக்கு மாறு செய்துவிட்டு ( அல்லாஹ்விற்காக ) ப் போராடினான் . " யார் இவ்வாறு செய்தாரோ அவரை மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வது கடமையாகிவிட்டது . யார் ( போரில் கலந்துகொள்ளும்போது ) கொல்லப்பட்டாரோ அவரை மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வது கடமையாகிவிட்டது . யார் ( தண்ணீரில் ) மூழ்கிவிட்டாரோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வது கடமையாகிவிட்டது . யாரை அவருடைய வாகனம் கீழே தள்ளிவிட்டதோ ( அதன்மூலம் அவர் இறந்துவிட்டாரோ ) அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வது கடமையாகிவிட்டது .``
(ق) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يُرْسَلُ الْمَلَكُ فَيَنْفُخُ فِيهِ الرُّوحَ وَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ بِكَتْبِ رِزْقِهِ وَأَجَلِهِ وَعَمَلِهِ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ فَوَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ إِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُهَا وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلُهَا . 260
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவரது கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது " பகல் ` அல்லது " இரவு ` சேமிக்கப்படுகிறது . பிறகு அதைப் போன்றே (40 நாள்கள் ) அது ( அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும் ) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது . பிறகு அதைப் போன்றே ( மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற ) ஒரு சதைப் பிண்டமாக மாறுகிறது . பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார் . அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன : அவர் , ( கருவாக இருக்கும் ) அந்த மனிதனின் வாழ்வாதாரத்தையும் , அவனது வாழ்நாளையும் , செயல்பாட்டையும் , அவன் ( இறுதிக் கட்டத்தில் ) துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா என்பதையும் ( இறைவனின் கட்டளைப்படி ) பதிவு செய்கிறார் . பிறகு அவனுள் உயிர் ஊதப்படுகிறது . இதனால்தான் , உங்களுள் ஒருவர் சொர்க்கவாசிகளின் ( நற் ) செயல்களைச் செய்துகொண்டே செல்வார் . இறுதியில் சொர்க்கத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் ( இடைவெளி ) தான் இருக்கும் . அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாக நரகம் புகுந்து விடுவார் . ( இதைப் போன்றே ) உங்களுள் ஒருவர் நரகவாசிகளின் செயலைச் செய்து கொண்டே செல்வார் . இறுதியில் நரகத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும் . அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ளும் . அவர் சொர்க்கத்திற்குரியவர்களின் ( நற் ) செயல்களைச் செய்து அதன் பயனாகச் சொர்க்கம் புகுவார் .
(ق) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَّلَ بِالرَّحِمِ مَلَكًا يَقُولُ يَا رَبِّ نُطْفَةٌ يَا رَبِّ عَلَقَةٌ يَا رَبِّ مُضْغَةٌ فَإِذَا أَرَادَ أَنْ يَقْضِيَ خَلْقَهُ قَالَ أَذَكَرٌ أَمْ أُنْثَى شَقِيٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ وَالْأَجَلُ فَيُكْتَبُ فِي بَطْنِ أُمِّهِ . 261
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் ( பெண்ணின் ) கருவறைக்கென ஒரு வானவரை நியமித்துள்ளான் . ( அதனுள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பரிணாம மாற்றங்கள் ஏற்படும்போது ) அந்த வானவர் , “ என் இறைவா ! ( இது ஒரு துளி ) விந்து . என் இறைவா ! இது பற்றித் தொங்கும் கரு . என் இறைவா ! இது மெல்லப்பட்ட சக்கை போன்ற ) சதைத்துண்டு `` என்று கூறிக் கொண்டிருப்பார் . அதனை வாழ்விக்க அல்லாஹ் விரும்பும்போது அவ்வானவர் , “ என் இறைவா ! ( இது ) ஆணா அல்லது பெண்ணா ? துர்பாக்கியம் உடையதா ? நற்பாக்கியம் உடையதா ? ( இதன் ) வாழ்வாதாரம் எவ்வளவு ? ( இதன் ) ஆயுள் எவ்வளவு ?`` என்று கேட்பார் . ( அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு ) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும் .
(م) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَتْ أُمُّ حَبِيبَةَ اللَّهُمَّ مَتِّعْنِي بِزَوْجِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِأَبِي أَبِي سُفْيَانَ وَبِأَخِي مُعَاوِيَةَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّكِ سَأَلْتِ اللَّهَ لِآجَالٍ مَضْرُوبَةٍ وَآثَارٍ مَوْطُوءَةٍ وَأَرْزَاقٍ مَقْسُومَةٍ لَا يُعَجِّلُ شَيْئًا مِنْهَا قَبْلَ حِلِّهِ وَلَا يُؤَخِّرُ مِنْهَا شَيْئًا بَعْدَ حِلِّهِ وَلَوْ سَأَلْتِ اللَّهَ أَنْ يُعَافِيَكِ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ لَكَانَ خَيْرًا لَكِ . 262
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா , “ இறைவா ! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , என் தந்தை அபூசுஃப்யான் , என் சகோதரர் முஆவியா ஆகியோர் ( நீண்ட நாள்கள் வாழ்வதன் ) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக !`` என்று பிரார்த்தனை செய்தார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நீ ( ஏற்கெனவே ) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளையும் குறிக்கப்பட்டுவிட்ட ( வாழ் ) நாள்களையும் பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரத்தையும் அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறாய் . அல்லாஹ் அவற்றில் எதையும் , அதற்குரிய நேரத்திற்கு முன்பே ஒருபோதும் கொண்டுவந்துவிடவு மாட்டான் ; அவற்றில் எதையும் , அதற்குரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்தவு மாட்டான் . நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லது மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னைக் காக்கும்படி நீ அல்லாஹ்விடம் வேண்டியிருந்தால் நன்றாகவும் சிறந்ததாகவும் இருந்திருக்கும் `` என்று சொன்னார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குரங்குகள் பற்றிப் பேசப்பட்டது . - பன்றிகளாக உருமாற்றப்பட்ட ( பனூ இஸ்ராயீல் சமுதாயத்த ) வர்கள் பற்றியும் பேசப்பட்டது என்று அல்கமா ரஹிமஹுல்லாஹ் கூறியதாகவே நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் மிஸ்அர் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் . - அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ் ஊருமாற்றிய எந்தச் சமுதாயத்தாருக்கும் சந்ததிகளையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை . குரங்குகளும் பன்றிகளும் அதற்கு முன்பே இருந்தன `` என்று சொன்னார்கள் .
(ق ) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يُحَدِّثُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا الْآيَةَ . 263
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல , எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான ( மார்க்கத் ) தில்தான் பிறக்கின்றன . விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? ( முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல் ) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை ( இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி ) யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர் .” பிறகு அபூஹ§ரைரா ரளியல்லாஹு அன்ஹு , “ எ( ந்த மார்க்கத் ) தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய ( நிலையான ) இயற்கை மார்க்கமாகும் ; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை ; அதுவே நிலையான மார்க்கமாகும் `` என்ற (30:30ஆம்) வசனத்தை ஓதிக் காட்டினார்கள் .
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَوْلَادِ الْمُشْرِكِينَ فَقَالَ اللَّهُ إِذْ خَلَقَهُمْ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ . 264
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இணைவைப்போரின் குழந்தைகள் ( இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது ? என்பது ) பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது . அதற்கவர்கள் “ அவர்களைப் படைத்த அல்லாஹ் , அவர்கள் ( உயிருடனிருந்திருந்தால் ) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிந்தவன் `` எனக் கூறினார்கள் .
(ق) عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَيُعْرَفُ أَهْلُ الْجَنَّةِ مِنْ أَهْلِ النَّارِ قَالَ نَعَمْ قَالَ فَلِمَ يَعْمَلُ الْعَامِلُونَ قَالَ كُلٌّ يَعْمَلُ لِمَا خُلِقَ لَهُ أَوْ لِمَا يُسِّرَ لَهُ . 265
இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் “ அல்லாஹ்வின் தூதரே ! சொர்க்கவாசிகள் யார் ? நரகவாசிகள் யார் ? என்று ( முன்பே அல்லாஹ்வுக்குத் ) தெரியுமா ?`` எனக் கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் ( தெரியும் )`` என்று சொன்னார்கள் . அவர் “ அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள் நற்செயல் புரிய வேண்டும் ?`` என்று கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஒவ்வொருவரும் ‘ எ( தை அடைவ ) தற்காகப் படைக்கப்பட்டார்களோ ` அல்லது " எ( தை அடைவ ) தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ ` அதற்காகச் செயல்படுகிறார்கள் `` என்று பதிலளித்தார்கள் .
(م) عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ قَالَ قَالَ لِي عِمْرَانُ بْنُ الْحُصَيْنِ أَرَأَيْتَ مَا يَعْمَلُ النَّاسُ الْيَوْمَ وَيَكْدَحُونَ فِيهِ أَشَيْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى عَلَيْهِمْ مِنْ قَدَرِ مَا سَبَقَ أَوْ فِيمَا يُسْتَقْبَلُونَ بِهِ مِمَّا أَتَاهُمْ بِهِ نَبِيُّهُمْ وَثَبَتَتْ الْحُجَّةُ عَلَيْهِمْ فَقُلْتُ بَلْ شَيْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى عَلَيْهِمْ قَالَ فَقَالَ أَفَلَا يَكُونُ ظُلْمًا قَالَ فَفَزِعْتُ مِنْ ذَلِكَ فَزَعًا شَدِيدًا وَقُلْتُ كُلُّ شَيْءٍ خَلْقُ اللَّهِ وَمِلْكُ يَدِهِ فَلَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ . 266
அபுல்அஸ்வத் அத்தியலீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என்னிடம் இம்ரான் பின் அல்ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு , “ மனிதர்கள் இன்று நற்செயல் புரிவதும் அதற்காக முனைந்து செயலாற்றுவதும் ஏற்கெனவே அவர்கள்மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட , முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்ட விதியின் அடிப்படையிலா ? அல்லது அவர்களுக்கெதிரான ஆதாரத்தை நிலை நிறுத்தும் வகையில் , அவர்களுடைய இறைத்தூதர்கள் அவர்களிடம் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதன் அடிப்படையிலா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ இல்லை ; ஏற்கெனவே அவர்கள்மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட , நடந்துமுடிந்த ( விதியின் ) அடிப்படையில்தான் `` என்று சொன்னேன் . அதற்கு இம்ரான் ரளியல்லாஹு அன்ஹு , “ இது அநீதியாகாதா ?`` என்று கேட்டார்கள் . அதைக் கேட்டு நான் கடுமையாக அதிர்ந்துவிட்டேன் . மேலும் , “ அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பே ; அவனது அதிகாரத்துக்குட்பட்டவையே . அவன் செய்வது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது . ஆனால் , மனிதர்கள் விசாரிக்கப்படுவார்கள் `` என்று சொன்னேன் . அப்போது இம்ரான் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் . உங்கள் அறிவைப் பரிசோதிப்பதற்காகவே நான் கேள்வி கேட்டேனே தவிர , வேறெதற்கும் நான் கேள்வி கேட்கவில்லை `` என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள் : " முஸைனா ` குலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ அல்லாஹ்வின் தூதரே ! மனிதர்கள் இன்று நற்செயல் புரிவதும் அதற்காக முனைந்து செயல்படுவதும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட , முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்ட விதியின் அடிப்படையிலா ? அல்லது அவர்களுக்கெதிரான ஆதாரத்தை நிலைநிறுத்தும் வகையில் , அவர்களுடைய இறைத்தூதர்கள் அவர்களிடம் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதன் அடிப்படையிலா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இல்லை ; ஏற்கெனவே அவர்கள்மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட , அவர்கள் விஷயத்தில் முடிவாகிவிட்ட ( விதியின் ) அடிப்படையில்தான் `` என்று கூறிவிட்டு இதை உண்மைப்படுத்தும் சான்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது எனக் கூறி , பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள் : உயிரின் மீதும் , அதை வடிவமைத்து , அதன் நன்மையையும் தீமையையும் அதற்கு அறிவித்தவன்மீதும் சத்தியமாக ! (91: 7-8)
(م) عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ دُعِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنَازَةِ صَبِيٍّ مِنْ الْأَنْصَارِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ لَمْ يَعْمَلْ السُّوءَ وَلَمْ يُدْرِكْهُ قَالَ أَوَ غَيْرَ ذَلِكَ يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ خَلَقَ لِلْجَنَّةِ أَهْلًا خَلَقَهُمْ لَهَا وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ . 267
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : அன்ஸாரிகளில் ஒரு குழந்தை இறந்தபோது , அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைக்கப்பட்டார்கள் . அப்போது நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துகள் ! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி . அது எந்தத் தீமையையும் செய்யவில்லை . அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை `` என்று சொன்னேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ வேறு ஏதேனும் உண்டா , ஆயிஷா ? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான் . அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காக அவர்களை அவன் படைத்துவிட்டான் ; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான் . அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காக அவர்களைப் படைத்துவிட்டான் `` என்று கூறினார்கள் .
عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ خَلْقَهُ فِي ظُلْمَةٍ فَأَلْقَى عَلَيْهِمْ مِنْ نُورِهِ فَمَنْ أَصَابَهُ مِنْ ذَلِكَ النُّورِ اهْتَدَى وَمَنْ أَخْطَأَهُ ضَلَّ فَلِذَلِكَ أَقُولُ جَفَّ الْقَلَمُ عَلَى عِلْمِ اللَّ . 268
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தனது படைப்பினங்களை இருளில்தான் படைத்தான் . பிறகு தனது ஒளிச் சுடரிலிருந்து சிறிதை அவற்றின்மீது பாய்ச்சினான் . அந்த ஒளிச்சுடர் பட்டவர் நல்வழி கண்டார் . அந்த ஒளிச்சுடர் படாதவர் வழிதவறிச் சென்றார் . ஆகவேதான் நான் கூறுகிறேன் : ( ஏற்கெனவே ) அல்லாஹ் அறிந்துள்ளதன் படியே ( விதி எழுதிய ) எழுதுகோல் உலர்ந்துவிட்டது .
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةَ فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ فَعَلَى مَا نَعْمَلُ عَلَى شَيْءٍ قَدْ فُرِغَ مِنْهُ أَوْ عَلَى شَيْءٍ لَمْ يُفْرَغْ مِنْهُ قَالَ بَلْ عَلَى شَيْءٍ قَدْ فُرِغَ مِنْهُ وَجَرَتْ بِهِ الْأَقْلَامُ يَا عُمَرُ وَلَكِنْ كُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ . 269
உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : "( மறுமை நாளில் ) அவர்களில் நற்பேறற்றவர்களும் இருப்பர் ; நற்பேறுள்ளவர்களும் இருப்பர் ’’ (11:105) என்ற இந்த வசனம் அருளப்பெற்றபோது நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , " அல்லாஹ்வின் தூதரே ! எதன்படி நாம் செயல்படுவோம் ? ( ஏற்கெனவே ) முடிவுசெய்யப்பட்ட ஒன்றின்படி செயல்படுவோமா ? அல்லது ( இது வரை ) முடிவுசெய்யப்படாத ஒன்றின்படி செயல்படுவோமா ? எனக் கேட்டேன் . ( அப்போது ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " உமரே ! ( அவ்வாறன்று .) மாறாக , ( ஏற்கெனவே ) முடிவுசெய்யப்பட்டு , எழுதுகோல்கள் பதிவுசெய்த ஒன்றின்படியே நாம் செயல்படுவோம் . எனினும் ஒவ்வொருவரும் எ( தை அடைவ ) தற்காகப் படைக்கப்பட்டார்களோ அதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறார்கள் ’’ என்று பதிலளித்தார்கள் .
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ وَإِنَّهُ لَمَكْتُوبٌ فِي الْكِتَابِ مِنْ أَهْلِ النَّارِ فَإِذَا كَانَ قَبْلَ مَوْتِهِ تَحَوَّلَ فَعَمِلَ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَمَاتَ فَدَخَلَ النَّارَ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ وَإِنَّهُ لَمَكْتُوبٌ فِي الْكِتَابِ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَإِذَا كَانَ قَبْلَ مَوْتِهِ تَحَوَّلَ فَعَمِلَ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَمَاتَ فَدَخَلَهَا . 270
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான் ஆனால் அவன் நரகவாசி என்று விதியில் எழுதப்பட்டிருக்கும் . அப்போது . ( எதிர்பாராவிதமாக ) மரணம் ஏற்படுவதற்குமுன் அவனை விதி மாற்றிவிடும் . எனவே அவன் நரகவாசிக்குரிய அமல்களைச் செய்யத் தொடங்கி , பின்னர் இறந்து விடுவான் . எனவே அவன் நரகத்தில் நுழைவான் . ஒரு மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான் ஆனால் அவன் சொர்க்கவாசி என்று விதியில் எழுதப்பட்டிருக்கும் . அப்போது . ( எதிர்பாராவிதமாக ) மரணம் ஏற்படுவதற்குமுன் அவனை விதி மாற்றிவிடும் . எனவே அவன் சொர்க்கவாசிக்குரிய அமல்களைச் செய்யத் தொடங்கி , பின்னர் இறந்து விடுவான் . எனவே அவன் சொர்க்கத்தில் நுழைவான் .
(م) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَتَبَ اللَّهُ مَقَادِيرَ الْخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ قَالَ وَعَرْشُهُ عَلَى الْمَاءِ . 271
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே , படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான் . ( அப்போது ) அவனது அரியணை ( அர்ஷ் ) தண்ணீரின் மேல் இருந்தது .
(م) عَنْ طَاوُسٍ أَنَّهُ قَالَ أَدْرَكْتُ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ كُلُّ شَيْءٍ بِقَدَرٍ قَالَ وَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ شَيْءٍ بِقَدَرٍ حَتَّى الْعَجْزِ وَالْكَيْسِ أَوْ الْكَيْسِ وَالْعَجْزِ . 272
தாவூஸ் பின் கைசான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : " ஒவ்வொன்றும் விதியின் படியே `` என்று கூறிவந்த தோழர்களில் சிலரை நான் சந்தித்திருக்கிறேன் . அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ ஒவ்வொரு பொருளும் விதியின் படியே . " இயலாமை , புத்திசாலித்தனம் ஆகியவை உள்பட ` அல்லது " புத்திசாலித்தனம் , இயலாமை ஆகியவை உள்பட `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் எனக் கூறியதைக் கேட்டுள்ளேன் .
عَنْ ابْنِ أَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا فَقَالَ هِيَ مِنْ قَدَرِ اللَّهِ . 273
அபூகிஸாமா ரளியல்லாஹு அன்ஹு தம் தந்தையிடமிருந்து அறிவித்துள்ளதாவது : “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் சிகிச்சைக்காக ஓதிப்பார்க்கின்ற மந்திரங்களும் , நாங்கள் சிகிச்சை பெறுகின்ற மருந்துகளும் , நாங்கள் எங்களைத் தற்காத்துக்கொள்கின்ற தற்காப்புகளும் அல்லாஹ்வுடைய விதியிலிருந்து எதையும் மாற்றிவிடுமா ?” என்று நான் கேட்டேன் . அதற்கவர்கள் , “ அவையும் அல்லாஹ்வுடைய விதிகளுள் உள்ளவையே ” என்று விடையளித்தார்கள் .
عَنْ أَنَسٍ قَالَ : خَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ فَمَا بَعَثَنِي فِي حَاجَةٍ لَمْ تَتَهَيَّأْ إِلَّا قَالَ : لَوْ قُضِيَ لَكَانَ ، أَوْ لَوْ قُدِّرَ لَكَانَ . 274
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்தேன் . தயார்நிலையில் இல்லாத ஏதேனும் தேவைக்காக என்னை அனுப்பினால் , “ முடிவு செய்யப்பட்டிருந்தால் அது ( அவ்வாறே ) ஆகியிருக்கும் ; அல்லது நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அது ( அவ்வாறே ) ஆகியிருக்கும் ” என்று கூறாமல் அனுப்பியதில்லை .
عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ رُقًى كُنَّا نَسْتَرْقِي بِهَا وَأَدْوِيَةٌ كُنَّا نَتَدَاوَى بِهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ قَالَ : هُوَ مِنْ قَدَرِ اللَّهِ . 275
ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் சிகிச்சைக்காக ஓதிப்பார்க்கின்ற மந்திரங்களும் , நாங்கள் சிகிச்சை பெறுகின்ற மருந்துகளும் அல்லாஹ்வுடைய விதியிலிருந்து எதையும் மாற்றிவிடுமா ?” என்று நான் கேட்டேன் . அதற்கவர்கள் , “ அவையும் அல்லாஹ்வுடைய விதிகளுள் உள்ளவையே ” என்று விடையளித்தார்கள் .
(م) عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ قُلُوبَ بَنِي آدَمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ كَقَلْبٍ وَاحِدٍ يُصَرِّفُهُ حَيْثُ يَشَاءُ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ . 276
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஆதமின் மக்களின் ( மனிதர்களின் ) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன . அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான் `` என்று கூறிவிட்டு , “ இறைவா ! உள்ளங்களைத் திருப்புகின்றவனே ! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக !`` என்று பிரார்த்தனை செய்தார்கள் .
عَنْ أَنَسٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ آمَنَّا بِكَ وَبِمَا جِئْتَ بِهِ فَهَلْ تَخَافُ عَلَيْنَا قَالَ نَعَمْ إِنَّ الْقُلُوبَ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ يُقَلِّبُهَا كَيْفَ يَشَاءُ . 277
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : உள்ளங்களைத் திருப்புகின்றவனே ! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகமாகக் கூறுபவர்களாக இருந்தார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் உங்களையும் நீங்கள் கொண்டுவந்ததையும் ( உண்மையென ) நம்பிக்கை கொண்டிருக்கிறோம் . ( இந்நிலையிலும் ) நீங்கள் எங்களின் நிலையைக் கண்டு அஞ்சுகின்றீர்களா ?” என்று வினவினேன் . அதற்கவர்கள் , “ ஆம் ! திண்ணமாக ( மனித ) உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன . அவன் ( நாடியவாறு ) அவற்றைப் புரட்டுகின்றான் ” என்று விடையளித்தார்கள் .
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنْ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ . 278
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான் . அதை மனிதன் அடைந்தே தீருவான் . ( மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல ; கண்ணும் நாவும்கூட விபச்சாரம் செய்கின்றன .) கண் செய்யும் விபச்சாரம் ( தவறான ) பார்வையாகும் . நாவு செய்யும் விபச்சாரம் ( பாலுணர்வைத் தூண்டும் ) பேச்சாகும் . மனம் ஏங்குகிறது ; இச்சை கொள்கிறது . மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது . அல்லது பொய்யாக்குகிறது .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ احْتَجَّ آدَم ُ وَمُوسَى فَقَالَ لَهُ مُوسَى يَا آدَم ُ أَنْتَ أَبُونَا خَيَّبْتَنَا وَأَخْرَجْتَنَا مِنْ الْجَنَّةِ قَالَ لَهُ آدَم ُ يَا مُوسَى اصْطَفَاكَ اللَّهُ بِكَلَامِهِ وَخَطَّ لَكَ بِيَدِهِ أَتَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَهُ اللَّهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً فَحَجَّ آدَم ُ مُوسَى فَحَجَّ آدَم ُ مُوسَى ثَلَاثًا . 279
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இறைத்தூதர்களான ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தர்க்கம் செய்தார்கள் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் “ ஆதம் அவர்களே ! எங்கள் தந்தையான நீங்கள் ( உங்கள் பாவத்தின் காரணத்தால் ) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள் ; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள் `` என்று சொன்னார்கள் . அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் , “ மூஸாவே ! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான் ; அவன் தன் கரத்தால் ( வல்லமையால் ) உமக்காக ( தவ்ராத் எனும் வேதத்தை ) வரைந்தான் . ( இத்தகைய ) நீங்கள் , அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . ( இந்த பதில் மூலம் ) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் தோற்கடித்து விட்டார்கள் ; தோற்கடித்து விட்டார்கள் என மூன்று முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
(ق) عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْتَقَى هُوَ وَالْمُشْرِكُونَ فَاقْتَتَلُوا فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَسْكَرِهِ وَمَالَ الْآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ وَفِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ لَا يَدَعُ لَهُمْ شَاذَّةً إِلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ فَقَالُوا مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلَانٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ . 280
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இணை வைப்போரும் ( கைபர் போர்க்களத்தில் ) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர் . நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்றுவிட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார் . அவர் ( எதிரிகளின் ) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர் , படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் ( அதாவது எதிர்த்து நிற்பவர் , பணிந்து செல்பவர் என்று ) எவரையும் நபித்தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று ( மூர்க்கமாகப் போரிட்டுக் ) கொண்டிருந்தார் . ( அவரது துணிச்சலான போரைக் கண்ட ) நபித் தோழர்கள் , “ இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை `` என்று ( வியந்து ) கூறினார்கள் . இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவரோ நரகவாசியாவார் `` என்று கூறினார்கள் . அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர் , “ நான் அவருடன் இருக்கிறேன் ( அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு )`` என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார் . அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார் . அவர் விரைந்தால் இவரும் விரைந்தார் . ( ஒரு கட்டத்தில் ) அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார் . அதனால் சீக்கிரமாக மரணித்துவிட விரும்பி , தம் வாளின் ( கைப்பிடியுள்ள ) முனையை பூமியில் ஊன்றி , அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து , அந்த வாளின்மீது தம் உடலை அழுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் . ( இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு ) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று , “ தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன் `` என்று சொன்னார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " என்ன விஷயம் ?`` என்று கேட்டார்கள் . அவர் , “ சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி " அவர் நரகவாசி ` என்று கூறினீர்கள் அல்லவா ? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர் . நான் ( மக்களிடம் ), “ உங்களுக்காக ( அவரது நிலைகளை அறிந்து வர ) நான் அவருடன் போய் வருகிறேன் `` என்று கூறிவிட்டு , அவரைத் தேடிப் புறப்பட்டேன் . அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார் . உடனே , அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி , வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு , அதன் கூர்முனையைத் தம் இரு மார்புகளுக்கிடையே வைத்து , அதன்மீது தம்மை அழுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் `` என்று கூறினார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய ( நற் ) செயலைச் செய்து வருவார் . ஆனால் , அவர் ( உண்மையில் ) நரகவாசியாக இருப்பார் . மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார் . ஆனால் , ( உண்மையில் ) அவர் சொர்க்கவாசியாக இருப்பார் `` என்று சொன்னார்கள் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الزَّمَنَ الطَّوِيلَ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ ثُمَّ يُخْتَمُ لَهُ عَمَلُهُ بِعَمَلِ أَهْلِ النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الزَّمَنَ الطَّوِيلَ بِعَمَلِ أَهْلِ النَّارِ ثُمَّ يُخْتَمُ لَهُ عَمَلُهُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ . 281
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதர் நீண்ட காலம் சொக்கவாசிகளின் ( நற் ) செயலைச் செய்து கொண்டே வருவார் . பிறகு அவரது செயல் நரகவாசிகளின் செயலாக முடிக்கப்படும் . ஒரு மனிதர் நீண்ட காலம் நரகவாசிகளின் ( தீய ) செயலைச் செய்துகொண்டே வருவார் . பிறகு அவரது செயல் சொர்க்கவாசிகளின் செயலாக முடிக்கப்படும் .
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الْبُرْهَةَ مِنْ عُمُرِهِ بِالْعَمَلِ الَّذِي لَوْ مَاتَ عَلَيْهِ دَخَلَ الْجَنَّةَ فَإِذَا كَانَ قَبْلَ مَوْتِهِ تَحَوَّلَ فَعَمِلَ عَمَلَ أَهْلِ النَّارِ فَمَاتَ فَدَخَلَ النَّارَ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الْبُرْهَةَ مِنْ عُمُرِهِ بِالْعَمَلِ الَّذِي لَوْ مَاتَ عَلَيْهِ دَخَلَ النَّارَ فَإِذَا كَانَ قَبْلَ مَوْتِهِ تَحَوَّلَ فَعَمِلَ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَمَاتَ فَدَخَلَ الْجَنَّةَ . 282
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதர் தமது வாழ்நாளின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நல்லறங்கள் செய்வார் . அவர் இறந்துவிட்டால் சொர்க்கத்தில் நுழைவார் எனுமளவிற்கு ( நல்லறங்கள் செய்வார் ). மேலும் அவரது மரணத்திற்குமுன் அவர் மாற்றப்பட்டால் , அவர் நரகவாசிகளின் செயல்களைச் செய்து , ( அந்நிலையிலேயே ) அவர் இறந்து விடுவார் ; பின்னர் அவர் நரகத்தில் நுழைவார் , ஒருவர் தமது வாழ்நாளின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் செயல்படுவார் . அவர் இறந்துவிட்டால் நரகத்தில் நுழைவார் எனுமளவிற்கு ( செயல்படுவார் ). மேலும் அவரது மரணத்திற்கு முன் அவர் மாற்றப்பட்டால் , அவர் சொர்க்கவாசிகளின் செயல்களைச் செய்து , ( அந்நிலையிலேயே ) இறந்துவிடுவார் ; பின்னர் அவர் சொர்க்கத்தில் நுழைவார் .
عَنْ مَطَرِ بْنِ عُكَامِسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً . 283
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக மத்தர் பின் உகாமிஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் இறந்துபோக வேண்டுமென அல்லாஹ் தீர்மானித்திருந்தால் , அம்மனிதனுக்கு அந்த இடத்தை நோக்கி ஏதேனும் ஒரு தேவையை அவன் ஆக்குவான் .
عَنْ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَعَادَةِ ابْنِ آدَمَ رِضَاهُ بِمَا قَضَى اللَّهُ لَهُ وَمِنْ شَقَاوَةِ ابْنِ آدَمَ تَرْكُهُ اسْتِخَارَةَ اللَّهِ وَمِنْ شَقَاوَةِ ابْنِ آدَمَ سَخَطُهُ بِمَا قَضَى اللَّهُ لَهُ . 284
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஆதமின் மகன் ( மனிதன் ) தனக்காக அல்லாஹ் விதியில் எழுதியதை மனநிறைவோடு ஏற்றுக்கொள்வதானது அவனது நற்பேற்றில் அடங்கும் . நல்லதைத் தனக்காகத் தேர்வு செய்யுமாறு அல்லாஹ்விடம் கோராமலிருப்பது ஆதமின் மகனுடைய துர்ப்பேற்றில் அடங்கும் . மேலும் தனக்காக அல்லாஹ் விதியில் எழுதியதை வெறுப்பதும் ஆதமின் மகனுடைய துர்ப்பேற்றில் அடங்கும் .
عَنْ سَلْمَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرُدُّ الْقَضَاءَ إِلَّا الدُّعَاءُ وَلَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ . 285
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சல்மான் அல்ஃபாரிஸீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : தலைவிதியைப் பிரார்த்தனை தவிர வேறு எதுவும் மாற்றிவிடாது . நல்லறம் தவிர வேறு எதுவும் ஆ யுளை அதிகமாக்கிவிடாது .
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : لَا يَنْفَعُ الْحَذَرُ مِنَ الْقَدْرِ ، وَلَكِنَّ اللَّهَ يَمْحُو بِالدُّعَاءِ مَا يَشَاءُ مِنَ الْقَدَرِ . 286
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : விதியிலிருந்து எச்சரிக்கையாக இருப்பது எந்தப் பயனுமளிக்காது . எனினும் அல்லாஹ் ( நாம் செய்யும் ) பிரார்த்தனை மூலம் அவன் நாடிய விதியை அழிப்பான் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مُثِّلَ ابْنُ آدَمَ وَإِلَى جَنْبِهِ تِسْعٌ وَتِسْعُونَ مَنِيَّةً إِنْ أَخْطَأَتْهُ الْمَنَايَا وَقَعَ فِي الْهَرَمِ حَتَّى يَمُوتَ . 287
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அஷ்ஜிக்கீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஆதமின் மகனுக்கு ( மனிதனுக்கு ) அருகில் தொண்ணூற்றொன்பது மரண ( த்திற்கான காரண ) ங்கள் இருக்கவே அவன் படைக்கப்பட்டுள்ளான் . அந்த மரண ( த்திற்கான காரண ) ங்கள் அவனைவிட்டுத் தவறிவிட்டாலும் அவன் தள்ளாமையில் விழவே செய்கிறான் . இறுதியில் இறந்து போகிறான் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَتَنَازَعُ فِي الْقَدَرِ فَغَضِبَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ حَتَّى كَأَنَّمَا فُقِئَ فِي وَجْنَتَيْهِ الرُّمَّانُ فَقَالَ أَبِهَذَا أُمِرْتُمْ أَمْ بِهَذَا أُرْسِلْتُ إِلَيْكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ حِينَ تَنَازَعُوا فِي هَذَا الْأَمْرِ عَزَمْتُ عَلَيْكُمْ أَلَّا تَتَنَازَعُوا فِيهِ . 288
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( ஒரு நாள் ) எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புறப்பட்டு வந்தார்கள் அப்போது நாங்கள் ‘ தலைவிதி ` குறித்து விவாதம் செய்து கொண்டிருந்தோம் . அதைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கோபப்பட்டார்கள் . எந்த அளவுக்கென்றால் , அவர்களின் கன்னங்களில் மாதுளையைப் பிளந்து வைத்ததைப் போன்று அவர்களின் முகம் ( கடுமையாகச் ) சிவந்துவிட்டது . அப்போது அவர்கள் , “ இ( வ்வாறு விதி குறித்து விவாதிப்ப ) தற்குத்தான் உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா ? அல்லது இதற்காகத்தான் உங்களுக்கு நான் தூதராக அனுப்பப்பட்டுள்ளேனா ? உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்ததெல்லாம் இவ்விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்டபோதுதான் . இது தொடர்பாக நீங்கள் விவாதம் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன் ” என்றார்கள் .
عَنْ عبدِ اللهِ بنِ عَمْرٍو قَالَ : خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَخْتَصِمُونَ فِي الْقَدَرِ فَكَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ مِنْ الْغَضَبِ فَقَالَ بِهَذَا أُمِرْتُمْ أَوْ لِهَذَا خُلِقْتُمْ تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ بِهَذَا هَلَكَتْ الْأُمَمُ قَبْلَكُمْ . 289
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு நாள் ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்தார்கள் . அப்போது தோழர்கள் விதி தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தனர் . இதைக் கண்டவுடன் மாதுளம் பழத்தின் வித்துகளைப் பிளந்து ( அல்லது பிழிந்து ) வைத்ததைப் போன்று கோபத்தால் அவர்களது முகம் நிறமாறிவிட்டது . அப்போது அவர்கள் , இதற்காகத்தான் நீங்கள் பணிக்கப்பட்டுள்ளீர்களா ? அல்லது படைக்கப்பட்டுள்ளீர்களா ? நீங்கள் குர்ஆன் வசனங்களில் ஒன்றை மற்றொன்டோடு மோதவிடுகிறீர்களா ? இதன் காரணமாகவே உங்களுக்கு முந்தைய சமுதாயங்கள் அழிக்கப்பட்டனர் `` என்று கூறினார்கள் . நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஓர் அவையில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என எண்ணியதில்லை . ஆனால் , இந்த அவையில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நான் எண்ணினேன் ( அந்த அளவுக்கு அந்த அவையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கோபப்பட்டார்கள் .)
عَنْ ابْنَ عَبَّاسٍ أَنَّهُ قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِقاَلَ : رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزَالُ أَمْرُ هَذِهِ الْأُمَّةِ مُوَائِمًا - أَوْ مُقَارِبًا - مَا لَمْ يَتَكَلَّمُوا فِي الْوِلْدَانِ وَالْقَدَرِ . 290
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு சொற்பொழிவு மேடை ( மிம்பர் ) மீதிருந்து கூறியதாவது : இந்தச் சமுதாயத்தின் விஷயம் ( இணைவைப்பாளர்களின் ) குழந்தைகள் குறித்தும் தலைவிதி குறித்தும் மக்கள் பேசாத வரை சீராக இருந்துகொண்டே இருக்கும் .
عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْقَدَرِيَّةُ مَجُوسُ هَذِهِ الْأُمَّةِ إِنْ مَرِضُوا فَلَا تَعُودُوهُمْ وَإِنْ مَاتُوا فَلَا تَشْهَدُوهُمْ . 291
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : கதரிய்யா இந்தச் சமுதாயத்தின் நெருப்பு வணங்கிகள் ஆவர் . அவர்கள் ( யாரேனும் ) நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள் . அவர்கள் ( யாரேனும் ) மரணித்தால் அதில் நீங்கள் கலந்து கொள்ளாதீர்கள் .
عَنْ نَافِعٍ قَالَ كَانَ لِابْنِ عُمَرَ صَدِيقٌ مِنْ أَهْلِ الشَّامِ يُكَاتِبُهُ فَكَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ تَكَلَّمْتَ فِي شَيْءٍ مِنْ الْقَدَرِ فَإِيَّاكَ أَنْ تَكْتُبَ إِلَيَّ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي أَقْوَامٌ يُكَذِّبُونَ بِالْقَدَرِ . 292
நாஃபிஉ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சிரியா நாட்டில் நண்பர் ஒருவர் இருந்தார் . அவர் இப்னு உமர் அவர்களோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் . எனவே அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவருக்குக் கடிதம் எழுதினார்கள் : நீர் தலைவிதியைக் குறித்து ஏதோ பேசியதாக எனக்குத் தகவல் கிடைத்தது . ( இனி ) நீர் எனக்குக் கடிதம் எழுதுவதை எச்சரிக்கிறேன் . நிச்சயமாக நான் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைச் செவியுற்றுள்ளேன் : திண்ணமாக என் சமுதாயத்தில் விதியைப் பொய்யெனக் கூறுகின்ற மக்கள் தோன்றுவார்கள் .”
عَنْ طَاوُسٍ قَالَ : كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، وَمَعَنَا رَجُلٌ مِنَ الْقَدَرِيَّةِ ، فَقُلْتُ : إِنَّ أُنَاسًا يَقُولُونَ : لَا قَدَرَ . قَالَ : أَوَفِي الْقَوْمِ أَحَدٌ مِنْهُمْ ؟ قُلْتُ : لَوْ كَانَ مَا كُنْتَ تَصْنَعُ بِهِ ؟ قَالَ : " لَوْ كَانَ فِيهِمْ أَحَدٌ مِنْهُمْ ، لَأَخَذْتُ بِرَأْسِهِ ، ثُمَّ قَرَأْتُ عَلَيْهِ آيَةَ كَذَا وَكَذَا : ( وَقَضَيْنَا إِلَى بَنِي إسْرائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا ) . 293
தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்தேன் . எங்களோடு கதரிய்யா கொள்கையைச் சார்ந்த ஒருவர் இருந்தார் . அப்போது நான் , “ விதி என ஏதும் இல்லை ” என்று மக்கள் ( சிலர் ) கூறுகின்றனர் ” என்றேன் . “ மக்களுள் அப்படி யாரேனும் இருக்கின்றாரா ( உமக்குத் தெரியுமா )?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ அவ்வாறு இருந்தால் , அவரைத் தாங்கள் என்ன செய்வீர்கள் ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , அம்மக்களுள் யாரேனும் இரு ( ப்பது தெரி ) ந்தால் அவரின் தலை ( முடி ) யைப் பிடித்து , பிறகு இன்னின்ன இறைவசனங்களை ஓதிக்காட்டுவேன் : நாம் அந்த வேதத்தில் இஸ்ரவேலர்களிடம் , “ நிச்சயமாக நீங்கள் இந்தப் பூமியில் இரண்டு முறை குழப்பம் விளைவிப்பீர்கள் ; மேலும் நிச்சயமாக நீங்கள் பெரிய அளவில் அட்டூழியம் செய்வீர்கள் ” என்று அறிவித்திருந்தோம் . (17: 4)