العلم
அத்தியாயம் 8

கல்வி

ஹதீஸ் 294 அத்தியாயம் 8 பாடம் 1

(ق) عَنْ مُعَاوِيَةَ خَطِيبًا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي وَلَنْ تَزَالَ هَذِهِ الْأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللَّهِ لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ . 294

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக முஆவியா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான் . நான் விநியோகிப்பவன் தான் . அல்லாஹ்வே வழங்குகிறான் . இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள் . அல்லாஹ்வின் கட்டளை ( மறுமை நாள் ) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது .

Reference: ( புகாரீ : 71, முஸ்லிம் : 1037)
ஹதீஸ் 295 அத்தியாயம் 8 பாடம் 1

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ . 295

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரை அவன் மார்க்க அறிவு பெற்றவராக ஆக்குகிறான் .

Reference: ( இப்னுமாஜா : 220) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 296 அத்தியாயம் 8 பாடம் 1

عَنْ جَابِرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ النَّاسُ مَعَادِنُ فَخِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقِهُوا . 296

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மக்கள் சுரங்கங்கள் ஆவர் . அறியாமைக் காலத்தில் அவர்களுள் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும் போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள் ; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக் கொண்டால் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 14945) முஸ்லிம் இமாமின் நிபந்தனைக்கேற்ப இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஸஹீஹ் ` ஆகும் .
ஹதீஸ் 297 அத்தியாயம் 8 பாடம் 1

عَنْ أَبِي سَعِيدٍ ، قَالَ : أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسُوا كَانَ حَدِيثُهُمْ يَعْنِي الْفِقْهَ إِلَّا أَنْ يَقْرَأَ رَجُلٌ سُورَةً أَوْ يَأْمُرَ رَجُلًا بِقِرَاءَةِ سُورَةٍ. 297

அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் ஒரு சபையில் அமர்ந்தால் அவர்களின் பேச்சு ஃபிக்ஹ் சார்ந்ததாகவே இருக்கும் . எனினும் ஒருவர் ஏதேனும் ஓர் அத்தியாயத்தை ஓதுவார் அல்லது ஓர் அத்தியாயத்தை ஓதச் சொல்லிக் கட்டளையிடுவார் .

Reference: ( ஹாகிம் : 322) இது முஸ்லிம் இமாமின் நிபந்தனைக்கேற்ப அமைந்த ஹதீஸ் ஆகும் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .
ஹதீஸ் 298 அத்தியாயம் 8 பாடம் 2

(ق) عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ مِنْ الْهُدَى وَالْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيرِ أَصَابَ أَرْضًا فَكَانَ مِنْهَا نَقِيَّةٌ قَبِلَتْ الْمَاءَ فَأَنْبَتَتْ الْكَلَأَ وَالْعُشْبَ الْكَثِيرَ وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ أَمْسَكَتْ الْمَاءَ فَنَفَعَ اللَّهُ بِهَا النَّاسَ فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا وَأَصَابَتْ مِنْهَا طَائِفَةً أُخْرَى إِنَّمَا هِيَ قِيعَانٌ لَا تُمْسِكُ مَاءً وَلَا تُنْبِتُ كَلَأً فَذَلِكَ مَثَلُ مَنْ فَقُهَ فِي دِينِ اللَّهِ وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ فَعَلِمَ وَعَلَّمَ وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا وَلَمْ يَقْبَلْ هُدَى اللَّهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ . 298

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது , நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும் . அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்களையும் பசுமையான செடி கொடிகளையும் முளைக்கச் செய்தன . மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும் . அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான் . அதனை மக்கள் அருந்தினர் ; ( தமது கால்நடைகளுக்கும் ) புகட்டினர் ; விவசாயமும் செய்தனர் . அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது . அது ( ஒன்றுக்கும் உதவாத ) வெறும் கட்டாந்தரை . அது தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளவும் இல்லை ; புற்பூண்டுகளை முளைக்கச் செய்யவுமில்லை . இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து , கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் , நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும் .

Reference: ( புகாரீ : 79, முஸ்லிம் : 2282)
ஹதீஸ் 299 அத்தியாயம் 8 பாடம் 2

عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّهُ لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْبَحْرِ . 299

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக ஒரு மார்க்க அறிஞருக்காக கடலில் உள்ள மீன்கள் உள்பட வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் பாவமன்னிப்புத் தேடுகின்றன .

Reference: ( இப்னுமாஜா : 239) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 300 அத்தியாயம் 8 பாடம் 2

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ مَا يُخَلِّفُ الرَّجُلُ مِنْ بَعْدِهِ ثَلَاثٌ وَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ وَصَدَقَةٌ تَجْرِي يَبْلُغُهُ أَجْرُهَا وَعِلْمٌ يُعْمَلُ بِهِ مِنْ بَعْدِهِ . 300

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதரின் மரணத்திற்குப் பிறகு ( அவரைப் பின்தொடர்ந்து ) வரக்கூடிய நன்மைகள் மூன்றாகும் . அவருக்காகப் பிரார்த்தனை செய்யக்கூடிய குழந்தை , நிரந்தரமான தானதர்மம் . அதன் நற்கூலி அவரை அடைந்து கொண்டேயிருக்கும் , அவருக்குப் பிறகு செயல்படுத்தப்படுகின்ற கல்வி ஆகியனவாகும் .

Reference: ( இப்னுமாஜா : 241) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 301 அத்தியாயம் 8 பாடம் 2

عَنْ أَبِي أُمَامَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ كَانَ لَهُ أَجْرُ مُعْتَمِرٍ تَامِّ الْعُمْرَةِ ، فَمَنْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ فَلَهُ أَجْرُ حَاجٍّ تَامِّ الْحَجَّةِ . 301

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் ஒருவர் காலையில் , கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ அவருக்கு முழுமையான ஓர் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் . யார் ஒருவர் மாலையில் , கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ அவருக்கு முழுமையான ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் .

Reference: ( ஹாகிம் : 311) இந்த ஹதீஸ் புகாரீ இமாமின் நிபந்தனைக்கேற்ப அமைந்துள்ளது என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .
ஹதீஸ் 302 அத்தியாயம் 8 பாடம் 2

عَنْ أَنَسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْهُومَانِ لَا يَشْبَعَانِ : مَنْهُومٌ فِي عِلْمٍ لَا يَشْبَعُ ، وَمَنْهُومٌ فِي دُنْيَا لَا يَشْبَعُ . 302

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இரண்டு பேராசைக்காரர்கள் திருப்தியுறமாட்டார்கள் . கல்வியைத் தேடுவதில் பேராசையுடையவன் ( அதில் ) திருப்தியுற மாட்டான் . உலகத் தேடலில் பேராசையுடையவன் ( அதில் ) திருப்தியுறமாட்டான் .

Reference: ( ஹாகிம் : 312) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இந்த ஹதீஸ் அமைந்துள்ளதென தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .
ஹதீஸ் 303 அத்தியாயம் 8 பாடம் 2

عَنْ حُذَيْفَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : فَضْلُ الْعِلْمِ خَيْرٌ مِنْ فَضْلِ الْعِبَادَةِ ، وَخَيْرُ دِينِكُمُ الْوَرَعُ . 303

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : வழிபாட்டின் சிறப்பைவிடக் கல்வியின் சிறப்பு சிறந்தது . உங்களின் தீனுக்குள் சிறந்தது ஒழுக்கம் பேணல் ஆகும் .

Reference: ( ஹாகிம் : 317)
ஹதீஸ் 304 அத்தியாயம் 8 பாடம் 3

(خ ) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ. 304

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என்னிடமிருந்து ஒரேயரு ( சிறு ) செய்தி கிடைத்தாலும் சரி , அதை ( ப் பிறருக்கு ) எடுத்துரையுங்கள் . பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள் . அதனால் குற்றமில்லை . எவன் என் மீது ( நான் சொன்னதாக ) வேண்டு மென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் .

Reference: ( புகாரீ : 3461)
ஹதீஸ் 305 அத்தியாயம் 8 பாடம் 3

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا فَحَفِظَهُ حَتَّى يُبَلِّغَهُ فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ . 305

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நம்மிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டு அதைப் பாதுகாத்து , பின்னர் அதை ( ப் பிறருக்கு ) எடுத்துரைத்தவனை அல்லாஹ் மகிழ்ச்சிப்படுத்துவானாக ! மார்க்கச் சட்ட அறிவைப் பெற்றிருக்கக்கூடிய எத்தனையோ பேர் அவரைவிட மிகவும் அறிந்தவரிடம் எடுத்துரைக்கிறார் . மார்க்கச் சட்ட அறிவைப் பெற்றிருக்கக்கூடிய எத்தனையோ பேர் மார்க்க அறிஞர் இல்லை .

Reference: ( அபூதாவூத் : 3660, திர்மிதீ : 2656, இப்னுமாஜா : 232, தாரமீ : 235) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 306 அத்தியாயம் 8 பாடம் 3

عَنْ جَدِّهِ مُعَاوِيَةَ الْقُشَيْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا لِيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ . 306

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக முஆவியா அல்குஷைரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( ஹஜ்ஷிலிருந்து விடைபெறும்போது இங்கு ) வந்தவர் வராதவருக்கு எடுத்துரைக்கட்டும் .

Reference: ( இப்னுமாஜா : 230 / 234) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 307 அத்தியாயம் 8 பாடம் 3

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْمَعُونَ وَيُسْمَعُ مِنْكُمْ وَيُسْمَعُ مِمَّنْ سَمِعَ مِنْكُمْ . 307

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இப்போது என்னிடமிருந்து ) நீங்கள் செவியுறுகின்றீர்கள் ; ( பிற்காலத்தில் ) உங்களிடமிருந்து செவியுறப்படும் ; ( அதன்பின் ) உங்களிடம் கேட்டவர்களிடமிருந்து செவியுறப்படும் . ( இவ்வாறே இது தொடரும் ).

Reference: ( அபூதாவூத் : 3659) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 308 அத்தியாயம் 8 பாடம் 4

(ق) عَنْ علي قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَكْذِبُوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجْ النَّارَ. 308

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( நான் சொல்லாததைச் சொன்னதாக ) என் மீது பொய் சொல்லாதீர்கள் . ஏனெனில் , என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான் .

Reference: ( புகாரீ : 106 முஸ்லிம் : முகத்திமா : 1 )
ஹதீஸ் 309 அத்தியாயம் 8 பாடம் 4

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ . 309

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டிப் பொய் சொல்பவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும் .

Reference: ( புகாரீ : 110, முஸ்லிம் : முகத்திமா : 3)
ஹதீஸ் 310 அத்தியாயம் 8 பாடம் 4

(م) عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ . 310

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சமுரா பின் ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : பொய்யெனத் தெரியும் என்னைப் பற்றிய ஒரு செய்தியை யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்கள் இருவருள் ஒருவர் ஆவார் .

Reference: ( முஸ்லிம் : முகத்திமா : பாடம் : 1, இப்னுமாஜா : 38)
ஹதீஸ் 311 அத்தியாயம் 8 பாடம் 5

(ق) عَنْ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ قَالَ قَالَ [ ص: 40 ] النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا . 311

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது . ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல் ; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி , அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ( ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள் ).

Reference: ( புகாரீ : 73, முஸ்லிம் : 816)
ஹதீஸ் 312 அத்தியாயம் 8 பாடம் 6

(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ حَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَاسْتَحْيَيْتُ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِيَ النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لَأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا . 312

அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ மரங்களில் ( இப்படியும் ) ஒருவகை மரம் உண்டு ; அதன் இலை உதிர்வதில்லை . அது முஸ்லிமுக்கு உவமையாகும் . அது என்ன மரம் என்று சொல்லுங்கள் !`` என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள் . நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று . அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது . ( மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று ) வெட்கப்பட்டுக்கொண்டு ( அமைதியாக ) இருந்துவிட்டேன் . பிறகு மக்கள் “ அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள் , அல்லாஹ்வின் தூதரே ?`` என்று கேட்க , “ அது பேரீச்ச மரம் `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன் . அதைக் கேட்ட என் தந்தை “ நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதைவிட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும் `` என்றார்கள் .

Reference: ( புகாரீ : 131, முஸ்லிம் : 2811)
ஹதீஸ் 313 அத்தியாயம் 8 பாடம் 7

(ق) عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ ثَلَاثَةُ نَفَرٍ فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَهَبَ وَاحِدٌ قَالَ فَوَقَفَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا وَأَمَّا الْآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أُخْبِرُكُمْ عَنْ النَّفَرِ الثَّلَاثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ فَآوَاهُ اللَّهُ وَأَمَّا الْآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ وَأَمَّا الْآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ . 313

அபூவாக்கித் ( அல்ஹாரிஸ் பின் மாலிக் ) அல்லைஸீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களுடன் ( மஸ்ஜிதுந்நபவீ ) பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர் . அவர்களுள் இருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கி வந்தனர் . மற்றொருவர் ( அலட்சியப்படுத்திவிட்டுச் ) சென்றுவிட்டார் . ( பள்ளிக்குள் வந்த ) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( வீற்றிருந்த அவை ) முன்னால் வந்து நின்றார்கள் . அவ்விருவருள் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்துகொண்டார் . மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( தமது பேச்சை ) முடித்ததும் கூறினார்கள் : இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா ? அவர்களுள் ஒருவர் அல்லாஹ்வின் ( அருளின் ) பக்கம் ஒதுங்கினார் . அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான் . மற்றவரோ வெட்கப்பட்டு ( க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து ) விட்டார் . எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான் . மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார் . எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான் .

Reference: ( புகாரீ : 66, முஸ்லிம் : 2176)
ஹதீஸ் 314 அத்தியாயம் 8 பாடம் 8

(ق) عَنْ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ لَا تَسْمَعُ شَيْئًا لَا تَعْرِفُهُ إِلَّا رَاجَعَتْ فِيهِ حَتَّى تَعْرِفَهُ وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حُوسِبَ عُذِّبَ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ أَوَلَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا قَالَتْ فَقَالَ إِنَّمَا ذَلِكِ الْعَرْضُ وَلَكِنْ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَهْلِكْ . 314

இப்னு அபீமுலைக்கா ( அப்தில்லாஹ் பின் உபைதில்லாஹ்-ரஹிமஹுல்லாஹ் ) கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா தமக்குப் புரியாத ஒரு செய்தியைச் செவியுற்றால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை ( அதையொட்டி ) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள் . ( ஒருமுறை ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , “ எவர் ( மறுமை நாளில் துருவித் துருவி ) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார் `` என்று கூறினார்கள் . ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா , “ அல்லாஹ் ( குர்ஆனில் ) " வலக்கரத்தில் தமது வினைச்சுவடி வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும் ` (84:8) என்றல்லவா கூறுகின்றான் ?`` என்று கேட்டார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இது ( கேள்வி கணக்குத் தொடர்பானது அன்று : மாறாக , மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியல் அவர்களுக்குமுன் ) சமர்ப்பிக்கப்படுவதுதான் . துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார் `` என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 103, முஸ்லிம் : 2876)
ஹதீஸ் 315 அத்தியாயம் 8 பாடம் 8

(خ) عَنْ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ فَأَنَاخَهُ فِي الْمَسْجِدِ ثُمَّ عَقَلَهُ ثُمَّ قَالَ لَهُمْ أَيُّكُمْ مُحَمَّدٌ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ فَقُلْنَا هَذَا الرَّجُلُ الْأَبْيَضُ الْمُتَّكِئُ فَقَالَ لَهُ الرَّجُلُ يَا ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَجَبْتُكَ فَقَالَ الرَّجُلُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي سَائِلُكَ فَمُشَدِّدٌ عَلَيْكَ فِي الْمَسْأَلَةِ فَلَا تَجِدْ عَلَيَّ فِي نَفْسِكَ فَقَالَ سَلْ عَمَّا بَدَا لَكَ فَقَالَ أَسْأَلُكَ بِرَبِّكَ وَرَبِّ مَنْ قَبْلَكَ آللَّهُ أَرْسَلَكَ إِلَى النَّاسِ كُلِّهِمْ فَقَالَ اللَّهُمَّ نَعَمْ قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ آللَّهُ أَمَرَكَ أَنْ نُصَلِّيَ الصَّلَوَاتِ الْخَمْسَ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ قَالَ اللَّهُمَّ نَعَمْ قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ آللَّهُ أَمَرَكَ أَنْ نَصُومَ هَذَا الشَّهْرَ مِنْ السَّنَةِ قَالَ اللَّهُمَّ نَعَمْ قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ آللَّهُ أَمَرَكَ أَنْ تَأْخُذَ هَذِهِ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِنَا فَتَقْسِمَهَا عَلَى فُقَرَائِنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ نَعَمْ فَقَالَ الرَّجُلُ آمَنْتُ بِمَا جِئْتَ بِهِ وَأَنَا رَسُولُ مَنْ وَرَائِي مِنْ قَوْمِي وَأَنَا ضِمَامُ بْنُ ثَعْلَبَةَ أَخُو بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ. 315

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் ( மஸ்ஜிதுந் நபவீ ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி ( யின் வளாகத்தி ) ல் ஒட்டகத்தைப் படுக்கவைத்து அத ( ன் முன்னங்காலி ) னை மடக்கிக்கட்டினார் . பிறகு மக்களிடம் “ உங்களுள் முஹம்மது அவர்கள் யார் ?” என்று கேட்டார் . - அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள் .- “ இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம் ” என்று நாங்கள் சொன்னோம் . உடனே அம்மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை “ அப்துல் முத்தலிபின் ( மகனின் ) புதல்வரே !” என்றழைத்தார் . அதற்கு நபியவர்கள் “ என்ன விஷயம் ?`` என்று கேட்டார்கள் . அப்போது அம்மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “ நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன் . சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன் . அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது `` என்றார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ உம் மனதில் பட்டதைக் கேளும் !`` என்றார்கள் . உடனே அம்மனிதர் “ உம்முடைய , உம் முன்னோருடைய இரட்சகன்மீது ஆணையாகக் கேட்கிறேன் ; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா ?” என்றார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் , அல்லாஹ் சாட்சியாக !`` என்றார்கள் . அடுத்து அவர் “ அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன் ; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக ( நாளன்றுக்கு ) ஐவேளைத் தொழுகைகளைத் தொழுது வரவேண்டுமென்று உமக்கு ( ம் மக்களுக்கும் ) கட்டளையிட்டிருக்கின்றானா ?`` என்று கேட்டார் . அதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் , அல்லாஹ் சாட்சியாக `` என்றார்கள் . அவர் “ அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன் ; அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் ( குறிப்பிட்ட ) இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா ?`` என்று கேட்டார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் , அல்லாஹ் சாட்சியாக !” என்றார்கள் . அவர் , “ அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன் : அல்லாஹ்தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த ( ஸகாத் எனும் ) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா ?`` என்று கேட்டார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஆம் , அல்லாஹ் சாட்சியாக !` என்றார்கள் . ( இவற்றைக் கேட்டுவிட்டு ) அம்மனிதர் “ நீங்கள் ( இறைவனிடமிருந்து ) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன் `` என்று கூறிவிட்டு “ நான் , எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன் ; நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபா `` என்றும் கூறினார் .

Reference: ( புகாரீ : 63)
ஹதீஸ் 316 அத்தியாயம் 8 பாடம் 9

(ق) عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَعْظَمَ الْمُسْلِمِينَ جُرْمًا مَنْ سَأَلَ عَنْ شَيْءٍ لَمْ يُحَرَّمْ فَحُرِّمَ مِنْ أَجْلِ مَسْأَلَتِهِ . 316

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : எவர் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்டு , அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவர் ஆவார் .

Reference: ( புகாரீ : 7289, முஸ்லிம் : 2358)
ஹதீஸ் 317 அத்தியாயம் 8 பாடம் 9

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ . 317

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் எதை ( செய்யுங்கள் என்றோ , செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல் ) உங்களு ( டைய முடிவு ) க்கு விட்டுவிட்டேனோ அதை ( ப் பற்றி எதுவும் கேட்காமல் ) நீங்களும் விட்டுவிடுங்கள் . உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் ( அதிகமாகக் ) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான் . ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள் . ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் இயன்ற அளவிற்குச் செய்யுங்கள் .

Reference: ( புகாரீ : 7288, முஸ்லிம் : 1337) முஸ்லிம் நூலில் , “ அதிகமாகக் கேள்வி கேட்டது ” என்ற சொற்றொடர் இடம்பெற்றுள்ளது . முஸ்லிம் நூலில் இந்த ஹதீஸின் முற்சேர்க்கையாக இடம்பெற்றுள்ளதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( ஒரு முறை ) எங்கள் மத்தியில் உரையாற்றினார்கள் . அப்போது , “ மக்களே ! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான் . எனவே , ஹஜ் செய்யுங்கள் `` என்றார்கள் . அப்போது ஒரு மனிதர் , “ ஒவ்வோர் ஆண்டிலுமா ( ஹஜ் செய்ய வேண்டும் ), அல்லாஹ்வின் தூதரே ?`` என்று கேட்டார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( பதிலளிக்காமல் ) அமைதியாக இருந்தார்கள் . அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நான் " ஆம் ` என்று சொல்லிவிட்டால் அது ( ஒவ்வோர் ஆண்டிலும் ) கடமையாகிவிடும் . பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற இயலாமலாகிவிடும் `` என்று கூறிவிட்டு , “ நான் எதை ( செய்யுங்கள் என்றோ , செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல் ) உங்களு ( டைய முடிவு ) க்கு விட்டுவிட்டேனோ அதை ( ப் பற்றி எதுவும் கேட்காமல் ) நீங்களும் விட்டுவிடுங்கள் ... ( முஸ்லிம் : 1337 / 2599)
ஹதீஸ் 318 அத்தியாயம் 8 பாடம் 9

(ق) عَنْ أَبِي مُوسَى قَالَ سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَشْيَاءَ كَرِهَهَا فَلَمَّا أُكْثِرَ عَلَيْهِ غَضِبَ ثُمَّ قَالَ لِلنَّاسِ سَلُونِي عَمَّا شِئْتُمْ قَالَ رَجُلٌ مَنْ أَبِي قَالَ أَبُوكَ حُذَافَةُ فَقَامَ آخَرُ فَقَالَ مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَبُوكَ سَالِمٌ مَوْلَى شَيْبَةَ فَلَمَّا رَأَى عُمَرُ مَا فِي وَجْهِهِ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَتُوبُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ . 318

அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது . அவர்களிடம் ( இது போன்ற ) கேள்விகள் அதிகமாகக் கேட்கப்பட்டபோது ( அதைக் கேட்டு ) கோபப்பட்டார்கள் . பின்னர் மக்களிடம் “ நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் !`` என்று கூறினார்கள் . அப்போது ஒரு மனிதர் , “ என் தந்தை யார் ?`` என்று கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஹுதாஃபாதான் உன் தந்தை `` என்று பதிலளித்தார்கள் . உடனே மற்றொருவர் எழுந்து “ என் தந்தை யார் , அல்லாஹ்வின் தூதரே ?” என்று கேட்க , “ உமது தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த " சாலிம்`தான் `` என்றார்கள் . ( இம்மாதிரியான கேள்விகளால் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தில் தென்பட்ட ( கோபத் ) தைக் கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் மெய்யாகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம் `` என்றார்கள் .

Reference: ( புகாரீ : 92, முஸ்லிம் : 2360)
ஹதீஸ் 319 அத்தியாயம் 8 பாடம் 9

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ لَا تَسْأَلُونِي عَنْ شَيْءٍ إِلَّا أَخْبَرْتُكُمْ بِهِ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ قَالَ أَبُوكَ حُذَافَةُ بْنُ قَيْسٍ فَرَجَعَ إِلَى أُمِّهِ فَقَالَتْ وَيْحَكَ مَا حَمَلَكَ عَلَى الَّذِي صَنَعْتَ فَقَدْ كُنَّا أَهْلَ جَاهِلِيَّةٍ وَأَهْلَ أَعْمَالٍ قَبِيحَةٍ فَقَالَ لَهَا إِنْ كُنْتُ لَأُحِبُّ أَنْ أَعْلَمَ مَنْ أَبِي مَنْ كَانَ مِنْ النَّاسِ . 319

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ உங்களுக்குமுன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் அவர்கள் அதிகமாகக் கேள்வி கேட்டு , தங்கள் இறைத்தூதர்களிடம் கருத்து வேறுபாடு கொண்டதன் காரணமாகத்தான் . நான் எதை உங்களுக்கு அறிவிக்கின்றேனோ அதைத் தவிர வேறு எதைப் பற்றியும் என்னிடம் நீங்கள் கேட்காதீர்கள் ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா , “ அல்லாஹ்வின் தூதரே ! என் தந்தை யார் ?`` என்று கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “‘ ஹுதாஃபா பின் கைஸ்’தான் உன் தந்தை `` என்று பதிலளித்தார்கள் . அதைக் கேட்டபின் அவர் தம் தாயிடம் சென்றார் . ( தாம் கேட்ட கேள்வியையும் அதற்கான பதிலையும் அவரிடம் சொன்னார் .) அதைக் கேட்ட அவர்தம் தாய் , “ உனக்கு வந்த கேடே ! நீ செய்த செயலைச் செய்யத் தூண்டியது எது ? நாம் அறியாமைக் காலத்தில் அசிங்கமான செயல்களைச் செய்பவர்களாகவா இருந்து வந்தோம் ?” என்று வினவினார் . அதற்கு அவர் , “ என் தந்தை மக்களுள் எத்தகையவராக இருந்தார் என்று தெரிந்து கொள்ளவே நான் விரும்பினேன் ( அதுவன்றி எந்தக் கெட்ட நோக்கமும் இல்லை )” என்று பதிலளித்தார் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 10531) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் . இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஹஸன் ’ தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 320 அத்தியாயம் 8 பாடம் 10

(ق) عَنْ أَبِي وَائِلٍ قَالَ كَانَ عَبْدُ اللَّهِ يُذَكِّرُ النَّاسَ فِي كُلِّ خَمِيسٍ فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوَدِدْتُ أَنَّكَ ذَكَّرْتَنَا كُلَّ يَوْمٍ قَالَ أَمَا إِنَّهُ يَمْنَعُنِي مِنْ ذَلِكَ أَنِّي أَكْرَهُ أَنْ أُمِلَّكُمْ وَإِنِّي أَتَخَوَّلُكُمْ بِالْمَوْعِظَةِ كَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُنَا بِهَا مَخَافَةَ السَّآمَةِ عَلَيْنَا . 320

அபூவாயில் ஷகீக் பின் சலமா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு , ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள் . ( ஒரு நாள் ) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “ அபூ அப்திர் ரஹ்மான் ! தாங்கள் நாள்தோறும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன் ” என்றார் . அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு , “ உங்களைச் சலிப்படையச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது . நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன் . இவ்வாறுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள் `` என்றார்கள் .

Reference: ( புகாரீ : 70, முஸ்லிம் : 2821)
ஹதீஸ் 321 அத்தியாயம் 8 பாடம் 10

(خ) عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ حَدِّثْ النَّاسَ كُلَّ جُمُعَةٍ مَرَّةً فَإِنْ أَبَيْتَ فَمَرَّتَيْنِ فَإِنْ أَكْثَرْتَ فَثَلَاثَ مِرَارٍ وَلَا تُمِلَّ النَّاسَ هَذَا الْقُرْآنَ وَلَا أُلْفِيَنَّكَ تَأْتِي الْقَوْمَ وَهُمْ فِي حَدِيثٍ مِنْ حَدِيثِهِمْ فَتَقُصُّ عَلَيْهِمْ فَتَقْطَعُ عَلَيْهِمْ حَدِيثَهُمْ فَتُمِلُّهُمْ وَلَكِنْ أَنْصِتْ فَإِذَا أَمَرُوكَ فَحَدِّثْهُمْ وَهُمْ يَشْتَهُونَهُ فَانْظُرْ السَّجْعَ مِنْ الدُّعَاءِ فَاجْتَنِبْهُ فَإِنِّي عَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ لَا يَفْعَلُونَ إِلَّا ذَلِكَ يَعْنِي لَا يَفْعَلُونَ إِلَّا ذَلِكَ الِاجْتِنَابَ . 321

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : வாரத்தில் ஒரு முறை மக்களுக்கு உரை நிகழ்த்துங்கள் . ( அது போதாது எனக் கருதி ) அதற்கு நீங்கள் மறுத்தால் ( வாரத்தில் ) இரண்டு முறை உரை நிகழ்த்துங்கள் . அதைவிட அதிகமாகப்போனால் மூன்று முறை உரை நிகழ்த்துங்கள் . ( அதைவிட அதிகமாகப்போய் ) இந்தக் குர்ஆன் மீது மக்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடாதீர்கள் . மக்கள் எதையோ பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் அவர்களிடம் சென்று உரையாற்ற , அதையடுத்து அவர்களின் பேச்சு தடைபட்டுவிட , அதனால் அவர்களை நீங்கள் சோர்வடையச் செய்கின்ற நிலையில் உங்களை நான் காணக் கூடாது . மாறாக , நீங்கள் ( அப்போது ) மௌனமாக இருங்கள் . அவர்களாக விரும்பி உங்களைக் கேட்டுக்கொண்டால் அவர்கள் மத்தியில் உரையாற்றுங்கள் . எதுகை மோனையுடன் பிரார்த்தனை செய்வதைக் கவனமாக இருந்து தவிர்த்து விடுங்கள் . ஏனெனில் , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் இவ்வாறு செய்வதிலிருந்து தவிர்ந்திருக்கவே நான் கண்டுள்ளேன் .

Reference: ( புகாரீ : 6337)
ஹதீஸ் 322 அத்தியாயம் 8 பாடம் 11

(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ . 322

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : நீர் வேதமுடையவர்களிடம் செல்கிறீர் . அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் , அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை ; முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்று ( ஏகத்துவத்திற்கு ) சாட்சியம் சொல்லும்படி அவர்களை அழைப்பீராக ! இதற்கு அவர்கள் ( இசைந்து ) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால் , " அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான் ` என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக ! அவர்கள் இதற்கும் ( இசைந்து ) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால் " நிச்சயமாக அல்லாஹ் அவர்களில் செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான் ` என அவர்களுக்கு அறிவிப்பீராக ! அவர்கள் இதற்கும் ( இசைந்து ) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்தவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன் . அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்குப் பயந்துகொள்வீர் ! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் இடையே எந்தத் திரையுமில்லை . இதை முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் .

Reference: ( புகாரீ : 1496, முஸ்லிம் : 19)
ஹதீஸ் 323 அத்தியாயம் 8 பாடம் 11

عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ فَتَعَلَّمْنَا الْإِيمَانَ قَبْلَ أَنْ نَتَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ تَعَلَّمْنَا الْقُرْآنَ فَازْدَدْنَا بِهِ إِيمَانًا . 323

ஜுன்துப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் வலிமை மிக்க இளைஞர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்தபோது குர்ஆனைக் கற்றுக்கொள்வதற்கு முன் இறைநம்பிக்கையைக் கற்றுக்கொண்டோம் . பிறகு குர்ஆனை நாங்கள் கற்றோம் . அதன் மூலம் எங்கள் இறைநம்பிக்கையும் அதிகரித்தது .

Reference: ( இப்னுமாஜா : 60 / 61) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 324 அத்தியாயம் 8 பாடம் 12

(ق) عَنْ أَبِي سَعِيدٍ، جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ الرِّجَالُ بِحَدِيثِكَ، فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ، يَوْمًا نَأْتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللَّهُ‏.‏ فَقَالَ ‏‏ اجْتَمِعْنَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي مَكَانِ كَذَا وَكَذَا ‏.‏ 324

அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து , “ அல்லாஹ்வின் தூதரே ! ( பெண்கள் ) உங்கள் உரைகளை ( க் கேட்க முடியாதவாறு ) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர் . ஆகவே , நாங்கள் தங்களிடம் வந்து , அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்து விடுங்கள் `` என்று கூறினார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள் `` என்று சொன்னார்கள் . அவ்வாறே ( அந்த நாளில் அந்த இடத்தில் ) பெண்கள் ஒன்று திரண்டனர் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெண்களிடம் சென்று , அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள் . பிறகு , “ உங்களுள் எந்தப் பெண் தனக்கு ( மரணம் வருவதற்கு ) முன்பாக , தன் குழந்தைகளுள் மூன்று பேரை இழந்துவிடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள் `` என்று சொன்னார்கள் . அப்போது அப்பெண்களுள் ஒருவர் , “ அல்லாஹ்வின் தூதரே ! இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலுமா ?`` என்று கேட்டார் . இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க , “ ஆம் ; இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான் `` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மும்முறை பதிலளித்தார்கள் .

Reference: ( புகாரீ : 7310, முஸ்லிம் : 2633)
ஹதீஸ் 325 அத்தியாயம் 8 பாடம் 13

(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنْ الْعِبَادِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا . 325

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் கல்வியை ( த் தன் ) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ளமாட்டான் . ஆயினும் , அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான் . கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காதபோதே மக்கள் அறிவீனர்களைத் ( தம் ) தலைவர்களாக்கிக் கொள்வார்கள் . அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட , அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள் . எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள் ; பிறரையும் வழி கெடுப்பார்கள் .

Reference: ( புகாரீ : 100, முஸ்லிம் : 2673)
ஹதீஸ் 326 அத்தியாயம் 8 பாடம் 13

عَنْ زِيَادِ بْنِ لَبِيدٍ قَالَ ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَقَالَ ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَنُقْرِئُهُ أَبْنَاءَنَا وَيُقْرِئُهُ أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ قَالَ ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ إِنْ كُنْتُ لَأَرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ وَالنَّصَارَى يَقْرَءُونَ التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ لَا يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا . 326

ஸியாத் பின் லபீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏதோ ஒன்றைக் கூறினார்கள் . அப்போது அவர்கள் , “ அது ( குர்ஆனின் ) கல்வி அழிந்துவிடும்போது ( நடைபெறும் )” என்று கூறினார்கள் . அல்லாஹ்வின் தூதரே ! ( குர்ஆனின் ) கல்வி எப்படி அழிந்துபோகும் ? நாங்கள் குர்ஆனை ஓதுகிறோம் . எங்கள் பிள்ளைகளுக்கு அதை ஓதிக்கொடுக்கிறோம் . எங்கள் பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு அதை மறுமை நாள் வரை ஓதிக்கொடுப்பார்கள் . ( அப்படியிருக்கும்போது எப்படி அது அழிந்துபோகும் ?) என்று வினவினேன் . அதற்கவர்கள் , “ ஸியாத் ! உம் தாய் உம்மை இழக்கட்டுமாக ! நான் உம்மை மதீனாவில் உள்ள அறிவாளி என்றல்லவா நினைத்தேன் . இந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் ஓதத்தானே செய்கின்றார்கள் ? அவர்கள் அவ்விரண்டிலிருந்தும் எதையும் விளங்குவதில்லையே ? என்று மறுவினாத் தொடுத்தார்கள் .

Reference: ( இப்னுமாஜா : 4038 / 4048) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 327 அத்தியாயம் 8 பாடம் 13

عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْرُسُ الْإِسْلَامُ كَمَا يَدْرُسُ وَشْيُ الثَّوْبِ حَتَّى لَا يُدْرَى مَا صِيَامٌ وَلَا صَلَاةٌ وَلَا نُسُكٌ وَلَا صَدَقَةٌ وَلَيُسْرَى عَلَى كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي لَيْلَةٍ فَلَا يَبْقَى فِي الْأَرْضِ مِنْهُ آيَةٌ وَتَبْقَى طَوَائِفُ مِنْ النَّاسِ الشَّيْخُ الْكَبِيرُ وَالْعَجُوزُ يَقُولُونَ أَدْرَكْنَا آبَاءَنَا عَلَى هَذِهِ الْكَلِمَةِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَنَحْنُ نَقُولُهَا. 327

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுதைஃபா பின் அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஆடையின் ஓரம் தேய்வதைப் போன்று இஸ்லாம் தேய்வடையும் . இறுதியில் நோன்பு , தொழுகை , ( ஹஜ்ஜுக்கான ) கிரியைகள் , தர்மம் ஆகியவை என்னவென்றே தெரியாது . வல்லமையயும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதம் ஓரிரவில் உயர்த்தப்பட்டுவிடும் . ஆகவே அதிலிருந்து ஒரு வசனம் கூடப் புவியில் மிச்சமிருக்காது . மக்களுள் ஒரு குழுவினர் இருப்பார்கள் . அவர்களுள் முதியோர்களும் பாட்டிகளும் , லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் இந்தக் கலிமாவை எங்களின் மூதாதையர்கள் கூறுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம் . எனவே நாங்களும் அதைக் கூறுகிறோம் என்று சொல்வார்கள் . அப்போது ஸிலா என்பவர் ( இந்த ஹதீஸை அறிவித்த ஹுதைஃபா ) அவர்களிடம் , நோன்பு , தொழுகை , ( ஹஜ்ஜுக்கான ) கிரியைகள் , தர்மம் ஆகியவை என்னவென்றே தெரியாத அவர்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவைக் கூறுவதால் என்ன பயன் ? என்று வினவினார் . ( அதற்குப் பதிலளிக்காமல் ) அவரிடமிருந்து ஹுதைஃபா ( முகத்தைத் ) திருப்பிக்கொண்டார் . பின்னர் அவர் மும்முறை அதே வினாவை மீண்டும் மீண்டும் வினவினார் . ஒவ்வொரு தடவையும் ஹுதைஃபா அவரைவிட்டுத் திருப்பிக்கொண்டார் . பின்னர் மூன்றாம் தடவை , அவரை முன்னோக்கி , “ ஸிலா ! அது அவர்களை நரகத்திலிருந்து காப்பாற்றும் ” என்று மும்முறை விடையளித்தார் .

Reference: ( இப்னுமாஜா : 4039 / 4049) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 328 அத்தியாயம் 8 பாடம் 14

(ق) عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ قَالَ عَقَلْتُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَجَّةً مَجَّهَا فِي وَجْهِي وَأَنَا ابْنُ خَمْسِ سِنِينَ مِنْ دَلْوٍ . 328

மஹ்மூத் பின் ரபீஉ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( கிணற்றிலிருந்து இறைத்த ) ஒரு வாளியிலிருந்து ( தண்ணீரை எடுத்துத் தமது வாயில் வைத்து ) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் ( இப்போதும் ) நினைவில் வைத்திருக்கிறேன் .

Reference: ( புகாரீ : 77, முஸ்லிம் : 33)
ஹதீஸ் 329 அத்தியாயம் 8 பாடம் 15

(ق) عَنْ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ مَا عِنْدَنَا كِتَابٌ نَقْرَؤُهُ إِلَّا كِتَابُ اللَّهِ غَيْرَ هَذِهِ الصَّحِيفَةِ قَالَ فَأَخْرَجَهَا فَإِذَا فِيهَا أَشْيَاءُ مِنْ الْجِرَاحَاتِ وَأَسْنَانِ الْإِبِلِ قَالَ وَفِيهَا الْمَدِينَةُ حَرَمٌ مَا بَيْنَ عَيْرٍ إِلَى ثَوْرٍ فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا أَوْ آوَى مُحْدِثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلَا عَدْلٌ وَمَنْ وَالَى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلَا عَدْلٌ وَذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ يَسْعَى بِهَا أَدْنَاهُمْ فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلَا عَدْلٌ . 329

யஸீத் பின் ஷரீக் அத்தைமீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அலீ ரளியல்லாஹு அன்ஹு , “ நாங்கள் ஓதி வருகின்ற அல்லாஹ்வுடைய வேதத்தையும் ( நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ) இந்த ஏட்டையும் தவிர ( எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம் ) வேறெதுவும் ( நபியின் குடும்பத்தாரான ) எங்களிடம் இல்லை `` என்று கூறிவிட்டு , அந்த ஏட்டை வெளியே எடுத்தார்கள் . அதில் காயங்களுக்கான தண்டனை குறித்தும் ( உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும் ) ஒட்டகங்களின் வயது குறித்தும் எழுதப்பட்டிருந்தன . மேலும் , அதில் ( பின்வருமாறு குறிப்பிடப்பட்டு ) இருந்தது : மதீனா நகரம் " அய்ர் ` எனும் மலையிலிருந்து " ஸவ்ர் ` மலை வரை புனிதமானதாகும் . அதில் எவன் ( மார்க்கத்தின் பெயரால் ) புதிதாக ஒன்றை உருவாக்குகின்றானோ , அல்லது ( அவ்வாறு ) புதிதாக ஒன்றை உருவாக்குகின்றவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றானோ அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும் . மேலும் , அவன் புரிந்த கடமையான வழிபாடோ கூடுதலான வழிபாடோ எதுவுமே அவனிடமிருந்து ஏற்கப்படாது . தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமைமீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும் . மேலும் , அவன் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் அவனிடமிருந்து ஏற்கப்படாது . முஸ்லிம்களுள் யார் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும் . ( மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும் .) அவர்களுள் கீழ்நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் தர முன்வரலாம் . ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவரேனும் முறித்தால் அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும் . மேலும் , அவன் செய்த கடமையான வழிபாடு , உபரியான வழிபாடு மற்றும் எதுவுமே மறுமை நாளில் ஏற்றுக் கொள்ளப்படாது .

Reference: ( புகாரீ : 6755, முஸ்லிம் : 1370) புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளதாவது : அபூஜுஹைஃபா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ உங்களிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்பதைத் தவிர இறையறிவிப்புகளிலிருந்து ( வேறு ) ஏதும் இருக்கின்றதா ?`` என்று கேட்டேன் . அவர்கள் , “" இல்லை ; விதையைப் பிளப்பவனும் , உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின்மீது சத்தியமாக ! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை ; ஒரு மனிதருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனில் அளிக்கின்ற விளக்கத்தையும் இந்தத் தாளில் இருப்பதையும் தவிர ” என்று பதிலளித்தார்கள் . நான் , “ இந்தத் தாளில் என்ன இருக்கிறது ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ உயிரீட்டுத் தொகை ( பற்றிய சட்டம் ), போர்க் கைதியை ( பணம் கொடுத்தோ , கைதிகள் பரிவர்த்தனை செய்தோ எதிரிகளிடமிருந்து ) விடுவிப்பது , எந்த முஸ்லிமையும் நிராகரிப்பாளன் ஒருவனைக் கொன்றதற்காகக் கொல்லக் கூடாது ( ஆகியவை )`` என்று பதிலளித்தார்கள் . ( புகாரீ : 3047).
ஹதீஸ் 330 அத்தியாயம் 8 பாடம் 15

(م) عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ سُئِلَ عَلِيٌّ أَخَصَّكُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ فَقَالَ مَا خَصَّنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ لَمْ يَعُمَّ بِهِ النَّاسَ كَافَّةً إِلَّا مَا كَانَ فِي قِرَابِ سَيْفِي هَذَا قَالَ فَأَخْرَجَ صَحِيفَةً مَكْتُوبٌ فِيهَا لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ وَلَعَنَ اللَّهُ مَنْ سَرَقَ مَنَارَ الْأَرْضِ وَلَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَهُ وَلَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا . 330

அபுத்துஃபைல் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை ( இரகசியமாக ) ச் சொன்னார்களா ?`` என்று கேட்கப்பட்டது . அலீ ரளியல்லாஹு அன்ஹு , " அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் ( இரகசியமாகச் ) சொல்லவில்லை ; இதோ இந்த வாளுறையில் இருப்பதைத் தவிர `` என்று கூறிவிட்டு , ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள் . அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது : அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் ( பிராணியை ) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான் . பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கின்றான் . தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ்வும் சபிக்கின்றான் . ( மார்க்கத்தில் இல்லாத ) புதுமைகளை ( மார்க்கத்தின் பெயரால் ) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான் .

Reference: ( முஸ்லிம் : 1978 / 4003)
ஹதீஸ் 331 அத்தியாயம் 8 பாடம் 15

عَنْ قَيْسِ بْنِ عَبَّادٍ قَالَ قُلْتُ لِعَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخْبِرْنَا عَنْ مَسِيرِكَ هَذَا أَعَهْدٌ عَهِدَهُ إِلَيْكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْ رَأْيٌ رَأَيْتَهُ فَقَالَ مَا عَهِدَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ وَلَكِنَّهُ رَأْيٌ رَأَيْتُهُ . 331

கைஸ் பின் உபாத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ உங்களுடைய இந்த நடை குறித்து எங்களுக்குச் சொல்லுங்கள் . இது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தமா ? அல்லது உங்களுடைய தனிப்பட்ட முடிவா ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதையும் என்னிடம் ஒப்பந்தம் செய்யவில்லை . எனினும் ( இது ) என்னுடைய தனிப்பட்ட முடிவாகும் ” என்றார்கள் .

Reference: ( அபூதாவூத் : 4666) இந்த அறிவிப்பாளர்தொடர் ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 332 அத்தியாயம் 8 பாடம் 16

(خ ) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ أَهْلُ الْكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالْعِبْرَانِيَّةِ وَيُفَسِّرُونَهَا بِالْعَرَبِيَّةِ لِأَهْلِ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ وَلَا تُكَذِّبُوهُمْ وَقُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا الْآيَةَ . 332

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : வேதக்காரர் ( களான யூதர் ) கள் , தவ்ராத்தை ஹீப்ரூ மொழியில் ஓதி , அதை முஸ்லிம்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ வேதக்காரர்களை ( அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என ) நம்பவும் வேண்டாம் ; ( பொய் என ) மறுக்கவும் வேண்டாம் . ( மாறாக , முஸ்லிம்களே !) நீங்கள் சொல்லுங்கள் : நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம் , இஸ்மாயீல் , இஸ்ஹாக் , யஅகூப் ஆகியோருக்கும் , யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் , மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம் . நாங்கள் அவர்களுள் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை . இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம் `` (2:136) என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 4485)
ஹதீஸ் 333 அத்தியாயம் 8 பாடம் 16

(خ) عَنْ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الْكِتَابِ عَنْ شَيْءٍ وَكِتَابُكُمْ الَّذِي أُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْدَثُ تَقْرَءُونَهُ مَحْضًا لَمْ يُشَبْ وَقَدْ حَدَّثَكُمْ أَنَّ أَهْلَ الْكِتَابِ بَدَّلُوا كِتَابَ اللَّهِ وَغَيَّرُوهُ وَكَتَبُوا بِأَيْدِيهِمْ الْكِتَابَ وَقَالُوا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا أَلَا يَنْهَاكُمْ مَا جَاءَكُمْ مِنْ الْعِلْمِ عَنْ مَسْأَلَتِهِمْ لَا وَاللَّهِ مَا رَأَيْنَا مِنْهُمْ رَجُلًا يَسْأَلُكُمْ عَنْ الَّذِي أُنْزِلَ عَلَيْكُمْ . 333

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( மார்க்கம் தொடர்பான ) எந்த விஷயம் குறித்தும் வேதக்காரர்களிடம் நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் ? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பெற்றுள்ள உங்களது வேதமோ புதியது . கலப்படமில்லாத தூய வேதமாக அதை நீங்கள் ஓதிவருகிறீர்கள் . வேதக்காரர்கள் ( தமக்கு அருளப்பெற்ற ) இறைவேதத்தைத் திரித்து மாற்றம் செய்து , தம் கரங்களால் வேதத்தை ( மாற்றி ) எழுதிக்கொண்டு , அதன்மூலம் சொற்ப விலையைப் பெறுவதற்காக " இது இறைவனிடமிருந்து வந்ததே ` என்று கூறுகிறார்கள் என அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்துள்ளான் . உங்களுக்குக் கிடைத்துள்ள ( மார்க்க ) ஞானம் , வேதக்காரர்களிடம் கேட்பதிலிருந்து உங்களைத் தடுக்கவில்லையா ? அல்லாஹ்வின் மீதாணையாக ! வேதக்காரர்களுள் எவரும் உங்களுக்கு அருளப்பெற்ற ( வேதத் ) தைப் பற்றி உங்களிடம் கேட்பதை நாம் கண்டதில்லையே !

Reference: ( புகாரீ : 7363)
ஹதீஸ் 334 அத்தியாயம் 8 பாடம் 16

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُنَا عَنْ بَنِي إِسْرَائِيلَ حَتَّى يُصْبِحَ مَا يَقُومُ إِلَّا إِلَى عُظْمِ صَلَاةٍ . 334

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , பனூ இஸ்ரவேலர்களைப் பற்றி விடியும் வரை எங்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள் . கடமையான தொழுகைக்கே தவிர எழவில்லை .

Reference: ( அபூதாவூத் : 3663) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 335 அத்தியாயம் 8 பாடம் 16

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : حَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا حَرَجَ، حَدِّثُوا عَنِّي وَلَا تَكْذِبُو . 335

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளை அறிவியுங்கள் . அதனால் குற்றமில்லை . என்னிடமிருந்து கிடைத்த செய்திகளை ( ப் பிறருக்கு ) எடுத்துரையுங்கள் . ( நான் சொன்னதாக வேண்டுமென்றே ) பொய்யுரைக்காதீர்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 11536) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இதன் அறிவிப்பாளர்தொடர் ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 336 அத்தியாயம் 8 பாடம் 17

(خ) عَنْ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ : حَدِّثُوا النَّاسَ بِمَا يَعْرِفُونَ أَتُحِبُّونَ أَنْ يُكَذَّبَ اللَّهُ وَرَسُولُهُ . 336

அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள் . ( அவர்களுக்குப் புரியாதவற்றைப் பற்றிப் பேசி , அதனால் ) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ( அவர்களால் ) பொய்யர்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா ?

Reference: ( புகாரீ : 127)
ஹதீஸ் 337 அத்தியாயம் 8 பாடம் 17

(م) عَنْ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ قَالَ : مَا أَنْتَ بِمُحَدِّثٍ قَوْمًا حَدِيثًا لَا تَبْلُغُهُ عُقُولُهُمْ إِلَّا كَانَ لِبَعْضِهِمْ فِتْنَةً . 337

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் அவர்களது அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை அறிவிப்பதானது , அவர்களுள் சிலரையேனும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் விடுவதில்லை .

Reference: ( முஸ்லிம் முன்னுரை : 12)
ஹதீஸ் 338 அத்தியாயம் 8 பாடம் 17

(م) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُنَزِّلَ النَّاسَ مَنَازِلَهُمْ مَعَ مَا نَطَقَ بِهِ الْقُرْآنُ مِنْ قَوْلِ اللَّهِ تَعَالَى وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ . 338

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : நாங்கள் மக்களுக்கு அவரவரது அந்தஸ்தை அளித்திட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் . குர்ஆனும் இதையே கூறுகிறது : கல்வியறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலே ( அவர்களைவிட ) அறிந்தவன் ஒருவன் இருக்கின்றான் (12: 76)

Reference: ( முஸ்லிம் முன்னுரை )
ஹதீஸ் 339 அத்தியாயம் 8 பாடம் 18

(م) عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ خَرَجْتُ أَنَا وَأَبِي نَطْلُبُ الْعِلْمَ فِي هَذَا الْحَيِّ مِنْ الْأَنْصَارِ قَبْلَ أَنْ يَهْلِكُوا فَكَانَ أَوَّلُ مَنْ لَقِينَا أَبَا الْيَسَرِ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ غُلَامٌ لَهُ مَعَهُ ضِمَامَةٌ مِنْ صُحُفٍ ,... وذكر الحديث. 339

உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நானும் என் தந்தை ( வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித்-ரஹிமஹுல்லாஹ் ) அவர்களும் அன்ஸாரிகளில் குறிப்பிட்ட ஒரு கிளையாரிடம் , அவர்கள் இறப்பதற்குமுன் ( அவர்களிடமுள்ள நபிமொழிக் ) கல்வியைக் கற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டோம் . நாங்கள் முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர் அபுல் யசர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையே சந்தித்தோம் . அவர்களுடன் அவர்களுடைய அடிமை ஒருவரும் இருந்தார் . அவரிடம் பதிவேடுகளில் ஒரு தொகுப்பும் இருந்தது ...

Reference: ( முஸ்லிம் : 3006 / 5736)
ஹதீஸ் 340 அத்தியாயம் 8 பாடம் 18

(م) عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ لَا يُسْتَطَاعُ الْعِلْمُ بِرَاحَةِ الْجِسْمِ . 340

அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபீகஸீர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என் தந்தை யஹ்யா பின் அபீகஸீர் ரஹிமஹுல்லாஹ் , “ உடல் சுகத் ( தைத் தேடுவ ) தினால் கல்வியை அடைய முடியாது `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்லிம் : 612 / 1077)
ஹதீஸ் 341 அத்தியாயம் 8 பாடம் 18

عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَ كُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ . 341

கஸீர் பின் கைஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் டமாஸ்கஸ் மஸ்ஜிதில் அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அமர்ந்திருந்தேன் . அப்போது அவர்களிடம் ஒருவர் வந்தார் . அவர் , “ அபுத்தர்தா ! நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்ந்த மதீனாவிலிருந்து உம்மிடம் வந்துள்ளேன் . நீர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவித்துள்ளதாக எனக்குச் செய்தி கிடைத்தது . அந்த ஹதீஹுக்காக நான் உம்மிடம் வந்துள்ளேன் . வேறு ஏதேனும் தேவைக்காக நான் வரவில்லை ” என்று கூறினார் . அப்போது அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு , தாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளதாகக் கூறியதாவது : “ ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால் சொர்க்கம் செல்லும் பாதையில் அவரை அல்லாஹ் நடத்துகின்றான் . வானவர்கள் கல்வியைத் தேடும் ( மாணவர் ) ஒருவரை உவந்து கொண்டதைக் காட்டும் முகமாக தம் இறக்கைகளைக் கீழே தாழ்த்துகின்றனர் . கற்றறிந்த அறிஞர் ஒருவருக்கே வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட யாவும் பாவமன்னிப்புக் கோருகின்றன . பக்திமானைவிடக் கல்விமானுக்குள்ள சிறப்பு மற்ற நட்சத்திரங்களைவிடச் சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும் . மார்க்க அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர் . இறைத்தூதர்கள் பொற்காசுகளுக்கோ வெள்ளிக் காசுகளுக்கோ அவர்களை வாரிசுகளாக்கவில்லை . அவர்கள் இந்தக் கல்விக்குத்தான் வாரிசுகளாக்கியுள்ளனர் . யார் இந்தக் கல்வியைப் பெற்றுக்கொண்டாரோ அவர் நிறைவான பங்கைப் பெற்றுக்கொண்டார் ."

Reference: ( அபூதாவூத் : 3641, திர்மிதீ : 2606 / 2682, இப்னுமாஜா : 223, தாரமீ : 354) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 342 அத்தியாயம் 8 பாடம் 18

عَنْ أَبِي الْعَالِيَةِ قَالَ كُنَّا نَسْمَعُ الرِّوَايَةَ بِالْبَصْرَةِ عَنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ نَرْضَ حَتَّى رَكِبْنَا إِلَى الْمَدِينَةِ فَسَمِعْنَاهَا مِنْ أَفْوَاهِهِمْ . 342

அபுல் ஆலியா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் கூறியதாக பஸ்ராவில் நாங்கள் ஏதேனும் ஹதீஸைச் செவியுற்றால் , ( அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ) நாங்கள் மதீனா சென்று அதை அவர்களின் வாய்களிலிருந்து ( நேரடியாகச் ) செவியுறுகின்ற வரை திருப்தியுற மாட்டோம் .

Reference: ( தாரமீ : 583) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 343 அத்தியாயம் 8 பாடம் 18

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ أَنَّ رَجُلًا مَنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحَلَ إِلَى فَضَالَةَ بْنِ عُبَيْدٍ وَهُوَ بِمِصْرَ فَقَدِمَ عَلَيْهِ وَهُوَ يَمُدُّ لِنَاقَةٍ لَهُ فَقَالَ مَرْحَبًا قَالَ أَمَا إِنِّي لَمْ آتِكَ زَائِرًا وَلَكِنْ سَمِعْتُ أَنَا وَأَنْتَ حَدِيثًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجَوْتُ أَنْ يَكُونَ عِنْدَكَ مِنْهُ عِلْمٌ قَالَ مَا هُوَ قَالَ كَذَا وَكَذَا .. 343

அப்துல்லாஹ் பின் புரைதா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுள் ஒருவர் , எகிப்தில் இருந்த ஃபளாலா பின் உபைத் அவர்களிடம் பயணம் செய்து சென்றார் . இவர் சென்ற நேரத்தில் அவர் தம் ஒட்டகத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார் . இவரைப் பார்த்ததும் , “ வாருங்கள் ” என்று வரவேற்றார் . பின்னர் , “ நான் உம்மை ( வெறுமனே ) சந்திக்க வரவில்லை . மாறாக நானும் நீரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸைச் செவியுற்றுள்ளோம் . அது குறித்து ( வேறு ) ஏதேனும் கல்வியறிவு உம்மிடம் கிடைக்கும் என எண்ணியே நான் உம்மிடம் வந்தேன் ” என்று கூறினார் . அதற்கு அவர் , “ அது என்ன ( ஹதீஸ் )?” என்று வினவினார் . அதற்கு அவர் , “ இன்னின்னது ...” என்று கூறினார் .

Reference: ( தாரமீ : 590) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 344 அத்தியாயம் 8 பாடம் 18

عَنِ الْحَارِثِ بْنِ مُعَاوِيَةَ الْكِنْدِيِّ أَنَّهُ رَكِبَ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَسْأَلُهُ عَنْ ثَلَاثِ خِلَالٍ قَالَ فَقَدِمَ الْمَدِينَةَ فَسَأَلَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ مَا أَقْدَمَكَ قَالَ لِأَسْأَلَكَ عَنْ ثَلَاثِ خِلَالٍ قَالَ وَمَا هُنَّ قَالَ رُبَّمَا كُنْتُ أَنَا وَالْمَرْأَةُ فِي بِنَاءٍ ضَيِّقٍ فَتَحْضُرُ الصَّلَاةُ فَإِنْ صَلَّيْتُ أَنَا وَهِيَ كَانَتْ بِحِذَائِي وَإِنْ صَلَّتْ خَلْفِي خَرَجَتْ مِنْ الْبِنَاءِ فَقَالَ عُمَرُ تَسْتُرُ بَيْنَكَ وَبَيْنَهَا بِثَوْبٍ ثُمَّ تُصَلِّي بِحِذَائِكَ إِنْ شِئْتَ وَعَنْ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ فَقَالَ نَهَانِي عَنْهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَعَنْ الْقَصَصِ فَإِنَّهُمْ أَرَادُونِي عَلَى الْقَصَصِ فَقَالَ مَا شِئْتَ كَأَنَّهُ كَرِهَ أَنْ يَمْنَعَهُ قَالَ إِنَّمَا أَرَدْتُ أَنْ أَنْتَهِيَ إِلَى قَوْلِكَ قَالَ أَخْشَى عَلَيْكَ أَنْ تَقُصَّ فَتَرْتَفِعَ عَلَيْهِمْ فِي نَفْسِكَ ثُمَّ تَقُصَّ فَتَرْتَفِعَ حَتَّى يُخَيَّلَ إِلَيْكَ أَنَّكَ فَوْقَهُمْ بِمَنْزِلَةِ الثُّرَيَّا فَيَضَعَكَ اللَّهُ تَحْتَ أَقْدَامِهِمْ يَوْمَ الْقِيَامَةِ بِقَدْرِ ذَلِكَ . 344

அப்துர் ரஹ்மான் பின் ஜுபைர் பின் ஜுபைர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஹாரிஸ் பின் முஆவியா அல்கின்தீ ரஹிமஹுல்லாஹ் , உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மூன்று செய்திகளைப் பற்றி ( மதீனா சென்று ) கேட்கப் புறப்பட்டார்கள் . அவர் மதீனா வந்ததும் , அவரிடம் உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ உமது வருகையின் காரணம் என்ன ?`` என்று கேட்டார்கள் . “ மூன்று செய்திகளை உங்களிடம் நான் கேட்க வேண்டும் ” என்று கூறினார் . “ அவை என்ன ?” என்று கேட்டதும் , “ சில சமயம் நெருக்கடியான வீட்டில் நான் ஒரு பெண்ணுடன் இருக்கிறேன் . அப்போது தொழுகைக்குரிய நேரம் வந்து விடுகிறது . நான் தொழ வைத்தால் , அந்தப் பெண் எனக்குச் சமமாகத்தான் நிற்க வேண்டியது வரும் . என் பின்னே அப்பெண் தொழுதால் அவள் வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டியது வரும் . ( என்ன செய்வது )`` என்று கேட்டார் . உடனே உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ உமக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே ஓர் ஆடையைத் திரையாக்கி , பின் உமக்குச் சமமாக நிறுத்தி , நீ தொழு `` என்று பதில் கூறினார்கள் . அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி ( கேட்டார் ). “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வாறு தொழ என்னைத் தடுத்தார்கள் ”` என்று பதில் கூறினார்கள் . கனவிற்குப் பலன் கூறும்படி மக்கள் என்னை விரும்பி வருகிறார்கள் . கனவிற்குப் பலன் கூறலாமா ? என்பது பற்றிக் கேட்டார் . “ நீ விரும்பியபடி நடந்துகொள் `` என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு பதில் கூறினார்கள் . அவர்களின் பதில் , அதைத் தடுக்க வெறுப்பது போல் இருந்தது . “ உங்களின் வார்த்தை மூலம் அதை நான் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன் `` என்றார் . “ நீ கனவுக்கு விளக்கம் கூறி , உன் உள்ளத்தில் அவர்களிடம் நீ உயர்வாக இருப்பதாகக் கருதும் நிலை ஏற்படுவதையே உம்மிடம் நான் பயப்படுகிறேன் . பின்பு நீ கனவுக்கு விளக்கம் கூறி , நீ உயர்வாகக் கருத ஆரம்பித்தால் நீ ஒரு நட்சத்திர அந்தஸ்தில் அவர்களைவிட உயர்வாகக் கருதத் தொடங்குவாய் . இதனால் ( அல்லாஹ் கோபமுற்று ) அவர்களின் கால்களுக்கும் கீழே உம்மை மறுமை நாள் வரை வைத்துவிடுவான் `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 111) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 345 அத்தியாயம் 8 பாடம் 20

عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ: إِنَّ الَّذِي يُفْتِي النَّاسَ فِي كُلِّ مَا يُسْتَفْتَى لَمَجْنُونٌ . 345

இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மக்களால் கேட்கப்படுகின்ற ( எதற்கும் தெரியாது எனக் கூறாமல் ) அனைத்திற்கும் மார்க்கத் தீர்ப்பு வழங்குபவன் பைத்தியக்காரன் ஆவான் .

Reference: ( தாரமீ : 176) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 346 அத்தியாயம் 8 பாடம் 20

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَجُلًا سَأَلَهُ عَنْ مَسْأَلَةٍ فَقَالَ لَا عِلْمَ لِي بِهَا فَلَمَّا أَدْبَرَ الرَّجُلُ قَالَ ابْنُ عُمَرَ نِعْمَ مَا قَالَ ابْنُ عُمَرَ سُئِلَ عَمَّا لَا يَعْلَمُ فَقَالَ لَا عِلْمَ لِي بِهِ . يعني : نفسه . 346

உர்வா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒருவர் ( ஏதோ ) ஒன்றைக் குறித்து இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேள்வி கேட்டார் . அதற்கு இப்னு உமர் , “ அது குறித்து எனக்குத் தெரியாது ” என்று கூறினார்கள் . ஆகவே அம்மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார் . ( அதன்பின் ) இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இப்னு உமர் நன்றாகவே சொன்னார் . அவர் அறியாதது குறித்துக் கேட்கப்பட்டார் . அதற்கு அவர் , “ தமக்கு அது குறித்துத் தெரியாது ” என்று கூறிவிட்டார் . ( அதாவது தம்மையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் .)

Reference: ( தாரமீ : 184, 186) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 347 அத்தியாயம் 8 பாடம் 20

عَنْ الشَّعْبِيِّ قَالَ لَا أَدْرِي نِصْفُ الْعِلْمِ . 347

ஜஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : எனக்குத் தெரியாது என்று கூறுவது கல்வியில் பாதியாகும் .

Reference: ( தாரமீ : 185) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 348 அத்தியாயம் 8 பாடம் 20

عَنْ ابْنِ سِيرِينَ قَالَ مَا أُبَالِي سُئِلْتُ عَمَّا أَعْلَمُ أَوْ مَا لَا أَعْلَمُ لِأَنِّي إِذَا سُئِلْتُ عَمَّا أَعْلَمُ قُلْتُ مَا أَعْلَمُ وَإِذَا سُئِلْتُ عَمَّا لَا أَعْلَمُ قُلْتُ لَا أَعْلَمُ . 348

இப்னு சீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் அறிந்ததைப் பற்றி அல்லது நான் அறியாததைப் பற்றி என்னிடம் கேட்கப்பட்டால் நான் அது குறித்துக் கவலைப்பட மாட்டேன் . ஏனென்றால் நான் அறிந்தது குறித்து என்னிடம் கேட்கப்பட்டால் , நான் அறிந்ததைச் சொல்வேன் . நான் அறியாதது குறித்து என்னிடம் கேட்கப்பட்டால் , “ நான் அறியேன் ” என்று கூறிவிடுவேன் .

Reference: ( தாரமீ : 188) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 349 அத்தியாயம் 8 பாடம் 21

(خ) قَالَ الْحُمَيْدِيُّ هَذَا كَمَا أَخْبَرَ بِلَالٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْكَعْبَةِ وَقَالَ الْفَضْلُ لَمْ يُصَلِّ فَأَخَذَ النَّاسُ بِشَهَادَةِ بِلَالٍ . 349

ஹுமைதீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : " நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( மக்கா வெற்றியின்போது ) கஅபாவினுள் தொழுதார்கள் ` என்று பிலால் ரளியல்லாஹு அன்ஹு செய்தியறிவிக்க , ஃபள்லு பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு , " நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கஅபாவினுள் தொழவில்லை ` என்று கூறியபோது , பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சாட்சியத்தையே மக்கள் ஏற்றுக்கொண்டதைப் போன்றதாகும் .``

Reference: ( புகாரீ : ஷஹாதாத் : பாடம் : 4)
ஹதீஸ் 350 அத்தியாயம் 8 பாடம் 22

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنْ الدُّنْيَا لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ يَعْنِي رِيحَهَا . 350

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் திருப்தியை ( மட்டுமே ) நாடிக் கற்க வேண்டிய கல்வியை யார் உலகாதாயத்தை நாடிக் கற்றாரோ அவர் மறுமைநாளில் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார் .

Reference: ( அபூதாவூத் : 3664, இப்னுமாஜா : 248 / 252) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 351 அத்தியாயம் 8 பாடம் 22

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ وَلَا لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ وَلَا تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَالنَّارُ النَّارُ . 351

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அறிஞர்களோடு பெருமையடிப்பதற்காகவும் அறிவிலிகளோடு விவாதம் செய்வதற்காகவும் கல்வியைக் கற்காதீர்கள் . அதை வைத்துக்கொண்டு சபைகளைத் தேடாதீர்கள் . யார் அவ்வாறு செய்கின்றாரோ ( அவருக்கு ) நரகமே , ( அவருக்கு ) நரகமே .

Reference: ( இப்னுமாஜா : 250 / 254) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 352 அத்தியாயம் 8 பாடம் 22

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَخْوَفُ مَا أَخَافُ عَلَيْكُمْ جِدَالُ الْمُنَافِقِ عَلِيمِ اللِّسَانِ . 352

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் உங்களுள் மிகவும் அஞ்சுவது மொழியறிவுகொண்ட நயவஞ்சகனோடு ( நீங்கள் ) தர்க்கம் செய்வதைத்தான் .

Reference: நூல் : இப்னு ஹிப்பான் 80. இதன் அறிவிப்பாளர் தொடர் புகாரீ இமாமின் நிபந்தனைக்கேற்ப அமைந்துள்ளது .
ஹதீஸ் 353 அத்தியாயம் 8 பாடம் 22

عَنْ ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُجَارِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ . 353

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் கற்றோரிடம் விதண்டா வாதம் புரிவதற்காக அல்லது கல்லாதோரிடம் விளம்பரம் தேடுவதற்காக அல்லது மக்களின் முகங்களைத் தம் பக்கம் திருப்புவதற்காகக் கல்வியைத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் நரகத்தில் நுழையச் செய்வான் .

Reference: ( திர்மிதீ : 2578 / 2654) இது ` ஹஸன் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 354 அத்தியாயம் 8 பாடம் 23

عَنْ الْحَارِثَ الْأَشْعَرِيَّ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ أَمَرَ يَحْيَى بْنَ زَكَرِيَّا بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ يَعْمَلَ بِهَا وَيَأْمُرَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يَعْمَلُوا بِهَا وَإِنَّهُ كَادَ أَنْ يُبْطِئَ بِهَا . 354

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹாரிஸ் பின் அல்ஹாரிஸ் அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , ( தன் தூதர் ) யஹ்யா பின் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும் அவற்றைச் செயல்படுத்தும்படி பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடும்படியும் உத்தரவிட்டான் . ஆனால் , அவற்றை பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரிடம் கூறாமல் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் காலதாமதம் செய்ய முற்பட்டார்கள் . இந்நிலையில் ( இறைத்தூதர் ) ஈஸா அலைஹிஸ்ஸலாம் ( யஹ்யா அவர்களிடம் ), அல்லாஹ் ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும் அவற்றைச் செயல்படுத்தும்படி பனூ இஸ்லாயீல் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடும்படியும் உமக்கு உத்தரவிட்டான் . ( அவற்றைச் செயல்படுத்தும்படி ) அவர்களுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் . அல்லது நான் உத்தரவிட வேண்டும் . ( இதை நீங்கள் செய்கிறீர்களா , அல்லது நான் செய்யட்டுமா ?) என்று கேட்டார்கள் . அதற்கு யஹ்யா அலைஹிஸ்ஸலாம் , ( ஈஸா அவர்களிடம் ) இவ்விஷயத்தில் என்னை நீங்கள் முந்திக் கொண்டால் ( காலம் தாழ்த்திய குற்றத்திற்காக ) நான் பூமியில் புதையுண்டு விடுவேனோ , அல்லது வேறு தண்டனைக்கு நான் உள்ளாவேனோ என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள் . பிறகு யஹ்யா அலைஹிஸ்ஸலாம் ( ஜெரூசலத்தில் உள்ள ) பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலில் ( இஸ்ரவேல் ) மக்களை ஒன்று கூட்டினார்கள் . பள்ளிவாசல் ( மக்கள் திரளால் ) நிரம்பி , ( மக்களுக்கு இடம் கிடைக்காமல் ) அவர்கள் பள்ளிவாசலின் மேல் தளத்தின்மீது ஏறிக் கொண்டனர் . அப்போது யஹ்யா அலைஹிஸ்ஸலாம் பின்வருமாறு கூறினார்கள் : ஐந்து கட்டளைகளை நான் நிறைவேற்ற வேண்டுமென்றும் அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி உங்களையும் அவற்றைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட வேண்டும் என்றும் எனக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான் . முதலாவது கட்டளை : அல்லாஹ்வை மட்டுமே நீங்கள் வழிபடுங்கள் . அவனுக்கு வேறு யாரையும் இணையாக்காதீர்கள் . அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவனின் நிலை , ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது . அவர் தமக்கே உரிய செல்வத்தில் பொன் அல்லது வெள்ளியைக் கொடுத்து ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார் . அவர் ( தம் அடிமையிடம் ) " இது எனது வீடு ; இது எனக்கு நீர் செய்ய வேண்டிய வேலை ; நீர் வேலை செய்து ( இதில் கிடைக்கும் வருமானத்தை ) என்னிடமே கொடுத்துவிட வேண்டும் " என்று கூறினார் . அவ்வாறே அந்த அடிமையும் வேலை செய்தார் . ஆனால் , அதில் கிடைத்த ( வருமானத் ) தை தன் உரிமையாளரிடம் அளிக்காமல் வேறு யாரோ ஒருவரிடம் கொடுத்தான் . தம்முடைய அடிமை இவ்வாறு இருப்பது கண்டு உங்களில் யார் மகிழ்ச்சி அடைவார் ? ( இறைவன் வழங்கியவற்றை அனுபவித்துவிட்டு அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டைப் பிறருக்குச் செய்வது நியாயமா ?) ( இரண்டாவது கட்டளை :) அல்லாஹ் தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான . ஆகவே , நீங்கள் தொழும்போது ( இங்கும் அங்கும் ) திரும்பாதீர்கள் . ஏனெனில் , அல்லாஹ் , தொழுது கொண்டிருக்கும் தன் அடியார் தமது முகத்தைத் திருப்பாத வரை அவரது முகத்துக்கு நேராக தனது முகத்தை வைக்கிறான் . ( மூன்றாவது கட்டளை :) நோன்பு நோற்குமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன் . நோன்பு நோற்பவரின் நிலையானது , ஒரு கூட்டத்தில் தமது கைப்பை நிரம்ப கஸ்தூரியை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது . அந்தக் கஸ்தூரியின் மணம் அவர்களுள் ஒவ்வொருவரையும் வியப்படையச் செய்கிறது . நோன்பு நோற்றவரின் வாயிலிருந்து வரும் வாடை , அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையைவிட நறுமணமிக்கதாகும் . ( நான்காவது கட்டளை :) தான தர்மம் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன் : தர்மம் செய்பவரின் நிலையானது , ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது . அவரை எதிரிகள் கைது செய்து அவரது கையைக் கழுத்தோடு சேர்த்துப் பிணைத்து , சிரச்சேதம் செய்வதற்காக அவரைக் கொண்டு சென்றனர் . அப்போது அந்தக் கைதி "( என்னிடமுள்ள ) குறைவான நிறைவான ( எல்லாப் ) பொருட்களையும் உங்களிடம் பிணைத் தொகையாகச் செலுத்துகிறேன் " என்று கூறி ( அவற்றைச் செலுத்தி ) அவர்களிடமிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார் . ( ஐந்தாவது கட்டளை :) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து துதிக்குமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன் . அவ்வாறு அல்லாஹ்வை நினைவு கூர்ந்து துதிப்பவரின் நிலையானது , எதிரிகள் மிக வேகமாகப் பின்தொடர்ந்து வருகின்ற ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது . அவர் பாதுகாப்பான கோட்டை ஒன்றில் புகுந்து அவர்களிடமிருந்து தம்மைத் தற்காத்துக் கொண்டார் . இவ்வாறுதான் ஓர் அடியார் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து துதிக்காமல் ஷைத்தானிடமிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியாது . ( இந்தச் செய்தியைத் தம் தோழர்களிடம் தெரிவித்த ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , நானும் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்க ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறு உங்களுக்கு உத்தரவிடுகிறேன் . 1. ( தலைவரின் ஆணையைச் ) செவியேற்றல் . 2. ( தலைமைக்குக் ) கட்டுப்படல் . 3. அறப்போர் புரிதல் . 4. ( அவசியம் நேர்ந்தால் ) புலம் பெயர்ந்து ( ஹிஜ்ரத் ) செல்லல் . 5. சமூகக் கட்டமைப்பு ( டன் இணைந்திருத்தல் ) ஆகியவையாகும் . ஒருவர் சமூகக் கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவு வெளியேறினாலும் அவர் ( மீண்டும் அதனுள் ) திரும்பி வரும் வரை இஸ்லாம் எனும் கட்டைத் தமது கழுத்திலிருந்து கழற்றிக் கொண்டுவிட்டார் . யார் அறியாமைக் கலாச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கிறாரோ அவர் நரகக் குவியலுக்குச் செல்பவர்களுள் உள்ளவர் ஆவார் . இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னபோது " அல்லாஹ்வின் தூதரே ! அவர் தொழுதாலும் நோன்பு நோற்றாலுமா ?" என்று மனிதர் கேட்டார் . "( ஆம் ) அவர் தொழுதாலும் நோன்பு நோற்றாலும் சரியே ! ( நரகத்துக்குத்தான் செல்வார் ). ஆயினும் ( இவர்கள் முஸ்லிம்கள்தாம் . இவர்களை ) அல்லாஹ் உங்களைப் பெயர் சூட்டி அழைப்பதைப் போன்றே முஸ்லிம்கள் ( இறைவனுக்குக் கீழ்ப்படிபவர்கள் ), முஃமின்கள் ( இறைநம்பிக்கையாளர்கள் ), அல்லாஹ்வின் அடியார்கள் ( இபாதுல்லாஹ் ) என்றே அழையுங்கள் " என்று கூறினார்கள் .

Reference: ( திர்மிதீ : 2790 / 2863, 2864) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 355 அத்தியாயம் 8 பாடம் 23

عَنْ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْأَنْصَارِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ضَرَبَ اللَّهُ مَثَلًا صِرَاطًا مُسْتَقِيمًا وَعَلَى جَنْبَتَيْ الصِّرَاطِ سُورَانِ فِيهِمَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ وَعَلَى الْأَبْوَابِ سُتُورٌ مُرْخَاةٌ وَعَلَى بَابِ الصِّرَاطِ دَاعٍ يَقُولُ أَيُّهَا النَّاسُ ادْخُلُوا الصِّرَاطَ جَمِيعًا وَلَا تَتَفَرَّجُوا وَدَاعٍ يَدْعُو مِنْ جَوْفِ الصِّرَاطِ فَإِذَا أَرَادَ يَفْتَحُ شَيْئًا مِنْ تِلْكَ الْأَبْوَابِ قَالَ وَيْحَكَ لَا تَفْتَحْهُ فَإِنَّكَ إِنْ تَفْتَحْهُ تَلِجْهُ وَالصِّرَاطُ الْإِسْلَامُ وَالسُّورَانِ حُدُودُ اللَّهِ تَعَالَى وَالْأَبْوَابُ الْمُفَتَّحَةُ مَحَارِمُ اللَّهِ تَعَالَى وَذَلِكَ الدَّاعِي عَلَى رَأْسِ الصِّرَاطِ كِتَابُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالدَّاعِي فَوْقَ الصِّرَاطِ وَاعِظُ اللَّهِ فِي قَلْبِ كُلِّ مُسْلِمٍ . واللفظ لأحمد. 355

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நேரான வழி ( எனும் இஸ்லாமு ) க்கு அல்லாஹ் ஓர் உவமை கூறுகிறான் : அது ஒரு சாலை போன்றது . அந்தச் சாலையின் இரு மருங்கிலும் இரு சுவர்கள் உள்ளன . அவ்விரண்டிலும் திறந்த தலைவாயில்கள் உள்ளன . தலைவாயில்களில் தொங்கும் திரைகள் உள்ளன . அந்தச் சாலையின் நுழைவாயிலில் அழைப்பாளி ஒருவர் இருக்கிறார் . அவர் " மக்களே ! இந்தச் சாலையில் அனைவரும் நுழைந்து கொள்ளுங்கள் . நீங்கள் கோணலான சாலையில் சென்றுவிடாதீர்கள் ” என்று அழைக்கிறார் . அல்லாஹ் அமைதி இல்லத்துக்கு அழைக்கிறான் . தான் நாடியோரை நேரான வழிக்கு வழிகாட்டுகிறான் " என்று கூறுகிறார் . அந்தச் சாலைக்கு மேல் மற்றோர் அழைப்பாளரும் இருக்கின்றார் . அந்தச் சாலையின் நுழைவாயில்களுள் எதையாவது திறக்க நாடினால் , “ உனக்குக் கேடுதான் . அதைத் திறக்காதே . திண்ணமாக நீ அதைத் திறந்தால் அதில் நுழைந்துவிடுவாய் ” என்று கூறுவார் . அந்த நேரான சாலைதான் இஸ்லாம் . ( அந்தச் சாலையின் இரு புறமும் உள்ள ) சுவர்கள் அல்லாஹ்வின் சட்ட வரையறைகளாகும் . திறந்த தலைவாயில்கள் அல்லாஹ்வால் விலக்கப்பட்டவையாகும் . அந்தச் சாலையின் தொடக்கத்திலிருந்து அழைப்பவர் அல்லாஹ்வின் வேதமாகும் . அந்த அழைப்பாளருக்கு மேலேயிருந்து அழைப்பு விடுப்பவர் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உள்ளத்தில் இறைவனால் நியமிக்கப்பட்ட உபதேசி ( மனசாட்சி ) ஆவார் .

Reference: ( திர்மிதீ : 2786 / 2859, முஸ்னது அஹ்மத் : 17634) இது முஸ்னது அஹ்மதில் பதிவுசெய்யப்பட்டுள்ள வார்த்தைகள் ஆகும் . இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது . இது ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 356 அத்தியாயம் 8 பாடம் 24

عَنْ عَبْدِ الله بْنِ عَمْرٍو : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقُصُّ عَلَى النَّاسِ إِلَّا أَمِيرٌ أَوْ مَأْمُورٌ أَوْ مُرَاءٍ . 356

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஷுஐப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ஆட்சித் தலைவர் அல்லது ( தலைவரின் ) கட்டளையை ஏற்று நடப்பவர் அல்லது பகட்டுக்காரர் தவிர ( யாரும் ) மக்களிடம் ( நற்செயலைத் தூண்டும் வகையில் ) கதை சொல்வதில்லை .

Reference: ( இப்னுமாஜா : 3743 / 3753, தாரமீ : 2821) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 357 அத்தியாயம் 8 பாடம் 24

عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَقُصُّ إِلَّا أَمِيرٌ أَوْ مَأْمُورٌ أَوْ مُخْتَالٌ . 357

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக அவ்ஃப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ஆட்சித் தலைவர் அல்லது ( தலைவரின் ) கட்டளையை ஏற்று நடப்பவர் அல்லது பெருமையடிப்பவர் தவிர ( யாரும் ) மக்களிடம் ( நற்செயலைத் தூண்டும் வகையில் ) கதை சொல்வதில்லை .

Reference: ( அபூதாவூத் : 3665) இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 358 அத்தியாயம் 8 பாடம் 25

عن أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ يَقُولُ لَيْسَ هَدِيَّةٌ أَفْضَلَ مِنْ كَلِمَةِ حِكْمَةٍ تُهْدِيهَا لِأَخِيكَ . 358

அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளதாவது : உன் சகோதரனுக்கு வழிகாட்டும் ஞானம் நிறைந்த வார்த்தைகளைவிடச் சிறந்த அன்பளிப்பு வேறொன்றும் இல்லை .

Reference: ( தாரமீ : 362) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 359 அத்தியாயம் 8 பாடம் 25

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَلِمَةُ الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ فَحَيْثُ وَجَدَهَا فَهُوَ أَحَقُّ بِهَا . 359

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஞானம் நிறைந்த வார்த்தை ஓர் இறை நம்பிக்கையாளரின் காணாமல்போன சொத்தாகும் . அவர் அதை எங்குக் கிடைக்கப் பெறுகிறாரோ , அதை அடைந்துகொள்ள முற்றிலும் தகுதியானவர் .

Reference: ( திர்மிதீ : 2687, இப்னுமாஜா : 4159 / 4169) இது முற்றிலும் ` ளஈஃப் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 360 அத்தியாயம் 8 பாடம் 26

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتَذَاكَرُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا أَظَلَّتْهُمْ الْمَلَائِكَةُ بِأَجْنِحَتِهَا حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَبْتَغِي بِهِ الْعِلْمَ سَهَّلَ اللَّهُ طَرِيقَهُ مِنْ الْجَنَّةِ وَمَنْ أَبْطَأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ . 360

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வுடைய வீடுகளுள் ஒன்றில் ஒரு குழுவினர் ஒன்றுகூடி அல்லாஹ்வின் வேதத்தை நினைவுகூர்கின்றார்கள் . அவர்களுக்கு மத்தியில் அது பற்றிக் கருத்தைப் பரிமாறிக்கொள்கிறார்கள் என்றால் , அவர்களை வானவர்கள் தம் இறக்கைகளால் சூழ்ந்துகொள்ளாமல் இருப்பதில்லை - அவர்கள் அதுவல்லாத ( வேறு ) பேச்சில் ஈடுபடுகின்ற வரை . யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் ( நடந்து ) செல்கின்றாரோ , அவர் சொர்க்கம் செல்வதற்கான பாதையை அல்லாஹ் அவருக்கு எளிதாக்குகிறான் . அ( க்கல்வி ) தனைக் கொண்டு யாருடைய செயல்பாடு மெதுவாகச் செல்கிறதோ , அவரை அவருடைய வமிசத்தினர் முந்திவிட முடியாது .

Reference: ( தாரமீ : 368) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 361 அத்தியாயம் 8 பாடம் 27

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ تَذَاكَرُوا الْحَدِيثَ فَإِنَّ الْحَدِيثَ يُهَيِّجُ الْحَدِيثَ . 361

அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஹதீஸை ஒருவருக்கொருவர் நினைவுகூருங்கள் . ஏனென்றால் ஹதீஸை நினைவுகூர்கின்ற அந்தப் பேச்சானது ஹதீஸைத் ( தெரிந்துகொள்ளத் ) தூண்டும் .

Reference: ( தாரமீ : 617-620) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 362 அத்தியாயம் 8 பாடம் 27

عَنْ الْأَعْمَشِ قَالَ كَانَ إِسْمَعِيلُ بْنُ رَجَاءٍ يَجْمَعُ صِبْيَانَ الْكُتَّابِ يُحَدِّثُهُمْ يَتَحَفَّظُ بِذَاكَ. 362

அஉமஷ் ரஹிமஹுல்லாஹ் அறிவிப்பதாவது : இஸ்மாயீல் பின் ரஜாஉ அவர்கள் பாலர்வகுப்புச் சிறுவர்களை ஒன்றுகூட்டி அவர்களுக்கு ஹதீஸை அறிவிப்பார்கள் . அதன்மூலம் அவர்கள் ( தமக்குத்தாமே ) மனனம் செய்துகொள்வார்கள் .

Reference: ( தாரமீ : 629) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 363 அத்தியாயம் 8 பாடம் 27

عَنْ مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ أَبِيهِ قَالَ كَانَ الْحَارِثُ بْنُ يَزِيدَ الْعُكْلِيُّ وَابْنُ شُبْرُمَةَ وَالْقَعْقَاعُ بْنُ يَزِيدَ وَمُغِيرَةُ إِذَا صَلَّوْا الْعِشَاءَ الْآخِرَةَ جَلَسُوا فِي الْفِقْهِ فَلَمْ يُفَرِّقْ بَيْنَهُمْ إِلَّا أَذَانُ الصُّبْحِ . 363

முஹம்மது பின் ஃபுளைல் ரஹிமஹுல்லாஹ் தம் தந்தையிடமிருந்து அறிவிப்பதாவது : ஹாரிஸ் பின் யஸீத் அல்உக்லீ , இப்னு ஜுப்ருமா , கஉகாஉ பின் யஸீத் , முஃகீரா ஆகியோர் இஷாத் தொழுகையைத் தொழுதுவிட்டால் , கல்வியைக் கற்றுக்கொள்ள அமர்ந்துவிடுவார்கள் . ஸுப்ஹு உடைய பாங்கு ( அதான் ) தவிர வேறு எதுவும் அவர்களைக் கலைப்பதில்லை .

Reference: ( தாரமீ : 635) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 364 அத்தியாயம் 8 பாடம் 27

عَنْ عَبْدُ اللَّهِ إِنَّ لِكُلِّ شَيْءٍ آفَةً وَآفَةُ الْعِلْمِ النِّسْيَانُ. 364

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒவ்வொரு பொருளுக்கும் ஆபத்து உண்டு . கல்வியின் ஆபத்து மறதியாகும் .

Reference: ( தாரமீ : 646-647) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 365 அத்தியாயம் 8 பாடம் 27

عَنْ عَلِيٌّ تَذَاكَرُوا هَذَا الْحَدِيثَ وَتَزَاوَرُوا فَإِنَّكُمْ إِنْ لَمْ تَفْعَلُوا يَدْرُسْ . 365

அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இந்த ஹதீஸை ஒருவருக்கொருவர் நினைவுகூருங்கள் . ஒருவருக்கொருவர் சந்தித்துப் பரிமாறிக்கொள்ளுங்கள் . நிச்சயமாக நீங்கள் அவ்வாறு செய்யவில்லையானால் அது அழிந்துவிடும் .

Reference: ( தாரமீ : 650) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 366 அத்தியாயம் 8 பாடம் 27

عَنْ عِكْرِمَةَ قَالَ كَانَ ابْنُ عَبَّاسٍ يَضَعُ فِي رِجْلَيَّ الْكَبْلَ وَيُعَلِّمُنِي الْقُرْآنَ وَالسُّنَنَ . 366

இக்ரிமா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு என் இரு ( முட்டிக் ) கால்கள்மீது முன்கையை வைப்பார்கள் . எனக்குக் குர்ஆனையும் சுன்னத்துகளையும் கற்பிப்பார்கள் .

Reference: ( தாரமீ : 570) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 367 அத்தியாயம் 8 பாடம் 28

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ أَلْجَمَهُ اللَّهُ بِلِجَامٍ مِنْ نَارٍ يَوْمَ الْقِيَامَةِ . 367

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் ( மார்க்கம் தொடர்பாகப் பயனளிக்கக்கூடிய ஒரு ) கல்வி குறித்துக் கேட்கப்படும்போது அவர் அதை ( த் தெரிந்திருந்தும் ) மறைக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு மறுமைநாளில் நெருப்பாலான கடிவாளம் இடுவான் .

Reference: ( அபூதாவூத் : 3658, திர்மிதீ : 2649, இப்னுமாஜா : 261, 266) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 368 அத்தியாயம் 8 பாடம் 28

عَنْ أَبي هُرَيْرَةَ يَقُولُ وَاللَّهِ لَوْلَا آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى مَا حَدَّثْتُ عَنْهُ يَعْنِي عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا أَبَدًا لَوْلَا قَوْلُ اللَّهِ إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلَ اللَّهُ مِنْ الْكِتَابِ إِلَى آخِرِ الْآيَتَيْنِ . 368

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியுள்ளதாவது : அல்லாஹ்வுடைய வேதத்தில் இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையென்றால் , நான் எதையும் ஒருபோதும் அவர்களிடமிருந்து அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவித்திருக்க மாட்டேன் . ( அவை ) இன்னல்லதீன யக்த்துமூன மா அன்ஸ லல்லாஹு மினல் கித்தாபி ..... எனும் இரண்டு வசனங்கள் ( அல்பகரா : 174-175) ஆகும் . ( பொருள் : நாம் இறக்கிய தெளிவான வேதத்திலிருந்து எவர்கள் மறைக்கின்றார்களோ .... எனும் இரண்டு வசனங்கள் .

Reference: ( இப்னுமாஜா : 258 / 262) இது ` ஸஹீஹ் ` தரத்தில் ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 369 அத்தியாயம் 8 பாடம் 29

عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا الْجَدَلَ ثُمَّ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَةَ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ . 369

அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நல்வழியில் இருந்துவந்த ஒரு சமுதாயம் வழிதவறிப் போகிறதென்றால் அவர்கள் விதண்டாவாதம் வழங்கப்பட்டனர் என்றே கொள்க `` என்று கூறிவிட்டு , “ இல்லை , அவர்கள் குதர்க்கவாதம் பேசும் கூட்டத்தார் ஆவர் `` (43:58) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள் .

Reference: ( திர்மிதீ : 3253, இப்னுமாஜா : 47 / 48) இது ` ஹஸன் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 370 அத்தியாயம் 8 பாடம் 29

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمِرَاءُ فِي الْقُرْآنِ كُفْرٌ . 370

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆன் குறித்து விதண்டாவாதம் செய்தல் இறைமறுப்பு ஆகும் .

Reference: ( அபூதாவூத் : 4603) இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 371 அத்தியாயம் 8 பாடம் 29

عَنْ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ يَقُولُ مَنْ جَعَلَ دِينَهُ غَرَضًا لِلْخُصُومَاتِ أَكْثَرَ التَّنَقُّلَ . 371

உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : யார் இந்த மார்க்கத்தை வாதங்கள் செய்வதற்கான பகடைக்காயாக ஆக்கிக்கொண்டாரோ அவர் ( வார்த்தைகளை ) அதிகமாக இடம் மாற்றிவிட்டார் .

Reference: ( தாரமீ : 312) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 372 அத்தியாயம் 8 பாடம் 30

عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ قَالَ لَا تُحَدِّثْ الْبَاطِلَ الْحُكَمَاءَ فَيَمْقُتُوكَ وَلَا تُحَدِّثْ الْحِكْمَةَ لِلسُّفَهَاءِ فَيُكَذِّبُوكَ وَلَا تَمْنَعْ الْعِلْمَ أَهْلَهُ فَتَأْثَمَ وَلَا تَضَعْهُ فِي غَيْرِ أَهْلِهِ فَتُجَهَّلَ إِنَّ عَلَيْكَ فِي عِلْمِكَ حَقًّا كَمَا أَنَّ عَلَيْكَ فِي مَالِكَ حَقًّا . 372

கஸீர் பின் முர்ரா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : தவறானதை அறிஞர்களிடம் கூறாதே . அவர்கள் உன்னிடம் கோபப்படுவார்கள் . ஞானத்தை அறிவிலிகளிடம் கூறாதே . அவர்கள் உன்னைப் பொய்யன் எனக் கூறுவார்கள் . கல்வியை அதற்குரியவர்களிடம் ( சேர்ப்பதில் ) தடையை ஏற்படுத்தாதே . ( அவ்வாறு செய்தால் ) நீ பாவம் செய்தவனாவாய் . தகுதி இல்லாதவர்களிடம் அதை ( ச் சேர்த்து ) வைக்காதே . ( அவ்வாறு செய்தால் ) நீ முட்டாளாக்கப்படுவாய் . உன் செல்வத்தில் உன்மீது கடமை இருப்பதைப்போல் உன் கல்வியிலும் உன்மீது கடமை உள்ளது .

Reference: ( தாரமீ : 390) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 373 அத்தியாயம் 8 பாடம் 31

عَنْ ابْنِ مَيْسَرَةَ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا مِنْ النَّاسِ الشَّرِيفُ وَالْوَضِيعُ عِنْدَهُ سَوَاءٌ غَيْرَ طَاوُسٍ وَهُوَ يَحْلِفُ عَلَيْهِ . 373

இப்னு மைசரா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மக்களுள் யாரையும் சிறப்பு வாய்ந்தவராகவும் தாழ்வானவராகவும் நான் கண்டதில்லை . தாவுஸ் - ரஹிமஹுல்லாஹ் - தவிர அனைவரும் சமமே . அவர் அதன்மீது சத்தியம் செய்வார் .

Reference: ( தாரமீ : 417) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 374 அத்தியாயம் 8 பாடம் 31

عَنْ الزُّهْرِيِّ قَالَ كُنَّا نَكْرَهُ كِتَابَةَ الْعِلْمِ حَتَّى أَكْرَهَنَا عَلَيْهِ السُّلْطَانُ فَكَرِهْنَا أَنْ نَمْنَعَهُ أَحَدًا . 374

அஸ்ஸுஹ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : கல்வியை எழுதி வைப்பதை நாங்கள் வெறுத்துவந்தோம் . அரசர் எங்களை அதற்காக நிர்ப்பந்திக்கின்ற வரை . பிறகு யாருக்கும் அதை ( கல்வியை ) நாங்கள் மறுத்துவிடுவதை வெறுத்தோம் .

Reference: ( தாரமீ : 418) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 375 அத்தியாயம் 8 பாடம் 31

عَنْ ابْنُ عَوْنٍ قَالَ كَلَّمُوا مُحَمَّدًا فِي رَجُلٍ يَعْنِي يُحَدِّثُهُ فَقَالَ لَوْ كَانَ رَجُلًا مِنْ الزِّنْجِ لَكَانَ عِنْدِي وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ فِي هَذَا سَوَاءً . 375

இப்னு அவ்ன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஹம்மது பின் சீரீன் அவர்களிடம் மக்கள் - அவருக்கு ஹதீஸ் அறிவிக்கிற - ஒரு மனிதரைப் பற்றிக் கேட்டனர் . அதற்கு அவர்கள் , “ ஹதீஸ் அறிவிக்கின்ற அவர் நீக்ரோ இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரும் அப்துல்லாஹ் பின் முஹம்மது ஆகிய இருவரும் என்னிடம் இவ்விஷயத்தில் சமம்தான் ” என்று கூறினார்கள் .

Reference: ( தாரமீ : 419) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 376 அத்தியாயம் 8 பாடம் 32

عَنْ حُمَيْدٍ قَالَ قِيلَ لِعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ لَوْ جَمَعْتَ النَّاسَ عَلَى شَيْءٍ فَقَالَ مَا يَسُرُّنِي أَنَّهُمْ لَمْ يَخْتَلِفُوا قَالَ ثُمَّ كَتَبَ إِلَى الْآفَاقِ وَإِلَى الْأَمْصَارِ لِيَقْضِ كُلُّ قَوْمٍ بِمَا اجْتَمَعَ عَلَيْهِ فُقَهَاؤُهُمْ . 376

ஹுமைத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் , “ மக்கள் அனைவரையும் ஒரே விஷயத்தில் ஒன்றிணைத்தால் என்ன ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அவர்கள் கருத்து வேறுபாடு கொள்ளாமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தராது ” என்று கூறினார்கள்.அறிவிப்பாளர் கூறுகிறார் : மேலும் அவர்கள் ஒவ்வொரு சமுதாய மக்களும் தத்தம் அறிஞர்கள் ஒன்றுபட்ட விஷயங்களைக்கொண்டு ( தமக்குள் ) தீர்ப்பளிக்கட்டும் என்று பல்வேறு ஊர்களுக்குக் கடிதம் எழுதினார்கள் .

Reference: ( தாரமீ : 652) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 377 அத்தியாயம் 8 பாடம் 32

عَنْ سَعِيدُ بْنُ عَامِرٍ قَالَ كَانَ سَلَّامٌ يَذْكُرُ عَنْ أَيُّوبَ-السَّخْتِيِا نيَّ- قَالَ إِذَا أَرَدْتَ أَنْ تَعْرِفَ خَطَأَ مُعَلِّمِكَ فَجَالِسْ غَيْرَهُ. 377

சயீத் பின் ஆமிர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : சல்லாம் அவர்கள் , அய்யூப் - அஸ்ஸக்த்தியானீ - அவர்களை நினைவுகூர்ந்து கொண்டிருந்தார்கள் . நீ உன் ஆசிரியரின் தவறுகளைத் தெரிந்துகொள்ள நாடினால் , ( அவர் அல்லாத ) மற்றவர்களிடம் அமர்ந்துகொள் ” என்று கூறினார்கள் .

Reference: ( தாரமீ : 667) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 378 அத்தியாயம் 8 பாடம் 33

عَنْ أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ عَنْ الشَّعْبِيِّ قَالَ شَهِدْتُ شُرَيْحًا وَجَاءَهُ رَجُلٌ مِنْ مُرَادٍ فَقَالَ يَا أَبَا أُمَيَّةَ مَا دِيَةُ الْأَصَابِعِ قَالَ عَشْرٌ عَشْرٌ قَالَ يَا سُبْحَانَ اللَّهِ أَسَوَاءٌ هَاتَانِ جَمَعَ بَيْنَ الْخِنْصِرِ وَالْإِبْهَامِ فَقَالَ شُرَيْحٌ يَا سُبْحَانَ اللَّهِ أَسَوَاءٌ أُذُنُكَ وَيَدُكَ فَإِنَّ الْأُذُنَ يُوَارِيهَا الشَّعْرُ وَالْكُمَّةُ وَالْعِمَامَةُ فِيهَا نِصْفُ الدِّيَةِ وَفِي الْيَدِ نِصْفُ الدِّيَةِ وَيْحَكَ إِنَّ السُّنَّةَ سَبَقَتْ قِيَاسَكُمْ فَاتَّبِعْ وَلَا تَبْتَدِعْ فَإِنَّكَ لَنْ تَضِلَّ مَا أَخَذْتَ بِالْأَثَرِ . 378

ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் அவர்களிடமிருந்து அபூபக்ர் அல்ஹுதலீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ஜுரைஹ் என்பாரிடம் இருந்தேன் . அப்போது முராத் குலத்திலிருந்து ஒருவர் வந்து , அபூ உமய்யா அவர்களே ! விரல்களுக்கான தியத் ( இழப்பீட்டுத் ) தொகை எவ்வளவு ?” என்று கேட்டார் . அதற்கு அவர்கள் , “( ஒவ்வொரு விரலுக்கும் ) பத்து பத்து ” என்று பதிலளித்தார்கள் . அதற்கவர் , “ சுப்ஹானல்லாஹ் ! இவ்விரண்டும் சமம்தானா ?” என்று கேட்டுக்கொண்டே , தம் சுண்டு விரலையும் கட்டை விரலையும் ஒன்றாகக் காட்டினார் . அதற்கு ஜுரைஹ் அவர்கள் , “ சுப்ஹானல்லாஹ் ! உன் காதும் கையும் சமமா ? திண்ணமாகக் காது-அதனை முடி , தொப்பி , தலைப்பாகை ஆகியவை மறைத்துக்கொள்கின்றன . ( அப்படியிருக்க ) அதில் பாதி இழப்பீடும் , கைக்குப் பாதி இழப்பீடும் ( தானே ) உள்ளது ” என்று எதிர்வினா தொடுத்தார்கள் . “ உனக்குக் கேடுதான் ! நிச்சயமாக சுன்னத் உன் ஒப்பீட்டை ( கியாஸ் ) முந்திவிட்டது . எனவே அந்த சுன்னத்தையே ) பின்பற்று ; புதிதாக உண்டாக்காதே . திண்ணமாக நீ ஹதீஸை எடுத்துக்கொள்ளும் வரை ஒருபோதும் வழிதவற மாட்டாய் ” என்றும் கூறினார்கள் . அபூபக்ர் அல் ஹுதலீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என்னிடம் ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் , “ ஹுதலீ ! உங்களுடைய அஹ்னஃப் ( பின் கைஸ் என்பவர் ) கொல்லப்பட்டால் - இந்தச் சிறுவன் தன் தொட்டிலில் உள்ள நிலையில் - அப்போது அவ்விரண்டு பேரின் இழப்பீட்டுத் தொகையும் சமமா ?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ ஆம் ( சமம்தான் )” என்றேன் . அதற்கு அவர்கள் , “( இப்போது ) உங்கள் ஒப்பீடு எங்கே ( போனது )?” என்று கேட்டார்கள் .

Reference: ( தாரமீ : 204) இதன் அறிவிப்பாளர் தொடர் ளஈஃப் ஆகும் .
ஹதீஸ் 379 அத்தியாயம் 8 பாடம் 33

عَنْ الشَّعْبِيِّ قَالَ وَاللَّهِ لَئِنْ أَخَذْتُمْ بِالْمَقَايِيسِ لَتُحَرِّمُنَّ الْحَلَالَ وَلَتُحِلُّنَّ الْحَرَامَ . 379

ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அல்லாஹ்வின்மீது ஆணையாக ! ( ஹதீஸ்களை விட்டுவிட்டு ) ஒப்பீடுகள் மூலம் ( சட்டங்களை ) நீங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டால் , ஆகுமானதைத் தடைசெய்வீர்கள் ; தடை செய்யப்பட்டதை ஆகுமாக்குவீர்கள் . ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ? நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ? என்று கேட்பதே என்னிடம் மிகவும் சினத்திற்குரியது . ஒருவர் தம் தோழரிடம் , நீர் என்ன கருதுகிறீர் ? என்று கேட்கிறார் . அவர் ஒப்பிட்டுப் பார்க்காதவராக இருந்தார் . ( அதாவது ஹதீஸை மட்டுமே பார்ப்பவராக இருந்தார் ). ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இவர்களெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்திருந்தால் , குர்ஆன் முழுக்க , “ உம்மிடம் கேட்கிறார்கள் ; உம்மிடம் கேட்கிறார்கள் ” என்றே இறங்கியிருக்கும் .

Reference: ( தாரமீ : 198, 199, 201) இதன் அறிவிப்பாளர் தொடர்கள் ‘ ஸஹீஹ் ’ தரத்தில் உள்ளவையாகும் .
ஹதீஸ் 380 அத்தியாயம் 8 பாடம் 33

وعنه قَالَ : مَا حَدَّثُوكَ هَؤُلَاءِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخُذْ بِهِ وَمَا قَالُوهُ بِرَأْيِهِمْ فَأَلْقِهِ فِي الْحُشِّ . 380

ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவித்தவற்றை எடுத்துக்கொள் . ( அவற்றைச் செயல்படுத்து ). இவர்கள் தம் சிந்தனையால் ( சிந்தித்துக் ) கூறியவற்றைக் குப்பையில் போட்டுவிடு .

Reference: ( தாரமீ : 206) இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஸஹீஹ் ’ ஆகும் .
ஹதீஸ் 381 அத்தியாயம் 8 பாடம் 34

عَنْ الْأَوْزَاعِيِّ قَالَ قَالَ إِبْلِيسُ لِأَوْلِيَائِهِ مِنْ أَيِّ شَيْءٍ تَأْتُونَ بَنِي آدَمَ فَقَالُوا مِنْ كُلِّ شَيْءٍ قَالَ فَهَلْ تَأْتُونَهُمْ مِنْ قِبَلِ الِاسْتِغْفَارِ قَالُوا هَيْهَاتَ ذَاكَ شَيْءٌ قُرِنَ بِالتَّوْحِيدِ قَالَ لَأَبُثَّنَّ فِيهِمْ شَيْئًا لَا يَسْتَغْفِرُونَ اللَّهَ مِنْهُ قَالَ فَبَثَّ فِيهِمْ الْأَهْوَاءَ . 381

அவ்ஸாயீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்லீஸ் தன்னுடைய நண்பர்களிடம் , “ நீங்கள் மனிதர்களிடம் எதைக் கொண்டு வருகின்றீர்கள் ?” என்று கேட்டான் . “ எல்லாவற்றையும் கொண்டு வருகிறோம் ” என்றனர் . இஸ்திஃக்ஃபார் - பாவமன்னிப்புத் தேடுதல் ஊடாக அவர்களிடம் வருகின்றீர்களா ?” என்று கேட்டான் . அதற்கு அவர்கள் , “( அதுவோ இயலாத ) தூரமாகிவிட்டது . அதுவோ தவ்ஹீதோடு இணைக்கப்பட்டுள்ளதே ” என்றனர் . “ அவர்கள் அல்லாஹ்விடம் இஸ்திஃக்ஃபார்-பாவமன்னிப்புத் தேட முடியாத வகையிலான விஷயத்தை நிச்சயமாக நான் அவர்களிடம் பரப்பிவிடுவேன் ” என்று கூறினான் . ( பிறகு ) அவர்களிடம் மனவேட்கைகளைப் பரப்பிவிட்டான் .

Reference: ( தாரமீ : 316) இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஸஹீஹ் ’ ஆகும் .
ஹதீஸ் 382 அத்தியாயம் 8 பாடம் 34

عَنْ زِيَادِ بْنِ حُدَيْرٍ قَالَ قَالَ لِي عُمَرُ هَلْ تَعْرِفُ مَا يَهْدِمُ الْإِسْلَامَ قَالَ قُلْتُ لَا قَالَ يَهْدِمُهُ زَلَّةُ الْعَالِمِ وَجِدَالُ الْمُنَافِقِ بِالْكِتَابِ وَحُكْمُ الْأَئِمَّةِ الْمُضِلِّينَ . 382

ஸியாத் பின் ஹுதைர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : “ இஸ்லாமிய மார்க்கத்தை இடித்துத் தள்ளும் விஷயத்தை நீ அறிவாயா ?” என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள் . அதற்கு நான் , “ தெரியாது ” என்றேன் . அவர்கள் கூறினார்கள் : “ ஓர் ஆலிம் உடைய சருகுதல் , ( திருக்குர்ஆன் எனும் ) வேதத்தைக்கொண்டு நயவஞ்சகனிடம் தர்க்கம் செய்தல் , வழிகெடுக்கக்கூடிய தலைவர்கள் ஆட்சி செய்தல் ஆகியவை அதனை இடித்துத் தள்ளும் .

Reference: ( தாரமீ : 220) இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஸஹீஹ் ’ ஆகும் .
ஹதீஸ் 383 அத்தியாயம் 8 பாடம் 34

عَنْ أَبي قِلَابَةَ لَا تُجَالِسُوا أَهْلَ الْأَهْوَاءِ وَلَا تُجَادِلُوهُمْ فَإِنِّي لَا آمَنُ أَنْ يَغْمِسُوكُمْ فِي ضَلَالَتِهِمْ أَوْ يَلْبِسُوا عَلَيْكُمْ مَا كُنْتُمْ تَعْرِفُونَ . 383

அபூகிலாபா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மனவேட்கைப்படிச் செயல்படக்கூடியவர்களோடு சேர்ந்து அமராதீர்கள் . அவர்களிடம் தர்க்கம் செய்யாதீர்கள் . ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் தம்முடைய வழிகேட்டில் உங்களையும் மூழ்கடிக்கச் செய்துவிடுவார்கள் அல்லது நீங்கள் அறிந்துள்ளவை குறித்து அவர்கள் உங்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்று நான் அஞ்சுகிறேன் .

Reference: ( தாரமீ : 405) இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஸஹீஹ் ’ ஆகும் .
ஹதீஸ் 384 அத்தியாயம் 8 பாடம் 34

عَنْ أَسْمَاءَ بْنِ عُبَيْدٍ قَالَ دَخَلَ رَجُلَانِ مِنْ أَصْحَابِ الْأَهْوَاءِ عَلَى ابْنِ سِيرِينَ فَقَالَا يَا أَبَا بَكْرٍ نُحَدِّثُكَ بِحَدِيثٍ قَالَ لَا قَالَا فَنَقْرَأُ عَلَيْكَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ قَالَ لَا لِتَقُومَانِ عَنِّي أَوْ لَأَقُومَنَّ قَالَ فَخَرَجَا . 384

அஸ்மா பின் உபைத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மனவேட்கைப்படிச் செயல்படக்கூடிய இருவர் இப்னு சீரீன் அவர்களிடம் வந்து , “ அபூபக்ர் அவர்களே ! ஒரு ஹதீஸை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று வினவினார்கள் . அதற்கு அவர்கள் , “ வேண்டாம் ” என்றார்கள் . “ அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை நாங்கள் உங்களிடம் ஓதிக் காட்டட்டுமா ?” என்று வினவினார்கள் . அதற்கு அவர்கள் , “ வேண்டாம் ; நீங்கள் இருவரும் என்னிடமிருந்து எழுந்து செல்கின்றீர்களா ? அல்லது நான் எழுந்து செல்லட்டுமா ?” என்று கேட்டார்கள் . ( அதன்பின் ) அவர்கள் இருவரும் புறப்பட்டுவிட்டார்கள் . அதைக் கண்ட மக்கள் சிலர் , அபூபக்ர் அவர்களே ! “ அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை அவர்கள் உங்களிடம் ஓதிக் காட்டுவதில் உங்களுக்கு என்ன ( சிரமம் ) இருக்கிறது ?” என்று வினவினார்கள் . “ அவர்கள் என்னிடம் ஏதாவது ஓர் இறைவசனத்தை ஓதுவார்கள் . அ( தன் விளக்கத் ) தை மாற்றிக் கூறுவார்கள் . அது என் உள்ளத்தில் பதிந்துவிடும் . ( அது எனக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் )” என்று பதிலளித்தார்கள் .

Reference: ( தாரமீ : 411) இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஸஹீஹ் ’ ஆகும் .
ஹதீஸ் 385 அத்தியாயம் 8 பாடம் 34

عَنْ الْحَسَنِ وَابْنِ سِيرِينَ أَنَّهُمَا قَالَا لَا تُجَالِسُوا أَصْحَابَ الْأَهْوَاءِ وَلَا تُجَادِلُوهُمْ وَلَا تَسْمَعُوا مِنْهُمْ . 385

ஹஸன் , இப்னு சீரீன் ரஹிமஹுமல்லாஹ் இருவரும் கூறியதாவது : மனவேட்கைப்படிச் செயல்படக் கூடியவர்களோடு சேர்ந்து அமராதீர்கள் . அவர்களிடம் தர்க்கம் செய்யாதீர்கள் . அவர்களிடமிருந்து ( எதையும் ) செவியுறாதீர்கள் .

Reference: ( தாரமீ : 415) இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஸஹீஹ் ’ ஆகும் .
ஹதீஸ் 386 அத்தியாயம் 8 பாடம் 35

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ وُجِدَ أَكْثَرُ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ هَذَا الْحَيِّ مِنْ الْأَنْصَارِ وَاللَّهِ إِنْ كُنْتُ لَآتِي الرَّجُلَ مِنْهُمْ فَيُقَالُ هُوَ نَائِمٌ فَلَوْ شِئْتُ أَنْ يُوقَظَ لِي فَأَدَعُهُ حَتَّى يَخْرُجَ لِأَسْتَطِيبَ بِذَلِكَ حَدِيثَهُ . 386

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மிகுதியான ஹதீஸ்கள் அன்ஸாரிகள் வாழும் இந்தப் பகுதியில்தான் பெற்றுக்கொள்ளப்பட்டன . அல்லாஹ்வின் மீதாணையாக ! அவர்களுள் ஒருவரிடம் நான் ( ஹதீஸை நாடி ) வந்தால் , அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படும் . நான் நாடினால் எனக்காக அவர் எழுப்பப்பட்டிருப்பார் . ( எனினும் ) நான் அவர் ( தம் தூக்கத்திலிருந்து விழித்து ) வெளியே வரும் வரை அவரை விட்டுவிடுவேன் . ஏனென்றால் அந்த ஹதீஸை அவரிடமிருந்து நல்ல மனநிலையில் நான் பெறவேண்டுமென்பதற்காக ( அவ்வாறு செய்தேன் ).

Reference: ( தாரமீ : 586) இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஹஸன் ’ ஆகும் .
ஹதீஸ் 387 அத்தியாயம் 8 பாடம் 35

عَنْ الزُّهْرِيِّ قَالَ كُنْتُ آتِي بَابَ عُرْوَةَ فَأَجْلِسُ بِالْبَابِ وَلَوْ شِئْتُ أَنْ أَدْخُلَ لَدَخَلْتُ وَلَكِنْ إِجْلَالًا لَهُ . 387

அஸ்ஸுஹ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் உர்வாவின் வீட்டிற்கு வந்துபோய்க்கொண்டிருந்தேன் . ( வீட்டிற்குச் சென்று ) கதவருகே அமர்ந்துவிடுவேன் . நான் உள்ளே செல்ல நாடியிருந்தால் ( வீட்டிற்குள் ) நுழைந்திருப்பேன் . எனினும் அவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு ( அவ்வாறு நான் செய்யவில்லை ).

Reference: ( தாரமீ : 588) இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஸஹீஹ் ’ ஆகும் .
ஹதீஸ் 388 அத்தியாயம் 8 பாடம் 35

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ لِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ يَا فُلَانُ هَلُمَّ فَلْنَسْأَلْ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّهُمْ الْيَوْمَ كَثِيرٌ فَقَالَ وَا عَجَبًا لَكَ يَا ابْنَ عَبَّاسٍ أَتَرَى النَّاسَ يَحْتَاجُونَ إِلَيْكَ وَفِي النَّاسِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَرَى ؟... الحديث وفيه : فَبَقِيَ الرَّجُلُ حَتَّى رَآنِي وَقَدْ اجْتَمَعَ النَّاسُ عَلَيَّ فَقَالَ كَانَ هَذَا الْفَتَى أَعْقَلَ مِنِّي . 388

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வஃபாத் ஆனபோது அன்ஸாரிகளுள் ஒருவரிடம் , “ இன்னாரே ! வாருங்கள் . நபித்தோழர்களிடம் நாம் ( தெரியாததைக் ) கேட்போம் . ஏனென்றால் இன்று அவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள் ” என்றேன் . அதற்கு அவர் , “ இப்னு அப்பாஸ் அவர்களே ! உம்மைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது . மக்கள் உம்மிடம் தேவையாகுவதை நீர் பார்க்கின்றீரா ? ( இல்லையா ?) நபித்தோழர்களுள் யாரை நீர் காண்கிறீர் ?... ” அதன் தொடரில் உள்ளதாவது : மக்கள் என்னிடம் ஒன்று சேர்ந்துவிட்டதைக் கண்ட அந்த மனிதர் , “ இந்த இளைஞர் என்னைவிட மிகவும் அறிவாளி ” என்று கூறினார் .

Reference: ( தாரமீ : 589) இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஸஹீஹ் ’ ஆகும் .
ஹதீஸ் 389 அத்தியாயம் 8 பாடம் 36

عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ لَا تَكُونُ عَالِمًا حَتَّى تَكُونَ مُتَعَلِّمًا وَلَا تَكُونُ بِالْعِلْمِ عَالِمًا حَتَّى تَكُونَ بِهِ عَامِلًا وَكَفَى بِكَ إِثْمًا أَنْ لَا تَزَالَ مُخَاصِمًا وَكَفَى بِكَ إِثْمًا أَنْ لَا تَزَالَ مُمَارِيًا وَكَفَى بِكَ كَاذِبًا أَنْ لَا تَزَالَ مُحَدِّثًا فِي غَيْرِ ذَاتِ اللَّهِ . 389

அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மாணவனாக ஆகும் வரை அறிஞராக ( ஆலிமாக ) ஆகமாட்டாய் . ( கற்ற கல்விப்படி செயல்படாமல் கல்வியின் மூலம் அறிஞராக ஆக முடியாது . நீ வாதம் செய்பவனாக இருப்பதே பாவியாக இருப்பதற்குப் போதுமானது . நீ வாக்குவாதம் செய்பவனாக இருப்பதே பாவியாக இருப்பதற்குப் போதுமானது . நீ அல்லாஹ்வுடைய உள்ளமை ( தாத் ) அல்லாததைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதே நீ பொய்யன் என்பதற்குப் போதுமானது .

Reference: ( தாரமீ : 301) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 390 அத்தியாயம் 8 பாடம் 36

عَنْ عِمْرَانَ الْمِنْقَرِيِّ قَالَ قُلْتُ لِلْحَسَنِ يَوْمًا فِي شَيْءٍ قَالَهُ يَا أَبَا سَعِيدٍ لَيْسَ هَكَذَا يَقُولُ الْفُقَهَاءُ فَقَالَ وَيْحَكَ وَرَأَيْتَ أَنْتَ فَقِيهًا قَطُّ إِنَّمَا الْفَقِيهُ الزَّاهِدُ فِي الدُّنْيَا الرَّاغِبُ فِي الْآخِرَةِ الْبَصِيرُ بِأَمْرِ دِينِهِ الْمُدَاوِمُ عَلَى عِبَادَةِ رَبِّهِ . 390

இம்ரான் அல்மின்க்கரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ஹஸன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு நாள் ஒரு விஷயம் குறித்துப் பேசினேன் . அபூசஈத் அவர்களே ! மார்க்கச் சட்ட அறிஞர்கள் ( ஃபுகஹாஉ ) இவ்வாறு கூறவில்லை என்று கூறினேன் . அதற்கு அவர்கள் , “ உனக்கு ஏற்பட்ட கேடே ! மார்க்கச் சட்ட அறிஞர் யாரையேனும் இதுவரை நீ பார்த்திருக்கிறாயா ? மார்க்கச் சட்ட அறிஞர் என்பவர் , உலகில் துறவியாகவும் மறுமையை விரும்புபவராகவும் தம் தீன் சார்ந்த செயல்களில் தீர்க்கமான பார்வையுடையவராகவும் தம் இறைவனை வழிபடுவதில் நீடித்திருப்பவராகவும் இருப்பார் ” என்றார்கள் .

Reference: ( தாரமீ : 302) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 391 அத்தியாயம் 8 பாடம் 36

عَنْ كَعْبٍ قَالَ إِنِّي لَأَجِدُ نَعْتَ قَوْمٍ يَتَعَلَّمُونَ لِغَيْرِ الْعَمَلِ وَيَتَفَقَّهُونَ لِغَيْرِ الْعِبَادَةِ وَيَطْلُبُونَ الدُّنْيَا بِعَمَلِ الْآخِرَةِ وَيَلْبَسُونَ جُلُودَ الضَّأْنِ وَقُلُوبُهُمْ أَمَرُّ مِنْ الصَّبْرِ فَبِي يَغْتَرُّونَ أَوْ إِيَّايَ يُخَادِعُونَ فَحَلَفْتُ بِي لَأُتِيحَنَّ لَهُمْ فِتْنَةً تَتْرُكُ الْحَلِيمَ فِيهَا حَيْرَانَ . 391

இம்ரான் அல்மின்க்கரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ஒரு சமுதாயத்தின் குணநலனை ( இவ்வாறு இருப்பதாக ) க் காண்கிறேன் . அவர்கள் செயல்படுவதற்கன்றிக் கற்றுக்கொள்கின்றார்கள் ; வழிபாட்டுக்கன்றி மார்க்கச் சட்டங்களைக் கற்றுக்கொள்கின்றார்கள் ; மறுமையின் செயல்பாடுகளை வைத்து இம்மையைத் தேடுகின்றார்கள் ; வெள்ளாட்டுத் தோல்களை அணிந்து கொள்கின்றார்கள் . அவர்களின் உள்ளங்கள் கற்றாழையைவிடக் கசப்பானது . என்னைக்கொண்டே பெருமை கொள்கின்றார்களா ? அல்லது என்னையே அவர்கள் ஏமாற்றுகின்றார்களா ? என்னைக் கொண்டே நான் சத்தியம் செய்கிறேன் : ஒரு பொறுமையாளனையே தடுமாற்றத்தில் விட்டுவிடும் வகையிலான குழப்பத்தை அவர்களுக்கு நான் நிச்சயமாகக் கொடுப்பேன் .

Reference: ( தாரமீ : 307) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 392 அத்தியாயம் 8 பாடம் 36

الشَّعْبِيَّ يَقُولُ إِنَّمَا كَانَ يَطْلُبُ هَذَا الْعِلْمَ مَنْ اجْتَمَعَتْ فِيهِ خَصْلَتَانِ الْعَقْلُ وَالنُّسُكُ فَإِنْ كَانَ نَاسِكًا وَلَمْ يَكُنْ عَاقِلًا قَالَ هَذَا أَمْرٌ لَا يَنَالُهُ إِلَّا الْعُقَلَاءُ فَلَمْ يَطْلُبْهُ وَإِنْ كَانَ عَاقِلًا وَلَمْ يَكُنْ نَاسِكًا قَالَ هَذَا أَمْرٌ لَا يَنَالُهُ إِلَّا النُّسَّاكُ فَلَمْ يَطْلُبْهُ . 392

ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : பகுத்தறிவு , துறவுநிலை ஆகிய இரண்டு பண்புகள் கொண்டவர்கள்தாம் இந்தக் கல்வியைத் தேடிக்கொண்டிருந்தனர் . அவர் துறவியாக இருந்து , பகுத்தறிவாளராக இல்லையென்றால் அவர் அதைத் தேடமாட்டார் . அவர் பகுத்தறிவாளராக இருந்து , துறவியாக இல்லையென்றால் - இது துறவிகள் தவிர மற்றவர்கள் பெறமுடியாத விஷயமாகும் - அவர் அதைத் தேடமாட்டார் . ( ஆனால் ) இன்று அதைத் தேடுபவருக்குப் பகுத்தறிவு , துறவுநிலை ஆகிய இரண்டினுள் எதுவும் இல்லை .

Reference: ( தாரமீ : 383) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 393 அத்தியாயம் 8 பாடம் 36

عَنْ الشَّعْبِيَّ قَالَ وَدِدْتُ أَنِّي نَجَوْتُ مِنْ عَمَلِي كَفَافًا لَا لِي وَلَا عَلَيَّ . 393

ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என் கல்வியின்மூலம் எனக்குச் சாதகமாகவோ எனக்கு எதிராகவோ எதுவுமின்றிப் போதுமான அளவு நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்று சொல்ல ஆசைப்பட்டேன் .

Reference: ( தாரமீ : 548) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 394 அத்தியாயம் 8 பாடம் 36

عَنْ الْحَسَنِ قَالَ أَدْرَكْتُ النَّاسَ وَالنَّاسِكُ إِذَا نَسَكَ لَمْ يُعْرَفْ مِنْ قِبَلِ مَنْطِقِهِ وَلَكِنْ يُعْرَفُ مِنْ قِبَلِ عَمَلِهِ فَذَلِكَ الْعِلْمُ النَّافِعُ . 394

ஹஸன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மக்களை ( இவ்வாறு ) அடைந்துகொண்டேன் . வழிபாட்டில் ஈடுபடுபவர் வழிபாட்டில் ஈடுபட்டால் , அவர் தம் பேச்சின்மூலம் அறியப்படமாட்டார் . மாறாக அவர் தம் அமல்-செயல்பாடுகள் மூலம் அறியப்படுவார் . அதுதான் பயனுள்ள கல்வியாகும் .

Reference: ( தாரமீ : 383) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 395 அத்தியாயம் 8 பாடம் 37

عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ قَالَ قَالَ رَجُلٌ لِلشَّعْبِيِّ أَفْتِنِي أَيُّهَا الْعَالِمُ فَقَالَ الْعَالِمُ مَنْ يَخَافُ اللَّهَ . 395

மாலிக் பின் மிஃக்வல் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஆலிம் அவர்களே ! எனக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குங்கள் என்று ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒருவர் கேட்டார் . அதற்கு அவர்கள் , “ ஆலிம் என்பவர் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்பவரே ஆவார் ” என்றார்கள் .

Reference: ( தாரமீ : 264) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 396 அத்தியாயம் 8 பாடம் 37

عَنْ الْحَسَنِ قَالَ الْعِلْمُ عِلْمَانِ فَعِلْمٌ فِي الْقَلْبِ فَذَلِكَ الْعِلْمُ النَّافِعُ وَعِلْمٌ عَلَى اللِّسَانِ فَذَلِكَ حُجَّةُ اللَّهِ عَلَى ابْنِ آدَمَ . 396

ஹஸன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : கல்வி இரண்டு வகை . 1. உள்ளத்தில் பதிந்த கல்வி . அதுவே பயனுள்ள கல்வி . 2. நாவில் உள்ள கல்வி . அது ஆதமுடைய மகனுக்கு எதிராக அல்லாஹ்வுடைய ஆதாரமாகும் .

Reference: ( தாரமீ : 376) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹஸன் ரஹிமஹுல்லாஹ் ( மேற்கண்ட ) அதேபோன்று கூறியுள்ளார்கள் . இதன் அறிவிப்பாளர் தொடர் ` முர்ஸல் ஸஹீஹ் ` தரத்தில் உள்ளது . ( தாரமீ : 377).
ஹதீஸ் 397 அத்தியாயம் 8 பாடம் 37

عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ قَالَ كَانَ يُقَالُ تَعَلَّمُوا الْعِلْمَ وَانْتَفِعُوا بِهِ وَلَا تَعَلَّمُوهُ لِتَتَجَمَّلُوا بِهِ فَإِنَّهُ يُوشِكُ إِنْ طَالَ بِكُمْ عُمُرٌ أَنْ يَتَجَمَّلَ ذُو الْعِلْمِ بِعِلْمِهِ كَمَا يَتَجَمَّلُ ذُو الْبِزَّةِ بِبِزَّتِهِ . 397

ஹபீப் பின் உபைத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள் . அதன்மூலம் பயன்பெறுங்கள் . ( மாறாக ) அதைக் கொண்டு அழகுபடுத்திக் கொள்வதற்காகக் கற்றுக் கொள்ளாதீர்கள் . ஏனென்றால் உங்களுக்கு வயது நீளமாக இருந்தால் ( நீங்கள் பார்க்கலாம் . அதாவது ) சீருடையாளர் தம் சீருடைமூலம் தம்மை அழகுபடுத்திக் கொள்வதைப்போல் கல்வியாளர் தம் கல்வியின் மூலம் தம்மை அழகுபடுத்திக்கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது என்று சொல்லப்பட்டு வந்தது .

Reference: ( தாரமீ : 381) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 398 அத்தியாயம் 8 பாடம் 37

عَنْ هِشَامٍ عَنْ الْحَسَنِ قَالَ إِنْ كَانَ الرَّجُلُ لَيُصِيبُ الْبَابَ مِنْ الْعِلْمِ فَيَعْمَلُ بِهِ فَيَكُونُ خَيْرًا لَهُ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا لَوْ كَانَتْ لَهُ فَجَعَلَهَا فِي الْآخِرَةِ . 398

ஹஸன் அல்பஸ்`ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாக ஹிஷாம் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஒரு மனிதர் கல்வியின் வாசலை அடைந்துகொண்டு ( கற்றபடி ) செயல்பட்டால் , அது அவருக்கு இவ்வுலகத்தையும் அதில் உள்ளவற்றையும் விடச் சிறந்ததாக அமையும் . அவருக்கு அது அவ்வாறு ஆகிவிட்டால் அதனை மறுமைக்காக ஆக்கிக்கொள்வார் . ஹஸன் அல்பஸ்`ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஒரு மனிதர் கல்வியைத் தேட முற்பட்டுவிட்டால் அது அவருடைய பார்வையில் , பணிவில் , நாவில் , கையில் , உறவைப் பேணுவதில் , துறவில் காணப்படாமல் இருப்பதில்லை . முஹம்மது-பின் சீரீன் - ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இந்த ஹதீஸை யாரிடமிருந்து எடுக்கின்றீர்கள் ( பெறுகின்றீர்கள் ) என்பதைக் கூர்ந்து கவனியுங்கள் . ஏனென்றால் அதுதான் உங்களுடைய மார்க்கமாகும் .

Reference: ( தாரமீ : 398) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 399 அத்தியாயம் 8 பாடம் 37

عَنْ أَبِي مُسْلِمٍ الْخَوْلَانِيُّ قَالَ : الْعُلَمَاءُ ثَلَاثَةٌ : فَرَجُلٌ عَاشَ فِي عِلْمِهِ وَعَاشَ مَعَهُ النَّاسُ فِيهِ وَرَجُلٌ عَاشَ فِي عِلْمِهِ وَلَمْ يَعِشْ مَعَهُ فِيهِ أَحَدٌ وَرَجُلٌ عَاشَ النَّاسُ فِي عِلْمِهِ وَكَانَ وَبَالًا عَلَيْهِ . 399

அபூமுஸ்லிம் அல்கவ்லானீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அறிஞர்கள் மூவகை . 1. ஒருவர் தம் கல்வியின்படி வாழ்ந்தார் . அவரோடு அதன்படி மக்களும் வாழ்ந்தனர் . 2. ஒருவர் தம் கல்வியின்படி வாழ்ந்தார் . அவரோடு அதன்படி ( மக்களுள் ) எவரும் வாழவில்லை . 3. ஒருவருடைய கல்வியின்படி மக்கள் வாழ்ந்தனர் . ( ஆனால் கல்வியைக் கற்றவர் அதன்படி செயல்படாமல் ) அவர் துர்பாக்கியசாலியாக ஆகிவிட்டார் .

Reference: ( தாரமீ : 373) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 400 அத்தியாயம் 8 பாடம் 38

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ أَحَدُهُمَا عَابِدٌ وَالْآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالْأَرَضِينَ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْ . 400

அபூஉமாமா அல்பாஹிலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரண்டு மனிதர்களைப் பற்றிப் பேசப்பட்டது . அவர்களுள் ஒருவர் கல்விமான் ஆவார் . மற்றவர் பக்திமான் ஆவார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " ஒரு பக்திமானைவிடக் கல்விமானுக்குள்ள சிறப்பு உங்களில் கடைநிலையில் உள்ள ஒருவரைவிட ( இறைத்தூதராகிய ) எனக்குள்ள சிறப்பைப் போன்றதாகும் " என்று கூறிவிட்டு , அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் விண்ணிலும் மண்ணிலும் வசிப்போரும் பொந்துகளில் வாழும் எறும்புகள் , ( தண்ணீரில் வாழும் ) மீன்கள் உட்பட யாவுமே மக்களுக்கு நல்லதைக் கற்பிப்பவருக்காக அருள் வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றன " என்று கூறினார்கள் .

Reference: ( திர்மிதீ : 2609 / 2685. தாரமீ : 297) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 401 அத்தியாயம் 8 பாடம் 38

عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ قَالَ مَجْلِسٌ يُتَنَازَعُ فِيهِ الْعِلْمُ أَحَبُّ إِلَيَّ مِنْ قَدْرِهِ صَلَاةً لَعَلَّ أَحَدَهُمْ يَسْمَعُ الْكَلِمَةَ فَيَنْتَفِعُ بِهَا سَنَةً أَوْ مَا بَقِيَ مِنْ عُمُرِهِ . 401

வஹ்ப் பின் முநப்பிஹ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : கல்வி குறித்து விவாதிக்கப்படுகின்ற சபை - அந்த அளவிற்குத் தொழுவதைவிட - எனக்கு மிகவும் விருப்பமானது . ( விவாதிக்கப்படுகின்ற அச்சபையிலிருந்து ) அவர்களுள் ஒருவர் ஒரு வார்த்தையைச் செவியுறலாம் . அதன்மூலம் ஓராண்டுக்காலம் அவர் பயன்பெறலாம் . அல்லது அவர் தம் வாழ்நாளெல்லாம் பயன்பெறலாம் .

Reference: ( தாரமீ : 334) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 402 அத்தியாயம் 8 பாடம் 39

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : سَيَأْتِيكُمْ أَقْوَامٌ يَطْلُبُونَ الْعِلْمَ فَإِذَا رَأَيْتُمُوهُمْ فَقُولُوا لَهُمْ مَرْحَبًا مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقْنُوهُمْ . 402

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : உங்களிடம் மிக விரைவில் கல்வியைத் தேடுகின்ற சமுதாயத்தார்கள் வரவிருக்கின்றார்கள் . அவர்களை நீங்கள் கண்டால் , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரைப்படி உங்களுக்கு நற்செய்தி , நற்செய்தி என்று கூறுங்கள் . அவர்களுக்குக் ( கல்வியைக் ) கற்பியுங்கள் .

Reference: ( இப்னுமாஜா : 243 / 247) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 403 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أُفْتِيَ بِغَيْرِ عِلْمٍ كَانَ إِثْمُهُ عَلَى مَنْ أَفْتَاهُ . 403

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ( மார்க்க ) ஆதாரம் ஏதுமின்றி மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவர் ( அந்தத் தவறான தீர்ப்பின் படி செயல்பட்டால் ) அதற்குரிய பாவம் அந்தத் தீர்ப்பை வழங்கியவரையே சாரும் .

Reference: ( அபூதாவூத் : 3657, இப்னுமாஜா : 52 / 53, தாரமீ : 159) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 404 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَنْ أَفْتَى بِفُتْيَا يُعَمَّى عَلَيْهَا فَإِثْمُهَا عَلَيْهِ . 404

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் சிந்திக்காமல் மார்க்கத் தீர்ப்பு வழங்கினாரோ ( அந்தத் தவறான தீர்ப்பின்படி செயல்பட்டால் ) அதற்குரிய பாவம் அ( ந்தத் தீர்ப்பை வழங்கிய ) வரையே சாரும் .

Reference: ( தாரமீ : 162) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 405 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ أَبِي سُهَيْلٍ قَالَ كَانَ عَلَى امْرَأَتِي اعْتِكَافُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْمَسْجِدِ الْحَرَامِ فَسَأَلْتُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ وَعِنْدَهُ ابْنُ شِهَابٍ قَالَ قُلْتُ عَلَيْهَا صِيَامٌ قَالَ ابْنُ شِهَابٍ لَا يَكُونُ اعْتِكَافٌ إِلَّا بِصِيَامٍ فَقَالَ لَهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ أَعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا قَالَ فَعَنْ أَبِي بَكْرٍ قَالَ لَا قَالَ فَعَنْ عُمَرَ قَالَ لَا قَالَ فَعَنْ عُثْمَانَ قَالَ لَا قَالَ عُمَرُ مَا أَرَى عَلَيْهَا صِيَامًا . 405

அபூசுஹைல் நாஃபிஉ பின் மாலிக் அல்அஸ்பஹீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என் மனைவி மஸ்ஜிதுல் ஹராமில் மூன்று நாள்கள் இஉத்திகாஃப் இருக்க வேண்டியது இருந்தது . எனவே நான் உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன் . அப்போது ( அங்கு ) அவர்களுடன் இப்னு ஷிஹாப் ரஹிமஹுல்லாஹ் இருந்தார்கள் . “( அதாவது இஉத்திகாஃப் இருக்கும்போது ) அவர் நோன்பு நோற்க வேண்டுமா ?” என்று கேட்டேன் . அதற்கு இப்னு ஷிஹாப் ரஹிமஹுல்லாஹ் , “ நோன்பின்றி இஉத்திகாஃப் இல்லை ” என்றார்கள் . அப்போது அவரிடம் , உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் , “ இதை நீர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாகச் சொல்கின்றீரா ?” என்று வினவ , அவர் “ இல்லை ” என்றார் . “ அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாகச் சொல்கின்றீரா ?” என்று வினவ , அவர் “ இல்லை ” என்றார் . “ உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாகச் சொல்கின்றீரா ?” என்று வினவ , அவர் “ இல்லை ” என்றார் . “ உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாகச் சொல்கின்றீரா ?” என்று வினவ , அவர் “ இல்லை ” என்றார் . அப்போது உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் , “ அவர்மீது நோன்பு ( கடமை ) இல்லை என்றே நான் கருதுகிறேன் ” என்றார்கள் . நான் ( அங்கிருந்து ) புறப்பட்டுச் சென்றேன் . ( பின்னர் ) தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் , அதாஉ பின் அபீரபாஹ் ரஹிமஹுல்லாஹ் ஆகிய இருவரையும் பார்த்தேன் . ( இவ்விஷயம் குறித்து ) அவ்விருவரிடம் கேட்டேன் . அதற்கு தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் , “ இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்மீது நோன்பு - அவர் விருப்பப்பட்டு நோற்றாலே தவிர - இல்லை என்றே கூறிவந்தார்கள் ” என்றார் . ( அப்போது அங்கிருந்த ) அதாஉ ரஹிமஹுல்லாஹ் “ என் கருத்தும் அதுதான் ” என்றார் .

Reference: ( தாரமீ : 164) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 406 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ مَيْمُونٍ أَبِي حَمْزَةَ قَالَ قَالَ لِي إِبْرَاهِيمُ يَا أَبَا حَمْزَةَ وَاللَّهِ لَقَدْ تَكَلَّمْتُ وَلَوْ وَجَدْتُ بُدًّا مَا تَكَلَّمْتُ وَإِنَّ زَمَانًا أَكُونُ فِيهِ فَقِيهَ أَهْلِ الْكُوفَةِ زَمَانُ سُوءٍ . 406

மைமூன் அபீஹம்ஸா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என்னிடம் இப்ராஹீம் அந்நகயீ ரஹிமஹுல்லாஹ் , “ அல்லாஹ்வின்மீதாணையாக நான் ( நிறையப் ) பேசிவிட்டேன் . அவசியம் ஏற்படவில்லையானால் நான் பேசியிருக்க மாட்டேன் . நான் கூஃபா வாழ் மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அறிஞராக இருக்கும் காலம் கெட்ட காலமாகவே இருக்கும் ” என்று கூறினார்கள் .

Reference: ( தாரமீ : 202)
ஹதீஸ் 407 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ عُمَيْرِ بْنِ إِسْحَقَ قَالَ لَمَنْ أَدْرَكْتُ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرُ مِمَّنْ سَبَقَنِي مِنْهُمْ فَمَا رَأَيْتُ قَوْمًا أَيْسَرَ سِيرَةً وَلَا أَقَلَّ تَشْدِيدًا مِنْهُمْ . 407

உமர் பின் இஸ்ஹாக் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களுள் நான் சந்தித்த பலர் என்னைவிட ( வயதில் ) முந்தியோராகவே இருந்தனர் . உடலமைப்பில் அவர்களைவிட மென்மையானவர்களையோ அவர்களைவிட மிகக் குறைந்த வன்மை உடையவர்களையோ நான் காணவில்லை .

Reference: ( தாரமீ : 128) இதன் அறிவிப்பாளர்தொடர் தரமானது .
ஹதீஸ் 408 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ قَالَ قُلْتُ لِسَعِيدِ بْنِ جُبَيْرٍ مَا لَكَ لَا تَقُولُ فِي الطَّلَاقِ شَيْئًا قَالَ مَا مِنْهُ شَيْءٌ إِلَّا قَدْ سَأَلْتُ عَنْهُ وَلَكِنِّي أَكْرَهُ أَنْ أُحِلَّ حَرَامًا أَوْ أُحَرِّمَ حَلَالًا . 408

ஜஅஃபர் பின் இயாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் சஈத் பின் ஜுபுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ தாங்கள் ஏன் தலாக் குறித்து எதுவும் சொல்வதில்லை ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , அது குறித்து நான் கேட்டுத் தெரிந்துகொள்ளாதது எதுவும் இல்லை . எனினும் தடைசெய்யப்பட்டதை ஆகுமானதாகவோ ஆகுமானதைத் தடை செய்யப்பட்டதாகவோ ஆக்குவதை நான் விரும்பவில்லை ” என்று கூறினார்கள் .

Reference: ( தாரமீ : 136) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 409 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى يَقُولُ لَقَدْ أَدْرَكْتُ فِي هَذَا الْمَسْجِدِ عِشْرِينَ وَمِائَةً مِنْ الْأَنْصَارِ وَمَا مِنْهُمْ مِنْ أَحَدٍ يُحَدِّثُ بِحَدِيثٍ إِلَّا وَدَّ أَنَّ أَخَاهُ كَفَاهُ الْحَدِيثَ وَلَا يُسْأَلُ عَنْ فُتْيَا إِلَّا وَدَّ أَنَّ أَخَاهُ كَفَاهُ الْفُتْيَا . 409

அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் இந்த மஸ்ஜிதில் நூற்று இருபது அன்ஸாரித் தோழர்களைப் பார்த்துள்ளேன் . அவர்களுள் ஒருவர் ஹதீஸை அறிவித்தால் , அவர் முன் உள்ள சகோதரர் அந்த ஹதீஸ் தமக்குப் போதுமென எண்ணுமளவிற்கு அறிவிப்பார் . அவர்களுள் ஒருவரிடம் மார்க்கத் தீர்ப்பு ஏதேனும் கேட்டால் அவர் முன் உள்ள சகோதரர் அந்த மார்க்கத் தீர்ப்பு தமக்குப் போதுமென எண்ணுமளவிற்குச் சொல்வார் .

Reference: ( தாரமீ : 137) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 410 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ ابْنِ الْمُنْكَدِرِ قَالَ إِنَّ الْعَالِمَ يَدْخُلُ فِيمَا بَيْنَ اللَّهِ وَبَيْنَ عِبَادِهِ فَلْيَطْلُبْ لِنَفْسِهِ الْمَخْرَجَ . 410

இப்னுல் முன்கதிர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : திண்ணமாக ஓர் ( இஸ்லாமிய ) அறிஞர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையே நுழை ( ந்து இறைவனை அடைவதற்கான வழியைக் காட்டு ) கிறார் . எனவே ( உங்களுள் ஒவ்வொருவரும் ) தமக்காக ( நரகத்திலிருந்து ) வெளியேறுகின்ற வழியைத் தேடிக்கொள்ளட்டும் .

Reference: ( தாரமீ : 139) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 411 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ الصَّلْتُ بْنُ رَاشِدٍ قَالَ سَأَلْتُ طَاوُسًا عَنْ مَسْأَلَةٍ فَقَالَ لِي كَانَ هَذَا قُلْتُ نَعَمْ قَالَ آللَّهِ قُلْتُ آللَّهِ ثُمَّ قَالَ إِنَّ أَصْحَابَنَا أَخْبَرُونَا عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّهُ قَالَ يَا أَيُّهَا النَّاسُ لَا تَعْجَلُوا بِالْبَلَاءِ قَبْلَ نُزُولِهِ فَيُذْهَبُ بِكُمْ هَا هُنَا وَهَا هُنَا فَإِنَّكُمْ إِنْ لَمْ تَعْجَلُوا بِالْبَلَاءِ قَبْلَ نُزُولِهِ لَمْ يَنْفَكَّ الْمُسْلِمُونَ أَنْ يَكُونَ فِيهِمْ مَنْ إِذَا سُئِلَ سَدَّدَ وَإِذَا قَالَ : وُفِّقَ . 411

ஸல்த் பின் ராஷித் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு பிரச்சனை ( முஸ்அலா ) குறித்துக் கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ இது நடந்ததா ?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ ஆம் !” என்றேன் . “ அல்லாஹ்வின் மீது ஆணையாகவா ?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ அல்லாஹ்வின்மீது ஆணையாக !” என்றேன் . பிறகு அவர்கள் சொன்னார்கள் : முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து நம்முடைய தோழர்கள் நமக்கு அறிவித்தார்கள் . மக்களே ! சோதனை இறங்குவதற்கு முன்னரே , அது இறங்க வேண்டுமென அவசரப்படாதீர்கள் . அப்படிச் செய்தால் இங்குமங்கும் உங்களை அது கொண்டு சென்றுவிடும் . நீங்கள் சோதனை இறங்குவதற்குமுன் , அது இறங்க வேண்டுமென அவசரப்படவில்லையானால் , முஸ்லிம்களுள் யாரேனும் ஒருவர் வினாத் தொடுக்கப்பட்டால் அதைச் சீராகச் சொல் ( லி வழிகாட்டு ) வார் . அவர் ஏதேனும் கூறினால் , அதற்கு நல்வாய்ப்பு வழங்கப்படுவார் .

Reference: ( தாரமீ : 155) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 412 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ أَبِي نَضْرَةَ قَالَ لَمَّا قَدِمَ أَبُو سَلَمَةَ الْبَصْرَةَ أَتَيْتُهُ أَنَا وَالْحَسَنُ فَقَالَ لِلْحَسَنِ أَنْتَ الْحَسَنُ مَا كَانَ أَحَدٌ بِالْبَصْرَةِ أَحَبَّ إِلَيَّ لِقَاءً مِنْكَ وَذَلِكَ أَنَّهُ بَلَغَنِي أَنَّكَ تُفْتِي بِرَأْيِكَ فَلَا تُفْتِ بِرَأْيِكَ إِلَّا أَنْ تَكُونَ سُنَّةٌ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ كِتَابٌ مُنْزَلٌ . 412

அபூநள்ரா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அபூசலமா ரளியல்லாஹு அன்ஹு பஸ்ரா வந்திருந்தபோது , நானும் ஹஸன் பஸ்`ரீ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அவர்களிடம் வந்தோம் . அப்போது அவர்கள் , ஹஸன் பஸ்`ரீ அவர்களிடம் , “ நீங்கள்தாம் ஹஸனா ? இந்த பஸ்ராவில் உம்மைச் சந்திப்பதைவிட எனக்குப் பிரியமானவர் யாருமில்லை . ஏனென்றால் தாங்கள் உங்களின் ( சொந்தக் ) கருத்தின்மூலம் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதாக எனக்குச் செய்தி கிடைத்தது . அவ்வாறு தாங்கள் உங்களின் ( சொந்தக் ) கருத்தின்மூலம் மார்க்கத் தீர்ப்பு வழங்காதீர் . ( மாறாக ) அ( ந்தத் தீர்ப்பான ) து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வந்துள்ள சுன்னத்தாக இருக்க வேண்டும் . அல்லது இறக்கியருளப்பட்ட வேதமாக இருக்க வேண்டும் ” என்று கூறினார்கள் .

Reference: ( தாரமீ : 165) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 413 அத்தியாயம் 8 பாடம் 41

عَنْ الْحَسَنِ أَنَّهُ دَخَلَ السُّوقَ فَسَاوَمَ رَجُلًا بِثَوْبٍ فَقَالَ هُوَ لَكَ بِكَذَا وَكَذَا وَاللَّهِ لَوْ كَانَ غَيْرَكَ مَا أَعْطَيْتُهُ فَقَالَ فَعَلْتُمُوهَا فَمَا رُئِيَ بَعْدَهَا مُشْتَرِيًا مِنْ السُّوقِ وَلَا بَائِعًا حَتَّى لَحِقَ بِاللَّهِ . 413

அப்துல் அஃலா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஹஸன் அல்பஸ்`ரீ ரஹிமஹுல்லாஹ் ( ஒரு நாள் ) கடைவீதிக்குச் சென்று ஒருவரிடம் துணியை விலைபேசி வாங்கினார்கள் . அந்த வியாபாரி , “ இது உமக்காக இன்னின்ன விலை . அல்லாஹ்வின் மீதாணையாக . மற்றவராக இருந்திருந்தால் இதை நான் ( இன்ன விலைக்குக் ) கொடுத்திருக்க மாட்டேன் ; ( தங்களின் கல்வியின் காரணமாக ) இதை ( எந்தவிதப் பேரமும் பேசாமல் விற்க ) ச் செய்துவிட்டீர்கள் ” என்றார் . ( அதைக் கேட்ட இமாம் அவர்கள் ) அதன்பிறகு அல்லாஹ்வோடு சேர்கின்ற ( மரணம் ) வரை வாங்கவோ விற்கவோ கடைவீதிக்கு வந்ததே இல்லை .

Reference: ( தாரமீ : 592) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 414 அத்தியாயம் 8 பாடம் 41

عَنْ عُبَيْدِ بْنِ الْحَسَنِ قَالَ قَسَمَ مُصْعَبُ بْنُ الزُّبَيْرِ مَالًا فِي قُرَّاءِ أَهْلِ الْكُوفَةِ حِينَ دَخَلَ شَهْرُ رَمَضَانَ فَبَعَثَ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْقِلٍ بِأَلْفَيْ دِرْهَمٍ فَقَالَ لَهُ اسْتَعِنْ بِهَا فِي شَهْرِكَ هَذَا فَرَدَّهَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَعْقِلٍ وَقَالَ لَمْ نَقْرَأْ الْقُرْآنَ لِهَذَا . 414

உபைத் பின் ஹஸன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஸ்அப் பின் அஸ்ஸுபைர் ரஹிமஹுல்லாஹ் , ரமளான் மாதம் தொடங்கும்போது கூஃபாவாழ் காரீகளுக்கு ( குர்ஆன் ஓதுவோர் ) பொருளைக் கொடுப்பதாகச் சத்தியம் செய்தார் . எனவே அவர் அப்துர் ரஹ்மான் பின் மஅகில் என்பாருக்கு ஈராயிரம் திர்ஹம்களை அனுப்பிவைத்து , “ உம்முடைய இந்த மாதத்தில் இதைக்கொண்டு உதவிபெற்றுக்கொள்வீராக ” என்று சொல்லியனுப்பினார் . ( ஆனால் ) அப்துர் ரஹ்மான் பின் மஅகில் , “ இந்த அன்பளிப்புக்காக நாங்கள் குர்ஆன் ஓதுவதில்லை ” என்று கூறி , அதைத் திருப்பி அனுப்பிவிட்டார் .

Reference: ( தாரமீ : 594) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 415 அத்தியாயம் 8 பாடம் 41

عَنْ عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ مَنْ أَرْبَابُ الْعِلْمِ قَالَ الَّذِينَ يَعْمَلُونَ بِمَا يَعْلَمُونَ قَالَ فَمَا يَنْفِي الْعِلْمَ مِنْ صُدُورِ الرِّجَالِ قَالَ الطَّمَعُ . 415

உபைதுல்லாஹ் பின் உமர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு , அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களிடம் , “ கல்வியாளர்கள் யார் ?” என்று கேட்டார்கள் . அதற்கு அவர்கள் , “ தாம் அறிந்ததைக்கொண்டு செயல்படுபவர்களே ஆவர் ” என்று கூறினார்கள் . “( கல்விக்கேற்ற செயல்பாடு இல்லையானால் ) ஆண்களின் உள்ளங்களிலிருந்து கல்வியை ( இல்ம் ) இல்லாமல் அழித்துவிடுமா ?” என்று மறுவினாத் தொடுத்தார்கள் . அதற்கு அவர்கள் , “( கல்வியைத் தேட வேண்டுமென்ற ) தேட்டம் ( அழிந்துவிடும் )” என்று விடையளித்தார்கள் .

Reference: ( தாரமீ : 595) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 416 அத்தியாயம் 8 பாடம் 41

عَنْ عَلِيٌّ تَعَلَّمُوا الْعِلْمَ فَإِذَا عَلِمْتُمُوهُ فَاكْظِمُوا عَلَيْهِ وَلَا تَشُوبُوهُ بِضَحِكٍ وَلَا بِلَعِبٍ فَتَمُجَّهُ الْقُلُوبُ . 416

அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள் . அதைக் கற்றுக்கொண்டால் அதனோடு அடக்கமாக இருங்கள் . அதனைச் சிரிப்போடும் விளையாட்டோடும் கலந்துவிடாதீர்கள் . ( அவ்வாறு செய்தால் கற்ற ) அந்த உள்ளம் அதனைத் துப்பிவிடும் .

Reference: ( தாரமீ : 602) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 417 அத்தியாயம் 8 பாடம் 42

عَنْ سُلَيْمِ بْنِ حَنْظَلَةَ قَالَ أَتَيْنَا أُبَيَّ بْنَ كَعْبٍ لِنَتَحَدَّثَ إِلَيْهِ فَلَمَّا قَامَ قُمْنَا وَنَحْنُ نَمْشِي خَلْفَهُ فَرَهَقَنَا عُمَرُ فَتَبِعَهُ فَضَرَبَهُ عُمَرُ بِالدِّرَّةِ قَالَ فَاتَّقَاهُ بِذِرَاعَيْهِ فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا نَصْنَعُ قَالَ أَوَ مَا تَرَى فِتْنَةً لِلْمَتْبُوعِ مَذَلَّةً لِلتَّابِعِ. 417

சுலைம் பின் ஹன்ழலா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பேசிக்கொண்டிருப்பதற்காக வந்தோம் . ( பேச்சு முடிந்து ) அவர் எழுந்தபோது நாங்களும் எழுந்து , அவருக்குப் பின்னால் நடந்துசென்றோம் . அதைக் கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு , அவரைப் பின்பற்றி வந்து அவரைச் சாட்டையால் அடித்தார்கள் . அவருக்குப் பின்னால் செல்வதை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் ” என்று கூறினார்கள் . “ அமீருல் முஃமினீன் அவர்களே ! ( அப்படியானால் ) நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?” என்று வினவினார் . பின்பற்றிச் செல்பவருக்கு அது இழிவு என்றும் , பின்பற்றிச் செல்லப்படுபவருக்கு ஏதாவது குழப்பம் ஏற்படும் என்பதை நீர் கவனிக்க மாட்டீரா ?” என்று கேட்டார்கள் .

Reference: ( தாரமீ : 540) இதன் அறிவிப்பாளர் தொடர் தரமானது .
ஹதீஸ் 418 அத்தியாயம் 8 பாடம் 42

عَنْ إِبْرَاهِيمَ قَالَ : كَانُوا يَكْرَهُونَ أَنْ تُوطَأَ أَعْقَابُهُمْ . 418

இப்ராஹீம் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( அறிஞர்களாகிய ) அவர்கள் தமக்குப் பின்னால் காலடித் தடங்கள் மிதிக்கப்படுவதை ( மனிதர்கள் நடந்துவருவதை ) வெறுப்பவர்களாக இருந்தார்கள் .

Reference: ( தாரமீ : 541) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 419 அத்தியாயம் 8 பாடம் 42

عَنْ سُفْيَانُ عَنْ أُمَيٍّ قَالَ مَشَوْا خَلْفَ عَلِيٍّ فَقَالَ عَنِّي خَفْقَ نِعَالِكُمْ فَإِنَّهَا مُفْسِدَةٌ لِقُلُوبِ نَوْكَى الرِّجَالِ . 419

உமய்யு என்ற இப்னு ரபீஆ அல்முராதீ என்பாரிடமிருந்து சுஃப்யான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்னால் ( மக்கள் சிலர் ) நடந்தார்கள் . அப்போது அவர்கள் , “ உங்களுடைய காலணி ஓசையை என்னைவிட்டு விலக்கிக் கொள்ளுங்கள் . ஏனென்றால் இ( வ்வாறு நீங்கள் நடந்துவருவ ) து அறிவிலிகளின் நெஞ்சங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் ” என்று கூறினார்கள் .

Reference: ( தாரமீ : 551)
ஹதீஸ் 420 அத்தியாயம் 8 பாடம் 43

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ عَلَّمْتُ نَاسًا مِنْ أَهْلِ الصُّفَّةِ الْكِتَابَ وَالْقُرْآنَ فَأَهْدَى إِلَيَّ رَجُلٌ مِنْهُمْ قَوْسًا فَقُلْتُ لَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ لَآتِيَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَأَسْأَلَنَّهُ فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ رَجُلٌ أَهْدَى إِلَيَّ قَوْسًا مِمَّنْ كُنْتُ أُعَلِّمُهُ الْكِتَابَ وَالْقُرْآنَ وَلَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ قَالَ إِنْ كُنْتَ تُحِبُّ أَنْ تُطَوَّقَ طَوْقًا مِنْ نَارٍ فَاقْبَلْهَا . 420

உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : திண்ணைத் தோழர்களுக்கு எழுத்துப் பயிற்சியையும் குர்ஆனையும் கற்றுக்கொடுத்தேன் . ஆகவே அவர்களுள் ஒருவர் எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார் . இது ( பணம் சார்ந்த ) பொருள் இல்லை . மேலும் நான் இதை அல்லாஹ்வின் பாதையில் எய்யப் பயன்படுத்துவேன் ; ( இருந்தாலும் ) நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று , ( இதற்கான விளக்கத்தைக் ) கேட்பேன் என்று நான் கூறிக்கொண்டேன் . எனவே நான் அவர்களிடம் வந்து , “ அல்லாஹ்வின் தூதரே ! எழுத்துப் பயிற்சியையும் குர்ஆனையும் கற்றுக்கொடுத்தவர்களுள் ஒருவர் , எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார் . இது ( பணம் சார்ந்த ) பொருள் இல்லை . நான் இதை அல்லாஹ்வின் பாதையில் எய்ய ( ப் பயன்படுத்த ) லாமா ?” என்று கேட்டேன் . அதற்கவர்கள் , “ அதன் மூலம் ( உமக்கு ) நெருப்பு மாலை போடப்படுவது உமக்கு மகிழ்ச்சியளித்தால் , அதை நீர் ஏற்றுக்கொள்வீர் ” என்று கூறினார்கள் .

Reference: ( அபூதாவூத் : 3416, 3417, இப்னுமாஷா : 2148 / 2157) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 421 அத்தியாயம் 8 பாடம் 43

عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ عَلَّمْتُ رَجُلًا الْقُرْآنَ فَأَهْدَى إِلَيَّ قَوْسًا فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ أَخَذْتَهَا أَخَذْتَ قَوْسًا مِنْ نَارٍ فَرَدَدْتُهَا . 421

உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : நான் ஒருவருக்குக் குர்ஆனைக் கற்றுக்கொடுத்தேன் . ஆகவே அவர் எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார் . நான் அதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினேன் . அதற்கவர்கள் , “ அதை நீர் எடுத்துக்கொண்டால் நரகத்திலிருந்து ஒரு வில்லை எடுத்துக்கொண்டுவிட்டீர் ” என்று கூறினார்கள் . ஆகவே நான் அதைத் திருப்பிக்கொடுத்துவிட்டேன் .

Reference: ( இப்னுமாஜா : 2149 / 2158) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 422 அத்தியாயம் 8 பாடம் 44

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّهُ كَانَ يَجْمَعُ بَنِيهِ فَيَقُولُ يَا بَنِيَّ تَعَلَّمُوا فَإِنْ تَكُونُوا صِغَارَ قَوْمٍ فَعَسَى أَنْ تَكُونُوا كِبَارَ آخَرِينَ وَمَا أَقْبَحَ عَلَى شَيْخٍ يُسْأَلُ لَيْسَ عِنْدَهُ عِلْمٌ. 422

ஹிஷாம் பின் உர்வா ரஹிமஹுல்லாஹ் அறிவித்துள்ளதாவது : ( என் தந்தை ) உர்வா பின் அஸ்ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு தம் பிள்ளைகளை ஒருங்கிணைத்து , “ என் அருமைப் பிள்ளைகளே ! கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள் . நீங்கள் ( இப்போது ) மக்களுள் சிறுவர்களாக இருந்தாலும் ( எதிர்காலத்தில் ) பின்னோருக்குப் பெரியவர்களாக ஆகலாம் . கல்வியறிவில்லாத ஒரு முதியவரிடம் ( கல்வி குறித்துக் ) கேட்கப்படுவதைவிட மிக மோசமானது எதுவுமில்லை ” என்று கூறினார்கள் .

Reference: ( தாரமீ : 571)